வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi Jan 12 2013 09:29:47 மொன்றியல் Yann Martel இன் நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் எடுக்கப்பட்டுள்ள Life of Pi திரைப்படம் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பதில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிரமாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. Best Achievement in Special Visual Effects Rising Star Award (சூரஜ் ஷர்மா, Pi யாக நடித்தவன்) Best Production Design Best Screenplay (Adapted) Best Sound ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் விருதினை தட்டிச் செல்லும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. Life of Pi என்பது மிகப்பிரபலமான நாவல் எ…
-
- 0 replies
- 518 views
-
-
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்தை தமிழ்நாட்டில் விற்க முதலமைச்சரிடம் அனுமதி கேட்கிறார் வில்லன். அதற்கு முதலமைச்சர் மறுக்கவே, அவரை பழி வாங்குவதாக நினைத்து, முதலமைச்சர் மகள் அனுஷ்காவை வில்லன் ஆள் வைத்து கடத்துகிறார். கடத்தும் நபராக ஹீரோ அறிமுகமாகிறார். கடத்தும் ஹீரோவிடமே ஹீரோயின் மனதைப் பறிகொடுத்து, உண்மையை அவரிடம் விளக்கி, வில்லன் முகாம்களை பழி வாங்கும் மொக்கை கதையே அலெக்ஸ்பாண்டியன். இந்த கதை படத்தில் சுமார் ஒரு மணி நேரமே வருகிறது. மீது இரண்டு மணி நேரங்களுக்கு சந்தானம் காமெடி, தேவையே இல்லாத பிரமாண்ட சண்டைக்காட்சிகள், படத்துக்கு சிறிதும் சம்மந்தமில்லாத மொக்கை பாடல் காட்சிகள் என மீதி இரண்டு மணிநேரத்தை ஓட்டியிருக்கிறார் இயக்குனர் சுராஜ். அனேகமாக கார்த்திக் படங்களில் இதுதா…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்… காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்… தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே… பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே… நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு… புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.ட…
-
- 0 replies
- 1.2k views
-
-
உடலை வலுவாக கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் அனைவருக்கும் உதாரணமான மனிதராக இருப்பவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் ஒரு பாடிபில்டர்,ஹாலிவுட் நடிகர்,அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர். பலசாலியாக பொய்த் தோற்றம் காட்டும் நட்சத்திரங்களிடையே, போலியான புஜபலம் காட்டுபவர்களிடையே நிஜவலிமை காட்டிவரும் ஒரே நடிகர் அர்னால்டு. உடற்கட்டை விரும்புவோர் மட்டுமல்ல உலகப் பட ரசிகர்களிடையேயும் அர்னால்டுக்கு தனி... ரசிகர் கூட்டம் இருக்கிறது. அர்னால்டு நடித்து 'தி லாஸ்ட் ஸ்டாண்ட்' (The Last Stand) படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் அர்னால்டு ரசிகர்களுக்கு 2013 தொடக்கத்திலேயே விருந்தாகப் போகிறது. இது ஒரு முழுநீள ஆக்ஷன் படைப்பு. அர்னால்டுடன், ஜானி நாக்ஸ் வில்லி.லூயிஸ் கஸ்மேன், ஜேமி அ…
-
- 0 replies
- 692 views
-
-
http://youtu.be/Ys2sBJJV7dY தமிழுக்கு போட்டோகூட கிடையாது - தெலுங்குக்கு என்றால் நேரடி அறிமுகம்! - இதான் மணிரத்னம் பாணி கடல் படத்தின் டீஸர் என்ற பெயரில் சமீப காலமாக மணிரத்னம் அண்ட் கோ செய்து வந்த அழிச்சாட்டியத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் காட்டமாகிவிட்டிருக்கும் நேரத்தில், அவர் செய்துள்ள இன்னொரு வேலை, தமிழ் சினிமாவை அவரைப் போன்றவர்கள் எந்த அளவு கிள்ளுக் கீரையாக மதிக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. மணிரத்னம் எடுத்துவரும் கடல் படத்தில் ஹீரோவாக கார்த்திக் மகனும், ஹீரோயினாக ராதாவின் இளையமகளும் அறிமுகமாகிறார்கள். தான் அறிமுகப்படுத்தும் இந்த இரு புதுமுகங்களின் படங்களைக் கூட யாருக்கும் காட்டாமல் ரகசியம் காத்த மணிரத்னம், ஒரு நாள் ஹீரோவின் தலைமுடி, அடு…
-
- 3 replies
- 846 views
-
-
இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம், தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும், இது வெறும் விளையாட…
-
- 19 replies
- 1.8k views
-
-
சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் ரைஸிங் ஸ்டார் PR 2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக்…
-
- 1 reply
- 627 views
-
