ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்துக்கு வர வேண்டும் – ஜீவன் மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (06) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டனர். ஆயிரம் ரூபாவைத்தவிர எமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா? இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா? இல்லை. கேட்டால் வீடு கட்டிக்கொடுத்தோம் என்…
-
- 1 reply
- 569 views
-
-
பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது? வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பா…
-
- 1 reply
- 493 views
-
-
பூநகரி விபத்தில் இளைஞன் பலி! கிளிநொச்சி – பூநகரி பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாெரட்டுவ பல்கலைக்கழக மாணவனான மோகன் ஆகாஸ் (23-வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். https://newuthayan.com/பூநகரி-விபத்தில்-இளைஞன்/
-
- 5 replies
- 1.4k views
-
-
ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு! இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். https://newuthayan.com/ஆறு-இலங்கை-மீனவர்கள்-மீட/
-
- 0 replies
- 720 views
-
-
ஐவருக்கு மாத்திரமே அனுமதி இனிவரும் காலங்களில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணியொருவரை வழியனுப்புவதற்கு 5 பேர் மாத்திரமே, விமான நிலையத்தின் பயணிகளை வழி அனுப்பி வைக்கும் பகுதிக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவரென, விமான நிலைய ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். அத்துடன், விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஐவரகக-மததரம-அனமத/175-252859
-
- 0 replies
- 354 views
-
-
ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது. https://newuthayan.com/ஒட்டுசுட்டடான்-தான்தோன்/
-
- 0 replies
- 338 views
-
-
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்க ஐ.தே.க.வினால் மாத்திரமே முடியும் – ரணில by : Yuganthini சரிந்துக் கொண்டுச் செல்லும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க ஐக்கிய தேசியக்கட்சியால் மட்டுமே முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில், இந்த அரசாங்கமானது மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்கிறது. ஜப்பானின் ஜைக்கா நிறுவனம், நிதியமைச்சுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் சமகால அரசாங்கத்தின் நிதிக் கொள்க…
-
- 0 replies
- 310 views
-
-
போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன் by : Vithushagan எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பிரதேசத்தில் மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நடக்க போகின்றது எமத…
-
- 0 replies
- 294 views
-
-
கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும் எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடுங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று மாலை (05) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார்…
-
- 0 replies
- 271 views
-
-
புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் காணொளிகளை முடிந்தால் வெளியிடுங்கள் – கருணாவிற்கு சிவாஜி சவால் by : Jeyachandran Vithushan விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே இந்த பகிரங்க சவாலினை விடுத்தார். செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையிலும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்…
-
- 0 replies
- 258 views
-
-
சம்பவத் வங்கியில் முதலீடு செய்ய வேண்டாமென உலமா சபை மக்களை வலியுறுத்துகிறது- ரத்தன தேரர் by : Yuganthini சம்பத் வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுத்து அமானா வங்கியில் முதலீடு செய்யுமாறு முஸ்லிம் மக்களிடம் ஜமியதுல் உலமா சபை கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அதுரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீபாத மலையை சுற்றி காணப்படுகின்ற பெரும்பாலான நிலங்களை, முஸ்லிம் மதத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை சஹ்ரான் தலைமையிலான கு…
-
- 0 replies
- 282 views
-
-
சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – ஜீவன் by : Vithushagan மலையகத்தில் குறைகூறும் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். சாக்கடை அரசியலை சுத்தப்படுத்துவதற்காக இளைஞர்கள் களத்தில் இறங்கவேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா பேர்லேன்ட்ஸ் தோட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” கடந்த நான்கு வருடங்களாக ஆயிரம் ரூபா பற்றி மட்டுமே கதைத்தார்கள். இவ்வாறு கதைத்து ஏனைய பிரச்சினைகளை ம…
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கு மக்கள் எமக்கு வாக்களிக்காவிட்டாலும் அப்பகுதிகளுக்கும் அபிவிருத்திகளை தொடருவோம்- மஹிந்த by : Yuganthini வடக்கு மாகாண மக்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, அரசாங்கம் அந்த மாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது. இனிமேல் அந்தக்கட்சி ஒன்று சேர்வதற்கான வாய்ப்பே கிடையாது. யாராவது இந்தக் கட்சி இணையும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பகல் கனவாகத்…
-
- 0 replies
- 208 views
-
-
யாழ் பெரிய கோவிலில் நடமாடிய மர்ம நபர் கைது; மன்னார் ஆலயத்திலும் நடமாடியவராம்!. யாழ்ப்பாணம் – பெரிய கோவில் வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று (06) கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் பேசாலை தேவாலயத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய அதே நபரே இன்று யாழ் பெரிய கோவிலிலும் நடமாடித்திரிந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்திற்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் வந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் மிக நீண்ட நேரம் தனது உடமைகளுடன் நடமாடித்திரிந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவரை கைது செய்து தற்போது வி…
-
- 0 replies
- 345 views
-
-
வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் எங்களுக்கே :மகிந்த ராஜபக்ஷ. வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி முடியாதென எதிர்க்கட்சியினால் பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.அது போன்றே இம்முறை பொதுத் தேர்தலிலும் அந்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எதிர் கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களின் வாக்குளில் அதிகளவாக வெற்றி பெற்ற போதிலும் வடக்கு – கிழக்கு மக்கள் எம்மை கைவிடப்பட மாட்டார்கள், அந்த மக்களை வெற்றிக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு – கிழக்கு மக்களை வெற்றிக் கொள்ளும் போது, தெற்கு இளைஞர்களின் ஆதரவை …
-
- 0 replies
- 368 views
-
-
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது. தமிழர்களின் அடையாளத்தை அழிக்க சிங்கள பேரினவாதம் குறியாக உள்ளது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.இன்று புன்னை நீராவி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்அக்கராயன் மண்ணிலே அக்கிராச மன்னனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த மன்னனிற்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் பொங்கல் பொங்கி மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவது பழக்கம் இன்று கரைச்சி பிரதேச சபையினால் அந்த மன்னனின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்த சென்ற போது …
-
- 0 replies
- 363 views
-
-
எம் பின்னால் மோடி நிக்கிறார் – சம்பந்தன் எமக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகாேணமலையில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “சர்வதேச சமூகம் எம் பின்னால் நிற்கின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முழுமையாக பின்னால் நிற்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு நாட்களில் இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதியான, சமத்துவமான, கௌரவத்துடன் கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என கலந்துரையாடினார். அதன் பின்னர் …
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசால் 13ஐ தன்னிச்சையாக ஒழிக்கவே முடியாது (ஆர்.ராம்) இலங்கை - இந்திய சர்வதேச ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அதன் மூலமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசாங்கத்தினால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்று வடக்கு, கிழக்கின் முன்னாள் முதலமைச்சர்களான நீதியரசர்.சி.வி.விக்கினேஸ்வரன், ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 13ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்க வேண்டுமென்ற தொனிப்பட்ட பரிந்துரையை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட பகிரங்கமாக வைத்துள்ளார். அதேநேரம், மாகாண சபைகளினால் நிதிவிரயமாகுவது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கரிசனை கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலி…
-
- 1 reply
- 460 views
-
-
சிறைக் கதவுகளை உடைத்து பிள்ளையான் வெளியே வருவாராம்! – இப்படிச் சாெல்கிறார் ஸோபா நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக் கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனும் சி.சந்திரகாந்தனை ஆதரித்து பேத்தாழையில் இன்று (06) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “கடந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எங்களுடைய தமிழ் மக்களை குறிப்பாக கிழக்கு மக்களை போலி தேசியம், போலி உணர்வினை ஊட்டி ஏமாற்றிக் கொண்…
-
- 1 reply
- 502 views
-
-
நிதி மோசடிகள் குறித்த அறிக்கை மத்திய வங்கி ஆளுநரிடம்…! நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் குழுவின் இறுதி அறிக்கை நாளைய தினம் (07) மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான காலஎல்லை நிறைவடைந்த பின்னரும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இறுதி அறிக்கையினை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கமைய சுமார் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் மூவரடங்கிய குழு தெரிவித்துள்ளது. தனிநபர் முறைப்பாடுகள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://newuthayan.c…
-
- 0 replies
- 307 views
-
-
மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே; சுரேந்திரன் July 6, 2020 அண்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ்மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை பலமிழக்க செய்ததற்கு வெளி…
-
- 0 replies
- 321 views
-
-
அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன -கபே குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளில் ஒன்றான ஒரு சென்டிமீற்றர் சமூக இடைவெளியை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பொதுமக்களின் கவனமின்மை காரணமாக மீண்டும் பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றதென கபே அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்பை கவன…
-
- 0 replies
- 303 views
-
-
இனவாத சிந்தனையுடைய வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்- சுமனரட்ன தேரர் இனவாத சிந்தனையுடன் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை இனங்கண்டு, மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரட்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அம்பிட்டிய சுமனரட்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க நீர் கூட இல்லாமல் சில குடும்பங்கள்…
-
- 1 reply
- 315 views
-
-
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்! கொரோனா நிலைமை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகள் இன்று (06) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 – 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. https://newuthayan.com/கல்வி-நடவடிக்கைகள்-ஆரம்ப/ …
-
- 0 replies
- 296 views
-
-
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்படும் சகல இடங்களிலும் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்வதற்கு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக, அவர்கள் மட்டும் ஜூலை மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை தபால் மூல வாக்கை செலுத்த முடியும். சகல பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படையினர் , சிவில் பாதுகாப்பு திணைக்களம் , சுகாதார பிரிவினர் ஆகியோருக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் காரியாலயங்களில் ஜூலை 16ஆம் திகதி காலை …
-
- 0 replies
- 262 views
-