Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார். அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது…

    • 50 replies
    • 4.1k views
  2. வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் சென்று பஸ்களில் ஏறி நடைபாதை வியாபரம் மேற்கொள்ளத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பி இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது வழமையான செயற்பாடுகளை தொடர்ந்து பஸ் நிலையத்திற்குள் சென்று மேற்கொள்வதற்கு தீர்வினை பெற்றுத்தருமாறும் அவர்கள் கோருகின்றனர் . இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்ட நடை பாதை வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ்களில் ஏறி வியாபாரம் மேற்கொள்வதற்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் இத் தொழிலை மேற்கொண்டு வரும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு குடிதண்ணீர் போத்தல் , கச்சான் , கைக்குட்டை முகக்கவசம் பழவகைகள் போ…

  3. திலீபனின் நினைவேந்தலுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் யாழில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பியராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்ட பின், கோண்டாவிலிலுள்ள சிறிசபாரத்தினத்தின் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற சென்ற கோப்பாய் பொலிஸார் சிவாஜிலிங்கத்தை கைது செய்துள்ளனர். https://www.tamilwin.com/community/01/256098?ref=home-latest

  4. விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை BharatiSeptember 13, 2020 சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் வ…

  5. உத்தேச அரசியமைப்பு யாப்பு ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினை முற்றாக நீக்கி 20 ஆவது திருத்தச் சட்டத்தின் மாற்ற வேண்டியது காலத்தின் அவசியம். இதனுடாக நிறைவான ஒரு அரசியமைப்பு அபிலாசைகளை எதிர்வரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் என பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைமை அலுவகத்தில் பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் பிரதித் தலைவரும்,யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரும் ஆகிய அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று இக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து க…

    • 3 replies
    • 783 views
  6. கிழக்கு மாகாண பிரச்சினைகள் குறித்து மெத்தடிஸ்ட் தேவாலய பாதிரியார்கள், அரச அதிகாரிகள் பிரதமருடன் பேச்சு BharatiSeptember 16, 2020 கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியார்கள் மற்றும் அரச அதிகாரிகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று அலரி மாளிகையில் கலந்துரையாடினர். கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில், கல்முனை, அம்பாறை போன்ற பிரதேசங்களின் பாடசாலை, வைத்தியசாலை, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி, ஆடை மற்றும் பிற தொழிற்சாலைகளுடன் கூடிய தொழிற்துறை நகரத்தை நிறுவுதல், தேவாலயங்களை ஒழுங்குவிதி…

  7. அம்பன் புயலினால் அழிவடைந்த நஸ்டஈடு – அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி BharatiSeptember 16, 2020 யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் அழிவடைந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த பாதிப்புக்களுக்கு நஸ்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று(16.09.2020) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய், ஊரெழு, அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்க…

  8. (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை கொண்டு எதிர் தரப்பினர் ஜனாதிபதிக்கும், பிரதமருக்குமிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முடியாது.ஜனாதிபதியுடன் ஒன்றினைந்தே அரச நிர்வாகத்தை முன்னெடுப்போம் என வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் வர்த்தமானியில் வெளியாகியுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஒரு சில குறைப்பாடுகளை கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவே வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீரனை செய்யப்பட்டுள்ளது. தவறுகளுடன் நிர்வாகத்தை முன்னெடுத்தால் அது அரசாங்கத்துக்கு…

  9. (நா.தனுஜா) இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பல்லெட் வெளியிட்டிருக்கும் கருத்து தொடர்பில் சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையின் அண்மைய நகர்வுகள் மிகவும் எதிர்மறையான போக்கை வெளிப்படுத்தி நிற்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். எனினும்…

  10. 1 இலட்சம் KM வீதி நிர்மாணப் பணிகள் 2024 இல் நிறைவு! ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024 இல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும். போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்புள்ள காரணமாக வினைத்திறனானதும் உயர் தரத்துடனானதுமான வீதி முறைமை ஒன்றை மக்களுக்கு வழங்குவதற்கு ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய மற்றும் உள் வீதிகளை நிர்ம…

  11. ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் விவகாரம் குறித்து ஐ.நா. கடும் விசனம்! (நா.தனுஜா) ஊடகவியலாளர் தரிஷா பாஸ்டியனை இலக்குவைத்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் கடும் விசனமளிப்பதாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐவர் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்கள். 'சண்டே ஒப்சேவர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளருமான தரிஷா பாஸ்டியனின் மடிக்கணினி குற்றவிசாரணைப் பிரிவினரால் கையப்படுத்தப்பட்டமை, அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை உள்ளடங்கலாக அவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் …

