ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142936 topics in this forum
-
Published by T Yuwaraj on 2022-02-09 17:47:37 கொவிட் தொற்று நிலைமை காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முகக்கவச கொள்வனவிற்காக 18,000 கோடிக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடுசெய்ய முடியாது நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் முகக்கவச கொள்வனவிற்காக நாட்டு மக்கள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் முகக்கவசங்களின் விலைகளை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது …
-
- 1 reply
- 241 views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படுமென்று சர்வதேசத்திற்கு இலங்கை அரசு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்று வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை' என்றார். 'ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் அச்சமி…
-
- 4 replies
- 536 views
-
-
செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:21 | கோகுலவதனன், வவுனியா தமிழர் தாயகத்தில் எண்ணை அகழிவில் ரஸ்ய நிறுவனம் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் எண்ணெய் வளத்தை அபகரிக்க சிறீலங்கா அரசு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பல நாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய் படிமங்கள் உள்ளதாக கூறப்படும் பகுதிகளை குத்தகைக்கு விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இறுதியாக ரஸ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கஸ்பிரோமிற்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழும் அனுமதியை வழங்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சீனா இந்தியா போன்றவை தமக்கான அகழ்வுப் பகுதிகளை வரையறுத்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது ரஸ்யாவும் அதில் இணைந்துள்ளது. முன்னர் …
-
- 2 replies
- 868 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு வயதில் முதிர்ச்சி வந்த போதிலும் அரசியலில் முதிர்ச்சி வரவில்லை என பிள்ளையான் தெரிவித்திருக்கிறார். பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்த பிள்ளையான் நிருபர்களிடம் பேசும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து தாம் சம்பந்தனுடனும் பேசியதாகவும் எனினும் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் கொள்கை ரீதியாக மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருந்ததாகவும் பிள்ளையான் குறிப்பிட்டார். அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார் SOURCE : http://www.eelamweb.com/
-
- 5 replies
- 1.2k views
-
-
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் காணாமற்போன ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப்பெண்கள் ஆகியோரை மீட்டுத் தருமாறு கோரியும், காணாமற்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் இம்மாத இறுதியில் கொழும்பில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் ஜனநாயக ரீதியில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் நேற்று மாலை "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் ஊடகவியலாளர…
-
- 0 replies
- 380 views
-
-
நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊதிடம் (Faisal bin Farhan Al Saud) தெரிவித்தார். சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன் நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். கொவிட…
-
- 0 replies
- 197 views
-
-
புதன், மார்ச் 3, 2010 22:05 | நிருபர் கயல்விழி சிறிலங்காவிற்கு இராணுவத் தளபாடங்கள் அன்பளிப்பு. சிறிலங்கா இராணுவத்துக்கு சீன அரசாங்கம் இராணுவத் தளபாடங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த இராணுவத் தளபாடங்களை இலங்கை அரசிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை கொழும்பில் இலங்கை பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் யங் சூபிங், இராணுவ தளபாடங்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். அதேவேளை சீனா வழங்கியுள்ள இராணுவ தளபாட உதவிகளில் …
-
- 1 reply
- 624 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சர்வதேச போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளிற்கு, இலங்கையின் வடகடற்பரப்பினை, உயர்மட்ட செல்வாக்கு பெற்ற குழு ஒன்று பயன்படுத தொடங்கியுள்ளமை தொடர்பில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலிருந்து; மன்னார் கடற்பரப்பினூடாகவே கடந்த காலங்கிளில் இத்தகைய கடத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும் அந்நடவடிக்கைகள் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாகி உள்ளதையடுத்து இப்போ ஓரளவுமட்டுப்பட்டுள்ளது. இதனையடுத்தே தற்போது வடமராட்சியின் கடற்கரையினை உள்ளடக்கி கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. குறிப்பாக இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன்பிடியினைப் பயன்படுத்தியே மீனவர்கள் போன்…
-
- 0 replies
- 282 views
-
-
முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன்: ஐ.நாவில் ஜனாதிபதி மைத்திரி ஆட்சிக்கு வந்த தலைவர், அரசியலமைப்புக்கமைய அளவற்ற அதிகாரங்களுடன் ஆட்சியில் இருக்கும்போது அந்த அதிகாரங்களை மீள ஒப்படைத்த அரச தலைவரென்ற ரீதியில் எனது நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் அதிகாரத்தை கைவிடுவது தொடர்பான முன்மாதிரியை நான் வழங்கியுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள்…
-
- 2 replies
- 498 views
-
-
சாப்பாடு இல்லை.. குழந்தைக்கு பால் கூட இல்லை.. தனுஷ்கோடிக்கு அகதிகளாக வரும் இலங்கை மக்கள்.. https://tamil.oneindia.com/ இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. …
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஜெனீவாவிற்கு விஜயம் செய்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளில் காணாமல் போதல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஆனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெனீவாவிற்கு தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாகாணசபையில் ஆனந்தி சசிதரன் யோசனைத் திட்டமொன்றை முன்வைத்திருந்தார். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவும், காணாமல் போனவர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாக…
-
- 0 replies
- 364 views
-
-
விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை நிர்வாகம் தமிழ் மக்களின் விடயங்களில் அக்கறையும், ஆற்றலும் அற்றவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா – தேக்கவத்தையில் அமைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாய…
-
- 0 replies
