Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 37 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய மலையாள நடிகர் கேப்டன் ராஜு காலமானார்! குணச்சித்திர கதாபாத்திரம் வில்லன் என பல தோற்றங்களில் நடித்த 68 வயதான மலையாள நடிகர் கேப்டன் ராஜு இன்று காலை உயிரிழந்தார். PhotoCredits : Twitter/@seoanushka மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கேப்டன் ராஜு. குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனிப்பட்ட நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் இவர். தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, ஜீவா, தாய்நாடு, சூரசம்ஹாரம், தர்மத்தின் தலைவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 1950-ல் ப…

  2. இதில் மூன்று கோடியை தருவதாக ஒப்புக் கொண்டாராம் விஜய். ஆனால் கடைசி நேரத்தில் அதற்கும் பிரச்சனை. சொந்த வீட்டிலிருந்தே அதற்கும் எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் தனிக்கட்சி மூட், எஸ்.ஏ.சியின் ஜெயலலிதா சந்திப்பு இவ்விரண்டும்தான் அவரது படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதோ என்ற எண்ணம் அழுத்தமாக விதைக்கப்பட்டிருக்கிறது சினிமா வட்டாரத்தில். “இந்த பிரச்சனையில் நான் உதவட்டுமா?” என்று, தானே முன்வந்து விஜய்யிடம் பேசினாராம் கேப்டன் விஜயகாந்த். அது மேலும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இப்போதைக்கு அதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் என்றும் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இறுதி நேரம் வரைக்கும் நம்பிக்கையை விடாமல் போராடிக் கொண்டிருக்கிறா…

    • 0 replies
    • 603 views
  3. 2010-ம் ஆண்டில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று உலகம் முழுக்க பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான, கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அதாவது 2011ம் ஆண்டில் சற்று ஓய்வு எடுக்க போவதாக கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டில் தமிழிலும் சரி, பிறமொழியிலும் சரி எந்த படத்திற்கும் அவ்வளவாக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட் ஆகவில்‌லை. இந்நிலையில் 2012ம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். அதில் முதல்படம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான், அப்புறம் கவுதம் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் ‌யோஹன் அத்தியாயம் ஒன்று, மணிரத்னத்தின் கடல், தனுஷூக்கு ஒரு படம், ஷங்கருக்கு ஒரு படம் என இந்தாண்டு முழுக்க …

  4. இலங்கை இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். ஹபோர்களத்தில் ஒரு பூ' என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்க…

  5. பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! மின்னம்பலம் இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையர…

    • 2 replies
    • 602 views
  6. நடிகை பூஜாவுக்கு, தொழில் அதிபருடன் ரகசிய திருமணம். சென்னை: நடிகை பூஜாவுக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜே ஜே படம் மூலம் கோலிவுட் வந்தவர் இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா. அவரது தாய் இலங்கையை சேர்ந்தவர், தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். பெங்களூரில் படித்த பூஜா தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, சிங்கள மொழிப் படங்களில் நடித்து வந்தார்.அவருக்கும் இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் தீபக் சண்முகநாதனுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்குள் ஒத்துப் போகாது என்று கூறி பிரிந்துவிட்டனர். இந்நிலைில் பூஜாவுக்கும், தீபக்கிற்கும் கொழும்புவில் ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பூஜா தமிழில…

  7. கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…

    • 0 replies
    • 602 views
  8. ஆம்புலன்ஸ் டிரைவர் சமுத்திரக்கனி, யாரைக் காப்பாற்றுகிறார்? - ‘தொண்டன்’ விமர்சனம் உயிரைக் காக்க நினைக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், உயிரை எடுக்க நினைக்கும் மந்திரியின் மகனுக்குமான நீதி-அநீதி போராட்டம்தான் ‘ தொண்டன் ’. ஆம்புலன்ஸ் ஓட்டும் பைலட் (ஓட்டுநர்) சமுத்திரகனி. மந்திரி ஞானசம்பந்தனின் மகன் நமோ நாரயணன். நமோவின் அடியாட்கள் நடுரோட்டில் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டுகிறார்கள். வெட்டுபட்டவரை நமோவின் அடியாட்களையும் மீறி தன் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று காப்பாற்றுகிறார் கனி. ‘உயிரை காக்குறதுதான் என் தொழில். நாளைக்கு நீங்களே உயிருக்கு போராடிட்டு இருந்தாலும் இப்படித்தான் காப்பாத்தி இருப்பேன்’ என்கிறார் கனி. ஆனால் ந…

