வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 10 replies
- 1.5k views
-
-
சிறந்த இயக்குனர் லோகேஷ்-சிறந்த நடிகர் சிம்பு: சைமா விருதுகள் Sep 12, 2022 17:21PM IST திரைத்துறையினருக்கு வழங்கப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், சிறந்த நடிகருக்கன விருது நடிகர் சிம்புவுக்கும் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் மாஸ்டர். இந்த படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சிறந்த இயக்குனருக்கான சைமா விருது வழங்கப்பட்டது. கமல் நடிப்பில் ,…
-
- 0 replies
- 802 views
-
-
ஆக்சன் ஹீரோ- அதிரடி அரசியல்வாதி- மீண்டும் கர்ஜிப்பாரா விஜயகாந்த்? KaviAug 25, 2022 08:49AM ‘என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிசமும், ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்குனது டா’ என நடிகர் அஜித்தின் பில்லா படத்தில் ஒரு வசனமுண்டு. அந்த வசனங்களுக்கு எல்லா வகையிலும் பக்காவாக பொருந்தக்கூடியவர் நடிகர் விஜயகாந்த்.. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஆலமரமாக வளர்ந்தவர். அரசியலில் ஆலமரமான திமுகவையே கூட்டணிக்காக காக்க வைத்தவர் என பல அதியசங்களுக்கு சொந்தக்காரர் நடிகர் விஜயகாந்த். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ‘விஜயராஜ்’. இளம் வயதில் படிப்பில் ஆர்வம் இல்லை என…
-
- 1 reply
- 462 views
-
-
பம்பா பாக்யா மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகம், ரசிகர்கள் 40 நிமிடங்களுக்கு முன்னர் திரையுலகின் பாடல் துறையில் குறுகிய காலமே வாழ்ந்தாலும் தமது பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த பம்பா பாக்கியா, உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றி இரவு சென்னை பாடி அருகே உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனே இவரது குடும்பத்தினர் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் பம்பா பாக்யாவின் உயிர் இன்று அதிகாலையில் பிரிந்தது. பம்பா பாக்யாவின் மரணம், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள்…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
"கடாவர்" படம் எப்படி இருக்கிறது? அமலா பால், முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாக போலீஸ் படங்கள் என்றாலே அடிதடி, துப்பாக்கி, வன்முறை நிறைந்த மசாலா கமர்சியல் படங்கள் ஆகவே பெரும்பாலும் வரும். ஆனால் இந்தப் படத்திலோ தடாலடி வன்முறைகள் எல்லாம் விட்டுவிட்டு பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜன் ஆக அமலா பால் நடித்திருக்கிறார். புதுமையாக ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்று முயற்சித்துள்ள அமலா பாலின் கடாவர் படம் வரவேற்பைப் பெற்றதா? நகரத்தில் அடுத்தடுத்துக் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்தப் பிணங்களை இன்வெஸ்டிகேட் செய்து போஸ்ட்மார்ட்டம் செய்யும் போலீஸ் சர்ஜனாக வருகிறார் அமலா பால். இதற்கிடையே ஜெயிலில் இருக்கும் அருண…
-
- 1 reply
- 425 views
-
-
லிட்டில்ஃபெதர்: நடிகையிடம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் அகாடமி; என்ன காரணம்? 16 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்கர் மேடையில் கேலி செய்யப்பட்ட அமெரிக்க பூர்வகுடி செயல்பாட்டாளரும் நடிகையுமான சசீன் லிட்டில்ஃபெதரிடம் ஆஸ்கர் அகாடமி மன்னிப்பு கேட்டுள்ளது. 'தேவையற்ற, நியாயமில்லாத கொடுமை' லிட்டில்ஃபெதருக்கு நடந்ததாக அகாடமி தனது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. திரைத்துறையில் புரையோடியிருந்த புறக்கணிப்புகளையும் இனவெறுப்பையும் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்தது. ஆஸ்கர் மேடையில் என்ன நடந்தது? …
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த ல…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
'தம்மம்' பட காட்சிகளை பௌத்தர்கள் சங்கம் எதிர்ப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இயக்குநர் ரஞ்சித் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim என்ற ஆந்தாலஜி வகைத் திரைப்படம் ஒன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியானது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் ஒரு படத்தை இயக்கியிருந்தார். ஜாதி ஆதிக்க உணர்வு கொண்ட ஒருவரால் அடித்தட்டு விவசாயி ஒருவர் எந்த மாதிரியான சிக்கலுக்கு…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
