வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கடந்த ஒருமாத காலமாக இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. இன்னும் சில நாள்களில் அவரது வேலை முடிவடைந்தால் செயற்கை கடல் தயாராகிவிடும்! 'தசாவதாரம்' படத்தை உண்மையிலேயே பிரமாண்டமாகதான் எடுக்கிறார்கள். பல நூற்றாண்டுகள் பாய்ந்து செல்லும் கதை, பத்து கெட்டப்புகள், C.I.A ஏஜெண்ட், உலகம் முழுக்க படப்பிடிப்பு, ஹெலிகாப்டர் சண்டை... படத்தில் இப்படி பிரமிப்புகள் ஏராளம். அதில் உச்சபட்சமாக வருகிறது சுனாமி காட்சிகள். கடல் கொந்தளித்து கடலோர கிராமங்களை அழிக்கும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக செயற்கை கடலை உருவாக்கி வருகிறார்கள். இதுவரை ஹாலிவுட் படங்களில்தான் செயற்கை கடலை உருவாக்கினார்கள். 'வாட்டர் வேர்ல்டு', 'டைட்டானிக்' போன்ற படங்களுக்கு மி…
-
- 0 replies
- 885 views
-
-
2007 - ம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் 'போக்கிரி.' 'ஆதி' ப்ளாப்பான பிறகு விஜய் அதிக சிரத்தை எடுத்து நடித்த படம் 'போக்கிரி.' பிரபுதேவாவுக்கு இயக்குனராக தமிழில் முதல் படம். தெலுங்கு ரீ-மேக்கான இதன் பாடல்கள் தமிழகம் மட்டுமின்று கேரளாவிலும் சூப்பர் ஹிட்டாயின. பல நேரடி மலையாளப் படங்களின் வசூலை 'போக்கிரி' முறியடித்து கேரளாவில் சாதனைப் படைத்தது. பதினைந்து கோடியில் தயாரான இப்படம் ஏறக்குறைய பத்துகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. 2007-ம் வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் இதுவே அதிகபட்சம். இரண்டாவதாக வருவது ஹரியின் 'தாமிரபரணி.' விஷால் நடித்த இப்படம் ஏழுகோடியில் தயாராகி அதே ஏழுகோடியை லாபமாகஈட்டிய…
-
- 0 replies
- 885 views
-
-
முதுகில் மத சின்னம்: நடிகை மந்திரா பேடிக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு அமிர்தசரஸ், ஏப். 12- `மன்மதன்' படத்தில் சிம்புவுடன் ஒருபாடலுக்கு ஆடி இருப்பவர் நடிகை மந்திரா பேடி, ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் தன் வழக்க மான கவர்ச்சி உடையில் ஆடினார். அப்போது அவர் உடல் முழுக்க மருதாணி அலங்காரம் செய்திருந்தார். முதுகில் சீக்கியர்களின் மதசின்னம் போல வரைந்திருந்தார். இது ஒட்டு மொத்த சீக்கியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.` இது குறித்து சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி செயலாளர் ஹர்பீந்த் சிங் கூறுகையில், "மந்திரா பேடி சீக்கியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏற்கனவே சில நி…
-
- 0 replies
- 885 views
-
-
-
- 3 replies
- 884 views
-
-
[size=2] சென்னையில் நேற்று மதியம் தொடங்கிய பவர் ஸ்டார் கைது என்ற பரபரப்பு செய்தி காட்டு தீ போல் பரவ ஆரம்பித்தது.[/size] [size=2] சூப்பர் ஸ்டார் நிகராக தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படுபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இதுவரை நடித்த படம் நான்கு. ஆனால் இதுவரை வெளியானது 2 படங்கள் தான். ஆனால் தன்னை மிகப்பெரிய திரைஉலக ஜாம்பவான் போல் காட்டி கொள்வதில் வல்லவர். ஏதோ ஒன்றை எதிர்மறையாக செய்தவது விளம்பரம் தேடுபவர். அதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலம். [/size] [size=2] அரசியல் கட்சி ஒன்றினை பின்புலமாக கொண்டவர். தன்னுடைய பாதுகாப்பிற்காக அவர்களிடம் அடைக்கலம் புகுந்தார். இப்படி இருக்க ஒருவரிடம் வாங்கி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…
-
- 0 replies
- 884 views
-
-
பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம். தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம். ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்…
-
- 1 reply
- 884 views
-
-
The old dreams were good dreams; they didn't work out, but glad I had them. #Robert from The Bridges of Madison County ஒரு வறண்ட மதிய வேளையில், அமெரிக்காவில் மேடிசன் கவுண்ட்டில் உள்ள ஐவா எனும் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில், ப்ரான்செஸ்கா இறந்த ஓரிரு நாட்களில், அவளுடைய காப்புப்பெட்டகத்தை, அவளின் பிள்ளைகளிடம் (மகன் மைக்கேல் மற்றும் மகள் கரோலின்) கொடுத்துச் செல்கின்றனர், வங்கியாளர்கள்.அதில் சில கடிதங்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. தங்களது குடும்ப வழக்கிலேயே இல்லாத முறையான, இறந்தபின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி வேண்டும் அந்த கடிதத்தைப் படிக்கின்றனர். “என் உடலை எரித்து அதன் சாம்பலை, ரோஸ்மேன் பாலத்தின் மீது தூவுங்கள். இது என் கடைசி ஆசை” என்று தொடங்கும் அந்தக…
-
- 2 replies
- 883 views
-
-
