வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சனிக்கிழமை ஆறுதலாக இருந்து ஒரு சொட் அடிப்பம் என்று நண்பன் வாங்கித்தந்த AUCHENTOSHAN WHISKY ஐ கிளாசில் விட்டு (ஒரு மாதமாக குடிக்கவில்லை ஏனென்று முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும் ) வைத்துக்கொண்டு கொம்பியூட்டர் முன் குந்தினால் மனுசி வந்து அரவான் பார்க்க கூப்பிட்டார்.பத்து நிமிட ஓட்டம் தானே ,வசந்த பாலனின் படம் புறப்பட்டுவிட்டேன்.தியேட்டரில் இருந்தது இருபது பேர் .இடைவேளைக்கு யாரோ பெயர் சொல்லி கூப்பிட திரும்பிப் பார்த்தால் தங்கையும் கணவரும்,படம் முடிந்து வெளியே வர மற்ற தங்கை நண்பியுடன் நிற்கின்றார் .(நல்ல குடும்பம் ) சாகித்திய அகடமி பரிசு பெற்ற குமரேசனின் "காவல் கோட்டம்" தான் சில மாற்றங்களுடன் அரவான் ஆகியது.இடைவேளை வரை என்ன நடக்கின்றதேன்றே விளங்கவில்லை .ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
இயக்குநர் ஷங்கருக்கு திறந்த மடல் அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம். ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
59-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (07.03.2012) அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு மே 3-ம் தேதி இந்த விருதுகள் வழங்கப்படும். நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான 'தி டர்ட்டி பிக்சர்ஸி'ல் நடித்ததற்காக வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதேபோல் சிறந்த இந்தி படத்திற்கான விருதிற்கு 'ஐ ஆம்' என்ற படம் தேர்வு பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை மராத்தி படமான 'தியோலில்' நடித்த கிரிஸ் குல்கர்னி பெறுகிறார். தமிழில் 'வாகை சூட வா' படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை சற்குணம் இயக்கி உள்ளார். இவரது முதல் படம் 'களவாணி'. 'வாகை சூட வா' இவரது இரண்டாவது படமாக அமைந்தது. இந்த படத்தின் நாயகனாக விமல் நடித்தார். படத…
-
- 4 replies
- 867 views
-
-
ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்! 3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம். ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எ…
-
- 1 reply
- 1k views
-
-
Jean Dujardin என்ற பெயர் அமெரிக்காவின் திரைத்துறை நகரமான HOLLYWOOD எங்கும் எதிரொலிக்கின்றது. Michel Hazanavicius இயக்கத்தில் Jean Dujardin நடித்த திரைப்படம் THE ARTIST ஜந்து ஒஸ்கார் விருதுகளை அள்ளி வந்துள்ளது. THE ARTIST திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதினையும் Michel Hazanavicius சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதினையும் Jean Dujardin சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினையும் Ludovic Bource சிறந்த இசையமைப்பாளருக்கான ஒஸ்கார் விருதினையும் Mark Bridges சிறந்த உடையமைப்பாளருக்கான ஒஸ்கார் விருதினையும் பெற்றுள்ளனர். ஆங்கிலம் சாராத ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள் கிடைத்திருப்பது ஒஸ்கார் வரலாற்றில் முதற் தடவையாகும். அதுவும் வசனங…
-
- 0 replies
- 542 views
-
-
விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தை மணிரத்னம் இயக்கினார். மாதவன் முக்கிய கேரக்டரில் நடித்தார். இதுபோல் இந்தியில் விடுதலைப்புலிகளை மையப்படுத்தி புதுப்படம் தயாராகிறது. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமான சண்டை, ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகளின் யுத்த நடவடிக்கைகள் போன்றவை இதில் காட்சிபடுத்தப்படுகின்றன. இதில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஜாப்னா என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். போரில் ஒரு விடுதலைப் புலி சந்தித்த நிகழ்வுகள், பட்ட கஷ்டங்கள் போன்றவற்றை திரைக்கதையாக தொகுத் துள்ளனர். இப்படத்தை ஜோசித் சிர்கார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினையை வைத்து ‘யாஹன்’ என்ற …
-
- 20 replies
- 2.6k views
-
-
http://youtu.be/pcMs1V9DDHE http://youtu.be/ofC2SJZzPAM http://youtu.be/EDSmIqkcE0U http://youtu.be/mgTx2ViydfU http://youtu.be/S4P0L8CN8BQ http://youtu.be/JTmJjbaSI4E http://youtu.be/3v7_oDZICLU http://youtu.be/dClFOjIbPJQ சர்வதேச அரங்கில் அந்த குட்டி தேசத்திலிருந்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. Majid Majidi என்கிற சிறந்த இரானியத் திரைப்பட இயக்குநரின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட படமிது. ஒன்றரை மணி நேரத்தை தியாகம் செய்து இந்தத் திரைப்படத்தை பாருங்கள். தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நச்சுச்சூழலில் - அது தெரியாமலே - நா…
