Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு – யாழில் சம்பவம் யாழ். சுன்னாகம் – அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நவாலி கலையரசி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/கட்டடம்-இடிந்து-விழுந்தத/

    • 1 reply
    • 546 views
  2. பதவிகளில் மாற்றமில்லை – உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அந்தப் பதவிக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டுள்ளாரென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு, கட்சியின் கொறடா பதவிக்கு புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி…

  3. எங்களை கொன்றொழியுங்கள் உங்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம் என செயற்பட முடியாது புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாட்டுக்கு சென்றிருப்பார்கள். புலிகளின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு அல்லது நிவாரணம் வழங்கினால் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது போலாகும் என்று வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், “எவராவது காணாமல் போனவர்கள் என்று கூறுவார்களாக இருந்தால், அவர்களைத் தேட முடியாதென்றே அர்த்தம். அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம். காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கான அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களில் அரைவாசிப் பேர் வெளிந…

    • 2 replies
    • 452 views
  4. ஐதேகவின் செயற்குழு கூட்டம் தோல்வி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் தேசிய பட்டியல் ஆசனம் மற்றும் கட்சி தலைமை குறித்து ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளது. தற்போதைய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (25) கூடியது. தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பான முடிவு மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது. இருப்பினும் எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக்கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இதேவேளை புதிய தலைவர் தெரிவு செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக…

  5. இந்தியாவின் அனுமதியின்றி 13 ஆவது திருத்தத்தை நீக்க முடியாது என்கின்றார் வாசுதேவ! இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13 ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்ற போதும் 13 ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்ட…

    • 2 replies
    • 555 views
  6. இலங்கையில் 2100 ஆம் ஆண்டளவில் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும்.! இலங்கையின் சனத்தொகை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல். இன்னும் 80 ஆண்டுகளில்,குறிப்பாக 2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு விகிதங்கள் குறித்து "தி லான்செட்" பத்திரிக்கை நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளிவந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் கருத்தரிப்பு வீதங்கள், இறப்பு விகிதம், இடம் பெயர்வு மற்றும் சாத்தியமான மக்கள் தொகை மாற்றம் ஆகியவற்றை இந்த அறிக்கை கணக்கில் எடுத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கையின் மக்கள் தொகை 2100 …

  7. இலங்கையின் உள்ளீட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு கிடையாது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக மீளப் பெற வேண்டும் என்று எல்லாவல மேதானந்த தேரர் கொதித்தெழுந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” இலங்கைப் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவிக்க இந்திய தூதுவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இலங்கை, இந்தியாவின் உறவைப் பலப்படுத்துவது மட்டுமே அவரது பணி. அதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுவரிடம் 13 தொடர்பில் கதைக்கச் சொல்லும் போது அவர் அதை நிராகரித்திருக்கலாம். …

    • 3 replies
    • 572 views
  8. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதியின் தொல்பொருள் செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசனைக்கு அமைய இந்தச் செயலணி கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது. இந்தச் செயலணிக்கு அஸ்கிரி பீடத்தின் வெண்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர், மல்வத்…

    • 10 replies
    • 898 views
  9. “நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய சி.வி.விக்னேஸ்வரன் எம்பி ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது” இவ்வாறு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், “6ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது. அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்படும். அதனை பின்னர் வேறு …

  10. யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் முதலாம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்…

  11. முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் சந்திரசிறிக்கு பின்னர் வடக்கில் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை சந்தித்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரச நியமனங்களில் பலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களிற்காக நிராகரிக்கபட்டுள்ளதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் அவர்களது சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பின் அவர்கள் பட்டதாரிகளாக உள்வாங்கப்ப…

    • 2 replies
    • 419 views
  12. (செ.தேன்மொழி) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை புதைக்கவோ , எரிக்கவோ முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ள போதிலும் அரசாங்கம் அதனை கருத்திற் கொள்ளாமலே செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபூர் ரஹூமான் , அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் சடலத்தை அவர்களின் கும்பத்தாரின் விருப்பத்தின் பெயரில் எரிக்கவும…

  13. (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் ஒருபோதும் இடைநிறுத்தப்பட மாட்டாது. எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் எமது நாட்டு பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். இவ்வாறன சூழலில் இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தம்புள்ளையில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில் , ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் சமூகப்பரவல் ஏற்படவில்லை. எனினும் உலகலாவிய ரீதியிலான நிலைமையை அவதானிக்கும் போது எமது நாட்டி…

  14. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோள்! அரசியல் பேதங்களை கைவிட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுள்ளார். 9 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. இதில் பிரதம உரையாற்றிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ´நாட்டு மக்கள் அமைச்சர்களை கட்டிக்காக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக தம்மை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவர் அவசியம் என்றே அவர்கள் விரும்புகின்றனர்…

    • 0 replies
    • 335 views
  15. தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும், இந்நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி உரை ஆற்றினார். இதனை அடுத்து சி.வி.விக்னேஸ்வரனின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து ஆராய்வதாக குறித்த …