-
இந்த வயதிலும் நாட்டியத்தில் அளவு கடந்த ஆசையில் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கிறார் நிர்மலா. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர். நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இ…
-
- 2 replies
- 854 views
-
-
எவ்வளவு உயரிய விருதுகள் கொடுத்தாலும் அதற்காக ஒரேயடியாக சந்தோஷப்படுகிறவர் அல்ல இசைஞானி இளையராஜா. என் வேலை இசையமைப்பது மட்டும்தான். இசையின் பெருமையை விருதுகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்று நம்புகிறவர் அவர். அப்படிப்பட்டவருக்கு நேர்ந்த அதிர்ச்சிதான் இனிமேல் நீங்கள் படிக்கவிருப்பது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் சினிமாக்காரர்களுக்கு ஏதாவது ஒரு விருதை கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அப்படி ஒரு விழாவுக்கு இளையராஜாவை அழைத்தார் சினிமா பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ஐயா... நீங்க நேர்ல வந்து இந்த விருதுகளை உங்க கையால கொடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க என்றாராம் இளையராஜாவிடம். இதை நம்பி சம்பந்தப்பட்ட விழாவுக்கு போய்விட்டார் அவர். அதன்பிறகு நடந்ததுதான் ரகளை. போன…
-
- 71 replies
- 6.5k views
-
-
இந்தப் பதிவு இந்த ஆண்டு நான் பார்த்த சிறந்த 10 படங்களைப் பற்றியது. முன்பே சொன்னது போல் இது என் ரசனைக்கு உட்பட்டது மட்டுமே. 10) அட்டக்கத்தி விளம்பரங்கள் மட்டும் இல்லையென்றால் இந்தப் படத்தை யாரும் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் (ஆனாலும் பெங்களூரில் ரிலீஸ் ஆகவில்லை). சரியான நேரத்தில் சரியான ஆட்களின் கண்களில் பட்டதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்திருக்கிறது. கதை என்று பெரிதாக எதுவும் இல்லை என்றாலும், படம் ஒரு அக்மார்க் என்டர்டெய்ன்மென்ட். சென்னைப் பக்கம் இருக்கும் கிராமத்து இளைஞன் ஒருவனது (காதல்) வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.அதிலும் ஹீரோ ரியாக்ஷங்கள் பல இடங்களில் அற்புதம். தெத்துப்பல் ஹீரோயினும் அழகாகவே இருந்தார். எழுதி இ…
-
- 4 replies
- 1.9k views
-
-
நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன் இசை: என் ஆர் ரகுநந்தன் மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்.. மேலும் படங்கள் -கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க! கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால…
-
- 4 replies
- 664 views
-
-
என் பார்வையில் தமிழ் சினிமா - வெங்கட் சாமிநாதன் தமிழ் சினிமாவில் இலக்கியம் எழுத்து பற்றி எழுதச் சொல்லி எனக்குப் பணிக்கப்பட்டிருக்கிறது சைனாவில் இட்லியும் தேங்காய்ச் சட்னியும் தேடினால் கிடைக்கலாமோ என்னவோ. லாப்லாந்தில் மொந்தன் பழம் எங்கே கிடைக்கும் என்று தேடலாம். இர்குட்ஸ்க் நகரில் காலையில் எழுந்ததும் இடியாப்பமும் குருமாவும் தேடலாம். நாமும் கடந்த 90 வருட காலமாக தமிழுக்கு ஒரு ஆவேசத்தோடு தொண்டை வரள கோஷமிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் வளர்ச்சியே தன் கொள்கையாகக் கொண்ட இயக்கம் அரசுக்கு வந்து இரண்டு தலைமுறை ஆன பிறகும், தமிழ் சினிமாவுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று ஆசை காட்ட வேண்டி யிருக்கிறது. ஒரு தமிழனுக்கு தன் இயல்பில் பேச, வாழ, வரிவிலக்கு என்…
-
- 0 replies
- 971 views
-
-
கமல் நடித்து வெளியாகப்போகும் விஸ்வரூபம் திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 11ல் வெளியாகும் என்பதில் கமல் உறுதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென தேவி தியேட்டர் இன்று மாலை முதல் முன்பதிவை நிறுத்திவிட்டது. அதற்கு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? என்று கோலிவுட்டில் கிளம்பிய பெரும் வதந்திதான் காரணம் என கூறப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்ட சில முக்கிய அம்சங்களை கமல் தரப்பில் ஏற்றுக்கொண்டதாகவும், அதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளதால், ரிலீஸ் தேதி ஜனவரி 25க்கு மாறலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் டி.டி.எச்சில் ஜனவரி 10ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 24ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என்றும் எதிர்ப…
-
- 2 replies
- 931 views
-
-
