வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக…
-
- 3 replies
- 668 views
- 1 follower
-
-
The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இந்திப் படமான The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது. படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நல்ல முஸ்லீமையும் படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும். மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்த…
-
- 1 reply
- 386 views
-
-
10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவில்லை.. சென்னை: காமெடி நடிகர் சேசு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "மண்ணெண்ணெய்.. வேப்பண்ணெய்.. விளக்கெண்ணெய்.. நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என பாரதிராஜாவின் மண்வாசனை படத்தை ஸ்பூஃப் செய்து கிழவி வேடமிட்டு லொள்ளு சபாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் சேஷு. இவர் முகத்தை வைத்து கொடுக்கும் ரியாக்ஷனை பார்த்தாலே குபிரென சிரிக்காதவர்களும் சிரித்து விடுவார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை இவரது உடம்பிலேயே ஊறிக் கிடந்தது. லொள்ளு சபா விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடிப்பதற்கு முன்பே சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியி…
-
- 2 replies
- 434 views
-
-
ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வெ…
-
- 5 replies
- 560 views
- 1 follower
-
-
வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் …
-
- 1 reply
- 584 views
-
-
லால் சலாம் Review: ரஜினியின் ‘ஆளுமை’யில் மதநல்லிணக்கம் பேசும் படம் எப்படி? ட்ரெய்லர் வெளியானபோதே, ‘விளையாட்டில் மதத்தை கலந்துருக்கீங்க’ என்ற வசனத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்ற படம். கூடவே ரஜினியின் சிறப்புத் தோற்றம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கம் என்ற எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படம், அந்த எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்…
-
- 2 replies
- 643 views
-
-
2024 ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான கிராமி விருதை இந்தியாவைச் சேர்ந்த சக்தி இசைக்குழுவினர் வென்றிருக்கிறார்கள். இந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் இசைக்கலைஞர்களுக்கு ஓஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு தெரிவித்திருக்கிறார். உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதைப் பெறுவது தான் கனவாக இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸில் பிராம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘ஒஸ்கர் நாயகன்’ ஏ ஆ ரஹ்மான் சிறப்பு அதிதியாக பங்குபற்றினார். இதன் போது 2024 ஆம் ஆண்டு சிறந்த குளோபல் இசை அல்பத்திற்கான விருது, ‘திஸ் மொமண்ட்’ (This Moment) எனும் அல்பத்தை உருவாக்கிய சக்தி குழுவினருக்கு வழங்…
-
- 0 replies
- 406 views
-
-
நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலர் சிறப்பு அதிதிகளாக படக்குழுவினருடன் பங்குபற்றினர். ‘சிலந்தி’, ‘அருவாச்சண்ட’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘நினைவெல்லாம் நீயடா’. இதில் பிரஜின், மணிஷா யாதவ், ரோஹித், யுவலட்சுமி, சினாமிகா, மறைந்த நடிகர் மனோபாலா, மதுமிதா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார், முத்துராமன், பி. எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். காதலை மை…
-
- 0 replies
- 581 views
-
-
ப்ளூ ஸ்டார் விமர்சனம் நடிகர்கள்: அசோக் செல்வன்,கீர்த்தி பாண்டியன்,சாந்தனு பாக்யராஜ் இயக்கம்: எஸ் ஜெயகுமார்சினிமா வகை:Comedy, Drama, Sportகால அளவு:2 Hrs 48 அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டியாக உள்ளது. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி குறித்து பேசுகிறார்கள். இந்த ஒரு போட்டியை பற்றி தான் மொத்த படமும் இருக்குமோ என தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லை. பெரிதும் பேசப்படும் அந்த கிரிக்கெட் போட்டி படத்தின் முதல் பாதியிலேயே நடந்துவிடுகிறது. …
-
-
- 1 reply
- 635 views
-
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Poonam pandey பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம்…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவு: பாடகர் ஷாஹுல் ஹமீது குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்ததன் ரகசியம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இனிமேல் உங்கள் விருப்பமான பாடகர்களை, அவர்கள் மறைந்த பின்னரும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அதை நம்ப முடிகிறதா? புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைத் தனது சிறப்புகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது இறந்த பாடகர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உயிர் கொடுப்பதைச் செய்து காட்டியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் உருவாக்கியுள்ள பாடல், …
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...
