வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
முஸ்லீம்கள் "விஸ்வரூபம்" படத்தை எதிர்க்கும் காரணங்கள் ஆறு. பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்... 1)விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு …
-
- 8 replies
- 922 views
-
-
நார்வே தமிழ் திரைப்பட விழா கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினருக்கு இது முக்கியமான திரைப்பட விழா. தமிழ் இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடக்கிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தமுறை சற்று விசேஷம். ஐரோப்பாவிலுள்ள லண்டன், ஆஸ்லோ, பெர்லின் ஆகிய நகரங்களில் இந்த விழா நடக்கிறது. முன்பு ஒரே நகரத்தில்தான் இந்த விழா நடந்து வந்தது. ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட பதினைந்து படங்கள் தேர்வாகியுள்ளன. அவை... நடுவுல கொஞ்சம் பக்…
-
- 0 replies
- 513 views
-
-
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பதை கமலஹாசன் கண்டித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்தி சிறு குழுக்கள் அரசியல் ஆதாயம் பெற நினைக்கின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர்அலி கூறியதாவது:- முஸ்லிம்கள் கமலுக்கு எதிரானவர்கள் அல்ல. நிறைய முஸ்லிம் பெண்களும், இளைஞர்களும் கமல் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த பிறகு எங்களிடம் இருந்து அன்னியப் படலானார். விஜயகாந்த் படங்களில் தீவிரவாதிகள் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர் தீவிரவாதிகளை மட்டுமே காட்டுவார். ஆனால் விஸ்வரூபம் படம் அப்படி அல்ல. தீவிரவாதிகள் தலைவர் முல்லாஉமர் கோவை, மதுரையில் வசித்தத…
-
- 0 replies
- 542 views
-
-
'என்னுடைய 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை நான் நாடவுள்ளேன்' என்று நடிகரும் - இயக்குநருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், இத்திப்படத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது திரைப்படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. எனது அற…
-
- 0 replies
- 423 views
-
-
நடிகர்கள் : கமல்ஹாசன்,பூஜாகுமார்,ஆண்ட்ரியா, இசை : சங்கர் எஷான் லோய், தயாரிப்பு,இயக்கம் : கமல்ஹாசன் அமெரிக்க நடன ஆசிரியராக வேலை பார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் முதலாளியோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்.. தான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முதலாளியை மணப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல்…
-
- 0 replies
- 754 views
-
-
ஒரு முத்தமும் பல கேள்விகளும் .. ‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன். பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே …
-
- 4 replies
- 2.4k views
-
-
கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன் சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இன்று கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் கு…
-
- 4 replies
- 995 views
-
-
சென்னை: கமலஹாசனின் நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளன. டி.டி.எச். சில் வெளியிடுவதாக அறிவித்ததன் காரணமாக 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்கனவே பல்வேறு இடையூறுகளை சந்தித்தார் கமலஹாசன். ஒருவழியாக அப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, ஜனவரி 25 ஆம் தேதியனறு 'விஸ்வரூபம்' ரிலீசாக உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று மனு அளித்துள்ளது புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் புகார் கூறி…
-
- 5 replies
- 867 views
-
-
இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்! இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை. என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன். மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள விஸ்வரூபம் எதிர்கொண்ட விஸ்வரூப பிரச்சனைகள் இப்போது விலகிவிட்டன. இந்த மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய முழு வீச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் தனது படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு திரையிட்டு காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்த பாலு மகேந்திரா “படத்தைப் பார்த்தால் கமலுக்கு பித்துபிடித்துப் போய்விட்டது என்று நினைக்கிறேன். படத்திற்கு தன்னை அர்ப்பணித்து, கடின உழைப்புடன் ஆராய்ந்து இந்த படத்தை எடுத்திருப்பதைப் பார்த்தால் கண்டிப்பாக கமலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். இந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாரும் அசைக்க முடியாது. விஸ்வரூபம் பார்த்த பிறகு கமல் தமிழன் என்பதிலும், என் நல்ல நண்பன் என்…