அன்புச் செழியன்: கோலிவுட்டின் சக்திவாய்ந்த நபராக உருவானது எப்படி? அவரின் பின்புலம் என்ன? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் இரண்டாவது முறையாக வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஃபைனான்சியர்களின் மிக சக்தி வாய்ந்த நபராக அன்புச்செழியன் பார்க்கப்படுகிறார். அவருடைய பின்புலம் என்ன? இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அன்புச்செழியன். வறண்ட பூமி ஆன ராமநாதபுரத்தில…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்" வீ. விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வசந்த் சாய், திரைப்பட இயக்குநர் பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய். அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான். வெவ்…
-
- 3 replies
- 504 views
- 1 follower
-
-
"மண்டேலா படம் எடுக்கப் போன ஊர் மாரி செல்வராஜின் ஊர் என்று பின்னர் தான் தெரிந்தது" - மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2022, 08:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினுக்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தே…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
அதிக வருமான வரி செலுத்தியதற்காக ரஜினிகாந்திற்கு விருது July 24, 2022 தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமான வரித்துறை விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் திகதி வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று சென்னை டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில்…
-
- 3 replies
- 399 views
-
-
தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு 22 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவி…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
அதே தெம்போடு வந்திருக்கிறேன்: டி.ராஜேந்தர் Jul 22, 2022 08:44AM IST உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர் இன்று (ஜூலை 22) சென்னை திரும்பினார். அப்போது பழைய தெம்போடு வந்திருப்பதாகச் செய்தியாளர்களிடம் கூறினார். நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். முதலில் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தருக்கு ஹார்ட்டில் பிளாக் இருப்பதுடன் வயிற்றில் புற்று நோய் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள் இந்த இரு நோய்க்கும் இங்கு சிகிச்சை அளிப்பதை விட அமெரிக்…
-
- 0 replies
- 733 views
-
-
லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
5 பில்லியன் பார்வைகள்… சாதனை படைத்த புஷ்பா ஆல்பம்! Jul 16, 2022 07:08AM தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சுகுமார். இவர் இயக்கத்தில் 2021 டிசம்பர் 17 அன்று ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.தெலுங்கு, தமிழ்,இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகி ப வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் 385 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குக்கிராம தேநீர் கடை வரை எதிரொலித்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டை கிளப…
-
- 1 reply
- 346 views
-
-
இரவின் நிழல்: பார்த்திபனின் 'ஒரே ஷாட்' - ஊடக விமர்சனம் எப்படி இருக்கிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BIOSCOPE USA, AKIRA PRODUCTIONS PVT LTD நடிகர்கள்: பார்த்திபன், ஜோசுவா பரிசுத்தம், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்தகிருஷ்ணன், சாய் பிரியங்கா ரூத் ; இசை: ஏ.ஆர். ரஹ்மான்; இயக்கம்: பார்த்திபன். பார்த்திபன் இயக்கி, நடித்து உருவாகியிருக்கும் 'இரவின் நிழல்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஒரே ஷாட்டில் Non-linear பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. நந்து என்ற பாத்திரத்தின் …
-
- 3 replies
- 391 views
- 1 follower
-
-
