ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142935 topics in this forum
-
ஸ்ரீலங்கா பொலிஸின் அடாவடி! பெண்களுக்கு ஏற்பட்ட அவல நிலை: வெளியானது காணொளி அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததை அடுத்து இதில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வகையில் ஸ்ரீலங்கா பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்து ஜீப் வண்டியில் தூக்கிப்போடும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவரை கைது செய்யும் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் உள்ளது. ஆனால் இங்கு பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி ஜீப் வண்டிக்குள் வீசியுள்ளனர். …
-
- 1 reply
- 722 views
-
-
விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை அழைப்பு விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப்புலி போராளிகள் பலர் என்னோடு சந்திக்கவேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். அந்தவகையில் இன்று புனர்வாழ்வுபெற்ற புலிகள் சார்ந்…
-
- 9 replies
- 1.4k views
-
-
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தியில் மலர் தூவிய விமானப்படையினர் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) ஆரம்பமானது. குறித்த உற்சவம் இன்று அதிகாலை மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு சிறப்புற ஆரம்பமானது. கடந்த 01.06.2020 அன்று உப்பு நீரில் விளக்கெரிப்பதற்காக முல்லைத்தீவு சிலாவத்தை கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்ககெரிக்கப்பட்டு வரும் அற்புத காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்…
-
- 8 replies
- 1.8k views
-
-
அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல்: தீவு முழுவதையும் முற்றுகையிட்டுள்ள கடற்படையினர் யாழ். அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய 3 பேர் கொண்ட கும்பலை தேடி தீவு முழுவதையும் கடற்படையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவந்துள்ளனர். இத்தாக்குதலில் கடற்படை அதிகாரியும், சிப்பாயும் காயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், நேற்றைய தினம் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனை கடற்படையினர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளனர். இதனையடுத்து இன்று காலை குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடற்படை முகாமிற்கு சென்று நிறை மதுபோதையில் கடற்படையினரை தகாத வார்த்தைக…
-
- 0 replies
- 361 views
-
-
யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இந்நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அவ் வேளையில், அவர்கள் இந்திய பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவை காலாவதியாகி…
-
- 0 replies
- 577 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமிழ் மக்களின் நலன்களை விடவும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நலன்கள்தான் அதி முக்கியமானவை. எனவே இவற்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கிழக்குத் தமிழர்கள் அரசியலில் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். சமகால தேர்தல் நிலைமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அண்மைக் காலமாகச் சில தமிழ் ஊடகங்கள் கருணா அம்மானைச் சாதாரண அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிரானவராகச் சித்தரித்துப் பொய்யும் புரட்டும் நிறைந்த கட்டுக்கதைகளைச் சோடித்து அவருக்கு எதிரான விசமத்தனமான பிரச்சாரங்களைத் திட்டமிட்டு ம…
-
- 1 reply
- 381 views
-
-
மக்கள் நாயகன் என்று சம்பந்தன் கூறுவது அரசியல் கபடத்தனம் என்கிறார் தவராஜா இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வித்திடப்பட்டுள்ளதாக வெளிவரும் கருத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று (09) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ‘எங்கு இராணுவ ஆட்சி என தெரிவிக்கின்றார்கள் என தெரியவில்லை. ஜனாதிபதியின் செயலணியில் இராணுவத்தினர் மட்டுமன்றி, படைத்தரப்பினரும் உள்வாங்கப்பட்டு உள்ளார்கள். வடக்கில் போதைப் பொருள் பாவணை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் பாவணைக்க…
-
- 1 reply
- 351 views
-
-
மாங்கேணி விபத்தில் ஒருவர் சாவு! மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் மாங்கேணி பிரதேசத்தில் இன்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து தோப்பூர் பிரதேசத்திற்கு தொழில் நிமித்தம் இன்று காலை முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி பிரதேசத்தில் வாகனம் தடம்புரண்டிதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக வாகரை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதில் முச்சக்கர வண்டியின் சாரதியான காத்தான்குடி சாவியா வீதியை சேர்ந்த முஹம்மது கனீபா முஹம்மது இர்பான் (வயது-31) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அ…
-
- 0 replies
- 341 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மங்கள விலகல்! ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை தான் எடு…
-
- 0 replies
- 299 views
-
-
எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை – அம்பாறை மாவட்ட கா.ஆ.உ.சங்கம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வித அரசியல் தரப்பினரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஆதரிக்கப் போவதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சிறு பிரிவுத் தலைவியும் மகளிர் உரிமை செயற்பாட்டாளருமான எஸ்.புவனேஸ்வரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று…
-
- 0 replies
- 433 views
-
-
மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!! 0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 22 replies
