வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர். இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’. முறையான…
-
- 4 replies
- 665 views
-
-
போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம் மே 2009, இனப்போரும் படுகொலைகளும் எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றம…
-
- 1 reply
- 335 views
-
-
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றினை தாங்கிய போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் இயக்குனர் கணேசன் அவர்களின் இயக்கத்தில் இளையாராஜா அவர்களின் இசைஅமைப்பில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேதாரணியம் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா படையினர் குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்த போர்க்கள காட்சிகளை பெருந்திரளான மக்களுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில் அங்கு இடம்பெற்ற விபத்தில் இயக்குனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுருண்டு தரையில் வீழ்ந்தார் தலையில் இருந்து குருதி பெருக்கெடுத்த நிலையிலும் கையால் காயத்தை அடைத்தபடி குருதிவளிந்தோட தொடர்ந்து போர்கள காட்சியினை படம்பிடித்து…
-
- 0 replies
- 552 views
-
-
போர்முனையும் பேனா போராளியும் எஸ்.சுமன் ‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் அந்தக் கோரம…
-
- 0 replies
- 500 views
-
-
கோயில் கட்டுறது ஒருத்தன் கும்பாபிஷேகம் நடத்துறது இன்னொருத்தன் என்றால் கோபம் வரும்தானே! இதோ பருத்திவீரன் கண்களில் இப்போது கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூலில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது 'பருத்திவீரன்'. தான் நடித்த முதல் படமே இப்படி வெற்றி கோலோச்சும் சந்தோஷத்தில் இருந்த கார்த்தியின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டிருக்கிறது திருட்டு விசிடி. படம் வெளியான இரண்டு தினங்களிலேயே பருத்திவீரன் திருட்டு விசிடி பிள்ளையார் கோயில் பிரசாதம்போல எளிதாக கிடைக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட கார்த்தி, கண்களில் கோபம் கொப்பளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில், "பருத்திவீரன் திருட்டு விசிட…
-
- 0 replies
- 733 views
-
-
போலீஸ் சம்மனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: நாளை ஆஜராவாரா சிம்பு? பீப் பாடல் பாடியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சிம்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக பீப் பாடல் ஒன்று இணையதளத்தில் அண்மையில் வெளியானது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மாதர் சங்கங்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில…
-
- 1 reply
- 560 views
-
-
போலீஸ், லேடி ஜர்னலிஸ்ட்களுக்கு இவர் கெட்ட சிவாதான்! - `மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படி? தமிழகத்தில் 23765வது சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க விருப்பப்பட்டு, மக்கள் சூப்பர் ஸ்டாராக ராகவா லாரன்ஸ் அவதாரமெடுத்திருக்கும் படம் மொட்டசிவா கெட்டசிவா. குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், காவல்துறை, மூன்றாம் பாலினத்தவர், இஸ்லாமியர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நல்ல பெயர் எடுக்க விழைந்திருக்கும் ராகவா லாரன்ஸின் மொ.சி.கெ.சி எப்படி இருக்கிறது? ஏதோ ஒரு காட்டில், ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவாவுக்கு, சென்னைக்கு மாற்றலாக ஆசை. காட்டில் மாட்டிக்கொள்ளும் அமைச்சரைக் காப்பாற்றி அவர்மூலம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்கிறார். அங்கே போய் சம…
-
- 0 replies
- 849 views
-
-