-
- 6 replies
- 1k views
-
-
ரஜினி-கமல்-ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிராஜாவுக்கு அது சாத்தியமில்லாமலே போய்விட்டது. தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய பாரதிராஜா, தனது உயிர் நண்பன் இளையராஜாவை அந்த மேடைக்கு வரவழைத்ததுதான் ஹைலைட். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதிராஜாவின் 'பாதி' ராஜாவான கவிப்பேரரசு வைரமுத்து அழைக்கப்படவே இல்லை அங்கு. இருந்தாலும் சென்னையிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் விழா குறித்து போனில் விசாரித்துக் கொண்டேயிருந்தாராம் வைரமுத்து. அதுவும் இரவு பதினொரு மணி வரைக்கும். வழக்கம்போலவே இளையராஜாவை 'வாடா போடா' என உரிமையோடு அழைத்த பாரதிராஜா உருக்கமாக பேசிய சில விஷயங்கள் கால காலத்திற…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=t-cn23FCOBM இந்த குறும்படம் சில தமிழர்கள் இன்றைய நிலையில் நேர்கொள்ளும் மறைக்கப்படும் சிங்கள பயங்கரவாத செயல்களை வெளியில் கொண்டுவந்துள்ளது. இதை உருவாக்கிய கலைஞர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர்கள். இப்படியான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமை.
-
- 3 replies
- 479 views
-
-
'நான் புலம்பெயர் தமிழர் மத்தியில் வாழ்ந்தவன். 5 வருடங்கள் நோர்வே, லண்டனில் வாழ்ந்து இருக்கிறேன். போராட்டத்தில் வந்த அழிவுகளுக்கும் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் இன்று இருக்கும் நிலைமைகளுக்கும் புலம்பெயர் தமிழர்தான் நூற்றுக்கு தொன்னூற்றி ஐந்து வீதம் பதில் சொல்ல வேண்டிய உண்மை உள்ளது. அதை அசோக ஹந்தகம பயமில்லாமல் கேட்க விளைகிறார். அதை நான் ஆமோதிக்கிறேன்' என்கிறார் கிங் தேவசாந்தன். இலங்கையில் பல வெற்றிப்படங்களை தந்த புகழ்பெற்ற சகோதர மொழி இயக்குநரான அசோக ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியாகி பல்வேறு பாராட்டுதல்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கிறது 'இனி அவன்'. கடந்த 30 வருடகால இருண்ட சூழல் எமக்கே உரித்தான திரைப்படத்துறையை வளர்ப்பதற்கு வழிசமைத்துகொடுக்கவில்லை என்றாலும் கூட, அ…
-
- 5 replies
- 979 views
-
-
தம்பி ராமையா நடித்து வரும் உ படத்தில் சூப்பர் சிங்கர் ஆஜீத் நடிகராகவும், பின்னணி பாடகராகவும் ஒரே படத்தில் டபுள் அறிமுகம் ஆகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 12 வயது ஆஜீத். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து விருது பெற்ற ஆஜீத்துக்கு இப்போது திரைப்பட வாய்ப்புகள் குவிகிறது. சில படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதன் முறையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. தம்பிராமையா ஹீரோவாக நடிக்கும் உ என்ற படத்தில் ஆஜீத் பாடி நடிக்கிறார். ஹீரோவின் சின்ன வயது பிளாஷ்பேக்கில் வரும் 'திக்கில் திணறுது தேவதை, வெட்டகப்படுது பூமழை...' என்ற பாடலைப் பாடியுள்ளார். அதோடு அந்தப் பாடல் காட்சியில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். …
-
- 0 replies
- 586 views
-
-
சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மத…
-
- 20 replies
- 1.8k views
-
-
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மதுரையில் உள்ள இரயில்வே மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம்,பாலுமகேந்திரா,பாக்யராஜ்,சேரன், மணிவண்ணன், மகேந்திரன் மற்றும் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள மதுரை வந்தவண்ணம் இருக்கின்றார்கள். இசைத்தட்டினை மணிரத்னம் வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக் கொள்ள இருக்கின்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குஷ்பு,சுஹாசினி,ராதிகா போன்ற பிரபல நடிகைகளும் கலந்து கொண்டு பேச இருக்கின்றார்கள். நாளை இசை வெளியீட்டோடு, டிரைலரும் வெளியிடப்படுகிறது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழ் படங்கள்...
