ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கையால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியே எமக்கு சவாலாக இருக்கப்போகின்றது. 26 வருடங்கள் நிராகரிக்கப்பட்ட தலைவர் தற்போது சிறந்தவராக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக…
-
- 0 replies
- 402 views
-
-
இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொட்டகல சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை,நிர்வாக சபை ஆலோசனையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் பொதுச் செயலாளர் பதவியை வகித்த அனுசா சிவராஜா அவர்கள் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.-(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-காவின்-பொதுச்-செயலாள/
-
- 1 reply
- 714 views
-
-
தாமும் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள் - ஆனந்தசங்கரி . தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள் இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள். என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ , அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வ…
-
- 1 reply
- 527 views
-
-
காணிகளை அபகரிக்கும் நில அளவை திணைக்களம்: மக்கள் எதிர்ப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றும் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத் திணைக்…
-
- 0 replies
- 451 views
-
-
“தொல்பொருள் சின்னங்களை அழிப்பது முன்னோர்களை அவமதிப்பதாகும்” -ஜே.ஏ.ஜோர்ஜ் எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பாதுகாப்பு செயலாளரான எனது தலைமையில் இரண்டு…
-
- 1 reply
- 882 views
-
-
’தவளை அரசியலை நான் மேற்கொள்ளேன்’ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் விலகப்போவதாக வெளியாகும் செய்தி, திட்டமிடப்பட்ட பொய் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொழும்பு மாவட்ட அரசியல் பிரமுகர்களின் இரகசியக் கும்பல்களால் நடத்தப்படும் இணையத்தளங்களில், சஜித்தை விட்டு மனோ விலகுகிறார் என்ற செய்தியொன்று, சிங்களத்தில் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இது அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 450 views
-
-
தேர்தலில் வெற்றிப்பெறுவதோடு சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வீழ்த்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் வரை அந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் 154 பிரச்சார கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 1000 கூட்டங்களை நடத்த எதிர்பார்பதாகவும் அவர் கூறினார். அதற்கும் அதிகமாக பிரச்சார கூட்டங்களை நடத்தி காட்டுமாறு …
-
- 0 replies
- 460 views
-
-
மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு by : Jeyachandran Vithushan மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறிகள் விநியோகத்தின் ஊடாக 784.89 மில்லியன் ரூபாய் நேரடி நாட்டம் ஏற்பட்டிருந்ததாக அப்போது மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 320 views
-
-
கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை! by : Vithushagan இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- “இலங்கையில் முருகப்பெருமான…
-
- 0 replies
- 232 views
-
-
எதிரிசிங்க குடும்பத்தை கைது செய்ய உத்தரவு! ஈரிஐ பினான்ஸ் நிறுவன பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசாங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/எதிரிசிங்க-குடும்பத்தை-க/
-
- 5 replies
- 795 views
-
-
தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் – விக்னேஸ்வரன் தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று(15) வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். அவ்வறிக்கை வருமாறு, https://newuthayan.com/தமிழர்கள்-மான்புடன்-வாழு/
-
- 3 replies
- 448 views
- 1 follower
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கத்தயார் – சுமந்திரன் புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த வேட்பாளர்களோடும் ஆதரவாளர்களோடும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று எமது கட்சியின் வவுனியா மாவட்ட குழுவினருடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவடத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆரா…
-
- 1 reply
- 429 views
-
-
பாட்டலி, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர்களான விஜயதாக ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (17) முன்னிலையானார்கள். இதன்படி எவன்கார்ட் நிறுவனம் அரசாங்கத்தால் கையகப்படுத்தும் போது இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்து அதன் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே குறித்த இருவரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். https://newuthayan.com/பாட்டலி-விஜயதாச-ராஜபக்ஷ/
-
- 0 replies
- 543 views
-
-
முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல் Bharati May 18, 2020 முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்2020-05-18T09:09:53+00:00Breaking news, உள்ளூர் இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது. Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது ச…
-
- 7 replies
- 1.4k views
-
-
கடத்தல் வழக்கில் ஹிருனிகாவிற்கு அழைப்பாணை இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருனிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாகவே ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/கடத்தல்-வழக்கில்-ஹிருணிக/ இது என்னடா இது மருதருக்கு வந்த சோதனை...........
-
- 1 reply
- 823 views
-
-
டிரோன் கமராவின் மூலம் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு! மூவர் கைது! டிரோன் கமரா மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். நேற்று (16) அதிகாலை கிடைத்த தகவலில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில அடர்ந்த காட்டுப் பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன. குறித்த சுற்றி வளைப்பினை மொனராகலை, அம்பாறை, பண்டாரவளை மதுவரி திணைக்களத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர். இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற…
-
- 1 reply
- 388 views
-
-
இராணுவ முகாம்முன் வெடிப் பொம்மையை வீசியதாக ஒருவர் கைது – ரிஐடியிடம் ஒப்படைப்பு! வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (ரிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லைவெளி இராணுவ முகாமுக்கு முன்பாக நபர் ஒருவர் விழுத்திவிட்டு சென்ற மர்ம பொதியை இராணுவத்தினர் சோதித்த போது அது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றனர். வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி …
-
- 1 reply
- 360 views
-
-
த்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் இன்னமும் மத்திய வங்கி பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போது நிதி நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. அந்த நிதி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வதென்…
-
- 1 reply
- 634 views
-
-
எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…
-
- 8 replies
- 1.4k views
-
-
25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியல் கைதிகள் எவரும் கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்படவில்லை – சுரேஸ் by : Vithushagan தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்த்து கருத்து தெரிவிக்கையில், ”ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாத…
-
- 1 reply
- 891 views
-
-
மஹிந்தவின் குடும்ப நிறுவனத்தின் ஊழல்களை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளர் உயிரிழந்தது எப்படி? கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கக்திற்கு அருகில் கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகத்தின் ஊடகவியலாளர் ரஜீவ ஜெயவர்த்தனா (63) சடலாகமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டார் ராஜகிரிய பகுதியில் வசித்துவரும் இவர் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் குடும்ப விமான நிறுவனமாக மிகின் லங்கா என்ற விமான நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.என்பதுடன் அப்போது அந்த நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஊடகங்களில் இவர் எழுதி வந்துள்ளார். இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும்போதும், இவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் சுதந்திர சது…
-
- 1 reply
- 554 views
-
-
மாணவர்களுக்கான விசேட வரைதல் செயற்திட்டம்! கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது. இவ்விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களிடத்தில் செயற்படுத்தியபோது அவை வெற்றியளித்துள்ளதாகவும், இதனை இம்மவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களிடமும் செயற்படுத்துவதன் மூலம் அவர்களி…
-
- 0 replies
- 405 views
-
-
தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி… இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு…
-
- 3 replies
- 695 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இலங்கையரான இசாக் என்பவர் செயற்படுவதாக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், கடந்த 5 வருடத்தில் 88,000 முஸ்லிம் அல்லாதவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளார். இலங்கையில் தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகள் ஊடாகவே அடிப்படைவாதம் விதைக்கப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறான சிந்தனைகள் உர…
-
- 1 reply
- 449 views
-