வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344
-
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
விமர்சனம்: வணங்கான்! KaviJan 11, 2025 12:21PM உதயசங்கரன் பாடகலிங்கம் ’கும்பிடு’ போடும்படியாக இருக்கிறதா? ’நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இயக்குனர் பாலாவின் படம். இதுவே ‘வணங்கான்’ படத்தின் மீதான கவனக்குவியலுக்கான முதல் காரணம். சூர்யாவைக் கொண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தில் பின்னர் அருண்விஜய் நாயகனாக நடித்ததெல்லாம் அப்புறம் தான் நம் நினைவுக்கு வரும். படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக்பீக் எல்லாம் பார்த்தாலும், ‘இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் பாலா’ என்ற எதிர்பார்ப்பே இதன் யுஎஸ்பி. சரி, ‘வணங்கான்’ படத்தில் நமக்கு எப்படிப்பட்ட திரையனுபவத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் பாலா? பாலா படங்களின் கதை!? …
-
- 0 replies
- 616 views
-
-
கேம் சேஞ்சர் Review: ஷங்கரின் ‘தெலுங்கு மசாலா’ அஸ்திரம் எடுபட்டதா? 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரை பதித்த ஷங்கர், முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் இயக்கியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ‘இந்தியன் 2’ கொடுத்த மிகப் பெரிய தோல்வியால் வெற்றியின் கட்டாயத்தில் ஷங்கரும், ‘ஆர்ஆர்ஆர்’ பெற்ற உலகளாவிய கவனத்துக்குப் பிறகு ‘சோலோ’வாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராம் சரணும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டார்களா என்பதை பார்ப்போம். எதிலும் நேர்மை, எங்கும் துணிச்சல் என்று செயல்படும் ஓர் அரசு அதிகாரியும், எங்கும் எதிலும் ஊழல் என்று செயல்படும் ஓர் அரசியல்வாதியும் மோதிக் கொண்டால் என்ன ஆகும் என்பதே ‘கேம…
-
- 0 replies
- 144 views
-
-
தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம். இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது. இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்…
-
-
- 5 replies
- 684 views
- 1 follower
-
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்? Kumaresan MDec 31, 2024 14:44PM தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக …
-
-
- 31 replies
- 1.9k views
- 1 follower
-
-
Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom
-
- 0 replies
- 276 views
-
-
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்த…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்…
-
-
- 8 replies
- 1.1k views
-
-
சூது கவ்வும் 2: விமர்சனம்! SelvamDec 14, 2024 21:02PM உதயசங்கரன் பாடகலிங்கம் சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல! ’மிர்ச்சி’ சிவா நடிக்கும் படங்கள் என்றாலே, தமிழ் சினிமாவை ‘ஸ்பூஃப்’ செய்கிற சில வரி வசனங்களாவது இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடத்தில் நிறைந்திருக்கிறது. காரணம், அவரது முந்தைய படங்கள் தான். அதிலிருந்து அவர் விலகி நிற்க முயற்சிகள் பெரிதாகப் பலனளிக்கவில்லை. இந்த நிலையில்தான், ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்தடுத்து பல அப்டேட்கள், டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி, இதோ இப்போது தியேட்டரில் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் எஸ…
-
- 1 reply
- 397 views
-
-
ஆர்.ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை. ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
-
- 1 reply
- 612 views
-
-
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடல்; நெரிசலில் தாய் உயிரிழப்பு, மகன் காயம்! ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் புதன்கிழமை மாலை ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கச் செனற் 35 வயதுடைய பெண்ணொருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். மேலும், அவரது ஒன்பது வயதுடைய மகன் பலத்த காயமடைந்துள்ளதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சிக்கா வருகை தந்திருந்த தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலை மோதியமையினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குக்கு வெளியே பர…
-
- 1 reply
- 206 views
-
-
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்பட…
-
- 4 replies
- 381 views
-
-
பொதுவாகவே ஒரு தனிமனிதனின் வருமானம், சொத்துக்கள், வாழ்க்கையை தோண்டியெடுத்து செய்தியாக்குவது அருவெருப்பான ஒன்றாகவே பார்ப்பதுண்டு. இங்கே வடிவேலுவின் இந்த பிரமாண்டம்பற்றி பகிர்வதற்குகாரணம், வாழ்க்கையின் அடிமட்டத்தின் கீழிருந்து ஒருவர் தனது ஒப்பற்ற திறமையினால் எவ்வளவு உயரத்திற்கு வந்தார் என்பதை காண்பிக்கவே.