  9. தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு புதுடெல்லி, 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: * தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. * விஸ்வாசம் படம் இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது * பார்த்திபன் இயக்கம், நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது * ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது * சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டுள்லத…

  10. '' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்!'' - ஜெனிஃபர் கில்லி’ படத்தில் ‘புவி’ கதாபாத்திரம் மூலம் நம்மைக் கவர்ந்தவர் ஜெனிஃபர். தற்போது சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஸ்டார் வார்’ நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களுக்கு நிகராக போட்டி போட்டு விளையாடி வருகிறார். அவரோடு ஒரு ஜாலி கேலி இன்டர்வியூ. ``ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தப்போ என்னை பார்த்துட்டு பி.வாசு சார் அவருடைய படத்துல நடிக்கக் கேட்டார். வீட்டிலேயும் ஒத்துக்கிட்டு என்னை நடிக்க வைச்சாங்க. என்னுடைய முதல் படம் ‘கிழக்கு கடற்கரை’. அப்ப ஆரம்பிச்ச பயணம் இப்பவரைக்கும் தொடருது’’ என்றவர் சீரியல் பயணம் பற்றிப் பேசினார். ``சின்ன வயசுல பட…

  11. ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவு உள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள…

  12. டைரக்டர் விஜய் டைரக்‌ஷனில் ‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடித்து வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதிய படத்துக்காக மும்பையிலுள்ள பிஸியான ஏரியாவான மாஹிம் ஏரியாவை செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் டைரக்டர் விஜய். ‘துப்பாக்கி’ படத்துக்குப் பின் இளையதளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பை மும்பையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்திய டைரக்டர் விஜய் அந்தப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் மும்பையில் எப்போதுமே பிஸியாக இருக்கும் பிரபல ஏரியாவான மாஹிம் ஏரியாவில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று போலீஸார் எச்ச…

  13. ஓம் சாந்தி ஓம் - திரை விமர்சனம் திருச்சி மாநகரில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தில் வேலை செய்கிறார் வாசு (ஸ்ரீகாந்த்). தற்செயலாகச் சந்திக்கும் சாந்தி (நீலம்) என்னும் பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார். சாந்திக்கும் வாசுவைப் பிடித்துவிடுவதால் அவர் வேலை செய்யும் இடத்திலேயே வேலைக்குச் சேர்கிறார். ஒரு முதியவர், ஒரு இளம்பெண், ஒரு சிறுவன், நடுத்தர வயதுப் பெண்மணி மற்றும் ஒரு ஆண் ஆகிய ஐந்து பேர் வாசுவைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். வாசுவின் அலுவலகம், வீடு என அவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரிக்கிறார். தங்களது ஆசைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். உதவ முன்வரும் வாசுவுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் தன் கண்கள…

  14. முதல் வார வெளியீட்டு சாதனை இருநூறு மில்லியன் ,இதற்கு முதல் கரி பொட்டர் இருந்து வந்தது.

    • 0 replies
    • 601 views
  15. நான்கு இளைஞர்களை நிஜமாகவே விளக்குமாறால் வெளுத்துக் கட்டிய ப்ரியங்கா! 'எல்லாரும் முட்டாளா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்!' உலகத்துல எல்லோருமே முட்டாளா இருந்துட்டா எவ்ளோ நல்லாருக்கும்... இப்படி ஒரு யோசனை வந்தது இயக்குநர் இகோருக்கு... ஆரம்பித்துவிட்டார் வந்தா மல படத்தை. இகோர் தமிழ் சினிமாவுக்குப் புதியவர் அல்ல. ஏற்கெனவே கலாபக் காதலன், தேன் கூடு போன்ற படங்களைத் தந்தவர். கியிகர் புரொடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.ஜெயராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கங்காரு ப்ரியங்கா, தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ், வியட்நாம் வீடு சுந்தரம், மகாநதி சங்கர், எஸ்.ஜெயராதாகிருஷ்ணன், மலேசிய தியாகா, சவுகாந்த், மலைக்கா, திவ்யா, ராணி ஆகியோர் முக்கிய கேரக்டரில…

  16. நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…

  17. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், ஒருவரும் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும், தனி குடியிருப்பில் சேர்ந்து வாழ்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான், நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை தவிர்க்கிறார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அறம், டோரா, கொலையுதிர் காலம் படங்களில் கூட ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்ய…