-
- 1 reply
- 814 views
-
-
மகேந்திரனின் உதிரிப்பூக்கள் - மிகைப்படுத்தப்பட்ட திரைப்படமா?? நேற்றுத்தான் உதிரிப்பூக்கள் பார்த்தேன். பல வருடங்களாக பார்க்க வேணடும் என்று நான் விரும்பிய படம். நேற்றுத்தான் முடிந்தது. பலமுறை இப்படம்பற்றிய விமர்சனங்களைக் கேட்டதுண்டு. மிகச்சிறந்த படம், இதுவரை இத்தரத்தில் படம் வரவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். மணிரத்தினம் கூட ஒருதடவை, "உதிரிப்பூக்கள் போன்றதொரு படம் எடுக்க முடிந்தால் அது கனவு பலித்தது போல இருக்கும்" என்று கூறியதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால், நேற்று எனக்கு அப்படி எதுவுமே தோன்றவில்லை. விஜயன் வில்லனா கதாநாயகனா என்று படம் நெடுகிலும் யோசித்துக்கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் அவரின் முகபாவங்கள் வில்லத்தனமாக இருக்கவில்லை. இடையிடையே நல்லவனாகவும் மாறியிரு…
-
- 4 replies
- 1.5k views
-
-
ராஜபக்சே ஆதரவு படத்தில் இந்தி நடிகர் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதற்கு இந்தி நடிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஐஃபா விழாவை அமிதாப்பச்சன் புறக்கணித்த போது தாங்கிப் பிடித்தவர்கள் சல்மான்கானும், விவேக் ஓபராயும். தமிழர்களின் கண்டனத்தை மீறி இவர்கள் இலங்கையில் ஐஃபா விழாவை முன்னின்று நடத்தினர். பழங்கதையை மறப்போம். புதிதாக படம் எடுக்க இலங்கை செல்கிறார் ஜான் ஆபிரஹாம். ஈழப் போராளிகளுக்கும் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரை இவர் திரைப்படமாக்கப் போகிறாராம். இந்தப் படத்தில் அமைதிப்படை இலங்கையில் இருந்த காலகட்டமும் பதிவு செய்யப்பட உள்ளதாம். ஜாஃப்னா என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தயாரித்து இந்திய புலனாய்வு அதிகா…
-
- 0 replies
- 780 views
-
-
OSCAR awards : பதினோரு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது Martin Scorsese - இயக்கத்தில் வந்துள்ள மற்றொரு சிறந்த படமான Hugo ! Martin Scorsese - நமது "இன்னொருவனின் கனவு" தொடரின் முக்கிய நாயகன். Michel Hazanavicius-யின் "The Artist " திரைப்படம் பத்து ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதினை 'THE ARTIST' படத்தினை இயக்கிய Michel Hazanavicius வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான் ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Jean Dujardin" for "The Artist". சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றார் "Meryl Streep" for "Iron Lady"... சிறந்த மூல திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை தட்டி சென்றது Midnight In Paris B…
-
- 2 replies
- 995 views
-
-
விண்ணைத் தாண்டி வருவாயா கிந்தியில் ரகுமான் இசையில் வெளிவந்துள்ளது.
-
- 0 replies
- 732 views
-
-
இயக்குனர் Q ' விடம் கேட்கப்பட்ட கேள்வி: 'இது போன்ற படத்தை எப்படி எடுத்தீர்கள் '? 'என்னிடம் டிஜிட்டல் கேமரா இருக்கிறது, படத்தொகுப்பு வசதிகளும் ஒலி கலவை கூடமும் இருக்கிறது , என் மேல் நம்பிக்கை வைத்து என் அலைவரிசையில் பயணிக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள்... ஏன் என்னால் சினிமா எடுக்க முடியாது?'. இது போன்ற பதிலை நாம் இங்கே பலரிடம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த பதிலுக்கு பின்பான அனுபவரீதியான தெளிவும் கலாபூர்வமான தீவிரமும் அனைவருக்கும் சாத்தியப்படாது. ஏனெனில் இன்று மைய்ய நீரோட்ட சினிமாவில் நட்சத்திரங்கள் இல்லாத ஒரு படத்தை எடுத்து அதை வெளியிடுவதே குதிரை கொம்பாக இருக்கும் வேளையில், முற்றிலும் சர்ச்சைக்குரிய சுயாதீன சினிமா ஒன்றை எடுத்துவிட்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி …
-
- 1 reply
- 1.2k views
-
-
நடிகை சினேகாவுடனான செவ்வி http://youtu.be/_bMQTG78y4s http://youtu.be/Wk5-AfOvpaM
-
- 0 replies
- 690 views
-
-
30 வருடங்களுக்கு முன்பு கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜனிகாந்தை அவரே செவ்வி காண்கிறார்!!!