-
- 0 replies
- 256 views
-
-
கமல் அடிக்கடி தனது பேட்டிகளில் நாகேஷை புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுவார், அது கொஞ்சம் மிகையோ என்று தோன்றுமளவிற்கு ஐயம் வரும், ஒரு கதிரையில் இருந்தபடி கணப்பொழுதில் எம்மையறியாமல் எங்கே அழுதுவிடுவோமோ என்ற அளவில் அச்சுறுத்தி அவரால் நெகிழ வைக்க முடியும் என்பதற்கு சாட்சியாக அவர் நடிப்பு இந்த காணொலியில் இருக்கிறது
-
-
- 16 replies
- 967 views
-
-
நேற்று மாவீரர் நாளில் விடுதலை2 படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. யுகபாரதி பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். யோக்ஃபி பாடியிருக்கிறார். சமயம் பார்த்து பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் Trailer இலே ஒன்றைக் கவனித்தேன். நடிகர் இளவரசு பேசும் வசனம் இப்படி இருந்தது, “என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்திலை தலை வைச்சு படுத்ததாலேதான் உன்னை மாதிரி..” ஆக ஆளும் கட்சிக்கு நல்ல ‘ஜஸ்’ வைத்திருப்பது தெரிகிறது. எம்ஜிஆரின் தலை நிச்சயமாக உருளும்.
-
- 0 replies
- 740 views
-
-
-
-
- 2 replies
- 737 views
-
-
ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு…
-
-
- 1 reply
- 776 views
-
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு! இரா.சரவணன் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக வலைத்தளங்களில் வன்மத்தை கக்கும் விமர்சனங்கள் வெளிப்பட்டன. அவை கங்குவா என்ற படத்தைக் கடந்து நடிகர் சூர்யா குடும்பத்தை தாக்கும் விமர்சனமாகவும் தூக்கலாக வெளிப்பட்டது. இந்தச் சூழலுக்கு இயக்குனர் இரா.சரவணன் மிக சிறப்பாக எதிர் வினையாற்றி இருக்கிறார்; இவர் மிகச் சமீபத்தில் வெளியான நந்தன் படத்தின் இயக்குனர். இந்தப் படம் உள்ளாட்சிகளில் பட்டியலினத் தலைவர்கள் தற்காலத்தில் சந்திக்க நேரும் அவமானங்கள் குறித்து மிகுந்த சமூக அக்கறையுடன் கவனப்படுத்தி இருந்தது. இவரது முந்திய படங்களான கத்துக்குட்டி, உடன்பிறப்பே போன்றவையும் சரவணனின் சமூக அக்கறைக்கு சாட்…
-
-
- 7 replies
- 832 views
-
-
'ஸ்க்விட் கேம் படமாக்கப்பட்டபோது 9 பற்களை இழந்தேன்'- விரைவில் வெளியாகும் இரண்டாம் பாகம்; தொடரின் இயக்குநர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, கொரிய நாடகமான ஸ்க்விட் கேம் 2021-இல் வெளியிடப்பட்டபோது உலகளவில் பேசப்பட்டது எழுதியவர், ஜீன் மெக்கென்சி பதவி, சோல் செய்தியாளர் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமான கொரிய வெப் சீரிஸான ‘ஸ்க்விட் கேமை’ உருவாக்கியவர் அந்த தொடரின் படப்பிடிப்பின் போது மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார், படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு ஆறு பற்கள் உடைந்தன என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதைப்பற்றி அவரிடமே கேட்டபோது, "ஆறு அல்ல, எட்டு-ஒன்பது பற்கள் உடைந்திருக்கலாம்," என…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
எனக்கு மிகவும்பிடித்த குணசித்திர & நகைச்சுவை நடிகர் டெல்லிகணேஷ். மரணம் எவருக்கும் சலுகை தரபோவதில்லை. காலங்கள் ஓடினால் காலமாக்கிவிடும் ஐயாவுக்கு அஞ்சலிகள்.
-
- 11 replies
- 961 views
-
-
அமரன் : விமர்சனம்! christopherNov 01, 2024 19:28PM மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?! தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது. தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சி…
-
-
- 4 replies
- 827 views
-
-
பரியேறும் பெருமாள் `கறுப்பி’ பேருந்து மோதி உயிரிழப்பு! பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த ‘கறுப்பி’ என்ற பெண் சிப்பிபாறை நாய், பேருந்து மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகன் கதிர் அவர்களின் செல்ல நாயாக ‘கருப்பி’ என்னும் சிப்பிபாறை வகை பெண் நாய் நடித்தது. இந்த நாய் அந்த படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களின் உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சினிமா ரசிகர்கள் பலராலும் இந்த நாய் நேசிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி அன்று திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் தனது வீட்டில் இருந்த கறுப்பி பட்டாசு சத்த…
-
- 0 replies
- 297 views
-
-
பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிற…
-
-
- 12 replies
- 913 views
- 2 followers
-
-
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் ஈழத் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அரச பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), ராணு வத்தின் குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வ…
-
- 0 replies
- 359 views
-
-
பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் பட…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-