வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…
-
- 0 replies
- 502 views
-
-
திரை விமர்சனம்: சேதுபதி சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அர…
-
- 0 replies
- 501 views
-
-
சினிமாவுகான தனிக்கைக் குழு என்பது, தனித்த அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி அமைப்பாகத்தான் இயங்க வேண்டும்! ஆனால் சென்சாரில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது! பணத்தைக் கொடுத்தால், யூ/ஏ சான்று தரவேண்டிய படத்துக்கு ‘யூ’ கூட வாங்கலாம் என்ற நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்சாரில் சினிமா ஊடகம் பற்றித்தெரியாத, அதேநேரம் ஆளும்கட்சியின் ஊழியர்களாக அதில் அங்கம் வகிக்கும் ஆட்கள், தற்போது அந்த ஊடகத்தை எப்படிப்பார்க்க வேண்டும் என்பது தெரியாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது! இதற்கிடையில் செல்வாக்கு மிக்க மாஸ் ஹீரோக்களின் படங்களில், தனிக்கை விதிகளின்படி வெட்ட வேண்டிய பல காட்சிகளையே விட்டுவிடுகிறார்கள். ஆனால் சின்ன படங்களை எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசு…
-
- 0 replies
- 501 views
-
-
சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU
-
- 0 replies
- 501 views
-
-
Banner: Century Films Cast: Prithviraj, Rima Kallingal, Narain, Samvrutha Sunil, Remya Nambeesan, Swasika Direction: Lal Jose Production: Prem Prakash Music: Ouseppachan இளமையான இனிமையான பொழுது போக்கு படம். அழகான கதாநாயகர்கள் ,மிக மிக அழகான கதாநாயகிகள் .மிக மிக மிக அழகான படப்பிடிப்பு . ஆனால் சாதாரண சினிமா கதை . பிரதாப் போத்தன் நடிப்பு அற்புதம் . யாழ் இளைஞர்களே தவறவிடாதீர்கள் .
-
- 0 replies
- 501 views
-
-
சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன் 25 நவம்பர் 2012 எண்பதுகள் முதலாகவே இயக்குனர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் முதல் மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புகழேந்தி செல்வராஜின் இயக்கத்தில் உச்சிதனை முகர்ந்தால், லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல், இகோர் இயக்கத்தில் தேன்கூடு, செந்தமிழன் இயக்கத்தில் பாலை, கலைவேந்தன் இயக்கிய புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள், ஆனந்த் மய்யூர் சீனிவாஸ் இயக்கிய மிதிவெடி, சுரேஷ் சோச்சிம் நடித்துத் தயாரித்த சிவப்பு மழை போன்ற, ஈழப் பிரச்சினையை மையமாகக்கொண்டு முழுநீளத் தமிழ்…
-
- 0 replies
- 501 views
-
-
ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…
-
- 1 reply
- 500 views
-
-
லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நடனத்துக்காக அவர், இந்திய ரூபாவில் 4 கோடியை கேட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அந்த பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வைபவத்தை மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமண வைபவத்துக்காக லண்டன் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் அந்த இரண்டு நாட்களுக்குமான தங்குமிட வசதிகள் மற்றும் விம…
-
- 0 replies
- 500 views
-
-
உலகப் போரில் தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப் (The Thief) படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், பொருளாதார ரீதியாக ரஷ்யா மிகவும் பலவீனமாகிவிட்டது. மக்களின் அன்றாடப் பாடே கஷ்டமாகிப் போனது. காட்யாவும் தன் மகன் சன்யாவுடன் பிழைப்புக்காகப் பெரும் பாடுபடுகிறாள். சன்யாவுக்கு ஐந்து வயதாகும் போது வேலை தேடி நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து ரயிலில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் ஒரு ராணுவ வீரனைச் (டொய்லன்) சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே அவன்மீது காட்யாவுக்கு ஈடுபாடு தோன்றுகிறது. மீதமிருக்கும் காலத்தில் தனக்கும், தன் மகன் சன்யாவுக்குமான பாதுக…
-
- 0 replies
- 500 views
-
-
தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். “தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கெளரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு... தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள…
-
- 0 replies
- 499 views
-
-
2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்! மின்னம்பலம்2022-01-10 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடி…
