Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி மக்கள் இம்முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை புறக்கணிக்க உள்ளதாக, கிளிநொச்சி முன்நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி குருகவேல் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, “கிளிநொச்சியில் உள்ள 110 பாடசாலைகளில் 90 வீதமான பாடசாலைகள் முற்றாகவே சிதைவடைந்து காணப்பட் நிலையில் மாணவர்கள் ஓலைக் குடிசைகளிலும், சிறுசிறு கூடாரம் அமைத்தும், மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத நிலையில்தான் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். தனி மனிதர்களாக இருந்து வைத்தியர் சத்தியமூர்த்த…

  2. இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு அடிபணியமாட்டோம்- மகிந்த August 2, 2020 விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தி பெற முடியாமல் போனதை பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கவேண்டும் என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் அரசாங்கத்தின் கீழ் தனிநாட்டுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசத்தை பாதித்த பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்தோம் என குறிப்பிட்டுள்ள …

  3. சிறீ காந்தா, கஜேந்திரகுமாருடன் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்; சவாலை ஏற்றார் சுமந்திரன் July 22, 2020 “தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் பொது வெளியில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்” என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், கட்சியின் ஊடக பேச் சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறுகையில் தெரிவித்ததாவது; “சிறீகாந்தா தன்னுடன் விவாதம் செய்ய வருமாறு சவால் விட்டிருக்கினறார். அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். அவருடைய சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். பொதுவெளியில் நடுநிலை…

    • 22 replies
    • 1.9k views
  4. மட்டக்களப்பில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் வாக்களிப்தற்கு வசதியாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் மத்தியில் அமைந்துள்ள மாந்தீவு எனும் தீவுத் திடல் பகுதியில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழு நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக அங்கு ஒரு தொழுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு அது தற்போது வரை இயங்கி வருக…

  5. கூட்டமைப்பினை பலப்படுத்துவன் மூலமே தமிழர்கள் வலிமை அடைய முடியும்; கனேடிய தமிழ்ப் பேரவை August 1, 2020 நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்…

  6. சட்டபூர்வமான அரசியல் சாசனம் இங்கு இல்லை! இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு; வவுனியாவில் சம்பந்தன் August 2, 2020 “இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவுக்கு நேற்றுப் பயணம் செய்த அவர் தமிழரசுக் கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்- “நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறப் போகின்றது. நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன…

  7. இலங்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 05.08.2020 அன்று அறிவன்(புதன்) கிழமை நடைபெறவிருக்கின்றது. அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த குமரிநாடு.கொம் இணையம் முனைகின்றதாக சுவிட்சர்லாந்தினை சேர்ந்த கட்டுரையாசிரியர் பூநகரி.முருகவேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். சிங்களமொழி அகரவரிசைப்படி கட்சிகளின் பட்டியல்கள் சின்னங்களுடன் மேலிருந்து கீழாக இடப்பட்டிருக்கும்,அதே நாளில் பத்து சதுரங்கள் அடங்கிய நீள் சதுரப்பெட்டியும் அதன் கீழே இருக்கும். இதில் வாக்காளர்கள் மிகக்கவனமாக தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடி இடவேண்டும். அதன் மூலம் தாம் விரும்பிய கட்சியை தெரிவு செய்துவிட்டார். அடுத்து தாம் விரும்பும் வேட…

  8. செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதில் August 1, 2020 “கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை” என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த நன்றியை மறந்து விக்னேஸ்வரன் அவரை விமர்சிப்பதாகவும் எதிராக செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.…

  9. பாசிசத்துக்கான பாதை எப்போதும் இராணுவமயப்படுத்தலே-ஹிட்லரின் பாசிசதேசம் போன்ற ஒன்று உருவாகும்- விக்கிரமபாகு கருணாரட்ண August 1, 2020 பாசிசத்துக்கான பாதை எப்போதும் இராணுவமயப்படுத்தலே என தெரிவித்திருக்கும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தற்போது அவர்கள் இராணுவம் சுகாதாரத்துக்கு சிறந்தது,அபிவிருத்திக்கு சிறந்தது.கல்விக்கும் நல்லது அனைத்துக்கும் இராணுவத்தை பயன்படுத்தவேண்டும் என தெரிவிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுஇராணுவமயப்படுத்துவதின் மீது தீவிர விருப்பம் கொண்டமனோநிலை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இயல்பாகவே ஹிட்லரின் காலத்தை போன்ற பாசிசகாலம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்பதே எனது கொள்கை …

  10. சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றப்பட்டது. யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளை, அவரது வீட்டிற்கு சென்ற ஆயுதாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது…

  11. யாழ்ப்பாணத்தில் போட்டிபோடும் சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் கருணா பிள்ளையானுக்கு நிகரானவர்கள் என்றும் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றும் கிழக்கு போராளிகள் சார்பான பகிரங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 'யாழ் மக்கள் சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் வாக்களித்து அவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால், அதன் பின்னர் கருணாவையும், பிள்ளையானையும் துரோகி என்று கூறத் தகுதியற்றவர்களாகிவிடுவீர்கள்' என்றும் கிழக்கு போராளிகள் சார்பாக அந்தப் போராளி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் அந்த வீடியோ இதோ: https://www.tamilwin.com/election/01/252444?ref=imp-news

