வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி KaviJan 16, 2023 11:52AM சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர் அதனால், அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிரு…
-
- 1 reply
- 612 views
-
-
மராத்திய கிளாசிக் #Sairat ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் முதல் படம்... எதிர்பார்ப்புகளை கிளப்பிய #Dhadak படம் எப்படி? ஆணவப் படுகொலையின் தோலுரித்த #Sairat படத்தின் ரீமேக்... ஸ்ரீதேவி மகளின் அறிமுகப் படம்! #Dhadak படம் எப்படி? சாதிய கொடுமைகளால் இறந்து போன காதல்கள், காதலர்களின் கதைகள் சினிமாவுக்கும் புதிதல்ல, நிஜ வாழ்க்கைக்கும் புதிதல்ல. செல்லுலாய்டில் இத்தகைய கதைகளுக்கு உயிர் கொடுக்கும்போது, வியாபார சமரசமின்றி, இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பாக ஆணவப் படுகொலைகள், கௌரவப் படுகொலைகள் அதன் காரணிகள் மற்றும் அதன் கோரத்தைப் பதிவு செய்யும்போது, அத்தகைய படங்கள் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுவிடும். 2015-ம் ஆண்டு வெளிவந்த மராத்தி…
-
- 0 replies
- 522 views
-
-
மரியான் கதாநாயகி பார்வதி மேனனுடன் ஒரு செவ்வி மரியான் படப்பிடிப்பாளர் marc konincckx உடனான செவ்வி
-
- 1 reply
- 511 views
-
-
ஏறத்தாள ஐந்து வருடங்களின் பின்னர் ஒரு தமிழ்ப்படத்தினைத் திரையரங்கு சென்று பார்த்தேன். ஜோ.டீ.குரூஸ் மீதும், தனுஸ் மீதும், ஏ.ஆர்.றகுமான் மீதும் இருந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவினை எடுத்திருந்தேன். படத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் நன்றாக நடித்திருந்தார்கள்--ஆபிரிக்க நடிகர்கள் உள்ளடங்கலாக. காட்சியமைப்பு பல இடங்களிpல் இரசிக்கும் படி இருந்தது. கதை காத்திரமான கருவுடையதாக இருந்தது. அப்போ படம் பிடித்ததா? திரையரங்கில், நான் அவதானித்தவரை, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு இடங்களில் நடிகர்கள் உயிரைப் பிழிந்து ஒரு நெகிழ்ச்சியினை பார்வையாளர்களிடம் பெறுவதற்காக நிகழ்த்திய காட்சிகளில், பார்வையாளர்களிடம் இருந்து சத்தமாக 'க்ளுக்' என்ற சிரிப்பொலி எழுந்தது. முதற்தடவை இது நடந்தபோது, எனக்குக் குழ…
-
- 0 replies
- 851 views
-
-
மருத்துவமனையில் எம்.எஸ்.வி! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மெல்லிசை மன்னர் என்று தமிழ் திரை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ்.வி. என்றும் இறவா புகழ் படைத்த பல பாடல்களை இயற்றி இன்றளவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பசுமை மாறாமல் தவழ விட்ட பெருமைக்குரியவர். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு எம்.எஸ்.வி. மருத்துவமனையில் …
-
- 0 replies
- 921 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே திரையுலகில் ஒரு மரியாதை உண்டு. நேற்று எந்திரன் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யாராய் திடீரென்று ரஜினி காலில் விழுந்து வணங்கியது ரஜினியின் உச்சகட்ட மரியாதையையும், ஐஸ்வர்யாராயின் பணிவையும் காட்டியது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது. படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் ப…
-
- 0 replies
- 817 views
-
-
மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் - திரை விமர்சனம் திரைப்படம் மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நடிகர்கள் கென்னத் பிரனா, பெனலோப் க்ரூஸ், வில்லெம் டெஃபோ, டெய்ஸி ரிட்லி, ஜானி டெப், ஜூடி டென்ச். திரைக்கதை மைக்கெல் க்ரீன் இயக்கம் கென்னத் பிரனா. உலகம் முழுவதும் பிரபலமான பிரிட்டிஷ் எழுத்தாளர் அகதா கிரிஸ்டியின் 'மர்டர் ஆன் தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்' நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே 1974ல் ஒரு முறை திரைப்படமாகவும் பல முறை தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்த கதை என்றாலும் வசீகரம் குன்றாத மர்மத்தைக் கொண்ட கதை. ஜெருசலத்தில் ஒரு சிறிய திருட்டு வழக்கைத் தீர்க்கும…
-
- 1 reply
- 1.3k views
-
-
2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி! தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான். ‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது. நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன…
