Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு? ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது மேலும் இந்த திட்டத…

    • 9 replies
    • 1.1k views
  2. மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 9.5மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் சவூதி அரேபிய நாட்டு தனவந்தரின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ…

  3. இன அழிப்பு போரின் போது கொல்லப்பட்டோர் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு கோரிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு, மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழு களத்தில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழு ஆகியன தமது இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் வசிப்ப…

    • 0 replies
    • 397 views
  4. வெள்ளி 13-07-2007 22:52 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்க அரசை, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடுமாறு "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு இலங்கை இனப்பிரச்சினையில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான "வொசிங்ரன் டைம்ஸ்" அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினை பற்றி நேற்றைய தனது பதிப்பில் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ள "வொசிங்ரன் டைம்ஸ்", சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா, ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பிற்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் "வொசிங்ரன் டைம்ஸ்" கோரிக்கை விடுத்திருக்கின்றது. pathivu

  5. மகிந்தராஜபக் தேர்லில் போட்டியிடுவாராக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே எதிர்வரும் புதன் கிழமை மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறவிருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் கூறியுள்ளனர். அதேநேரம், மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலில் பிரதம வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. http://www.pathivu.com/news/…

    • 0 replies
    • 865 views
  6. ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்தும் உதவ தயார் – சீனா! இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ந்தும் உதவ தயார் என சீனா தெரிவித்துள்ளது. அந்தவகையில் பரஸ்பர நன்மையளிக்கும் திட்டங்களின் மூலம் இந்த நிதியை வழங்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சின் நம்பதகுந்த வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் நிதி அமைச்சோ, கொழும்பில் உள்ள சீனத் தூதரகமோ இது தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிக்கவில்லை. எனினும், இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராகவே உள்ளது என்று சீன தூதரக, அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ சொங், தெரிவித்துள்ளார். அனைத்து நிதியுதவிகளும், இலங்கையால் கோரப்பட வேண்டும், சீனாவால் முன்மொழியப்படுவதில்லை, இலங்கையில் எந்தவொரு …

  7. அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்- இம்யுனோகுளோபலின் விநியோகஸ்தர் நீதிமன்றில் தெரிவித்தார் 28 DEC, 2023 | 02:43 PM தரம் குறைந்த இம்யுனோகுளோபலின் விவகாரத்தில் தொடர்புபட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பிரதான சந்தேகநபரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முன்னாள் சுகாதார அமைச்சரின் உத்தரவை பின்பற்றினார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார் நான் செய்தேன் என தனது கட்சிக்காரர் தெரிவித்தார் என சட்டத்தரணிகுறிப்பிட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சட்டத்தரணி ஜாலியசமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஒரு மில்லியன் ரூபாய் பொதுபணத்தில் இடம்பெற்ற இந்த மோசடி குறித்து முன்னாள் சுகா…

  8. அரசு எங்களைப் புறந்தள்ளி நடந்தால் புலிகளை அழித்து ஒடுக்க முடியாது தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருப்போம் என்கிறார் கருணா [sunday July 22 2007 05:50:38 AM GMT] [சூரியன்] கிழக்கு மாகாணத்தில் எமக்கு மக்கள் ஆதரவு பரந்தளவில் இருக்கிறது. எங்களிடம் ஆலோசனை பெறாமல் கிழக்கு மாகா ணத்தில் ஏதாவது திட்டங்களை அரசு மேற் கொள்ளுமாக இருந்தால். விடுதலைப்புலி களை முற்றாக அழிப்பதில் அரசு பின்ன டைவையே சந்திக்கும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா தெரிவிக்கின்றார். நேற்று பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கிழக்கு மாகாணத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் எங்களுடைய அரசியல் அலுவலகங்களைத் திறந…

  9. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டேலி இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து முற்று முழுதாக இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டுமென எவரும் கோரிக்கை விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட வேண்டுமென்றே வலியுறுத்தப்படுவதாகத் தெரவித்துள்ளார். அதிகளவில் வடக்கில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதன…

    • 0 replies
    • 330 views
  10. Published By: VISHNU 10 JAN, 2024 | 07:54 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணீரூற்று முள்ளியவளை பகுதியில் புடவையகத்தோடு கூடிய இலத்திரனியல் பொருட்கள் திருத்தகம் ஒன்றிலேயே புதன்கிழமை (10) அதிகாலை தீ பரவியுள்ளது. புதன்கிழமை (10) அதிகாலை திடீரென தீ ஏற்ப்பட்டதை அவதானித்த அருகில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூடி குறித்த வர்த்தகநிலையத்தில் பரவிய தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இருப்பினும் குறித்த தீப்பரவல் காரணமாக வர்த்தகநிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் முற்று முழுதாக எரிந்து அழிவடைந்துள்ளது. பல இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு அழிவடைந்துள்…

