ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142953 topics in this forum
-
அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இணையத்தில் மட்டுமாவது இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500யூரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்த…
-
- 0 replies
- 700 views
-
-
மாகாணசபைகளில் பெண்களுக்கு 30 வீத இடஒதுக்கீடு! - புதிய சட்டம் கொண்டு வரத் திட்டம். [sunday 2015-05-24 08:00] மாகாண சபைகளில் பெண்களுக்கு 30 வீதம் ஒதுக்கீடு வழங்க மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தன என்றும் தெரியவருகிறது. இலங்கையில் நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு பிரதிநிதித்தும் இருந்தாலும் அது போதாது என்ற கருத்தே நிலவிவருகிறது. குறிப்பாக மாகாண சபைகளில் 6 சத வீத்திற்கும் மேலா…
-
- 0 replies
- 335 views
-
-
வலுவடைகிறது சிறிலங்கா நாணயப் பெறுமதி இந்த ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி அதிகரித்து வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசெம்பர் 31ஆம் நாள் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 184.69 ரூபாவாக இருந்தது. இது நேற்று 180.19 ரூபாவாக குறைந்துள்ளது. ஒரு மாத காலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 4.50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளினால், சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. எனினும், இந்த ஆண்டில், சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வலுவடைய ஆரம்பித்து…
-
- 0 replies
- 537 views
-
-
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியர் கைது கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த, 34 வயதுடைய இந்தியரின் பயணப் பொதியிலிருந்து 1 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். http://athavannews.com/கொக்கேய்ன்-போதைப்பொருளு/
-
- 0 replies
- 392 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 FEB, 2024 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இது தொடர்பில் யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்க…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச மற்றும் நகர சபைகளின் அபிவிருத்திக்கென நிதி எதுவும் வழங்கப்படமாட்டாது என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான அபிவிருத்திக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் தெரிவித்துள்ளார். நெடுங்கேணி பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுவிற்கான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இதன் போது பிரதேச அபிவிருத்திக்கென நிதி ஒதுக்கீடு தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாருக்,உங்கள் சபைகளின் அபிவிருத்திக்கான நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 773 views
-
-
அத்தாஸின் கட்டுரைகளை சிங்களத்தில் மொழிபெயர்ப்பவருக்கும் அச்சுறுத்தல்! அலுவலகத்துக்கு வந்து மிரட்டிச் சென்றனர் "லங்காதீப' சிங்களப் பத்திரிகையின் மாகாணச் செய்தி ஆசிரியர் டபிள்யூ, ஜி. குணரத்ன நேற்று அவரது அலுவலகத்தில் வைத்து வெளியார் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டார். குணரத்ன அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவேளை, அங்குவந்த வெளி யார் ஒருவர், அவருடன் செய்தி விடயமாக கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்து அலுவலக வாசலில் அனுமதி பெற்றார். மூன் றாம் மாடியில் உள்ள செய்திப் பிரிவுக்கு சென்ற அந்த நபர், "சண்டே ரைம்ஸ்' பத்திரிகையில் இக்பால் அத்தாஸ் எழுதும் கட்டுரையை சிங்களத்தில் மொழி பெயர்த்து ""லங்காதீப''வில் வெளியிடுவதற்குப் பொறுப்பாக உள்ள குணரத்தினவிடம் சென்று, இனிமேல் அவ்வாறு செய…
-
- 0 replies
- 1k views
-
-
மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் வவுனியாவில் கைது! [sunday 2015-06-14 07:00] மாணவர்களைத் துஸ்பிரயோகம் செய்த வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயகெனடி தெரிவித்தார். பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தின் குறித்த ஆசிரியர் சிறுமிகள் மீது தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்து பூவரசன்குளம் பொலிஸாரிடம் அப்பகுதி மக்களும், தாய் சிறுவர் இல்ல அருட் சகோதரி ஒருவரும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து குறித்த ஆசிரியர் சில நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்றுமுன்தினம் பொல…
-
- 0 replies
- 671 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப…
-
- 1 reply
- 581 views
-
-
தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு March 16, 2024 சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாற்பது சிவில் அமைப்புகள் இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்…
-
- 0 replies
- 218 views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
- 19 replies
- 5k views
-
-
இலங்கையின் தென்பகுதியில் வன்முறை! கரந்தெனிய பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு!! கரந்தெனிய வைத்தியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வைத்தியர் பிரியங்க ஜயசிங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களின் சொத்துக்களுக்கு பிரதேச மக்கள் சேதம் விளைவித்துள்ளனர். இதனால் பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடுகள், கடைகள் மற்றும் பிரதான சந்தேக நபரான வைத்தியர் ஒருவரின் மருத்துவ ஆய்வு கூடம் ஆகியவற்றை ஆத்திரமுற்ற மக்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவக் கப்டனின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
-
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
பேராதனை பல்கலைக்கழக மாணவி பானுசா சிவப்பிரகாசம் தற்கொலை தொடர்பினில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரினை பங்காளிகளாக கொண்ட டாண் தொலைக்காட்சி குழும ஊடகவியலாளர் ஒருவர் தேடப்படுகின்றார். அர்ஜீனன் கோவிந்தபிள்ளை என்றழைக்கப்படும் குறித்த நபர் தன்னையொரு ஊடகவியலாளர் எனவும் தன்னை காவல்துறையோ எவருமோ ஒன்றும் செய்யமாட்டாதெனவும் சவால் விடுத்தே பாலியல் துண்புறுத்தல்களை செய்திருந்ததாக தெரியவருகின்றது. முகப்புத்தகம் மற்றும் கைதொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலையினையடுத்து குறித…