-
- 4 replies
- 672 views
-
-
அட்வெஞ்சர் வீடியோக்கள் வெளியிட்டு ‘வியூஸ்’ அள்ளும் ரிஷி (ரிச்சி), மெல்வின் (தேவராஜ்), அங்கிதா (சுகன்யா), ஜெனிபர் (அரியா) ஆகிய யூடியூபர்கள், முழுநிலா நாளில் குழுவாக ஜவ்வாது மலை காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். காந்தா (யுவிகா) என்ற மலைக்கிராமத்துப் பெண் வழிகாட்டிபோல் செல்கிறாள். காட்டின் நடுவில் இருக்கும் குளத்தில் குளிக்க வரும் சிறுதெய்வங்களான ‘சப்த கன்னியர்’களையும் அவர்களைத் தடுக்கும் மங்கை என்கிற ஆவியையும் கேமராவில் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அதை அவர்களால் சாதிக்க முடிந்ததா, அவர்கள் உயிரோடு வீடு திரும்பினார்களா என்பது கதை. சக்தி வழிபாட்டின் அங்கமாக இருக்கும் ‘சப்த கன்னியர்’ வழிப்பாட்டை பேய்க் கதையுடன் இணைக்க முயல்கிறது திரைக்கதை. மங்கை என்…
-
- 0 replies
- 236 views
-
-
கடந்த சனிக்கிழமை(0CT -1)நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் அவரின் நினைவுகளை சுமந்து ..... நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதென்பது சூரியன் ஒளிமிக்கது என்று விளக்குவது போன்ற வேலை தான். ஏனென்றால் நடிப்பின் எல்லா எல்லைகளையும் தொட்ட பிதாமகன் அவர் என்பது எல்லாருமே அறிந்த விஷயம். வீரபாண்டியக் கட்டபொம்மன், கர்ணன், பாசமலர் போன்ற படங்களின் மூலம் உணர்ச்சிமிகு நடிப்புக்கான இலக்கணத்தையும், நிறைகுடம், சாந்தி, புதிய பறவை, முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற படங்களின் மூலம் இயல்பு நடிப்புக்கான இலக்கணத்தையும் படைத்தவர் அவர். எனவே அவரது நடிப்பு பற்றி சிலாகிப்பதை விடுத்து, அவரது பொதுவான பண்பு பற்றி பார்ப்போம் இன்று. பலரும் சிவாஜியிடம் கவனி…
-
- 3 replies
- 1.7k views
-
-
மறக்கப்பட்ட நடிகர்கள்: 1 - நடிகர் திலகம் கன்னத்தில் ஒரு பளார்!- பி.வி. நரசிம்ம பாரதி ‘திரும்பி பார்’ படத்தில் பண்டரிபாய், சிவாஜி, நரசிம்ம பாரதி ‘மதன மோகினி’ படத்தில் சி.ஆர்.ராஜகுமாரி, நரசிம்ம பாரதி சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் ‘பொன்முடி’ படத்துக்காக அமைக்கபட்ட கடற்கரை செட்டில் டூயட் காட்சியை படமாக்குகிறார் எல்லீஸ் ஆர். டங்கன் சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்…
-
- 7 replies
- 4.7k views
-
-
மறக்காத முகங்கள்: சிதம்பரம் ஜெயராமன் “எம்.ஆர். ராதாவுக்காக கடைசியில் நான் பாடிய பாட்டு” “சங்கீத சௌபாக்யமே...” என்று சம்பூர்ணராமாயணக்’ குரல் வளைய வந்தபோது ரொம்ப சுகமாய்த் தலையாட்டியவர்கள் நிறையபேர். “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...” கேட்டு, “காவியமா... ஓவியமா...” கேட்டு ஒன்றிப் போய் சிலாகித்தவர்கள் அநேகம் பேர். நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய் சாவகாசமாக கீழிறங்கும் ராக ஒழுக்கு. வயதாகியும் குரல் உடையாமலிருக்கிற சிதம்பரம் ஜெயராமனைப் பார்த்தோம். ஒடிசலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார். செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான சங்கீதக் குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளில் ஒருவ…
-
- 1 reply
- 2k views
-
-
'மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந…
-
- 3 replies
- 500 views
-
-
மல்டி ஸ்டாரர் படங்களில் ஈகோபார்க்காமல் சக ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்யா ஒரு கில்லாடி! அவன் இவன் படத்தில் தனது உயிர் நண்பன் விஷாலுடன் இணைந்து அவன் இவன் படத்தில் நடித்தார். தற்போது தல அஜித்துடன் இணைந்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்திருக்கிறார். See more at: http://vuin.com/news/tamil/vijay-and-arya-team-up-again
-
- 0 replies
- 391 views
-
-
மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? குஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர்.அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல் செயல் பட்டார். பின்பு ஆட்சி மாறிய பிறகு சினிமா தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். சினிமாவை பற்றியும் அரசியல் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உளறி ரசிகர்களிடம் மொக்க வாங்கவது இவரின் வழக்கம். தற்போது மறுபடியும் ஒரு அனல் பறக்கும் விஷயத்தை பற்றி அவதுறாக பேசியுள்ளார் குஷ்பு. அதாவது திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்…
