ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
புலிகள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார். காணாமற்போனோர் குறித்து தேட அரசாங்கம் தயா…
-
- 4 replies
- 512 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) தனது தேசிய பட்டியல் பதவிக்கு இரண்டு பேரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் குறித்து அந்த ஆங்கில ஊடகம் பேச்சாளரை கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேற்படி விடயத்தை தெரிவித்தார். அம்பாறையைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்ததோடு, அந்தப் பதவிக்கு இருவரை நியமிக்கும் முடிவும் அங்கு எடுக்கப்பட்டுள்ளதா…
-
- 1 reply
- 499 views
-
-
இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய்..! 37 பேர் இதுவரை மரணம், தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை..! எலிக்காய்ச்சல் இலங்கையில் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாக இலங்கை தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 4,554 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய்ப்பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் மட்டுமே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனால் எலிக்…
-
- 0 replies
- 297 views
-
-
35 அமைச்சுக்களின் செயலாளர்களில், ஒரு அருமைநாயகம்!!! August 25, 2020 35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்பேசும் தேசிய இனங்களில் இருந்து நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவரும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2020/149212/
-
- 0 replies
- 430 views
-
-
சம்பந்தன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் – விமல் வீரவன்ஸ திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ஸ, அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார…
-
- 4 replies
- 701 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது Aug 08, 20200 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளராக கட்சியின் செயலாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-9/
-
- 129 replies
- 10.7k views
-
-
நாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டினார். நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும் அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்…
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
வீதியால் சென்ற பெண்ணை அழைத்து தவறாக நடந்துகொண்ட இராணுவச் சிப்பாய்- முல்லைத்தீவில் பதற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை அழைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சிறிது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த குறித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மர்ம உறுப்பை காட்டி தவறாக நடந்துகொண்டதாக குறித்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் இணைந்து குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு மா…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்திய இழுவைப்படகு அச்சுறுத்தல் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்புாது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்க பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சி இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், இந்த அரசின் காலத்தில் மீண்டும் இவ்வாறான பிரச்சினை எழுந்துள்ளதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினைக்கு துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தீர்வை பெற்றுக்கொடுப்பீர்களா என அவரிடம் ஊடகவியாளல் வினவினார். குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எனக்க யாரும் தெரிவிக்கவில்லை. இவ்விடயம் தொ…
-
- 0 replies
- 354 views
-
-
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் பகுதிகளில் நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவம் பின்தங்கிய பிரதேசங்களாக காணப்படுகின்ற கோட்டைகட்டியகுளம் ஐயன்கன்குளம் தென்னியன்குளம் போன்ற பகுதிகளில் காணப்படும் பெருமளவான இயற்கை வளங்கள் நாளாந்தம் அழிக்கப்பட்டு வருகின்றன என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது இப்பகுதிகளில் உள்ள நூற்றாண்டு காலபழமை வாய்ந்த பெருமளவான காட்டுமரங்கள் கனரக இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டு அவை சட்டவிரோதமானமுறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பது பற்றித்தெரியாது என்றும் பிர…
-
- 0 replies
- 347 views
-
-
(எம்.மனோசித்ரா) சோமாலியாவைப் போன்று மாறவிருந்த இலங்கையை முறையான வேலைத்திட்டங்கள் மூலம் பாதுகாத்துள்ளோம். அரச புலனாய்வுப் பிரிவு , இராணுவ, பொலிஸ் புலனாய்வுப்பிரிவு , விஷேட அதிரடிப்படை என்பவற்றுடன் சிறைச்சாலையையும் ஒன்றிணைத்து நுட்பமாக செயற்பட்டமையால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுத்திருக்கின்றோம் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறிய அவர் , நாட்டில் பெரிய சிறைச்சாலையாகக் கருதப்படும் வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலை , ரிமான்ட் சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் தினமும் கைதொலைபேசிகளும் போதைப் பொருள் பொட்டலங்களும் சிம் அட்டைகளும் கைப்பற்றப்படுகின்றன…
-
- 0 replies
- 448 views
-
-
(நா.தனுஜா) மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஏதுவான வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு ஆதரவளித்து மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்குத் தடையேற்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், உண்மையில் தேர்தலை நடத்தவேண்டுமெனின், அதுகுறித்து பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அல்லவா கேட்கவேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார். கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீல…
-
- 0 replies
- 362 views
-
-
(நா.தனுஜா) மத்திய வங்கி அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நாணயச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சலின்' ஊடாகப் புறந்தள்ளப்பட்ட மிகமுக்கியமான சீர்திருத்தம் இதுவென்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். நாணச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடந்த ஆட்சியில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா கைவிடப்பட்டிருப்பது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்: இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், 70 வருடகால…