  12. இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது – சீ.யோகேஸ்வரன் மிகவும் இனவாதம்கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு சில ஆதரவுகளை வழங்கியதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செயற்பாடு புதிய ஜனாதிபதியின் வரவின் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளது.தேசிய கீதமும் தமிழில் பாடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தனிச்சிங்களத்தில் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இ…

  13. போர்க் குற்றங்கள் – தமிழர்கள் பெருமளவில் படுகொலை- வன்னியில் போட்டியிடும் முன்னாள் இராணுவஅதிகாரியின் கருத்து என்ன? August 1, 2020 இலங்கை இராணுவம் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது என தெரிவித்துள்ள வன்னிமாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் கீழ் போட்டியிடும் முன்னாள் இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய பந்து தமிழர்கள் பாரிய அளவில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் நிராகரித்துள்ளார். ஆங்கில நாளிதழிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் குற்றவாளிகளை நாட்டின் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ரத்தினப்பிரிய பந்து நாங்கள் மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். …

  14. திருமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி ரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்கி வேண்டுகோள் August 1, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது தம்பி ரூபனுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “ரூபன் ஒரு வீரத் தமிழன். தன்மானத் தமிழன். ஆகையினால், ரூபனுக்கு நீங்கள் விட்டுக்கொடுப்பதன் மூலம் நீங்கள் தோற்க மாட்டீர்கள். மாறாக நீங்கள் வெல்வீர்கள். திருகோணமலை மக்கள் வெல்வார்கள். ஆகவே, நீங்கள் அவ்வாறு செய…

  15. யாழ் மாவட்ட வாக்காளர்களுக்கான வழிகாட்டல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வாக்களிக்கும் முறைகள் தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வழிகாட்டல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை வருமாறு, https://newuthayan.com/யாழ்-மாவட்ட-வாக்காளர்களு/

  16. சிந்தித்து வாக்களியுங்கள் – தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்கள் வரலாறு கற்றுத்தந்த அரசியல் முதிர்ச்சியைக் கருத்திற் கொண்டு சிந்தித்து வாக்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) விடுத்த ஊடக அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வருமாறு, https://newuthayan.com/சிந்தித்து-வாக்களியுங்க/

  17. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வா !!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருகோணமலை மாவட்ட தமிழ் பொது அமைப்புக்களின் ஊடகப் பேச்சாளர் யதீந்திரா தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து 20 வருட காலமாக ஒருவரையே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.…

  18. யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள தேர்தல் அறிவிப்பு! நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (31 நான்கு வேண்டுகோள்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை வருமாறு, https://newuthayan.com/யாழ்-பல்கலை-மாணவர்-ஒன்றி/

  19. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர் என முன்னாள் தமிழீழ அரசியல் துறை நிர்வாகப் பொறுப்பாளாரும் கேடயச் சின்னத்தில் பாராளுமன்ற தோ்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாக தெரிவித்துள்ளார். உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சியில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்காக நுற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். …

  20. பிந்திய செய்தி.... குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி நேர விசாரணைகளின் பின்னர் ஷானி அபேசேகர நீதிமன்றில் ஆஜர்! கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கம்பஹா நீதவான் முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால், குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தரார். இந்நிலையில் அவர் 8 மணித்திய…

  21. முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் அவர் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்த கடிதத்தின் நகல்கள் பிரதமருக்கும், தேர்தல் ஆஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விக்னேஸ்வரன் எழுதியுள்ள கடித்தல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, …

  22. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் மூன்று குழந்தைகள் இன்று பிரசவிப்பு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கபெற்றுள்ளது. பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மூன்று அல…

  23. கருணாவால் புலிகள் தோற்கவில்லை! – பொன்சேகா கருணா பிரிந்ததாலேயே புலிகள் அமைப்பு பலவீனமடைந்ததாக கூறுவதும், அதனாலேயே அவர்கள் போரில் தோல்வி அடைந்தனர் என கூறுவதும் தவறு. அவர் புலிகளிடம் இருந்து பிரிந்த இரண்டே வாரங்களில் கிழக்கின் பலத்தைப் புலிகள் கைப்பற்றினர். இதனால் கருணா கொழும்புக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது” இவ்வாறு இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததாலேயே புலிகளை பலவீனப்படுத்தி போரை வெல்ல முடிந்ததாக பொதுஜன பெரமுன கட்சியினர் அண்மைக்காலமாக கூறு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சரத் பொன்சேகா தெரிவித்தார். மேலும், …

  24. ‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’ மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கே தற்போது இளைஞர்கள் பாரியளவில் ஆதரவை தெரிவித்து வருவதாகவும் கூறினார். கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கல…

  25. அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் – சஜித்! நாங்கள் வெற்றிப் பெற்று முதல் ஆறுமாத காலத்திற்குள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று தொலைபேசியை சுற்றி பெருந்தொகையான மக்கள் ஒன்றுக்கூடியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சிறந்த வெற்றியை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. எமது ஆட்சியில் கிராம இராச்சியம்…

    • 0 replies
    • 380 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.