-
- 0 replies
- 663 views
-
-
எலி புகுந்த சமையல் கட்டுல உப்பு எது, சர்க்கரை எதுன்னு ஒரு டவுட்டு வருமே, அப்படி கலைத்துப்போட்டு கலகலக்க வைக்கிறார்கள் இந்த லட்டு கோஷ்டியினர்! அதற்கப்புறம் வயிற்றுக்குள் இருக்கும் ஸ்பேர் பார்ட்சுகள் அதனதன் இடத்தில் இருந்தால் அது நீங்கள் செய்த பூர்வ புண்ணியம்! அதுவும் நெய்வேலியிலிருந்து நேரடியா கரண்ட் கொடுத்தாலும் பிரகாசிக்கவே முடியாது என்று ஜனங்களால் சத்தியம் செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் வீண் என்று அலட்சியப்படுத்தவே முடியாத து£ண் ஆகியிருக்கிறார் க.ல.தி.ஆ-வில்! 'வாங்கிகிட்டு' நடிக்க வச்ச டைரக்டர்களே கூட இனி 'வழங்கிட்டு' நடிக்க வைக்கிற நிலைமை வந்துருச்சே..., ஈஸ்வரா! 'சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கறதுதான்'. திரைக்கதை திலகம் கே.பாக்…
-
- 0 replies
- 2.8k views
-
-
ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்! ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா…
-
- 0 replies
- 531 views
-
-
பிரபாகரன் - கமல் - போராளிகள் தற்போது இலங்கை மீடியாக்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கைகுலுக்கும் போஸ்டர் ஒன்று பரபரப்பாக அடிபடுகிறது. முக்கியமாக சிங்கள மீடியாக்களே இந்த போஸ்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. விஸ்வரூபம் படத்தை வாழ்த்தும் வகையில் இந்த போஸ்டர் திருச்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாக, இலங்கை சிங்கள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு அங்கு சூட்டை கிளப்புகின்றன. எமது திருச்சி செய்தியாளரை கேட்டபோது, தனது கண்களில் இப்படியொரு போஸ்டர் தட்டுப்படவில்லை என்றார். போஸ்டரில் உள்ள கமல்-பிரபாகரன் போட்டோ, கிரிஸ்டல் கிளியராக தெளிவாக உள்ளது. இது எந்தளவுக்கு நிஜமான போஸ்டர் என்று புரியவில்லை. ஆனால், இந்த ப…
-
- 0 replies
- 665 views
-
-
Life of Pi - ஒரு IMAX அனுபவம்... விற்பனையில் சக்கைபோடு போட்ட, “உலகின் தலை சிறந்த” என்ற அடைமொழியைக் கொண்ட பல நாவலகள், பல முறை திரைப்படங்களாக உருமாறி இருக்கின்றன. ஒரே கதை பல முறை பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாகியிருக்கின்றன.அவற்றில் பல "மூலத்தை கொலை செய்வதற்காகவே எடுக்கப்பட்டவை" என்ற காட்டமான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால், சில படங்கள் நாவலின் தரத்தைக் கெடுக்காமல் திரைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து, பாராட்டையும் வசூலையும் குவித்துள்ளன.Harry Potter, Twilight Series, Lord of the Rings போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். துடைப்பக்கட்டையில் பறக்கும் மந்திரவாதிச் சிறுவன் கதையையும், உருகி உருகி காதலிக்கும் வேம்ப்பயர் கதையையும், மனிதர்கள…
-
- 18 replies
- 2.5k views
-
-
LIFE OF PIE இல் பொம்பே ஜெயசிறி பாடிய தமிழ் பாடல் ஒஸ்காருக்கு நியமிக்கபட்டிருக்கு.பாடலை எழுதியதும் அவர்தான் . LIFE OF PIEபல விருதுகளுக்கு நியமனமாகியிருக்கின்றது ,சிறந்த படம் உட்பட .