  16. அதிக விவசாய விளைச்சளைப் பெற ஜனாதிபதியின் யோசனை பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விவசாய விளைச்சளை அதிகரிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக பல யோசனைகளை முன்வைத்தார். கொவிட் நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து தேசிய விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி உரப் பாவனை, விவசாய புத்தாக்க ஆராய்ச்சிகள், களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகள் குறித்தும் கவனம் செலுத்தி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் சவாலான இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.…

  17. இலங்கையில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டமைக்கான காரணம்? இலங்கையில் தற்போதைய வாகனங்களின் இருப்பு இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு போதுமானது என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத தெரண தொலைக்காட்சியில் நேற்று (24) ஒளிபரப்பான ´360´ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். வாகன இறக்குமதி பெரிய அந்நிய செலாவணி ஈட்டிதர கூடியது எனினும், ஆனால் தற்போது அரசாங்கம் தேவையற்ற பொருட்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், ´தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பபட்டுள்ளது. குறிப்பாக 2019 வரை வருடத்திற்கு 1,000 மில்லியன் முதல் 1,200 மில்லியன் வரை …

    • 0 replies
    • 309 views
  18. டக்ளஸின் கோரிக்கை வீண் – கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் நான்கு தேரர்கள் நியமனம் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த தேரர்கள் நால்வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். தமிழ் பிரதிநிதியை செயலணியில் இணைக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தபோதும் பௌத்த பீடாதிகள் உட்பட மேலும் நான்கு தேரர் இந்தச் செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பௌத்த ஆலோசனை சபையின் ஆலோசன…

    • 0 replies
    • 344 views
  19. தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.என்.ஏ) தனது தேசிய பட்டியல் பதவிக்கு இரண்டு பேரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட தவராசா கலையரசன் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்ற வதந்திகள் குறித்து அந்த ஆங்கில ஊடகம் பேச்சாளரை கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேற்படி விடயத்தை தெரிவித்தார். அம்பாறையைச் சேர்ந்த கலையரசனின் நியமனம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்ததோடு, அந்தப் பதவிக்கு இருவரை நியமிக்கும் முடிவும் அங்கு எடுக்கப்பட்டுள்ளதா…

  20. எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..! அமைதியாக நடவுங்கள் .. ஆளுங்கட்சியினருக்கு பிரதமர் அறிவுரை.. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இன்று தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள். மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டத்தில் கடும் சீற்றத்துடன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்போது மேலும் அவர் கூறியதாக கூறப்படுவதாவது, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி தமிழ் அரசியல்வாதிகள் கடந்த காலங்களிலும் செயற்ப…

    • 108 replies
    • 9.3k views
  21. இலங்கையில் கொரோனாவை விட ஆபத்தான நோய்..! 37 பேர் இதுவரை மரணம், தொற்றுநோய் பிரிவு எச்சரிக்கை..! எலிக்காய்ச்சல் இலங்கையில் தீவிரமாக பரவிக் கொண்டிருப்பதாக இலங்கை தொற்று நோய் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 4,554 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய்ப்பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும், அதிகமாக எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் பதிவாகியுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் மட்டுமே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதனால் எலிக்…

  22. 35 அமைச்சுக்களின் செயலாளர்களில், ஒரு அருமைநாயகம்!!! August 25, 2020 35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மட்டுமே தமிழ்பேசும் தேசிய இனங்களில் இருந்து நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களின் செயலாளர்கள் அனைவரும் பெரும்பான்மைச் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2020/149212/

  23. புலிகள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை – அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால் அவர்களைத் தேட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இராணுவத்தில் 4 ஆயிரம் பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் இராணுவத்தில் காணாமல்போனோர் என்பது ஏற்புடைய ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் மனிதாபிமான ரீதியில் காணாமல்போன விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எதிர்காலத்தில் சிந்திப்பதாகவும் ஆனால், அது அவர்களது உரிமை ஆகாது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார். காணாமற்போனோர் குறித்து தேட அரசாங்கம் தயா…

  24. யாழ் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வசதி இன்மையால் இடர்நிலை! யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை என்று யாழ் மாவட்ட கமக்கார அமைப்பு அதிகார சபையின் செயலாளர் எஸ்.செல்வரத்தினம் தெரிவித்தார். யாழ் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “யாழ் மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை. அதேபோல உற்பத்திக்கு செலவு செய்யும் பணத்தை அவர்கள் விளைச்சலின் போது பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த விடயத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தி…

    • 4 replies
    • 726 views
  25. இலங்கையில் புகையிலை பாவனைக்குத் தடை இலங்கையில் புகையிலைச் சார்ந்த பொருட்கள் விற்பனை, காட்சிப்படுத்தல் மற்றும் பொது பயன்பாடு ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள், புகையிலை மற்றும் ஆல்கஹால் தடுப்புக்கான புதிய செயற்திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். புகையிலை நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்கக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.