  18. ``ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது... இப்போ..?!’’ - `எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி `` `எங்க வீட்டு மாப்பிள்ளை’தான் நான் கலந்துக்கிட்ட முதல் ரியாலிட்டி ஷோ. இந்த ஷோ பற்றி கேள்விப்பட்டதும் ரொம்ப புதுசா இருந்துச்சு. இதுல என்ன இருக்குனு ஆர்வத்தோட கலந்துக்கப் போனேன்..'' எனப் படபடவென பேச ஆரம்பிக்கிறார் சீதாலட்சுமி. `எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோவோட ஃபைனல்ல ஆர்யா அந்த முடிவைச் சொன்னதும் உங்களுக்கு எப்படி இருந்தது..? ``ஃபைனல் அப்போ அவர் கையில் டோக்கன் ஆஃப் லவ் ரிங் வச்சிருந்ததை பார்த்தப்போது, வின்னர் பெயரைச் சொல்லப்போறாருனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனால், அவர் எதுவும் சொல்லாம, `நன்றி, வணக்கம்’னு சொன்னதும் எனக்கு செம ஷாக். மு…

  19. அண்மையில் வெளிவந்த அமெரிக்க ஆக்‌ஷன் படங்களில் நல்லவை என்று கூறப்படுபவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன். ஒரு நாள் நேரம் கிடைத்தபோது, இணையத்தில் கடந்த 10 வருடங்களில் வெளியான அமெரிக்க ஆக்‌ஷன் படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது Internet Movie Data Base (IMDB) என்றழைக்கப்படும் இணைய திரைப்பட தொகுப்பு எனும் இணையத் தளத்திற்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த இணையத்தில் அனைத்துத் திரைப் படங்களையும் தரப்படுத்தி அத்திரைப்படங்களின் கதையைச் சுருக்கமாக விவரித்திருப்பார்கள். நாங்கள் ஆகா ஒகோ என்று புழுகும் அமெரிக்கப் படங்களுக்கு இவர்கள் கொடுக்கும் தரப்படுத்தல் புள்ளிகள் அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. பத்துப் புள்ளிகளுக்கு ஆறு புள்ளிகள் கிடைத்தாலே அந்தத் திரைப்படம் நிச்சயம் சிறந்த…

    • 1 reply
    • 600 views
  20. கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜாவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார். …

  21. ஷோபா - அதிசய தேவதை! ஷோபா மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா! தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்…

  22. களத்தில் சந்திப்போம் ரீமேக் உரிமைக்கு போட்டி போடும் நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம். என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்கிய நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைத்தது. அடுத்து களத்தில் சந்திப்போம் படம் தியேட்டர்களுக்கு குடும்ப ரசிகர்களை வரவழைத்துள்ளது. அனைவரும் ரசிக்கும் வகை…

  23. முதல் பார்வை: ஜானி உதிரன்சென்னை ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்ப…

  24. சமந்தாவின் குழப்பம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்தாலும் நான் ஈ படத்தின் மூலம்தான் தமிழ் ரசிகர்களிடையே அதிக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன்வசந்தம் அவருக்கு சிறந்த நடிகை என்ற விருதினை அளித்தது. சித்தார்த்துடன் காதல் என்ற செய்தி திடீரென்று பரவியது. அப்புறம் நாங்கள் நண்பர்கள்தான் என்று ஸ்டேட்மெண்ட் விடுகின்றனர். பரிகார பூஜை சமந்தாவும், சித்தார்த்தும் இணைந்து கோவில்களுக்கு ஜோடியாக சென்று பூஜைகளில் பங்கேற்றார்கள். விழாக்களுக்கு ஜோடியாக வருகிறார்கள். இருவருக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. - பப்ளி ஹன்சிகா இன்றைக்கு இளம் ரசிகர்களின் கனவுக்கன்னி ஹன்சிகாதான். சிம்பு காதலித்தால் அதற்கு மறுப்ப…

  25. அடுத்த படத்திற்கும் தயாராகுங்க...’ கார்த்திக் சுப்புராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி..! பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜை அழைத்த ரஜினி மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினையை பார்த்த அத்தனை பேரும் ஆஹா அற்புதம்... ரஜினியின் பழைய துள்ளலை அப்படியே கொண்டு வந்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள். அந்த அளவிற்கு 90களில் பார்த்த ரஜினியின், துள்ளலையும் தோற்றத்தையும் மீட்டுக் கொண்டு வந்து இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். காலா, கபாலியோடு இப்படத்தை இணைத்துப் பேச ஆரம்பித்த ரசிகர்கள், ‘எங்க தலைவரை அசிங்கப்படுத்தின பா.ரஞ்சித் இந்த படத்தை பார்த்தாவது தன்னை திருத்திக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.