ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவியை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை சிறிலங்கா அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்த…
-
- 3 replies
- 874 views
-
-
எமில்காந்தனுக்கு மீண்டும் பிடியாண தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் அன்டனி எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக, பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் என்பன வௌியிடப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டது. சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதன்படி, சந்தேகநபர…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழ் தலைமைகளுக்கு பிரதமர் மஹிந்த எச்சரிக்கை..! இந்திய ஊடுருவலை ஊக்குவிக்கவேண்டாம். தீர்வு எங்களிடமே உள்ளது.! வட கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியா தீர்க்கும் என தமிழ் தலைமைகள் கூறுவதை பற்றி கேள்வி பட்டுள்ளேன். அந்த முயற்சியை நிறுத்துங்கள். தீர்வு எங்களிடமே இருக்கின்றது. தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.‘தமிழ் மக்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தரும் என்ற சிந்தனையைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்யும் செயலை தமிழர் பிரதிநிதிகள் மாற்றிக்கொண்டு எம்மூடாகத் தீர்வைப் பெற முயலவேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார். htt…
-
- 5 replies
- 3k views
- 1 follower
-
-
17 MAY, 2025 | 11:14 PM தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு இன்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை துஷித ஹல்லொலுவ வெளியிட்டதுடன், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்…
-
- 1 reply
- 298 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் யாழ். குடாநாட்டில் அரிசியின் விலை நாளுக்கு நாள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகரித்துச் செல்கின்றது. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை நூற்றி முப்பது ரூபாவினைத் தாண்டியுள்ளது. ஆயினும், அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அரிசிக்கான நியம விலை நடைமுறை பற்றி எவருமே கண்டுகொள்வதில்லையென நுகர்வோர் நலன்புரி அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குடாநாட்டில் விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் எவருமே கடமையில் இல்லையெனவும் அவை கேள்வி எழுப்புகின்றன. குடாநாட்டின் உள்ளூர் உற்பத்தி அரிசி கையிருப்புக்கள் தீர்ந்து வருகின்ற நிலையில் அதன் விலையும் அதிகரித்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால், கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் அரிசியே யாழில் நிவாரணக் கொடுப்பனவுகள் உள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததைபோல், காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி அழிக்க வேண்டும் என நண்பர் ரவுப் ஹக்கீம் கோரிக்கை விட்டுள்ளார். இந்த ஜனாதிபதியின் இந்த அரசாங்கம்தான், இந்த காவியுடை பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கிறது. 80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை பலவந்தமாக கடத்தி சென்றுள்ள, காவி உடை கோஷ்டி,அரசாங்கத்தின் மதவாத-இனவாத கொள்கை தரும் தைரியத்தில்தான் செயல்படுகிறது. இது இப்படியே போனால், நாளை நல்லை கந்தனையும் இவர்கள கடத்தி செல்வார்கள். கடந்த காலங்களில் இப்படித்தான், கதிர்காம கந்தனையும் இவர்கள் கடத்தி சென்று இன்று அதை ஒரு பெளத்த ஸ்தலமாக மாற்றி விட்டார்கள். பாணமை பிள்ளையார் சிலை பலவந்தமாக எடுத்துசெள்ளப்பட்டமை தொடர்பில் ஜனநாயக மக்…
-
- 0 replies
- 889 views
-
-
கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது குறித்த கடிதப் பிரதியை கோரும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாவது தொடர்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இராணுவத் தலைமையகத்திலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை வழங்குமாறு இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பணித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியது. பொதுநல வழக்குகள் பலவற்றை பாதிக்கப்பட்ட தரப்புகள் சார்பில் முன்னெடுத்து வருபவரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலை…
-
- 6 replies
- 920 views
-
-
[size=4]சென்னையில் இன்று நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பின்பேரில் இலங்கை நாட்டு பிரதிநிதிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக விரும்பினார்கள்.[/size] [size=4]ஆனால் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுவிட்டது. இதுபற்றி, தி.மு.க. எம்.பி.யும், அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன்,[/size] [size=4]’’சென்னையில் நடக்கும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை, அமெரிக்கா, கனடா ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், அவர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. [/size] [size=4]இந்த விவகாரத்தை பாராளுமன்ற தி.மு.…