  11. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் நேற்று இரவு விடுக்கப்பட்ட அறிவித்தலின்படி எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதுதொடர்பில் சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன நிதி விவகாரங்களுக்கு பொறுப்பான லலித் கருணாரட்ண கொழும்பு ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில் பெற்றோலின் விலை ரூ6 ஆலும் டீசல் ரூ4 ஆலும் மண்ணெய் ரூ1 ஆலும் ஓயில் ரூ4 ஆலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி பெற்றோல் ரூ 117 ஆகவும் டீசல் ரூபா 75 ஆகவும் மண்ணெய் ரூ68 ஆகவும் விற்கப்படும் என இலங்கை இந்திய ஓயில் கூட்டுத்தாபன அதிபர் கே.ராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பதிவு

    • 1 reply
    • 1k views
  12. மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி உரித்து பதிவுக்கான மண்ணின் மகிமை வேலைத் திட்டம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் இந்ததிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாணக் காணி ஆணையாளர் தெரிவித்துள்ளார். நில அளவைத் திணைக்களம், காணி நிர்ணய திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம், பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து மண்ணின் மகிமை வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன. இதன்போது நில அளவைத் திணைக்களத்தினால் இலவசமாக நில அளவை செய்யப்பட்டு காணியின் உரித்து நிர்ணயம் செய்யப்பட்டு காணிக்கான உரித்துச் சான்றிதழ் ப…

  13. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்; முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தடை உத்தரவு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை தொடர்பினில் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவிக்கையினில் கடந்த 11 ம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு…

    • 3 replies
    • 721 views
  14. சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது ம…

  15. யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புக்களை நடத்துவதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த பொலிஸ் உயரதிகாரி இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொலிஸாருக்கு கிழமை நாட்களில் சிங்கள மொழி வகுப்புக்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நடைபெற்றுவருகிறது. வழமையாக நடைபெறும் சிங்கள மொழி கற்பிற்கும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தமிழ் பெண் பொலிஸாருடன் பாலியல் ரீதியில் துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் பொலிஸார் தனது பெற்றோரிடம் மேலதிகாரியின் பாலியல் நடத்தை சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார்…

  16. புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள், தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “புங்குடுதீவு எனது சொந்த இடம். வித்தியா கொலையை அடுத்து நிலைமையை மதிப்பீடு செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களில் ஒருவரான, சுவிற்சர்லாந்தில் வந்த எம்.குமார் என்பவரின் தவறான செயற்பாடுகள் குறித்து நான் அறிவேன். குறித்த சந்தேகநபர் புங்குடுதீவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் இங்கு வந்தபோதெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே பெரிய பிரச்ச…

  17. இளைஞனைத் தாக்கிக் காலை முறித்த பொலிஸார்: யாழில் சம்பவம். இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் வழங்கியுள்ள முறைப்பாட்டில்” நான் சைக்கிளில் புத்தூருக்கு சென்று கொண்டிருந்தபோது சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் வந்த அச்சுவேலி பொலிஸார் என்னை நிற்குமாறு கூறினர். நான், ஏன் எனக் கேட்ட போது எனது முகத்தில் தாக்கிவிட்டு ஏன் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வரவில்லை எனக் கேட்டார்கள். அப்போது நான் காய்ச்சல் காரணமாக வரவில்லை எனத் தெரிவிக்க மீண்டும் என்னை தாக்கினார்கள். நான் கீழே விழுந்த நிலையில் மீண்டும் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்…

  18. சனி 11-08-2007 00:42 மணி தமிழீழம் [மயூரன்] கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்: ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் - லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கிழக்கில் செயல்பட்டு வரும் கருணா குழுவினர் ஆயுதங்களை வைத்திருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. கருணா குழுவினருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமானது என ஸ்ரீலங்காவின் ஊடகத்துறை அமைச்ர் லக்ஸ்மன் யாப்பா அபேயவாத்ன தெரிவித்துள்ளார். இது போன்று முன்னர் வாசுதேவ நாணய்காரவும் ஜே.வி.பியனரும் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐநாவின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ஸ் கருணா குழுவிடம் இர…

  19. பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவர் அவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். லியாம் பொக்கஸ் இலங்கை சென்ற ஒரு தருணத்தில் வெரிட்டியும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவியும் சேரந்து எற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வில் தாம் கலந்து கொண்டதாகவும் அது அர…

  20. கொக்கிளாயில் தமிழரின் காணியில் விகாரை கட்டும் படையினர்! [Thursday 2015-05-28 19:00] முல்லைத்தீவு, கொக்கிளாய் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'பொது மக்களின் தகவலையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற நேரில் ஆராய்ந்தேன். முல்லைத்தீவு, கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் அபகரித்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த அத்துமீறல் முன்னெடுக்கப்படுகின்றது. விகாரை அம…

  21. சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம் இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது. அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு: மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான். மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக…

  22. இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும்:-ரோபோ. இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும்- ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ளஅவர்- பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அனைத்து நாடுகளும் ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக …

  23. விக்னேஸ்வரனின் ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது! February 13, 2019 வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கினை தக்கல் செய்திருந்தார். அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த…

  24. Published By: DIGITAL DESK 3 21 FEB, 2024 | 05:17 PM நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக சூரிய ஒளியில் அதிகமாக இருப்பதை தவிர்க்குமாறும், அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்துள்ளதாவது, செயற்கை குளிர்பானங்களை பருகுவதை தவிர்த்து, நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம். அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.