சினிமா குப்பைக்குள் ஒரு மிளிரும் மாணிக்கமாய் இலக்கணம் திரைப்படம் வெளிவந்துள்ளது. துயதமிழில் கவிதையாய் இத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து இரசிக்கக் கூடிய திரைப்படம். குலுக்காட்டங்களும் நம்பமுடியாத அடிதடிகளும் அற்ற ஒரு அழகு காவியம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டியதோன்று. சுப.வீரபாண்டியன் அவர்கள் இதில் நடித்துள்ளார். ஜானா
-
- 0 replies
- 883 views
-
-
சிம்புதேவன் இயக்கும் படத்தில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’ ஆகிய படங்களை தொடர்ந்து சிம்புதேவன் புதிய படமொன்றை இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் விவேக் ஹீரோவாக நடிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி கதையான இது அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=245
-
- 0 replies
- 883 views
-
-
ஹீரோவாக நடிப்பதும், சினிமா தயாரிப்பதும் ரொம்பக் கஷ்டமான வேலை என்று பிரமிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அன்புத்தோழி படத்தின் புரட்சி நாயகனுமான தொல்.திருமாவளவன். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர் திருமா. திரையுலகினருக்கு திருமாவும், ராமதாஸும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். அதே சினிமாவில் திருமா நடிகராக களம் புகுந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ளார் திருமா. நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருப்பதாகவும், இதுவே முதலும், கடைசியும் என்று அப்போது விளக்கினார் திருமா. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அன்பு…
-
- 0 replies
- 883 views
-
-
-
- 2 replies
- 883 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் சூப்பர் ஹிட் படமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் கவரப்பட்ட ரஜினி கடந்த வாரம் இயக்குநர் முருகதாசை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு புதிய படம் தொடர்பாக அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முருகதாஸ் இயக்க உள்ள இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ஸ்ரீசத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் 2008 ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விடுப்பு : Viduppu.com
-
- 0 replies
- 883 views
-
-
இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன... ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம். இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம் …
-
- 0 replies
- 883 views
-
-
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி சுறா படத்தையடுத்து மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார். விஜய் அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு இடைவேளையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதில் அளித்தார். உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிக…
-
- 4 replies
- 883 views
-
-
அனுஷ்கா தமிழில் ஜோடி போடுவதற்கு ஏற்ற ஒரே நடிகர் சத்யராஜாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. அந்த அளவுக்கு இவர் யாருடன் நடித்தாலும் அவர்களுடைய உயரம் இவருக்கு செட் ஆகவில்லை. சிங்கம் படத்திலும் சூர்யாவுடன் நடித்த போது இவரது உயரம் அதிகம் என்று படப்பிடிப்பிலேயே குறைப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் இப்படி பார்ப்பதை அனுஷ்காவோ வேறு மாதிரியாக பார்க்கிறார்.‘இந்த நடிகர்கள் உயரம் குறைவாக இருந்துவிட்டு என்னை உயரம் குறைவு என்று சொல்கிறார்கள். ஹீரோ குள்ளமா இருந்தா எப்படி? இன்னும் வளராமலேயே நடிக்கிறாங்கப்பா…’ என்று கிண்டலாக சொல்கிறார் அனுஷ்கா.http://ulavan.net/?p=4823
-
- 0 replies
- 881 views
-
-
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்! Posted by: Manjula Published: Tuesday, August 18, 2015, 14:31 [IST] இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க: ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள். பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள…
-
- 0 replies
- 881 views
-
-
தனக்கென்று தமிழ் சினிமாவில் 'புதிய பாதை' போட்ட ரா. பார்த்திபன் தற்போது 'வித்தகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மேல்விலாசம்' எனும் திரைப்படம் தமிழில் 'உள்விலாசம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்திய ராணுவத்தில் அடிக்கடி நிகழும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவ் ராமதாஸன் என்பவர் இயக்கியிருக்கிறார். பார்த்திபனுடன் சுரேஷ் கோபி, 'தலைவாசல்' விஜய், 'நிழல்கள்' ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னவென்றால் ஜவான் ராமச்சந்திரனாக வரும் பார்த்திபன், தனது ராணுவ உ…
-