-
- 0 replies
- 593 views
-
-
ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் - சஜித் உள்ளிட்ட 35 பேர் அதிரடி தீர்மானம்! இன்று (30) பிற்பகல் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர் கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார். இதேவேளை…
-
- 2 replies
- 588 views
-
-
இலங்கை அரசாங்கம் அங்கு வாழும் தமிழர்களைக் கடந்த வருடங்களாக அடக்கி ஒடுக்கப்பார்க்கிறது. தமிழ் மக்களைப் பல்வேறு வகைகளிற் தடைகளை அமுல்படுத்தி அவர்களை வருத்துகிறது. பொருளாதாரத் தடைகளின் மூலம் நமது மக்களைப் பட்டினியால் சாகடிக்கப் பார்க்கிறது. மனித உரிமை மீறல்கள் எங்கள் மக்களை வதைக்கின்றன. 40,000 படையினரைத் தமிழர் தாயகப் பகுதிகளில் குவித்து அங்கு நாளாந்தம் மனிதப் படுகொலைகளை நடத்திவருகிறது. எனவே இன்று 40வது ஆண்டைப் பூர்த்தி செய்கின்ற தென்னாபிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் தென்னாபிரிக்கா அரசிடம் எமது ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஒரு வேண்டுகோளை முன் வைக்கவேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்ன் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவரும்படி நிர்ப்ப…
-
- 0 replies
- 536 views
-
-
கம்பஹா மாவட்டத்தில் “சிவாவின் நடனம்” என்ற பெயரில் சைவ சமயத்தின் தலைமைக்கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் பெயரையும், உருவப்படத்தையும் பயன்படுத்தி களியாட்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதை உடன் தடுத்து நிறுத்தும்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இருந்தும், தேசிய தமிழ் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கைகள் எனக்கு விடுக்கப்பட்டுள்ளன. இந்த பெயரையும், உருவப்படத்தையும் தவிர்த்துக்கொண்டு இத்த…
-
- 0 replies
- 284 views
-
-
புதுடில்லி : நெருக்கடிக்கு தீர்வுகாணக்கூடிய ஆற்றிலின்றி இலங்கை இருப்பது ஆபத்தை தோற்றுவித்திருப்பதாகவும், விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை தமிழ் மக்கள் உறுதியாக நம்புவதாகவும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தனா (அரசியல்) இணக்கப்பாட்டிற்கான எதிர்காலமானது தற்போது அரசின் கைதியாக உள்ளது. சிங்கள தீவிரவாதச் சிந்தனையுடனான நிகழ்ச்சித் திட்டம் மோலாதிக்கம் செலுத்துவதால் இணக்கப்பாட்டிற்கான எதிர்காலம் கைதியாக உள்ளது. நீண்டகாலம் அதிகாரத்திலிருப்பதே அதன் நோக்கம் என்றும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்; சங்கம் தமது மத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வலுவான பிணைப்பில் ஆபத்தான பொருளாதா…
-
- 0 replies
- 846 views
-
-
விலைவாசி உயர்வு மட்டுமா மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு..? ஈழதேசம் செய்தி..! விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறதாம். பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா கூறியுள்ளார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் இதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில், இரும்பு மற்றும் கனிமவள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது கடும் புயலை கிளப்பி உள்ளது. உணவுப் பொருள்களான அரிசி,பருப்பு,கோதுமை, ஆட்டா மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதனால் உணவுப் பணவீக்கம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களின் விலையேற்ற…
-
- 0 replies
- 433 views
-
-
நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை! இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், நீதிச்செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கப் போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசாரணைகள் எவ்வாறு போகின்றன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை மதிப்பீடு செய்யும். ஆனால் இது நம்பகமான விசாரணையாக என்பதை உறுதிப்படுத்துவதே எமக்குத் த…
-
- 0 replies
- 415 views
-
-
நாட்டில், போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்காக மூன்று புதிய மையங்களை நிறுவ ஆபத்தான மருந்துகளுக்கான தேசிய கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. புதிய மையங்கள் இதன்படி, மாத்தறை, குருநாகல் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும் என்று சபையின் பணிப்பாளர் சுஜித் கொத்தலாவல தெரிவித்தார். நாட்டில் 'ஐஸ்' போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு இந்த நிலையில் போதைகளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண நாடு முழுவதும் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படும். அதேநேரம் இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகாமல், தடுக்க விழிப்புணர்வு திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 684 views