-
- 11 replies
- 1.4k views
-
-
இன்றைக்கு அனைத்து ஊடகங்களும் பவர்ஸ்டார் சீனிவாசனின் பேட்டியை ஒளிபரப்பவும், வெளியிடவும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனந்த விகடன், டைம்பாஸ் தொடங்கி சன்டிவி, கலைஞர், ராஜ், உள்ளிட்ட பல சேனல்களிலும் பேட்டி கொடுப்பதில் பரபரப்பாக இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். காமெடியாகவோ, சீரியசாவோ எந்த கேள்வி கேட்டாலும் புன்னகை மாறாமல் தனது பதிலை கூறி அனைவரையும் சிரிக்க வைத்துவிடுகிறார் சீனிவாசன். சூப்பர் ஸ்டார் கூட இன்றைக்கு எந்த சேனலுக்கும் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால் பண்டிகை தினங்களில் பவர்ஸ்டாரின் பேட்டி கண்டிப்பாக ஒளிபரப்பாகிறது. தவிர ரியாலிட்டி ஷோக்களில் சிறப்பு விருந்தினராகவும் அசத்துகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். சூப்பர் குடும்பத்தில் கலக்கிய பவர்ஸ்டார் சன் டிவியின் சூப்பர் குடும்பம் ந…
-
- 1 reply
- 473 views
-
-
2012: தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் ஆண்டு எஸ். கோபாலகிருஷ்ணன் 2013ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்விப் பட்டியல்கள் குவிகின்றன. வசூல் சார்ந்தும் தரம் சார்ந்தும் இந்தப் பட்டியல்கள் அணிவகுக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் தத்தமது துலாக்கோலில் கோலிவுட்டை நிறுத்துப் பார்க்கின்றன. தமிழ் சினிமாவின் ஓராண்டுக் கால இயக்கத்தை நுட்பமாக அவதானிக்கும்போது அதில் உருவாகியுள்ள புதிய சலனங்களைப் புறக்கணித்துவிட முடியாது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநர்களே அதிகமாகச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பல புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் முதல் அடியை அழுத்தமாகவும் ஆழமாகவும் பதித்திருக்கிறார்கள். சில பல வெற்றிகளைக…
-
- 0 replies
- 562 views
-
-
A Lonely Place to Die சனி, 12 ஜனவரி 2013( 18:22 IST ) இந்தப் படத்தின் கதையை குழந்தையிலிருந்து பார்த்து வந்திருக்கிறோம். சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஹாலிவுட் இயக்குனர் டோனி ஸ்காட்டின் மென் ஆன் ஃபயர் படத்தின் கதைதான் இதுவும். குழந்தை கடத்தல். பணக்கார குடும்பத்தின் குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கதை. மென் ஆன் ஃபயர் பார்த்த போது இந்தக் கருவை மையமாக வைத்து இதைவிடச் சிறந்த படத்தை உருவாக்குவது கடினம் என்று தோன்றியது. டென்சில் வாஷிங்டனின் நடிப்பும், அவரது கதாபாத்திரத்தின் ட்ரைன்டு கில்லர் பின்புலமும், ஆக்சன் காட்சிகளும், வசனங்களும் அப்படியொரு நம்பிக்கையை தந்தன. ஏ லோன்லி பிளேஸ் டூ டை படம் அந்த நம்பிக்கையை சற்று அசைத்துவிட்டது. படத்தின் முதல் ஷாட்டிலேயே நம்மை பிடித்து …
-
- 0 replies
- 425 views
-