ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142925 topics in this forum
-
20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9 பேர் ஆதரவு September 6, 2020 எதிர்க்கட்சியை சேர்ந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையத் தீர்மானித்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏற்கனவே இது தொடர்பாகக் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. http://thinakkural.lk/article/…
-
- 0 replies
- 500 views
-
-
புதையல் தோண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் கைது வவுனியா- பூவரசங்குளம், அரபாநகர் பகுதியில் புதையல்தோண்ட முற்பட்ட 8 பேரை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) காலை, அரபாநகர் பகுதியிலுள்ள காணியொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தகவலுக்கமைய அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டபோதே குறித்த 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தும் மண்வெட்டி உட்பட சிலபொருட்களையும் இரண்டு சொகுச…
-
- 0 replies
- 430 views
-
-
13 மற்றும் 19 நாட்டிற்கு பிடித்த சாபக்கேடு : இந்தியாவை மீறி புதிய அரசியலமைப்பில் 13க்கு முடிவு கட்டுவதில் உறுதி.! "அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் இந்த நாட்டுக்கு பிடித்த சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்." - இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புதிய அரசமைப்பில் 13 ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வ…
-
- 1 reply
- 447 views
-
-
முட்டைக்கான விலை நிர்ணயம் ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் தீர்மானித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் குறிப்பிட்டுள்ளார். இதன்படி வெள்ளை முட்டையின் மொத்த விலை 19.50 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/முட்டைக்கான-விலை…
-
- 0 replies
- 640 views
-
-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை September 4, 2020 மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு எண்ணெய்க் கப்பல் தீப்பற்றி எரிகின்ற நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு இன்று(4) அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்தது. மேலும் இவ்வெச்சரிக்கை திருக்கோவில்இ தம்பிலுவில், உமிரி, பொத்துவில் ,கல்முனை,ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேச கடற்பிராந்தியத்தில் வாழும் மக்களை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே …
-
- 4 replies
- 764 views
-
-
13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது- இந்திய தூதரகம் 13ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர் உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தில் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர். அதேபோன்று அரசாங்கத்தில் இன்னொரு தரப்பினர், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நீக்குதவதே நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என வலியுறுத்தி வருகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சிறுபான்மைக்கட்சிகள…
-
- 1 reply
- 538 views
-
-
வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? – விக்கினேஸ்வரன் எங்கள் வரலாற்றை பற்றி சரியாகத் தெரியாத எமது தலைவர்கள் எப்படி சிங்களத் தலைவர்களுடன் பேச முடியும்? அல்லது அதைப் பேசத் தயங்குபவர்களால் எப்படி இனப்பிரச்சினையை தீர்த்து வைக்க முடியும்? என கிளிநொச்சியில் இன்று (5) இடம்பெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் அங்கு ஆற்றிய உரை வருமாறு: எனது அன்புக்குரிய கிளிநொச்சி மாவட்ட மக்களே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை ஓர் உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்…
-
- 1 reply
- 448 views
-
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள…
-
- 15 replies
- 2k views
-
-
எனது அன்புக்குரிய கிளிநொச்சி மாவட்ட மக்களே. கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை ஓர் உறுப்பினராக தேர்வு செய்த மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இன்று உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டி என்னை மனம் நெகிழச் செய்துவிட்டீர்கள். ஆனாலும் என்னைப் பாராளுமன்றம் அனுப்பி எனது சுமையைக் கூட்டிவிட்டீர்கள்! தனித்து பயணிப்பது எனக்கொரு புதிய அனுபவமாக உள்ளது. அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பதின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணர்கின்றேன். கட்சியில் பலரின் உதவி இருந்தன. பாராளுமன்றமோ தனி மனிதப் பிரயாணமாக அமைந்துவிட்டது எனக்கு. ஆனால் என் கடமையைச் செய்ய வேண்டும் என்ற பேரவா என்னை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது. “கடமையை செய் பலனை எதிர்பார…
-
- 3 replies
- 695 views
-
-
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நி…
-
- 31 replies
- 2.6k views
-
-
20 வது திருத்தம் | சகோதரர்களிடையே பிணக்கு வலுக்கிறது – முன்னணி சோசலிஸ்ட் கட்சி 20 வது திருத்தம் சர்வாதிகாரத்தைத் தோற்றுவித்திருக்கிறது – சமாகி ஜன பலவேகய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 வது திருத்த வரைவிலுள்ள முக்கிய அம்சங்கள்: ஜனாதிபதி பதவி, பாராளுமன்றம் ஆகியவற்றின் தவணை 5 வருடங்கள்; ஜனாதிபதி ஒருவர் இரணடு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாது; தகவல் அறிவதற்கான உரிமை – இவைகளில் மாற்றமில்லை அமைச்சர்களையும், உதவியமைச்சர்களையும் ஜனாதிபதி நியமிப்பார், பிரதமரின் ஆலோசனையைப் ப…
-
- 2 replies
- 541 views
-
-
வரலாறு மீள்கிறது. முதலில் பேரவலமாக; மீண்டும் கேலிக்கூத்தாக.. M. A. Sumanthiran 20 ஆம் திருத்தச்சட்டமூலத்தின் வர்த்தமானி வெளியான நிலையில் சற்று வரலாற்றைப் பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமானது. 18 ஆம் திருத்தச்சட்டம் 2010 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட போது எம். ஏ. சுமந்திரன் பாராளுமன்ற விவாதத்தில் எதிர்த்தரப்பின் சார்பில் முதலுரையை ஆற்றியிருந்தார். இந்த வரலாற்று முக்கியதுவமிக்க உரையில் 1…
-
- 0 replies
- 461 views
-
-
தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள், கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜூக்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு என்ற கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரிக்க பொலிசார் முற்பட்ட போது, அந்த நபர் பொ…
-
- 0 replies
- 436 views
-
-