ரஜினி நடிக்கும் எந்திரன் படத்தின் ஷூட்டிங் 3 நாட்களாக மீஞ்சூரில் நடந்தது. ரஜினிகாந்த்-ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தினமும் இரவு 7 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, ரஜினி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டார். கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக மீஞ்சூருக்கு போய்க் கொண்டிருந்தபோது மணலி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ், கார், வேன் மற்றும் கண்டெய்னர் லாரிகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர் இரவு 7 மணி வரை மீஞ்சூரை அடை…
-
- 0 replies
- 2k views
-
-
ப்ச்... எத்தனை ஹீரோவை காப்பாற்றியிருப்பார் சந்தானம்!? - சக்க போடு போடு ராஜா விமர்சனம் வருடத்திற்கு ஒரு படம் என்ற இன்ஸ்டால்மென்டில், ஹீரோ சந்தானத்தின் இந்த வருட ரிலீஸ் `சக்க போடு போடு ராஜா'. காதலில் ஜெயிக்க ஹீரோ போடும் திட்டங்களை, காமெடி கலந்து சொல்ல முயற்சி செய்கிறது படம். சான்ட்டா (சந்தானம்), பவானியின் (சம்பத்) தங்கையை அவள் காதலனோடு சேர்த்ததும், ஓப்பனிங் பாடல் போட்டு அறிமுகமாகிறார். “என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு, என்னை அசிங்கப்படுத்தீட்டானேடா... அவனப் புடிங்கடா" என உறுமுகிறார் தாதா சம்பத். அதனால், குடும்பத்தையும், நண்பர்களையும் தலைமறைவாக்கிவிட்டு, தானும் தலைமறைவாகிறார் சந்தானம். பதுங்கிக்கொள்ள சென்ற இடத்தி…
-
- 0 replies
- 392 views
-
-
இந்திய சினிமாவிலிருந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்குபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே தான் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார், அதன் புகைப்படங்கள் வெளிவந்தது வைரலாகியது. ஆனால், அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்டு வெளியே வராத ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. (வாசகர்கள் நன்மை கருதி படம் இணைக்கப்படவில்லை) http://www.cineulagam.com
-
- 12 replies
- 1.6k views
-
-
ப்ரியாமணிக்கு தேசிய விருது! தமிழ் நடிகையான ப்ரியாமணிக்கு 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 2006ஆம் ஆண்டுக்கான 54வது தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்தது. இதில் சிறந்த நடிகையாக ப்ரியாமணி தேர்ந்தெடுக்கப்பட்டு
-
- 2 replies
- 1.2k views
-
-
சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…
-
- 2 replies
- 1.6k views
-
-
தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது. ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர். விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணை மும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல…
-
- 0 replies
- 876 views
-
-
ப்ளூ ஸ்டார் விமர்சனம் நடிகர்கள்: அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ் இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது. …
-
-
- 1 reply
- 633 views
-
-
மகன் திருமணம்.. கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்..!
-
- 1 reply
- 1k views
-
-
Published : 08 Feb 2019 17:40 IST Updated : 08 Feb 2019 17:40 IST செளந்தர்யாவின் திருமண அன்பளிப்பாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார் ரஜினிகாந்த். கிராபிக் டிசைனர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா. இவருக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் செளந்தர்யா. இதற்காக திருநாவுக்கரசர், கமல்ஹாசன், இளையராஜா என நெருங்கிய நண்பர்களுக்கு கடந்த சில நாட்களாக நேரில் சென்று…
-
- 12 replies
- 1.7k views
-
-
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மிக குறைவு. அந்த வகையில் தற்போது நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த ஜோதிகா கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். அப்படி அவர் நடிப்பில் குற்றம் கடிதல் என்ற தரமான படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் மகளிர் மட்டும், இதிலும் ஜோதிகா ஜெயித்தாரா? பார்ப்போம். கதைக்களம் புரட்சி, முற்போக்கு கொள்கையுடன் 21st சென்ஜுரி மார்டன் பெண்ணாக ஜோதிகா. இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக போகும் நிலையில் …
-
- 3 replies
- 1.8k views
-
-