-
- 2 replies
- 2.4k views
-
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு! இலங்கையில் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு…
-
-
- 19 replies
- 1.8k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 778 views
-
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் தவறில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பேசப்படாத எந்த விடயத்தை அமெரிக்கால் சென்று பேசவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் வெளிப்படுத்திய கருத்துக்களையே அமெரிக்காவிலும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு விரோதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசியப் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை துரோகச் செயலாக கருத முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்ட…
-
- 0 replies
- 579 views
-
-
யுத்தத்தில்தான் கைவிட்டோம்; கையெழுத்தாவது போடமாட்டோமா? இதுதான் தமிழனின் தலையெழுத்தா? தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத் தளங்களில் போடப்படும் பதிவுகளோடும்தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது. அன்பான தமிழ் மக்களே எங்களிடம் சிறந்த பேச்சுத்திறனும், அபூர்வமான நடிப்புத்திறனும் உண்டு அதனால் தான் நாம் எமது இனத்தினை இழந்து, கனவை சிதைத்து நிற்கின்றோம். இல்லையாயின் எங்கள் இதயத்தின் இலட்சியமான விடுதலைப் போராட்டத்தை இழந்து இன்று அரசியல் அநாதைகளாக நின்றிருக்க மாட்டோம்.வெளியிலிருந்து பேசுவதும் விமர்சனம் செய்வதும், எள்ளி நகையாடி மற்றவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்துவதிலும் நாங்கள் கில்லாடிகள். விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலி…
-
- 4 replies
- 11.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 704 views
-
-
போர்க்குற்றம் புரிந்த படையினருக்கு இலவச வீடும், பொது மன்னிப்புமாம்! Published on November 19, 2011-10:56 am இறுதிப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு அடையாளப்படுத்தியுள்ள படையினர் அனைவருக்கும் இரண்டு வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று அவர்களது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சனல் 4 தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காட்சிகளில் உள்ள படையினர் மற்றும் கேணல் ரமேஷ் உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியில் காணப்படும் படையினர் ஆகியோரை அடையா…
-
- 0 replies
- 670 views
-
-
சிறிதரனுக்கு எதிராக துண்டுப்பிரசுரம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டும் உள்ளன. சிறிதரனின் மோசடிகளும் ஊழல்களும் எனத் தலைப்பிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் முன்னாள் போராளிகளை சிறிதரன் பிடித்துக் கொடுத்தவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து ஐ.நாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சூரியசிங் என்பவருடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டு, சுயநலமாக நடந்தனர் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இந்த துண்ட…
-
- 6 replies
- 597 views
-
-
அடிப்படைத் தேவைகளுக்கு போராட வேண்டிய நிலை - வீட்டுத்திட்ட நிதியை வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் எவ்வித பலனுமில்லை தமிழர் தாயகப் பகுதிகளில் இன அழிப்பு போர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், போரினால் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், வவுனியா - பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்துக்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா � பாரதிபுரத்தில் கடந்த…
-
- 0 replies
- 194 views
-
-
மைத்திரியின் அனுமதியின்றி சுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் தடை! [Wednesday 2015-07-15 19:00] ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரது அனுமதியின்றி அக் கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட உரையொன்றை ஆற்றினார். அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் தான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரபட்சம் இன்றி நடுநிலை வகிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று ந…
-
- 0 replies
- 255 views
-
-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெல்வதல்ல முக்கியம், நாம் பிரதிநித்துவப்படுத்தும் மக்களின் வெற்றியே முக்கியமென திருகோணமலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அரசியல் ஆய்வாளரும் இளம் வேட்பாளருமான ஆ.யதீந்திரா தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்ற நிலையில், நேற்றை தினம் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டமொன்று திருகோணமலையிலுள்ள சில்வெஸ்டர் உல்லாச விடுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் த.தே.கூ. திருகோணமலையில் இம்முறை இரு ஆசனங்களை வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோரிக்கை தொடர்பில் பேசிய போதே யதீந்திரா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மே…
-
- 0 replies
- 323 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆற்றியஉரையை தாமே தயாரித்து வழங்கியதாக பிரி;த்தானிய நிறுவனம் வெளியிட்ட தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.2010 ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் ஜனாதிபதி ஆற்றிய உரையை தமது நிறுவனமே தயாரித்ததாக பிரித்தானியாவின் பெல் பொட்டின்கர் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். குறித்த உரை சிறப்பானதாக இருந்ததாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார். எனினும் குறித்த உரையில் அடங்கியிருந்த பதங்கள் குறித்து நிறுவனம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதியின் இந்த உரையில் நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனம் அமைந்திருக்கிறது. எனினும் ஒரு அரசாங்கம் பயங்கரவாதிகளுடன் நடத…
-
- 3 replies
- 988 views
-