- 1.7k views
-
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நானுஓயா நகரில் சிலை ஆ.ரமேஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு, நானுஓயா நகரில் உருவச்சிலை வைப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில், இன்று (9) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சபை கூட்ட நடவடிக்கையில், இ.தொ.காவின் தல…
-
- 1 reply
- 451 views
-
-
ஸ்ரீலங்காவில் தனது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால் உடன் அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்து அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மோசடிக்காரர்கள் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் எனது பணிப்புரையின் பேரிலேயே கொடுக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாக எனக்கு…
-
- 1 reply
- 422 views
-
-
பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு க.பாெ.த (உ/த) பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 2ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அத்துவன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/புலமைப்-பரிசில்-பரீட்சை-2/
-
- 0 replies
- 522 views
-
-
யாழில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு – சத்தியமூர்த்தி by : Dhackshala யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன அவ்வாறு இடம்பெறுகின்ற பரிசோதனைகள் ஊடாக வடக்கில் உள்ளவர்களுக்கு கொரோனா வைர…
-
- 0 replies
- 322 views
-
-
ஜூலை 6 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு by : Jeyachandran Vithushan எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் அனைத்து பாடசாலைகளின் விடுமுறைகள் நிறைவுக்கு வருவதாக கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை 4 கட்டங்களாக மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஜுன் மாதம் 29ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி ஊழியர்களே பாடசாலைக்கு வர வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி ம…
-
- 0 replies
- 352 views
-
-
(நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை …
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மஹிந்த ராஜபக்சவின் 50 வருடகால அரசியல் பயணம் தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற அனுபவப் பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவேன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தேன். இது குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.2015 இல் தோல்வியடைவேன் என குடும்பத்தாருக்கும், ஏனையோருக்கும் நான் முன்கூட்டியே அறிவித்திருந்தேன். இதன்காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து கௌரவமாக வெளியேறினேன்.ஜோதிடம்மீது அதிக நம்பிக்கை இல்லை. ஆனால்…
-
- 0 replies
- 300 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல் ஒத்திகை இன்று அம்பலாங்கொடையில் நடைபெற்றது. தேர்தல் ஒத்திகையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய, வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு வரும் போது கறுப்பு அல்லது நீல நிற பேனாக்களை வாக்காளர்கள் எடுத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் வாக்களிக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக அனைத்து ஊடகங்களையும் அழைத்து விளக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/144778
-
- 2 replies
- 331 views
-
-
அமெரிக்க, சீன தூதரகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை கொழும்பிலுள்ள அமெரிக்க மற்றும் சீன தூதரகங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி இன்று(செவ்வாய்கிழமை) அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இந்தநிலையிலேயே இதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கொழும்பில் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளி…
-
- 0 replies
- 302 views
-
-
நல்லிணக்கமென்றால் நல்லிணக்கம், கடும்போக்கென்றால் கடும்போக்கு நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம் கண்ட அனுபவங்கள் அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும்போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார். இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்களென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். …
-
- 9 replies
- 755 views
-
-
அலிசாஹிரின மனு விசாரணைக்கு ஏற்பு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா சார்பில் கடந்த மே மாதம் 15ஆம் திகதி சர்வதேச விதிமுறைகளை தாண்டி கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு மனுதாரர் சார்பில் சட்டத்தரணிகளாக ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், பாயிஸ் உட்பட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜர் ஆனா…
-
- 0 replies
- 326 views
-
-
இளம் பெண் மீது மண்ணெணெய் ஊற்றி தீ வைப்பு! வவுனியாவில் 29 வயதான இளம் குடும்பப் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் குறித்த இளம் குடும்ப பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. வவுனியா – ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட…
-
- 0 replies
- 876 views
-
-
-
- 0 replies
- 330 views
-
-
(ஆர்.யசி) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு -கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார், வடக்கு கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது எனவும் அவர் கூறினார். முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விடுதலைப்புலிகளுடனான போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகளின் தலை…
-
- 55 replies
- 5.9k views
-