-
- 0 replies
- 499 views
-
-
படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர் நாஜிகளிடமிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா அவ்வப்போது அந்த நிகழ்வை நினைவு கூறிவருகிறது.அந்த விடுதலை இன்னும் ஒரு வருடத்தில் 70 ஆம் வருடத்தை நெருங்குகிறது.நாசிசம் , பாசிசம் பற்றிய செய்திகள் அத்தினங்களில் செய்தி ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்படுவதும் சில தினங்களில் அவை மைய நீரோட்டப் பத்திரிகைகளிலிருந்து விலக்கப்பட்டுவிடுவதும் வழமையான நிகழ்வாவதும் நடைமுறை. ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் நாசிச கருத்துக்களை நாகரீகமாக புகுத்துவதும் , நாசி ராணுவ உடைகளை புதிய நாகரீகமாக்குவதும் ,அந்த ஆடைகளை அணிபவர்கள் மீதான மென்மையான் போக்குகளைக் கடைப் பிடித்து குற்றமற்றவர்கள் ஆக்குவதும் நடை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.சில வருடங்களுக்க…
-
- 0 replies
- 499 views
-
-
இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் கொண்டாடுவர்: '2.0' குறித்து ரஜினி '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக…
-
- 2 replies
- 499 views
-
-
நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) - இரமணிதரன் கந்தையா - முகநூல் குறிப்புகள் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபத…
-
- 0 replies
- 499 views
-
-
ஏ.ஆர். முருகதாஸ் – இளையதளபதி விஜய் இணையும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்று செய்திகள் பரபரத்துக் கிடக்கின்றன. லிங்குசாமி படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிப்பதைத் தொடர்ந்து, “ நமது படத்துக்கும் சமந்தாவையே ஒப்பந்தம் செய்யலாமே” என்றாராம் விஜய். இதை ஏற்று இயக்குனர் முருகதாஸ் முதலில் சமந்தாவிடம் கால்ஷீட்டுக்காக பேசியதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் இயக்குநர் முருகதாஸூக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்கிறார்கள். விஜய்க்குச் சம்மதம் என்றானபிறகு முருகதாஸ் வேண்டாமென்று சொல்வது ஏன் என்று தெரியாமல் யூனிட்டில் பலரும் வியக்கிறார்களாம். - See more at: http://vuin.com/news/tamil/samantha-excluded-from-vijays-film
-
- 0 replies
- 498 views
-
-
பாக்யராஜ் போட்ட ‘முந்தானை முடிச்சு’க்கு இன்றைக்கும் மவுசு! சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் முடிச்சுப் போடுகிற கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ என்பதான படங்களும் நிறையவே உண்டு. இந்த இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு, ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு! அப்படியொரு வெற்றி, எல்லோரையும் அதிசயிக்க வைத்தது. படம் பார்க்கப் போய்விட்டு, ஹவுஸ்புல் போர்டு மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பிவந்தவர்களை வைத்து, ஒரு ஷோவே நடத்தலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இதுதான் நிலைமை. அதுவும் ஆறேழு தடவையாகவும் இருபது முப்பது தடவையாகவும் அறுபது எண்பது முறையாகவும் படத்தைப் பார்த்தவர்கள…
-
- 0 replies
- 498 views
-
-
மணிரத்னம் டைரக்ஷனில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் "கடல்" படத்தின் மூலம் ஹீரோவா என்ட்ரி ஆனார். கடல் படத்திற்கு முன்னரே பல டைரக்டர் பார்வையில் பட்டுவிட்டதால், பல முன்னனி டைரக்ர்கள் அவரை இயக்க தயராக இருந்தனர். இந்நிலையில், கௌதம் கார்த்திக் அடுத்து ‘மைனா மற்றும் கும்கி’ புகழ் பிரபுசாலமன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 'சுந்தரபாண்டியன்' பட ஹிட்டுக்குப் பிறகு, டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன், உதயநிதி, நயன் தாரா ஜோடி சேர்ந்து நடிக்கும் படத்திற்கு, டைட்டில் வைக்காம இருந்தார். இப்ப இந்த படத்துக்கு "கதிர்வேலின் காதலி"னு டைட்டில் வைச்சிருக்காங்க. ஹாரிஸ் ஜெயாராஜ் …
-
- 1 reply
- 498 views
-
-
அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீனா உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு. கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது. அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம். இந்த நிலையில்,…
-
- 0 replies
- 498 views
-
-