-
- 5 replies
- 899 views
-
-
மறுபடியும் கொல்லப்பட்ட சில்க் ஸ்மிதா : த டர்ட்டி பிக்சர் அல்லது நீலப்படம் Posted on November 26, 2017 by Yamuna Rajendran தமிழ்சினிமா ரசிர்களால் என்றென்றும் மறக்கமுடியாத சில்க் ஸ்மிதா, ஆந்திராவின் எலூரு எனும் இடத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி பிறந்து, தனது 35 ஆம் வயதில், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி சென்னையில் தற்கொலை செய்து கொண்டு அல்லது கொல்லப்பட்டு மரணமுற்றார். இன்று நினைக்க என்றும் அது துக்க நாளாகவே இருக்கிறது. மர்லின் மன்றோ உலகின் தேவதை என்றால் சில்க் ஸ்மிதா தென்னிந்தியாவின் தேவதை. குழந்தையின் பேதைமையும் இளம்பெண்ணின் வளர்பருவக் குறுகுறுப்பையும் கள்ளமின்மையையும் இவர்களது புன்னகையிலும் உடல்மொழியிலும் பார்க்க முடியும். இவர்களத…
-
- 1 reply
- 2.7k views
-
-
சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி! சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள். கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள். இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். அதன்பிறகு தமிழில…
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்பு இவரது பெயர் வெள்ளி விழா நாயகன்! மோகன் நடித்தால் அந்தப்படம் வெள்ளி விழாதான் என்பதால் இந்தப் பெயர். காலம் உருட்டிய சோழியில் இப்போது மோகன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஹீரோவாகதான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் மோகன். இதனாலேயே 'உனக்கும் எனக்கும்' படத்தில் ஜெயம் ரவியின் அப்பாவாக நடிக்க வந்த வாய்ப்பை உதறினார். மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர். தாதா வீரமணியின் கதையை 'பெருசு' என்ற பெயரில் படமாக்கிய ஜி. காமராஜ்தான் அந்த துணிச்சல்காரர். மோகன் படம் என்றாலே காதல் படம் தான். ஐம்பது வயதுக்கு மேல் மோகன் கையில் மைக் கொடுத்து நிலாவே வா... என்று காதலிக்காக உருகி பாட வைக்க முடியுமா? புத்திசாலித்தனமாக காதலை தவிர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மறுமணம் செய்து கொள்வீர்களா? - மனம் திறக்கும் இமான்
-
- 0 replies
- 732 views
-
-
இக் காணொளியில், மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் தனது மாறு கண் காரணமாக வாழ்க்கையில் தான் சந்தித்த வேதனையான சம்பவங்கள் பற்றிச் சொல்கின்றார். அவர் சொல்வதைக் கேட்ட பின்பாவது, மற்றவர்களின் உடல் பாகங்களிலுள்ள குறைபாடுகளைச் சமூக வலைத் தளங்களில், வேலைத் தளங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில் கேலி செய்வதைப் பலர் நிறுத்துவார்களென நம்புகிறேன். தனது குறைபாட்டையே சாதகமாகவெடுத்து, வாழ்க்கையில் எப்படி முன்னேறினாரென்று அவர் சொல்வது, உடல் குறைபாடுகளாலும், கேலிப் பேச்சுகளாலும் மனமுடைந்து போன பலருக்குக், குறைபாட்டை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் கொடுக்குமென நம்புகிறேன். குமரிமுத்து அவர்களின் தமிழ் இலக்கியப் புலமையும், அவர் தமிழ் பேசும் சிறப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
-
- 1 reply
- 377 views
-
-
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்…
-
- 0 replies
- 117 views
- 1 follower
-
-
எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.
-
- 11 replies
- 947 views
-
-
நானே முதலில் கொஞ்சம் இரக்கப்பட்டிட்டன்.. பாவமா இருந்திச்சு.. இதைப் பார்க்க..! என்ன கொடுமை.. இத்தனை சின்ன சின்ன ஆசைகள் அத்தனையும்.. மறைக்கப்படும் போது..???! ஏன் இந்த மறைப்பு..??! யாரின் விதிப்பு..! இல்ல கள்ளம் பண்ணப் பிளான் போடுறாவோ அக்காச்சி என்று பாவம் பார்த்த மனசை கட்டி இழுத்து வந்து பழைய நிலையில் விட்டுவிட்டேன்.
-
- 4 replies
- 843 views
-
-
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…
-
- 151 replies
- 19.1k views
-
-
மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர். இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார். …
-
- 2 replies
- 895 views
-