- 467 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பொதுகூட்டம் இன்று மூதூரில் திருமலை நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 gajen தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” திருகோணமலை மாவட்டத்துக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளி கிழமை காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட உள்ளதாக, திருக்கோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் …
-
- 4 replies
- 415 views
-
-
இராணுவ உடையுடன் வெள்ளை வானில் ஒருவரை கடத்திச் சென்று 350 இலட்சம் ரூபாகப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை - செட்டியார்தெரு சாரங்கா ஜூவலரிக்கு அருகில் கடந்த ஆண்டு ஓகஸ்ட்16ம் திகதி இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று குருநாகல் பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மூன்று ரவைகள், கப்பம் பெற்ற பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட வான், வாரியபொல பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிள் என்பவை மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் ப…
-
- 1 reply
- 572 views
-
-
இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் (ஆ.பிரபுராவ் ) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியி…
-
- 0 replies
- 229 views
-
-
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை... ஏற்பாரா, ஜனாதிபதி? – இறுதி முடிவு இன்று! அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை ) ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை நேற்றிரவு பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன உறுதிபடுத்தியிருந்தார். மேலும் அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு, பிரதமரும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1274671
-
- 0 replies
- 146 views
-
-
பேராதனை பல்கலைக்கழக வளாக காட்டுப் பகுதிக்குள் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இடம் பெற்ற பகிடிவதை சம்பவத்தின் பிரதான சாட்சியாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு க.பொ.த உ. த பரீட்சையில் தோற்றி 2011 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்துக்கு நுழைந்த குறித்த மாணவன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் பாலியில் துன்புறுத்தல் என்பவை தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் பிரதான சாட்சியாக இவர் இருந்துள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=4196#sthash.LMjMJ1RA.dpuf
-
- 0 replies
- 342 views
-
-
மக்கள் வரிசையாக நிற்கும் நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உணர்ச்சிகளாலோ அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகள் மூலமோ இந்த நிலைமையை மாற்ற முடியாது எனவும் அறிவு ரீதியாக அனைவரும் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், எமது…
-
- 2 replies
- 292 views
-
-
புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்? விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது பாலியல் வல்லுறவு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின. இவ்விதம் சமூகச…
-
- 9 replies
- 1k views
-
-
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய தலமையில் நடந்த போராட்டம் நியாமானது: - இனமான நடிகர் சத்யராஜ் [Friday, 2014-02-28 13:45:14] " எமது மாவீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகக் கூடாது .எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் . எமக்கான நீதியை நாம் நிலை நாட்ட எமது உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என இனமான நடிகர் சத்யராஜ் தெரிவித்தள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104595&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 309 views
-
-
வெவ்வேறு சம்பவங்களில் பதினாறு பேர் கைது; கடற்படையினர் நடவடிக்கை நாட்டின் பல பகுதிகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேகத்தின் பேரில் வெவ்வேறு நடவடிக்கைகளில் பதினாறு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கிழக்குப் பிராந்தியத்தின் புறாத் தீவுப் பகுதியில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதின்மூன்று பேரை கடந்த நான்காம் திகதி கடற்படையினர் கைது செய்தனர். மீன்பிடிக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகள் மற்றும் அனுமதிக்கப்படாத வலைகள் இரண்டையும் பறிமுதல் செய்த கடற்படையினர், அவற்றை நிலாவெளி வனவிலங்கு அதிகார சபையில் ஏல விற்பனைக்காகக் கையளித்தனர். இதேவேளை, மற்றொரு சம்பவத்தில், கடற்படையினருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்ப…
-
- 0 replies
- 289 views
-
-
வருகின்ற திங்கள் கூட்டமைப்பு - இந்திய தூதர் சந்திப்பு வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை நண்பகல் இருதரப்பினரும் பரஸ்பரம் நேரில் சந்தித்துப் பேசஉள்ளார்கள். இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இது தொடர்பாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரும் இச்சந்திப்பில் கலந்துகொள்கின்றார்கள். கடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினருக்கும், இந்தியத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற …
-
- 3 replies
- 621 views
-
-
இராணுவமா? கடற்படையா? பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம்! ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல் அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கெதிரான விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று …
-
- 0 replies
- 483 views
-
-
மக்கள் எம்மோடு இருக்கும் வரை எம்மை யாரும் அசைக்க முடியாது! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை. [Wednesday, 2014-03-12 07:48:34] நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரத்மலானையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 2016 வரை மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனினும், எச்சந்தர்ப்பத்திலும் நாம் தேர்தல் நடத்த தயாராகவே உள்ளோம். தேர்தலுக்கு நாம் பயந்தவர்களல்ல. எதனையும் நாம் மேற்கொள்வது சர்வதேச அழுத்தங்களுக்குப் பயந்து அல்ல, சர்வதேச அழுத்தங்களுக்கு அன்றி மக்கள் விருப்பத்துக்கு நாம் எப்போதும் தலைவணங்குகிறோம். செய்வதற்கும் சொ…
-
- 3 replies
- 301 views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு:- மன்னாரில் இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள்-கண்டுபிடிக்க உதவுமாறும் கோரிக்கை! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மன்னார்:- படங்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும் அப்பன் என அழைக்கப்படும் நவனீதன் என்பவர்களே தேடப்படுவதாக சுவரொட்டிகளில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்குறித்த நபர்கள் தொடர்பில் தகவல்கள் தருவோருக்கு ஐந்து இலட்சம் ரூபாவினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்…
-
- 0 replies
- 381 views
-