இயக்குநரும் நடிருமான பிரதாப் போத்தன் காலமானார் தமிழ் சினிமாவின் முன்னணி பழம்பெரும் நடிகரும் இயக்குனருமானவர் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாதகோலங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பிரதாப் போத்தன். இவரின் இயக்கத்தில் வெளியான வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார். பிரதாப் போத்தன் இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட படங்…
-
- 5 replies
- 485 views
- 1 follower
-
-
முதல் பார்வை | பன்னிக்குட்டி - ஒரு ‘டீசன்ட்’டான நகைச்சுவைப் படைப்பு! பன்னிக்குட்டியை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கும் படைப்பு இந்தப் படம். உத்ராவதிக்கு (கருணாகரன்) வாழ்க்கையில் எல்லாமே பிரச்சினைதான். தனது தங்கை நிலாவதி (ஷாதிகா) கணவருடன் சண்டையிட்டு தாய்வீட்டிலேயே தங்கிவிடுகிறார். அந்த சோகத்தில் அப்பா பெரிய கருப்பு (டிபி கஜேந்திரன்) எப்போதும் குடித்துக் குடித்து மதுவுக்கு அடிமையாகவிடுகிறார். தவிர, கருணாகரனுக்கு காதல் கைகூடவில்லை என்ற விரக்தி ஒருபுறம். பிரச்சினைகள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து தற்கொலைக்கு முயல்கிறார். அதனைப் பார்த்த சிலர் அவரைக் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு …
-
- 0 replies
- 237 views
-
-
ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்? மின்னம்பலம்2022-07-04 சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரிக்கும் படங்கள் எடுப்பதில் பெயர் போனவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் கவிஞர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி எனப் பல தளங்களில் இயங்கக்கூடியவர் லீனா மணிமேகலை. இவர் தனது தேவதைகள், பறை, பலிபீடம் போன்ற ஆவணப் படங்களுக்காக பாராட்டப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது. …
-
- 0 replies
- 416 views
-
-
உலகளவில், தமிழில், இதுவரை ஏறத்தாழ 6000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இப்பட்டியல், உலகின் பல பகுதிகளிலிருந்தும், தமிழில் வெளிவந்த, அனைத்து திரைப்படங்களையும் ஆண்டு வரிசையில் பட்டியலிட முனைகின்றது. 1940 அபண உத்தமபுத்திரன் ஊர்வசி சாகசம் காள மேகம் கிருஷ்ணன் தூது நவீன தெனாலிராமன் சந்திரகுப்த சாணக்யா தருதலை தங்கவேலு சகுந்தலை சதி மகானந்தா சதி முரளி சத்யவாணி தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்) தானசூர கர்ணா திலோத்தமா திருமங்கை ஆழ்வார் தேச பக்தி நவீன விக்ரமாதித்தன் புத்திமான் பலவான் ஆவான் நீலமலை கை பக்த சேகா பக்த கோரகும்பர் பக்த துளதிதாஸ் பக்தி (அம்பரீஷன்…
-
- 14 replies
- 3.7k views
-
-
"களவாணி", 12 ஆண்டுகளை... நிறைவு செய்திருக்கிறது. பொதுவாக... திரைப்பட விமர்சனம் என்பது, கேலிக் கூத்தாக்கும் காலத்தில், விதிவிலக்காக அவ்வளவு நெருக்கம் இந்த படம். ஒரு மதிய காட்சிக்கு.. எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்ற எனக்கு, இரண்டரை மணிநேரத்தை அவ்வளவு ரசிக்கவைத்தது சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, போன்ற பெருநகர வாழ்வியலையும்... வட்டார மொழிகளையுமே பார்த்தழுத்த எனக்கு, முதன் முறையாக எங்கள் பகுதி மொழிவழக்கை திரையில் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாயிருந்தது . ஆயி, அத்தாச்சி, ஐயா, தம்பி... நம்ம ஊரு வயல், சொசைட்டி, நாத்துநட சாமிகாசு, டயர்வண்டி, என... தஞ்சையின் வாழ்வியலோடு வந்த …
-
- 4 replies
- 755 views
-
-
சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ரீமா காக்தி, ஆவணப்பட இயக்குநர்கள் சுஷ்மித் கோஷ், ரிண்டூ தாமஸ் ஆகியோரும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் 2022ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களாக சேர அழைக்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பாளர்…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
நடிகை மீனாவின் கணவர் மரணம்! மின்னம்பலம்2022-06-29 நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்திருந்தாலும் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரும் 2009இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட…
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் ஒன்லைன். தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் …
-
- 0 replies
- 250 views
-