கமல் - திரையரங்க உரிமையாளர்கள் விடியவிடிய பேச்சு - டிடிஎச்சில் வெளியிடும் திட்டம் ரத்து? Posted by: Shankar Updated: Tuesday, January 8, 2013, 10:17 [iST] சென்னை: கமலுடன் திரையரங்க உரிமையாளர்கள் நேற்றி இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎச்சில் வெளியாவதால் வட இந்தியாவில் விஸ்வரூபத்துக்கு ஒரு தியேட்டர் கூட ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பிவிஆர் சினிமாஸ் குழுமம் கமலுக்கு வெளிப்படையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இரு வாரங்களுக்குப் பின்பே வெளியிட வேண்டிய சூழல். தமி…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ் சினிமாவில் ஒரு கேவலமான கதைத் திருட்டு..! தமிழ் சினிமா எத்தனையோ விதமான கதைத் திருட்டுக்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் இப்போது நடந்திருப்பது படுமோசமான ஒன்று. அது, பாக்யராஜின் இன்றுபோய் நாளை வா கதையை, அவருக்கே தெரியாமல், சம்பந்தமில்லாதவர்கள் விற்றதும், அதை கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சந்தானமும் ராம நாராயணனும் படமாக எடுத்ததும்! இன்று போய் நாளை வா என்ற படத்தின் மூலக்கதை, கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் பாக்யராஜுக்கு சொந்தமானது. அதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை இன்றுவரை அவர் யாருக்கும் தரவில்லை. தன் மகனை வைத்து அந்தப் படத்தை எடுக்க முயன்று வருகிறார். இது கடந்த ஓராண்டு காலமாக செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பாக்யராஜிடம் இந்த கதை உரிமையை இரு…
-
- 2 replies
- 1.4k views
-
-
யாரவது இவரை பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இன்று Toronto விலிருந்து வரும் ஒரு பிரபலமான தினசரியில் இவரை பற்றி எழுதியிருந்தார்கள் Youtube இல் இவரின் விளையாட்டு <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/N6nrZRL-au4" frameborder="0" allowfullscreen></iframe>
-
- 1 reply
- 455 views
-
-
மணிரத்னம் டைரக்ஷனில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் "கடல்" படத்தின் மூலம் ஹீரோவா என்ட்ரி ஆனார். கடல் படத்திற்கு முன்னரே பல டைரக்டர் பார்வையில் பட்டுவிட்டதால், பல முன்னனி டைரக்ர்கள் அவரை இயக்க தயராக இருந்தனர். இந்நிலையில், கௌதம் கார்த்திக் அடுத்து ‘மைனா மற்றும் கும்கி’ புகழ் பிரபுசாலமன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'சுந்தரபாண்டியன்' பட ஹிட்டுக்குப் பிறகு, டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன், உதயநிதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு, டைட்டில் வைக்காம இருந்தார். இப்ப இந்த படத்துக்கு "கதிர்வேலின் காதலி"னு டைட்டில் வைச்சிருக்காங்க. ஹாரிஸ் ஜெயாராஜ் …
-
- 1 reply
- 487 views
-
-
சென்னை: முஸ்லிம்களை தவறாகச் சித்தரிப்பது கமலின் வழக்கம். எனவே அந்தப் படம் வெளியாகும் முன்பு இஸ்லாமிய அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கமல் எழுதி இயக்கி தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படம் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. தியேட்டர்களுக்கு வரும் முன் இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகும் என்பதில் ஆரம்பித்து, முஸ்லிம்கள் எதிர்ப்பு வரை சர்ச்சைகள் கொஞ்சமல்ல. இந்தப் படத்தை வெளியாகும் முன்பு தாங்கள் பார்க்க வேண்டும் என்று முன்பு சில இஸ்லாமிய அமைப்புகள் கேட்டிருந்தன. ஒருவேளை கமல் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்காவிட்டால், 10000 ஏழைகளுக்கு பிரியாணி விருந்தளிப்போம் என்று கூறியிருந்தனர். அதற்கு பதிலளித்த கமல், அண்டா அ…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை:தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் வரும் 7ம் தேதி, மத்திய அரசுக்கெதிராக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உட்பட பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் வருமானத்துக்கு ஏற்ப சேவைக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து, வருகிற 7ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, வள்ளுவர்கோட்டம் முன்பு அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் இதில் அனைத்து சின்னத்திரை, தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து…