’மட்டு. பல்கலைக்கழகத்தை மீட்பேன்’ - ஹிஸ்புல்லாஹ் (எச்.எம்.எம்.பர்ஸான்) கடந்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொள்ள தன்னால் முடிந்த சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விரைவில் மட்டு. புனானையிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, அமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இருக்கின்ற மனோநிலையிலேயே தான் தற்போதும் இருப்பதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் தான் தோல்வியை தழுவியதாக கருதவில்லை எனத் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவ…
-
- 7 replies
- 698 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம் கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற…
-
- 6 replies
- 703 views
-
-
வயலுக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை அடித்து துரத்திய பிக்கு.! திருகோணமலை – குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல் பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை, பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதை பொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இனி இறங்கக்கூடாது. அப்படி இறங்கினால் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார். மிரட்டி…
-
- 7 replies
- 752 views
-
-
புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமியுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் மனோ கோரிக்கை September 5, 2020 புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்குமாறு தமுகூ தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இது தொடர்பில் இன்று காலை அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ கணேசன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ஒரு குழுவை ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நீங்கள் நியமித்துள்ளீர்கள். இதை நாங்கள் சாதகமாகவே…
-
- 0 replies
- 475 views
-
-
தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய சிங்கள நபர் கைது: கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரனை September 5, 2020 தமிழகத்துக்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்குள் போதை பொருட்கள்,கடத்தல் தங்கம் அல்லது சட்ட விரோத ஊடுருவல் போன்ற சட்ட விரோத நடவடிக்கை நடைபெற உள்ளதாக ராமேஸ்வரம் கடலோர காவல் குழம ஆய்வாளர் கனகராஜ்க்கு கிடைத்த ரகசிய தகவலயடுத்து தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்ஆபோத…
-
- 0 replies
- 345 views
-
-
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபை உள்ளடக்கிய புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது. குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் இடம்பெற்றிருந்த பல விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் புதிய அரசால் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அதன் முதலாவது வரைபு தற்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கேட்கப்பட்ட போது அதனை ஆராய்ந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் …
-
- 2 replies
- 530 views
-
-
(நா.தனுஜா) மஹிந்த ராஜபக்ஷ 1978 ஆம் ஆண்டில் எதிர்ப்பை வெளியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விரும்பத்தகாத கூறுகளைக்கொண்ட வலுவான நிறைவேற்றதிகாரப் பதவி, தற்போது கோத்தபாய ராஜபக்ஷவினால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்ற பெயரில் மீள அறிமுகம் செய்யப்படுகின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகார…
-
- 1 reply
- 386 views
-
-
(நா.தனுஜா) அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார். அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழ…
-
- 1 reply
- 520 views
-
-
கட்டுவன் பகுதியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்தவர். குழந்தைகள் நால்வரும் முழுமையான ஆரோக்கியத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை பராமரிப்பு பிரிவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களை வளர்ப்பதில் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகப் பெற்றோர் தெரிவித்தனர். அதனால் தமக்கு அரச உதவி வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பெற்றோர் தெரிவிக்கையில், “நான்கு குழந்தைகளையும் வளர்ப்பதில் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ வல்லுநர் சிவலிங்க…
-
- 0 replies
- 424 views
-
-
’உலகின் மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்படலாம்’ இலங்கைக்குக் கிழக்கே சங்கமன்கந்தை பிரதேசத்திலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் தீப்பற்றிய கப்பல், இன்று (05) அதிகாலை 5 மணியளவில், கரையை 25 கடல்மைல் தூரம் அண்மித்துள்ளது. இது, இந்த வலயத்துக்குள் மாத்திரமல்ல, இந்த உலகத்திலேயே ஏற்படக்கூடிய மிகப்பெறிய சுற்றாடல் அழிவாகவே பார்க்க முடியுமென்றும் அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை உருவெடுத்துள்ளது என்றும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார். http://www.tamilm…
-
- 3 replies
- 654 views
- 1 follower
-
-
(செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு சீர் திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியினால் ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, சர்வாதிகார செயற்பாடுகளை தடுப்பதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்பட்டது. இதனை நீக்குவதால் மீண்டும் அந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கும். தனி நபரொருவரிடத்தில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அரசாங்கம் கூறுவதைப…
-
- 0 replies
- 297 views
-
-
சரணடைந்தவர்களை இராணுவம் கொன்றது; உறுதியாகக் கூறுகின்றார் எரிக் சொல்ஹெய்ம் “பிரபாகரனின் 12 வயது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். இதில் எமக்கு மிக மிக உறுதியான சந்தேகம் உண்டு. இது இலங்கை இராணுவத்தின் பொறுப்பற்ற மிகத் தீய செயலாகும். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை இராணுவம் ஏன் சரணடைய வந்தவர்களை ஏற்று அவர்களை நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தாமல் கொலை செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான முன்னாள் விசேட தூதுவரும், 2002 – 2006 காலப்பகுதியில் புலிகள் – அரசு சமாதானப் பேச்சை முன்னின்று நடத்தியவருமான எரிக் சொல்ஹெய்ம். இந்தியாவின் ‘வியோன்’ சனல் என்று அழைக்கப்படும் ‘வேர்ள்ட் இஸ் வன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு …
-
- 7 replies
- 891 views
-