-
- 0 replies
- 699 views
-
-
ஏனோ நல்ல பிரதி பிந்தியே வந்தது. ஒரு செய்தியுடன் கூடிய நல்ல படம் .தற்போதைய சினிமாக்கள் போல் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் செங்கல் செய்யும் ஒரு சூழலில் குழந்தை தொழிலாளிகளையும்,அடிப்படை கல்வி இல்லாமையையும் தொட்டு செல்கின்றது .விமல்-இனியா காதலும் இனிமையாக இருக்கின்றது .இசையும் பாட்டுகளும் மிக வித்தியாசமாக இருந்தது மவுனகுருவிற்கு பின் பார்த்த நல்ல படம் .
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=NLLwJYnrlVk&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video http://www.youtube.com/watch?v=yaDhSKKBRJw&feature=BFa&list=WL533CE1746B53FE71&lf=plpp_video
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரகாஷ்ராஜ் முதன்முதல் இயக்குநர் பொறுப்பேற்றுத் தாயரித்து வழங்கியிருக்கும் திரைப்படம் தோனி. இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்தும் அந்தப் படம் பார்ப்பவர்களை மேலும் உணர்ச்சிமயமான சிந்தனைக்குள் சுழல வைத்துவிட்டது. இன்றைய கல்வி முறையின் அபத்தங்கள் குறித்து நையாண்டி செய்திருக்கிறது தோனி. சமகாலத்தில் பெற்றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணுகுமுறை குறித்துச் சாட்டையடியாக விவாதங்களை முன்வைக்கிறது. அவனால் ஏன் இந்தக் கல்வித் திட்டத்தின் படிக்கட்டுகளை ஏறமுடியாது என்றால், படத்தின் தலைப்பிலேயே சொல்லி இருப்பது மாதிரி அவன் தோனியின் தீவிர பக்தன். கிரிக்கெட் அவனது உயிர். அவனது விளையாட்டுத் திறமை பற்றி கிரிக…
-
- 0 replies
- 940 views
-
-
முன்னொரு காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு ஒன்றுகலந்திருந்தனர். அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய Ashes and Snow என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு ஆவணப்படம். இன்று வரை முப்பது லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. ஒரு திரையிடலின் போது இந்த ஆவணப்படத்தினை ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து பார்த்திருக்கிறார்கள். பதினாறு ஆண்டுகள் இந்தப் படத்தை எடுத்திருக்…
-
- 0 replies
- 659 views
-
-
கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ? மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும், மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித் திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம் பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில் நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே பல்லாயிரம் ஆண்டுகளாயின. கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து, தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு என்று சொத்து சேர்க்கத் துவங்கினான். யார் வேண்டுமானாலும் - யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தனக்குப் பிடித்த ஆண் - பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித…
-
- 0 replies
- 987 views
-
-
ஆபாச திரைப்படங்களை தேடி சென்று பார்ப்பவர்கள், ஒரு விழுக்காட்ட ற்கும் குறைவானவர்களே . மேற்கண்ட படத்தில் திணிக்கப்பட்டதை போல,மற்றவர்கள் மீது ஆபாசம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது . தமிழர்களை இன்று சீரழித்து கொண்டிருப்பது திரைப்படமும் சாராயம் மட்டுமே. திரைப்பட ஆபாச காட்சிகளை கண்டு இளைஞர் சமுதாயம் சீரழிகிறது.சாராயத்தால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே சீரழிகிறது . குறைவான உழைப்பில் எண்ணிப் பார்க்க முடியாத பொருளாதாரத்தை திரைப்பட உலகில் மட்டுமே ஈட்ட முடியும். அதை இன்று முழுவதுமாக மாற்று இனத்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் . இங்குள்ள தமிழ் பெண்கள் ,ஆபாசமாக நடிக்க, முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதால் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் மாற்று இன பெண்களை தேடிச…
-
- 5 replies
- 2.2k views
-
-