-
-
முக்கிய 3 விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜிடம் கோரிக்கைகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி By SRI July 10, 2025 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்ஜிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதன்கிழமை (09) நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் இவ்வாறு கோரிக்கைகளை முன்வைத்துள…
-
- 0 replies
- 157 views
-
-
விடத்தல்தீவுக்கு வீட்டுப்பொருட்களை ஏற்றிவரச் சென்றவர்களைக் காணவில்லையென முறைப்பாடு வீரகேசரி இணையம் 7/18/2008 11:02:10 AM - மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களின் வீட்டுப் பொருட்களையும்; உடைமைகளையும் ஏற்றி வருவதற்காக அங்கு சென்ற நான்கு பேர் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய பார ஊர்திகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ.ரெட்ணாகரன் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். கிளிநொச்சி தர்மபுரம் 10 ஆம் யுனிட்டைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (29), விவேகானந்தா நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (29), வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசான்பிள்ளை எழில்வேந்தன் (25), இரத்தினபுரத்தை…
-
- 3 replies
- 901 views
-
-
மறவன்புலவு தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்பு விடயம் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான நேற்று தந்தை செல்வா சதுக்கத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால் பொதி செய்யப்பட்டுள்ளன. இதை தமிழ் மக்கள் மீது சுமத்தி, விடுதலைப் புலிகள் மீண்டெழுகின்றார்கள் என குற்றம் சாட்டி, தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகமே இது. அத்துடன், எமது மக்கள் மீது இனவெறியினை தூண்டும் நோக்கத்துடன், இனவெறிச் செயலாக செய்கின்றார்கள்…
-
- 0 replies
- 358 views
-
-
வன்னிப்பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. வன்னியில் தொடரும் இடப்பெயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகளும் இடம்பெயர்ந்துள்ளதாகவும்இ இதனால் இந்தப் பாடசாலை மாணவர்களையும்இ ஆசிரியர்களையும் இடம்பெயராதுள்ள பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இடம்பெயராத பாடசாலைகள் இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம்இ வன்னியில் தொடரும் மக்கள் இடம்பெயர்வு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில…
-
- 3 replies
- 717 views
-
-
தி.மு.க..தலைவர் மு.கருணாநிதியுடன் ஈழதேசம் சிறப்பு நேர்காணல்..! ஈழதேசம் : அய்யா வணக்கம்..! தமிழ் வாழ்க..! மு.க. : ம்ம்.. ம்ம்..! பரவாயில்லையே தமிழ் வாழ்க என்று கூறுகிறாய்..! யார் நீ..? தமிழனா, திராவிடனா..? ஈழதேசம் : போன ஆட்சியில் நீங்கள் முதல்வராக இருக்கும் பொழுது உலகத் தமிழர் மாநாடு நடத்தினீர்களே..? அப்பொழுது எல்லா அரசு கட்டிடத்திலேயும் எழுத சொல்லி உத்தரவு போட்டீர்களே..? அந்த பில்டிங்குகளை காணும் பொழுதெல்லாம் 'தமிழ் வாழ்க' என்று படிப்பேன் அய்யா..! மு.க. : நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே தம்பீ..? ஈழதேசம் : நான் பதில் சொன்னால் நீங்கள் பேட்டி, கீட்டி... எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் அய்யா..! …
-
- 0 replies
- 627 views
-
-
தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார். இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் …
-
- 15 replies
- 1.3k views
-
-
நாடு கடத்தப்பட்ட நிலையில் வெலிகம சஹான் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின், சென்னையில் இருந்து நேற்றிரவு (28) நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இவர், பாணந்துறை மற்றும் களுத்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் “பத்தே சுரங்க” என்ற நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்திலும் முக்கிய சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவர் ஒரு …
-
- 0 replies
- 97 views
-
-
சஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்: சென்னையில் ரவூப் ஹக்கீம். ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (02) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், ம…
-
- 0 replies
- 466 views
-
-
10 AUG, 2025 | 09:31 AM ஆர்.ராம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவப்பிரசன்னம் அதிகமாகக் காணப்படுவதோடு போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் நடைமுறைகளில் இராணுவத் தலையீடு தீவிரமடைந்துள்ளதால் அச்செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருக்கும் குறித்த கடிதம் பிரதியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போருக்கு முற்பட்ட காலத்தில் கரைச்சிப் ப…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-