-
- 0 replies
- 250 views
-
-
முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளைப் பயன்படுத்தி மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கு புலம்பெயர் தரப்பினரால் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமை ஏற்படாது என மக்கள் எண்ணக்கூடாது எனவும், புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயற்படாவிட்டால் தம்மால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘இலங்கையில் கொவிட்-19 தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்திகள்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் …
-
- 152 replies
- 13.2k views
- 1 follower
-
-
இனங்களுக்கு இடையே புரிந்துணர்வை உருவாக்கக் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் 9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்…
-
- 2 replies
- 551 views
-
-
-க. அகரன் வவுனியா மாவட்டச் செயலகத்துடன் இணைந்தப் பகுதியில், 1981ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பண்டாரவன்னியன் சிலைக்கு அருகாமையில் படி அமைக்கப்பட்டமைக்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தேசிய வீரனான பண்டாரவன்னியனுக்கு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிவசிதம்பரத்துடன், இணைந்து ஊர் பிரமுகர்கள் மாவட்ட சபை தலைவரும் தற்போதைய ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிரேஸ்ட சட்டத்தரணி மு. சிற்றம்பலம் ஆகியோர் சிலை அமைத்திருந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்தக் காலப்பகுதியில் மாவட்டச் செயலக வளாகத்தில் குறித்த சிலை நிறுவப்பட்டு, பண்டாரவன்னியன் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் தற்போது வவுனியா நகரசபை, குறித்த சிலையை பராமர…
-
- 1 reply
- 485 views
-
-
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு கொம்மாதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவனின் இறுதி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் செங்கலடி கொழும்பு மற்றும் பதுளை வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்…
-
- 0 replies
- 379 views
-
-
சுற்றாடல் ஆர்வலரிடம் 500 மி.ரூபாய் நட்டஈடு கோரியுள்ள யோஷித உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலரான, சஜீவ சாம்கரவிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, கட்டளை ஆணை அனுப்பியுள்ளதாக, யோஷித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சஜீவ சாம்கர வெளியிட்டுள்ள இந்த போலி கருத்து தொடர்பில், தனது தரப்புவாதியான யோஷித ராஜபக்ஷவிடம், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும் என்றும் குறித்த செய்தியை வெளியிட்டுள்ள ஊடக நிறுவனங்களும் இதனை அகற்ற வேண்டும் என, யோஷித சார்பில், சட்டத்தரணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு நட்டஈடு வழங்காவிடின் 7 நாள்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் சட்டத்தரணிகள் நிறுவன…
-
- 0 replies
- 323 views
-
-
1.7 டிரில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை – பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் 200 பில்லியன் ரூபாய் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுத் துறை செலவினங்களுக்காக 180 பில்லியனும் ஓய்வூதியத் துறைக்கு 83 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறி…
-
- 0 replies
- 282 views
-
-
434 அரச திணைக்களங்களில் 126 ராஜபக்ச குடும்பத்தினரிடம்ராஜபக்ச குடும்பத்தினரிடம் குவியும் அதிகாரங்கள் ராஜபக்ச குடும்பத்தினரிடம் குவியும் அதிகாரங்கள் ஜனாதிபதி, மூன்று அமைச்சர்கள், ஒரு ராஜாங்க அமைச்சர் முக்கிய அரச நிறுவனங்களைக் கையாள்கிறார்கள் பிரதமரின் கீழ் மூன்று அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ் 23 நிறுவனங்கள் பசில் ராஜபக்சவின் கீழ் தொலைத் தொடர்பு கட்டுப்பாடு 126 திணைக்களங்கள், சபைகள், அதிகாரசபைகள், சட்ட அதிகாரம் கொண்ட அமைப்புகள் தற்போது ராஜபக்ச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என சம்மகி ஜன பலவேகயா கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இது நாட்டின் 434 திணைக்களங்க…
-
- 4 replies
- 696 views
-
-
’விக்னேஸ்வரனின் பேச்சுக்களால் நன்மை நடக்கப்போவதில்லை’ நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய நாடாளுமன்ற முதலாவது உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ் ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர…
-
- 6 replies
- 932 views
-
-
இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்? கேள்வி எழுப்பும் மணிவண்ணன் August 21, 2020 “நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்?” என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையி…
-
- 4 replies
- 722 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், கொறடா பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்த கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது என நேற்று தமிழ் பக்கம் ஒரு செய்தியை முதன்முதலாக வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இன்று பல தமிழ் பத்திரிகைகளில் பேச்சாளர், கொறடா புதிதாக நியமிக்கப்பட்டு விட்டார்கள் என செய்தி வெளியிட்டிருந்தன. சமூக ஊடகங்களிலும் சுமந்திரன் ஆதரவாளர்கள் கொதிக்க, மாற்றத்தை விரும்பிய பொதுவான கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வரவேற்க- மோதல் போக்கு தொடர்ந்தது. உண்மையில் கூட்டமைப்பிற்குள் சம பங்காளிகளாக இருக்க வேண்டிய புளொட், ரெலோ கடந்த காலங்களில் தமக்குரிய பங்கை கேட்டுப்பெறாமலிருந்தன. தமிழ் அரசு கட்சி தன்னிச்சையாக நடந்தது ஒரு புறம், பொதுவாகவே இயக்க மனநிலைகளிற்குரிய- இந்த பேச்சாள…
-
- 9 replies
- 1.2k views
-
-
பிரபாகரனுக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்கவில்லை – தேரர் வெளியிட்ட தகவல்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலையாகியபோதே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் 2017ஆம் ஆண்டு நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலை…
-
- 0 replies
- 449 views
-
-
மஹிந்த உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற நடவடிக்கை குறித்த பயிற்சி! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பயிற்சிநெறி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் நாடளுமன்றத்தின் முதலாவது குழு அறையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்துள்ளார். இந்த பயிற்சி நெறியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். நா…
-
- 0 replies
- 304 views
-