விஸ்வநாதன் வேலை வேணும் – பாடல் பிறந்த கதைகள் I காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி.தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்.) கவிஞர்கண்ணதாசனும் வந்துவிட்டார். எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே “ஐசனோவர் யாருண்ணே?” என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா” என்றார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா?…
-
- 3 replies
- 12.1k views
-
-
கணவனை இழந்த பெண் ஒருபுறம், கணவனை காப்பாற்றப் போராடும் ஒரு பெண் என இருபெண்களின் கதை ‘’பெருமழைக்காலம்’’ திரைப்படம்… துக்கத்திலோ, மகிழ்ச்சியிலோ அழுவதை விட நெகிழ்ச்சியில் அழுவது எப்போதாவது தான் வாய்க்கிறது.. அப்படி நெகிழும் தருணங்கள் இந்தப் படத்தில் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நிறையமுறை நடக்கிறது.. கோழிக்கோட்டில் வசிக்கும் இஸ்லாமியப் பெண் ரஸியா(மீரா ஜாஸ்மின்). திருமணமானவுடன் சவுதிக்கு சென்ற கணவனுக்காக கைக்குழந்தையுடன் காத்திருக்கிறார். கணவன் அக்பர் (திலீப்) விரைவில் வீடு திரும்ப இருப்பதால், அதுகுறித்தே தன் உப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் அவள். துருதுருவென சுற்றித்திரியும் ரஸியாவைத் தேடி துயரச்செய்தி ஒன்று வருகிறது. சவுதியில் வசிக்கும் அக்பர் பாலக்காட்டை …
-
- 0 replies
- 893 views
-
-
நேற்று பிரணயம் என்கிற மலையாளப் படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன். ஒரு பெண்ணுக்கும், இரு ஆண்களுக்குமான காதல் கதை. ஒருவருக்கு ஒருமுறைதான் காதல் வரும், ஒரே நேரத்தில் ஒருவர் மேல்தான் காதல் வரும் என்கிற வாதங்களை எல்லாம் படம் காலி செய்கிறது. முழுக்க முழுக்க பெண்ணின் பார்வையில் படம் நகர்வதும், மூவரின் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதமும் படத்தை அழகாக நகர்த்தியிருக்கிறது. ஜெயப்பிரதா, விவாகரத்து பெற்றுவிட்ட தன் முதல் கணவன் அனுபம் கெரை நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எதேச்சையாக சந்திக்கிறார். அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் தன் மகன் குடும்பத்தோடு வசிக்க ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு வந்திருக்கிறார் அனுபம். ஜெயப்பிரதாவுக்கு தத்துவப் பேராசிரியரான மோகன்லாலோடு இரண்டாவது திருமணமாகி ஒ…
-
- 2 replies
- 2k views
-
-
நடிகை ஜெனிலியா திருமணம் கோலாகலமாக முடிந்தது 2/3/2012 3:46:40 PM நடிகை ஜெனிலியா- இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் திருமணம் மும்பையில் நடந்தது. பாய்ஸ், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ‘வேலாயுதம்' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவர், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைகொடி காட்டியதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையில் இவர்கள் திருமணம் நடந்தது. முன்னதாக 2 நாட்களாக திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பங்கேற்றனர். அப்போது ஆடல் பாடல், விருந்து என நிகழ்ச்சி களைகட்டியது. மெஹந்தி நிகழ்ச்சியும் ந…
-
- 9 replies
- 1.8k views
-
-
இயக்குநரின் விமர்சனத்தால் கடும் கோபத்துக்கு ஆளான விஜய்! (Vijay angry in famous director ) Comments சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய படம் அது. 'நண்பன்'தானே..? என்று கேட்டுவிட்டு சட்டென்று மேட்டருக்குள் சென்றுவிடும் ஷார்ப் புத்திக்காரர்களுக்கு நன்றி. யெஸ்... அதேதான். இந்த படத்தை சுமார் ஏழு கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம் அந்த பிரபல சேனல். (சன் அல்ல) அவ்வளவு பணத்தை கொட்டி வாங்கிவிட்டு பிரமோஷன் விஷயத்தில் சுணக்கம் காட்ட முடியுமா? கோடம்பாக்கத்தின் முக்கிய இயக்குநர்களை அழைத்து அவரவர் நண்பர்களை பற்றி அலச சொன்னது. நிகழ்ச்சிக்கு விஜய்யும் வந்திருந்தார். இதில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் ஒருவர் இத்தனை நாட்களாக விஜய் நடித்ததெல்லாம் ஒரு நடிப்பே அல்ல. பறந்து வர்றது. நூறு …
-
- 0 replies
- 959 views
-