அரவான் படத்தின் நாயகன் ஆதி ஜோடியாக 'ஆடு புலி' என்ற படத்தில் நடித்த 22 வயதே நிரம்பிய மலையாள இளம்பெண் மீராநந்தன். மலையாளியான அவர் கேரள சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவரை தனது மகள் வரலட்சுமியை விட நான்கு வயது இளையவரான மீரா நந்தனை தனக்கு ஜோடியாக்கி அவருடன் டூயட் பாடியிருக்கிறார் சரத்குமார். இதே படத்தில் இன்னொரு இளம் நடிகையான ஓவியாவுடனும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் "சண்டமாருதம்" என்ற மொக்கைப் படத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த் போன்ற தாத்தா நடிகர்கள் தங்கள் மகளை விட வயதில் குறைந்தவர்களோடு நடித்துவரும் கொடுமை தமிழ் சினிமாவில் தொடர்ந்…
-
- 15 replies
- 5.8k views
-
-
மகாகவி காளிதாஸ் http://video.google.com/videoplay?docid=3986479893068818205
-
- 0 replies
- 682 views
-
-
மகாகவியை மகாகவி பாரதியார் ஒரு சினிமா கலைஞர் அல்ல என்றாலும், இவரின் பாடல்கள் திரைப் படங்களில் எடுத்தாளப்பட்டதால், இந்த உன்னத கவிஞனையும், இந்த சாதனை கலைஞர் பகுதில் பதிவு செய்து, இக்கவிஞனை கௌரவிப்போம். மண்டலம் போற்றும் மகாகவியின் பாடல்கள் எடுத்தாளப்பட்ட படங்கள் - ஆண்டுவாரியாக 1.அதிஷ்டம்.................1939 2.நாம் இருவர்.............1946 3.வேதாள உலகம்........1948 4.மணமகள்..................1951 5.அம்மா.......................1952 6.அந்தமான் கைதி.........,,.. 7.பராசக்தி.....................,,.. 8.ரத்தக் கண்ணீர்........1954 9.விளையாட்டு பொம்மை....,,... 10.கள்வனின் காதலி..1955 11.நல்லதங்கை............,,.. 12.மேனகா...................,,.…
-
- 2 replies
- 1.6k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானபோது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா? படத்தின் கதை இதுதான்: காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் காந்தி. வளர்ந்து திருமணமாக…
-
- 7 replies
- 740 views
-
-
மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்ஷ…
-
-
- 10 replies
- 1k views
-
-
நேற்று தான் மகிழ்ச்சி திரைப்படம் காண வாய்ப்பு கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவை அது அளித்தது, இதை ஏன் சினிமா ஆர்வலர்கள் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டார்கள்? என்னும் கேள்வியும் தொக்கி நின்றது.தலைமுறைகள் என்னும் எழுத்தாளர் நீல.பதமநாபனின் நாவலை நண்பர் செ.சரவணகுமாரின் அறிமுகம் மூலமே அறிவேன், அதன் கதையையும் அவரின் பதிவின் மூலமே அறிந்திருந்த எனக்கு அதை உடனே பார்க்க ஆவல் எழுந்தது. சென்னையில் எங்கு தேடியும் இந்த படத்தை பற்றிய தகவலே இல்லை.யாரும் இவ்வளவு நல்ல படத்தை வாங்கி திரையிடுவதில் ஆர்வம் காட்டாதது வியப்பையும் வேதனையையுமே தந்தது. மக்கள் ஆர்வம் டிவி சீரியல்கள் மீது அதீதமாக பாய்ந்துவிட்டதால் இன்றைய இயக்குனர்கள் யாரும் …
-
- 1 reply
- 981 views
-
-
மகேந்திரனின் உதிரிப்பூக்கள் - மிகைப்படுத்தப்பட்ட திரைப்படமா?? நேற்றுத்தான் உதிரிப்பூக்கள் பார்த்தேன். பல வருடங்களாக பார்க்க வேணடும் என்று நான் விரும்பிய படம். நேற்றுத்தான் முடிந்தது. பலமுறை இப்படம்பற்றிய விமர்சனங்களைக் கேட்டதுண்டு. மிகச்சிறந்த படம், இதுவரை இத்தரத்தில் படம் வரவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். மணிரத்தினம் கூட ஒருதடவை, "உதிரிப்பூக்கள் போன்றதொரு படம் எடுக்க முடிந்தால் அது கனவு பலித்தது போல இருக்கும்" என்று கூறியதாகக் கூடச் சொன்னார்கள். ஆனால், நேற்று எனக்கு அப்படி எதுவுமே தோன்றவில்லை. விஜயன் வில்லனா கதாநாயகனா என்று படம் நெடுகிலும் யோசித்துக்கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் அவரின் முகபாவங்கள் வில்லத்தனமாக இருக்கவில்லை. இடையிடையே நல்லவனாகவும் மாறியிரு…
-
- 4 replies
- 1.5k views
-
-
மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்! முகேஷ் சுப்ரமணியம் உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது. உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூ…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-