-
- 0 replies
- 370 views
-
-
கோடம்பாக்கம்: சென்னையில் நாளை (திங்களன்று) நடிகர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரும் மற்ற நடிகர்களும் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு திரைப்படங்கள் மீது விதித்துள்ள சேவைவரியை எதிர்த்து இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரைப்படங்கள் மீது மத்திய அரசு புதிய சேவைவரியாக 12.6 சதவீதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து தமிழ்த் திரையுலகின் அனைத்துச் சங்கங்கள் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டட்த்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பா…
-
- 0 replies
- 536 views
-
-
கமலின் நம்பிக்கை அஸ்திவாரத்தில் பொக்லைன் வைத்து தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். நேற்றுவரை இருந்த நிலைமையை ஒரே நாளில் மாற்றிவிட்டார்கள் அத்தனை பேரும். இந்த விறுவிறுப்பான 'கேம்' எப்படி முடியும் என்றே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சுமார் 300 தியேட்டர்காரர்களுக்கு மேல் சந்தித்து தனது நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டி விஸ்வரூபம் படத்தை திரையிட ஒப்புதல் வாங்கியிருந்தார் கமல். ஆனால் அத்தனையும் இன்றைய தேதியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சங்கம் பலமாக இருப்பதால் தனித்து செயல்பட அச்சம் கொள்கிறார்களாம் அத்தனை பேரும். இது ஒருபுறமிருக்க, சென்னையில் புகழ் பெற்ற நான்கு காம்பளக்ஸ் தியேட்டர்களில் படத்தை வெளியிடவ…
-
- 0 replies
- 688 views
-
-
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இடத்தை எளிதாக அடைந்துவிட்டார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தைக் கூட அலெக்ஸ் பாண்டியன் பட இயக்குனர் தனது படத்தின் டைட்டில் கார்ட் மூலம் வழங்குவதாகவும் தகவல்கள் பரவியுள்ள நிலையில் சந்தானம் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குமுறலுடன் கூறுகிறார் ஒரு உதவி இயக்குனர் ஒருவர். சந்தானம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா 'என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் கதை, திரைக்கதை கூட நடிகர் சந்தானத்துடையது தான் என்பதே இதுவரை எட்டியிருந்த தகவல். ஆனால் இப் படத்தின் கதை சந்தானத்துடையது அல்ல, என்னுடையது என்கிறார் இவர். நவீன் சுந்தர் என்பவர், இவர் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் குமுறலுடன…
-
- 0 replies
- 972 views
-
-
தெலுங்கு பட உலகில் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிப்பில் வெளியான கப்பர் சிங் படம் சூப்பர் ஹிட். இதை அடுத்து இளம் கதாநாயகிகளில் தெலுங்கு பட உலகம் சுருதி ஹாசனுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி உள்ளது. சுருதியும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று படங்கள் ஒப்புக் கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார். இடையில் விளம்பரப் படங்கள் வேறு குவிகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், மனதை மாற்றிக் கொண்ட இயக்குனர் சுருதி ஹாசனை ராம் சரண் ஜோடியாக நடிக்க வைக்க விருப்பம் கொண்டு, சுருதியை அணுகிய போது, ஒரு கோடி சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம் சுருதி. இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாலும் 2 வார காலம் தயாரிப்பாளர், சுருதி, மற்றும…
-
- 0 replies
- 666 views
-
-
“நடிகைகளுக்கு மேரேஜ் ஆகிவிட்டால் அவர்கள் பீல்ட்-அவுட் தானா..?” என்று என்னதான் சிநேகா வாய் கிழிய கத்தினாலும் டைரக்டர்கள் என்னமோ உஷாராகத்தான் இருக்கிறார்கள். அவர் சொன்னது மாதிரியே இதுவரை எந்த டைரக்டரும் அவர் வீட்டு வாசலை தட்டவில்லை. அதனால் தனது மேரேஜுக்கு முன்பு கமிட்டான ‘ஹரிதாஸ்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் அவர் இப்போதைக்கு வெறுமனே ஜவுளிக்கடை திறப்பு, நகைக்கடை திறப்பு என்று ஊர் ஊராக ட்ரிப் அடுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஹீரோயினாக நடித்த ‘ஹரிதாஸ்’ படம் விரைவில் ரிலீஸாகப் போவதால் கொஞ்சம் அவர் தெம்பாகக் காணப்படுகிறார். ஒரு அப்பாவுக்கும்,மகனுக்குமான உணர்ச்சிமிக்க உறவைப் பற்றிச் சொல்லும் இந்தப்படத்தில் ஹீரோவாக கிஷோர் நடித்திருக்கிறார். படத்தில் …
-
- 1 reply
- 400 views
-
-
-
- 0 replies
- 344 views
-