'Love is political' என்ற வசனத்திற்கேற்ப மனிதர்களுக்கிடையேயான இயற்கையான காதல் உணர்வை போலி கவுரவம் எப்படி அறுத்து பலியிடத் துடிக்கிறது என்பதுதான் 'நட்சத்திரம் நகர்கிறது'. சினிமாவில் நடித்து பெரிய ஹீரோ ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வருகிறார் அர்ஜுன் (கலையரசன்). அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடும் அவர், குழுவிலிருப்பவர்களின் கருத்தியலில் முரண்படுகிறார். தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடப்படுகிறது. இதையொட்டி ரெனே (துஷாரா) - இனியன் (காளிதாஸ்) காதல் ப்ரேக் ஒன்றும் நிகழ்கிறது. இப்படியான பல கிளைக்கதைகளால் நகரும் நட்சத்திரக் கூட்டத்தில் இறுதியில் அரசியல் நாடகம் நடத்தப்பட்டத…
-
- 1 reply
- 498 views
-
-
டிராஃபிக் ராமசாமி- விமர்சனம் அநீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப…
-
- 0 replies
- 497 views
-
-
திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…
-
- 0 replies
- 497 views
-
-
பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமானவர் தன்ஷிகா. தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அரவான், பாலா இயக்கத்தில் பரதேசி போன்ற படங்களில் நடித்து லைம் லைட்டுக்கு வந்தார். இரண்டு படங்களிலும் தன்ஷிகாவின் நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் அவருக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை. தற்போது யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே தன்ஷிகாவுக்கு சிம்புதேவன் இயக்கும் ஒரு கண்ணியும் மூன்று களவாணிகளும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் தன்ஷிகாவோ பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கு முயற்சித்து வரும் இந்த வேளையில் அருள்நிதி போன்ற வளரும் நடிகருடன் நடிக்க முடியாது என்று கூறி வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். இந்நில…
-
- 1 reply
- 497 views
-
-
ரூ.10 கோடி நில அபகரிப்பு புகார் பிரபல இசையமைப்பாளர் தலைமறைவு சென்னை : போலி ஆவணம் மூலம் ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரது மேலாளர் ரகுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை சேர்ந்தவர் கருப்பன். இவர் சேலம் துணை நீதிமன்றம் மூலம் ஏலம் விடப்பட்ட சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள 75 சென்ட் நிலத்தை வாங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலத்தை திரைப்பட இசையமைப்பாளர் மணி சர்மா மற்றும் அவரது மேலாளர் ரகுராமன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டதாக கருப்பன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கேட்டால் இருவ…
-
- 0 replies
- 496 views
-
-
மெகாஸ்டார் சிரஞ்சீவி விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார். மெகாஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் பிசியாக இருந்துவிட்டதால் சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.149 படங்களில் நடித்த அவரை 150வது படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சிரஞ்சீவி தனது 150வது படத்தில் நடித்துவிட்டார். 150வது படம் என்றால் அவர் ஹீரோவாக நடிக்கவில்லை மாறாக தனது மகன் ராம் சரண் தேஜாவின் ப்ரூஸ் லீ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் ஹீரோவாக இல்லையா என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கத் தயாராகிவிட்டார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான…
-
- 1 reply
- 496 views
-
-
இலங்கை இராணுவத்தினரால் மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு சென்சார் போர்டு தடை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநரான கணேசன், பெங்களூரில் வசித்துவரும் தமிழர். பல கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவரது முதல் தமிழ்ப்படம் தான் ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இந்தப் படத்தின் இயக்குநர் கணேசன் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்தப் படம், இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. இசைப்பிரியாவுக்கு அறிமுகம் ஆனவர்கள் கனடா, லண்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் உள்ளனர். அவர்களை நேரடியாகச் சந்தித்து தகவல்களைத் திரட்டி இந்தப் படத்தை எடுத்தேன். முத…
-
- 3 replies
- 496 views
-