-
-
- 29 replies
- 3k views
- 1 follower
-
-
பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்! -வசந்த் பாரதி ‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது! மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள் தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை உருவாக்கத்தில் அவர்கள் கோடம்பாக்கத்தை விட மேம்பட்ட தளத்தில்இருப்பத…
-
-
- 3 replies
- 729 views
-
-
இன்று இந்த தொடரை பார்த்து முடித்தேன். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்த படம். தனிப்பட்ட ரீதியில் ஏனோ தெரியவில்லை வீரப்பன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. எல்லைக் கிராம மக்களை கர்நாடக தமிழ்நாட்டு காவல்துறையினர் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். பெண்கள் குழந்தைகளைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜகுமார் கடத்தல் மிகவும் துணிகரமாக திட்டம் போட்டு செய்தது மட்டுமன்றி 90 நாட்கள் கைதியாகவும் இருந்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுதலையின் போது இருவருமே கண்ணீர் மல்ல கட்டித் தழுவினார்களாம். கடைசியில் இலங்கை போய் தலைவர் பிரபாகரனுடன் வாழ விரும்பியதை வைத்து தலைவர் பிரபாகரன் உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று அம்புலலன்ஸ் ஆக உருமற…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
காதல் என்பது விடுவித்தல். தன் துணையின் தேர்வை நோக்கி அவரைச் செல்ல அனுமதித்தல். தீர்க்க முடியாத பிரச்சினைகளைச் சுமந்து பாரமாக வாழ்வதிலிருந்து மீள்தல் என்கிறது ‘காதல் - தி கோர்’. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் சம்பிரதாய சடங்குகளால் சிறகொடித்து கிச்சனுக்குள் சிதைக்கப்படும் பெண்களின் பெருந்துயரை விமர்சித்த இயக்குநர் ஜியோ பேபி, இம்முறை காதலுக்குள் இருக்கும் வரையறைகளை புதிய பரிமாணங்களில் அணுகும் படைப்பை கொண்டு வந்திருக்கிறார். கேரளத்தின் டீகோய் கிராமத்தில், நடுத்தர வயது தம்பதிகளான மேத்யூ தேவஸி (மம்முட்டி) ஓமணா (ஜோதிகா) மற்றும் மேத்யூவின் தந்தையும் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளின் ஒரே மகளான ஃபெமி (அனகா மாயா ரவி) கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்து வ…
-
- 4 replies
- 590 views
-
-
Society of the snow (Netflix release) மனித இனத்துக்கு வேகமாக ஓடக் கூடிய கால்கள் இல்லை. பறப்பதற்கு சிறகுகள் இல்லை. ஏனைய விலங்குகளுடன் கைகளால் போரிட்டு வெல்ல நீண்ட நிகங்களோ அல்லது உறுதியான கைகளோ, உடலோ இல்லை. பழகாவிடின் நீந்தக் கூட முடியாது. பறவைகளைப் போல், இலகுவாக கூடு கட்ட முடியாது. அதிக குளிரையோ வெப்பத்தையோ தாங்கும் தோல் கூட இல்லை. காதின் கேட்கும் திறன் கூட மட்டுப்படுத்தப்பட்டது. இரவில் பார்க்க நல்ல வெளிச்சம் தேவை அதன் கண்களுக்கு. இயற்கையால் பல வழிகளில் வஞ்சிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்றால் அது மனித இனம் தான். அப்படி இருந்தும் ஏன் மனித இனம், மற்ற எல்லா உயிரினங்களை விட மேலாக நின்று ஆதிக்கம் செய்கின்றது இயற்கைக்கு சவால் விடுகின்றது என யோசித்துப் பார்த்தால…
-
-
- 4 replies
- 840 views
- 1 follower
-
-
Play video, "அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?", கால அளவு 2,40 02:40 காணொளிக் குறிப்பு, அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது. வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது. படத்தின் முதல் பாதியில், ஏல…
-
-
- 2 replies
- 431 views
- 1 follower
-
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..! சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல…
-
-
- 20 replies
- 2.1k views
-
-
கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிற…
-
- 2 replies
- 763 views
- 1 follower
-
-
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அ…
-
- 0 replies
- 257 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 ஜனவரி 2024, 07:21 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் "என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன்," என்று தனது இசைப் பயணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1992ஆம் ஆண்டு, தனது முதல் திரைப்படமான 'ரோஜா' மூலம் இந்திய சினிமாவின் இசைத் துறையையே புரட்டிப் போட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் எனச் சொன்னால் அது மிகையாகாது. இன்றுவரை தான் இசையமைக்கும் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு வகையான புதுமையைச் செய்து வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 56ஆவது பிறந்த நாள். இரவு நேரங்களில் இசையமைக்கும் வ…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி கொமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார். வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன. கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனை…
-
- 6 replies
- 628 views
- 1 follower
-
-
இந்த திரைப்படம் எமது போராட்டத்தை தொட்டுச் செல்கிறது போல இருக்கிறது.
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்ஸா பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். 2010ஆம் ஆண்டு ஃபாஸ்ட் ஃபைவ் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது தன்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வின் டீசல் என அழைக்கப்படும் மார்க் சின்க்ளேரின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் "இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறார்," என்றார். ஆஸ்டா ஜோனாசன், அந்த நடிகர் தன்னைச் சுவருடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு தனக்குத்தானே பாலிய…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X/ V CREATIONS AND KAVITHALAYA PRODUCTIONS கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 டிசம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் ஆளவந்தான் (2001), முத்து (1995) திரைப்படங்கள் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, வடிவேலு, மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. ஜனரஞ்சகமான இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது. அதேபோல, 2001-ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இருவேறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-