  12. 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்…

  13. சிறிலங்கா அரசு வெள்ளை வானை இனி அனுப்ப முடியாது – ஜஸ்மின் சூக்கா போர் முடிவடைந்த பின்னர் ஒருதசாப்த காலத்திற்கும் மேலாக போரில் தமது உடன் பிறப்புக்கள் காணாமற்போன தமிழ் இளைஞர்கள் உண்மையைக் கேட்டதற்காக ஒரு பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கின்றார்கள்’ எனவும் சர்வதேச காணாமலாக்கப்பட் டோர் தினத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சூக்கா கூறியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாதவது:- தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மட்டும் அறிய விரும்பியவர்கள் மீது இலங்கை அரசானது வெள்ளை வானை அனுப்பி துன்புறுத்துவதை தொடரமுடியாது என காணாமற்போனவர்களுக்கான இந்த சர்வதேச நாளில் நாம் இலங்கை…

  14. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார். ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து 1987ம் ஆண்டில் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பூசா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் கைதிகள் தொடர்பில் இன்றைய தினம் கண்டியில் வைத்து கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… “பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் மிகப் பெரிய குற்றவாளிகளாவர். இந்தக் கைதிகளின் கோரிக்…

  15. இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகள் கடும் விமர்சனம்.! "இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்கச் செயற்பாடுகளில் எமக்குத் துளியளவும் நம்பிக்கையில்லை." - இவ்வாறு இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்துக்குப் பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 அமர்வில் குறித்த நாடுகள் இதனைத் தெரிவித்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளைக் கருத்தில் எடுத்துள்ளோம் எனவும் அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. கனடா, ஜேர்மனி, பிரிட்ட ன், வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் மேற்கண்டவாறு க…

  16. தேங்காயின் விலை 100 ரூபாய்! September 15, 202001 Share0 அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 85 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம…

    • 7 replies
    • 912 views
  17. 20 ஆவது திருத்தத்தில் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாட முடியும் – நாமல்! 20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சர் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியுமா, முடியாதா எனும் விடயத்தை கொள்கை ரீதியாக தீர்மானிப்பதே சிறந்தது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://athavannews.com/20-ஆவது-திருத்தத்தில்-சந்த/

  18. மட்டக்களப்பில் பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆய்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை பெரும்போக நெற்செய்கை 18,399 ஏக்கரில் செய்கை பண்ணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான விவசாய மீளாய்வுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,விவசாய, நீர்பாசன திணைக்களங்களின் பணிப்பாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர். போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நவகிரி…

  19. கனேடிய தூதுவரிடம் சாணக்கியன் முன்வைத்த மூன்று கோரிக்கைகள் BharatiSeptember 15, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் இடம் மூன்று முக்கிய கோரிக் முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியிலுள்ள இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு மூன்று கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான சர்வதேச பார்வையினை மேலும் வலுப்படுத்த வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் பிரச…

  20. யாழ் மாவட்ட சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ் மாவட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளால் அமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் கொண்டுவரப்பட்டது. அதற்கமைய வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் விற்பனைக்கு கொண்ட…

  21. நாட்டில் செயற்கை முட்டைகள் – உடன் முறையிடுமாறு கோரிக்கை! செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். https://newuthayan.com/நாட்டில்-செயற்கை/

  22. கருணாவை நம்பினால் மீண்டும் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள்- தவராசா கலையரசன் கருணாவை இனியும் நம்பினால் அம்பாறை மாவட்ட தமிழர்கள் அழிக்கப்படுவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். தொன்மையான பூர்வீக நிலம், கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற…

  23. பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினருக்கு குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது. இரசாயனத் தாக்கம் தொடர்பிலும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இரசாயனக் கழிவுகளின் வெளியேறும் போது சூழலுக்கு ஏற்படும் பாதகம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. பரந்தனில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் அமைய வேண்டும் எனவும் மக்களால் சுட்டிக் காட்டப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துரைக்கும் போது- எமது மக்களுக…

  24. 13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை- கெஹெலிய 13வது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமிழ்தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின்பிரதிநிதிகள் என தெரிவிப்பதுவழமை ஆனால்இனிமேல் அவர்கள் அவ்வாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார். மிகசிறிய எண்ணிக்கையிலானவர்களே இனப்பிரச்சினை குறித்து பேசுகின்றனர் பொருளாதார தீர்வுகளே தேவையாக காணப்படுகின்றன. வடக்குகிழக்கிலிருந்து சமீபத்தைய தேர்தல்கள் மூலம் 11 பேர்நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் மக்கள் தமது நீர்ப்பாசன…

  25. 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கும் முயற்சியில் இலங்கை: விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரங்களைக் கையாளுவதற்காக, இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை நியமிக்க இந்தியா தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட அமைதி உடன்பாட்டுக்கு அமையவே, 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவுள்ளதாக கூறிவருகிறது. இதையடுத்தே, இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது திருத்தச் சட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.