- 0 replies
- 881 views
-
-
அஜித் நடித்து வரும் ‘ஆரம்பம்’ படத்திலுள்ள ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பில்லா படத்திற்கு பின்பு விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜித் இணைந்துள்ள படம் என்றவுடனையே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். பின்பு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துத்துள்ளது. இறுதியாக இப்படத்திற்கு சூட்டப்பட்ட தலைப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் சம்மந்தப்பட்ட ஒரு காட்சி நேற்று இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும், அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விஷ்ணுவர்தன் கூறுகையில், இந்த சம்பவம் எனக்கு பெரும் ஏமாற்றத்த…
-
- 0 replies
- 881 views
-
-
தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது. ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர். விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணை மும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல…
-
- 0 replies
- 880 views
-
-
மடிசார் மாமி படத்தை திரையிட உயர் நீதிமன்றம் தடை விதித்து, சென்சார் போர்டுக்கு அறிவுரை கூறியுள்ளது.தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் கே.ஆர்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மடிசார் மாமி மதன மாமா என்ற சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். அந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். படத்தின் தலைப்பு பிராமண பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில் கூறியிருப்பதாவது:பாசமலர், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்…
-
- 1 reply
- 880 views
-
-
குரு தசாவதாரம்’ போன்ற படங்களில் தன் அழகால் தமிழ் திரை ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்தவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்.தற்போது இவரை சிம்பு நடிக்கும் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட வைத்துள்ளார்கள். குளோபல் இந்திய பெண்மணியாக ஜானி டெப் சல்மா ஹெயிக் ஆகியோருடன் நட்பு மனதோடு பழகிய நாட்களை நினைவு கூர்ந்துள்ள மல்லிகா பாலிவுட் ஹாலிவுட் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களையும் கூறியுள்ளார். மணிரத்னத்தின் குரு படத்திற்காக மய்யா மய்யா பாட்டுக்கு நடனம் ஆடினேன். கமல் ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்திற்காக நடித்ததை என்னால் எப்பவும் மறக்க முடியாது. தமிழ் படத்தின் பாடல் காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. கொலிவுட்டின் பாட்டுக்கும் டான்சுக்கும் நான் தீவிர ரசிகை தபங் படத்தின் தமிழ் ரீ…
-
- 0 replies
- 880 views
-
-
12-வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விழா கனடாவின் டோரண்டோ நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மை நேம் கான் படத்துக்காக ஷாருக்கானுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருது அனுஷ்கா ஷர்மாவுக்கு பந்த் பாஜா பாராத் படத்துக்காக கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பந்த் பாஜா பாராத் படத்துக்காக ரண்வீர் சிங்குக்கு கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தபாங்க் படத்துக்காக சோனாக்ஷி சின்ஹாவுக்கு கிடைத்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்ஸுக்காக வி.ஸ்ரீனிவாஸ் மோகனுக்கும்…
-
- 1 reply
- 880 views
-
-
1 மில்லியன்( +) பார்வைகளை கடந்த ‘வாட்ச்மேன்’ படத்தின் ப்ரோமோ பாடல்..! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் மிகக் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது. கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது. இது வெறுமனே ய…
-
- 1 reply
- 879 views
-
-
"நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?": காலா இயக்குனர் ரஞ்சித் பிரத்யேகப் பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஇயக்குனர் ரஞ்சித் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும் திரையுலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய அரசியல் குறித்தும் பிப…
-
- 0 replies
- 879 views
-
-
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? 8 06 2012 கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம். சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது. இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது. ‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார். வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். ‘தருகிறேன்’ என்று ம…
-
- 4 replies
- 878 views
-