Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இழுத்தடிப்பு மூலம் அபிலாசைகளை நீர்த்து போக செய்ய முடியாது – கஜேந்திரன் தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது நாடாளுமன்ற கன்னியுரையில் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி மற்றவையை மழுங்கடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (27) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “1833ம் ஆண்டு பிரித்தானியர்களால் நிர்வாக …

  2. Share0 தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (21) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இல்லத்தில் மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் விசேடமாக நடந்து முடிந்த தேர்தலின் பின்னரான தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துதல்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என வலியுறுத்தினார். சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட…

    • 7 replies
    • 968 views
  3. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது, பயங்கரவாதிகள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கை இராணுவம் கண் மூடித்தனமாக குண்டு வீச்சுகள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதில் பொதுமக்கள் உயிரிழந்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெம் தெரிவித்திருந்தார். எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பதிவொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் பி…

  4. பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (27) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வினோதன் உட்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பி்ரகாரம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். என…

  5. எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..! அமைதியாக நடவுங்கள் .. ஆளுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள். மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்ப…

    • 108 replies
    • 9.3k views
  6. நிரந்தர நியமனம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் போராட்டத்தில் பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தி நேற்று (27) நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இவர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவது என தீர்மானிக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவர்கள் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய கல்லூரிகளில் தங்களுடைய பயிற்சிகளை 2018 ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்டார்கள். அப்படி நிறைவுசெய…

    • 0 replies
    • 315 views
  7. அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்கி அரசாங்கத்தைப் பாதுகாக்கவே சர்வதேசம் முற்பட்டுள்ளது என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் தொடர்பாக சர்வதேசம் நீதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் தாங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர்…

    • 0 replies
    • 261 views
  8. அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். ´பிரிக்கப்படாத, ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு. அவ்விதமான தீர்வை வழங்க அரசாங்கம் முன் வந்தால் அதற்கு பூரண ஒத்துழைப்புகளையும் வழங்குவோம். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் அதிக அக்கறையுடன் செ…

    • 0 replies
    • 334 views
  9. திருமலை செல்லும் அமெரிக்க தூதுவர் இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறார் (ஆர்.ராம்) திருகோணமலைக்கு இன்று செல்லும் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார். திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லஸ் கலந்து கொள்கின்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார். இந்த திறப்பு விழா நிகழ்வு காலை 8.45 இற்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு நிறைவடைந்தவுடன் கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள …

  10. ‘விக்கி’ உண்மையை சொன்னதால்தான் பேரினவாதிகள் கூச்சல்; கூட்டமைப்பு ஏன் மௌனம்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி August 27, 2020 வரலாற்றை திரிவு படுத்தி இலங்கையை சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்ற பேரினவாதிகள் விக்கினேஸ்வரனின் கூற்றை ஜீரணிக்க முடியாது கூச்சலிட்டு வருகின்றனர் என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று கோரிநின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று உண்மைக்கு எதிராக கோசங்கள் எழுந்தபோது மௌனித்து நிற்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 9ஆவது பாராளுமன்றத்தின் …

  11. சாம்பல்தீவு களப்பு தொடர்பாக அரசாங்க அதிபருடன் முக்கிய கலந்துரையாடல்..! திருகோணமலையில், 360 ஏக்கர் நிலப்பரப்பை வனப்பகுதியாக அறிவித்து வர்த்தமானியில் பிரசுரித்துள்ளமை தொடர்பில், திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் ச. குகதாசன் ஆகியோருக்கும் இடையே திருகோணமலைக் கச்சேரியில் நேற்று (26.08.2020)சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, தமிழ் மக்கள் பலரது உறுதியுடன் கூடிய காணிகள் உள்ளடங்குவதாகவும், எனினும் குறித்த காணிகளில் எவரும் எந்தவொரு வேலையையும் செய்யக்கூடாதென அரசாங்கம் தடை விதித்துள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையை நீக்கி, தத்தம் காணிகளில் தாம் விரும்பும் பணி…

  12. அரசியல் அமைப்பு திருத்தங்கள்- தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயமே தற்போது இலங்கை அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரி…

  13. யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் இன்று? யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் பெரும்பாலும் இன்று (27) இடம்பெறலாம் என பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் எப்ரல் மாதம் 30ஆம் திகதி, துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை தெரிவு செய்யும் வரை பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் வெற்றிடத்திற்காக ஆறுபேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூன்றுபேர் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்ட…

  14. சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் – பிரதமர் நல்ல சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசாங்கத்துடன் ஒன்றிணையுங்கள் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகொள் விடுத்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றில் இன்று (27) சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், “கடந்த பெப்ரவரி மாதத்தில் கடன்களை செலுத்துவதற்கு கோரியிருந்தேன். ஆனால் அன்று எதிர்க்கட்சி அதற்கு இடையூறு செய்தது. இதனால் தாமதல் ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் இன்று 2020ம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 2020ம் ஆண்டு செப்டெம்பரில் இருந்து டிசம்பர் வரையான நான்கு மாதங்களுக்கு அரசாங்க செலவுகளை செ…

  15. தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பது கூச்சலிடுவதால் இல்லையென்றாகாது இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “சிங்கள இலக்கியங்களும், பாளி இலக்கியங்களும் இலங்கையின் பூர்வீக மக்கள் சிங்கள மொழி பேசுகின்ற ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள…

  16. இந்தியாவில் தீவிரமாகி வரும் கொரோனா பரவலால் இலங்கைக்கும் ஆபத்து என எச்சரிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை நாட்டில் மேலும் 13 கொரோனா நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்…

  17. பலாலி விமானநிலைய அபிவிருத்திக்காக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் யாழ்ப்பாணம்- பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக, இந்திய அரசாங்கத்துடன் செய்ய எதிர்பார்த்துள்ள புரிந்தணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவையில் முன்வைத்து, அமைச்சரவையின் அனுமதியை பெறவுள்ளதாக, சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2 வாரத்துக்குள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் நேற்று (25) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், குறித்த புரிந்துணர்…

    • 2 replies
    • 620 views
  18. இந்தியாவின் அனுமதியின்றி 13 ஆவது திருத்தத்தை நீக்க முடியாது என்கின்றார் வாசுதேவ! இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13 ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்ற போதும் 13 ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்ட…

    • 2 replies
    • 549 views
  19. (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் மற்றும் கொறடா ஆகிய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நாளைதினம் ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி உத்தியோக பூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாளை ஆரம்பமாகும் இருநாள் பாராளுமன்ற அமர்வில் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்றக்குழுவின் தலைவருமான இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தனும் பங்கேற்காமையினால் பாராளுமன்றக் குழு கூட்டம் நடைபெறமாட்டாது என்று தெரியவந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு மாவட்டத்…

    • 1 reply
    • 424 views
  20. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இந்தச் செயலணிக்கு அஸ்கிரி பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்…

    • 10 replies
    • 893 views
  21. சிறப்பு அதிரடி படையினர் நல்லூரில் வழிபாடு! August 26, 2020 காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டும் யுத்தகாலத்தில் அதிரடிப் படையிலிருந்து உயிரிழந்த வீரர்களை நினைவு கூர்ந்தும் காயமடைந்து தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆசி வேண்டியும் நாடுமுழுவதும் மத வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடு இடம்பெற்றது. 1983ஆம் ஆண்டு காவல்துறை சிறப்பு அதிரடிப் படை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடமையின் போது 467 பேர் உயிரிழந்துள்ளனர். 1986ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் திக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு சிறப்பு அதிரடிப் படையினர் கொல்லப்…

  22. இலங்கையில் புகையிலை பாவனைக்குத் தடை இலங்கையில் புகையிலைச் சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். புகையிலை நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்கக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் …

  23. (செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதாக குறிப்பிட்டு 13 , 14,16,17 மற்றும் 19 ஆகிய அரசியலமைப்பு திருத்தங்களை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்க பிரஜையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் விரைவில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றது. அமெரிக்காவின் பிரஜையாக ஒருவர் அறிவிக்கப்படுவதற்கு முன்…

  24. எதிர்வரும் தேர்தலில் 8 மாகாண சபைகளை அரசாங்கம் கைப்பற்றும் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற நிலை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள், தொழில் அபிவிருத்தி, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் 08 மாகாண சபைகளை ஆளும் கட்சி கைப்பற்றும் எனவும் சிலவேளைகளில் ஒன்பது மாகாண சபைகளையும் அரசாங்கமே கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று மாலை ஜனாதிபதியின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வீச்ச…

    • 0 replies
    • 595 views
  25. மைத்திரியின் வீட்டுக்கு சென்றுள்ள விசாரணை அதிகாரிகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/Investigators-who-went-to-Maithris-house/150-254789

    • 0 replies
    • 403 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.