ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . இத்தகைய பின்னணியிலேயே, கொவிட் 19ஐ கவனத்திற்கொள்ளும் அதேவேளை, முள்ளிவாக்கால் படுகொலையின் பதினோராவது ஆண்டு நினைவுகூரலையும் முன்னனெடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைவாக, இந் நினைவுகூரலை இணையவழியாக ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது. சிறீல…
-
- 0 replies
- 431 views
-
-
(செ.தேன்மொழி) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது. இதன் எச்சரிக்கை கருத்திற் கொள்ளமல் வினோதமடைய முயற்சிக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவையும் தட்டுவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் சுமேந்ர பெரேராவை விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இராணுவத்தினரிடம் எவ்வகை ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவின்றி செய…
-
- 19 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளபட்டு வருகின்றது . இன்று காலை 10.30 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டு குழுவால் முன்னெடுக்க பட்டு வருகின்றது . இதன் படி 10.30 மணிக்கு பொது சுடர் ஏற்றப்பட்டு ,அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரகடன உரை நிகழ்த்த படவுள்ளது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் தோறும் இராணுவ, பொலிஸ் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையாக பொலிஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது . https://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 453 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்.. என்று சற்று முன்னர் இனழிப்பு போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக மலர் தூவி அஞ்சலித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த அஞ்சலி நிகழ்வின் போது பொ…
-
- 0 replies
- 282 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுவரும் நாடுகளில் இலங்கை மற்றும் சீனா முன்னணியில் உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் முன்னாயத்த ஏற்பாடுகள் மிக சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உலக அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கலக்கம் மற்றும் பிரித்தானிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள ஆய்வொன்றின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை மற்றும் சீ…
-
- 67 replies
- 5.6k views
-
-
லண்டன் கார்டியன் பத்திரிகையில், ஈழம் என்பது எந்த புகழ் மிக்க சுற்றுலா நாட்டின் வேறு பெயர் என்று கேட்ட கேள்வியால், கொதிதெழுந்த இலங்கை தூதரகம். போட்டிக் கேள்விக்கு பதிலை சரியாக சொல்பவர்களுக்கு பரிசு என்ற அடிப்படையில் கேட்கப்படட கேள்வியினையே பொறுக்க முடியாத நிலையில் இலங்கை தூதரகம் உள்ளது. பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு இலங்கைத்தூதர் கண்டன கடிதம் அனுப்பியதை தொடர்ந்து, அது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரச்னை என்னெவெண்டால், ஈழம் எண்ட சொல்லை அழுத்தினால், அது கூகுளை அழைத்து.... புலிகள் குறித்த தளங்களை கொண்டு வருகிறதாம்... அடேங்கோக்க மக்கா.... http://www.dailymirror.lk/top_story/SL-demands-retraction-of-Guardian-Travel-Quiz-with-reference-to-Eelam/155-188…
-
- 5 replies
- 1.4k views
-
-
(ஆர்.யசி) விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு கிழக்கில் எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க முடியாது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர வேண்டுமெனில் உரிய பிரதேசங்களில் பொலிஸ் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது பாதுகாப்பு அமைச்சு. நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை அவதானிக்க புலனாய்வுத்துறை மற்றும் மேலதிக இராணுவம் வடக்கு கிழக்கில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளை நினைவுகூறும் விதத்தில் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த அனை…
-
- 4 replies
- 733 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நாம் சொல்லவில்லை – கெஹெலிய ரம்புக்வெல தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியற் கைதிகளை விடுதலைசெய்வதற்கு அரசாங்கம் உடன்படவில்லை. அங்கு பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது என முன்னாள் அரசாங்க பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். “அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று யார் சொன்னது? அங்கு பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது, விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை” என அவர் கூறியுள்ளார். “இது தான் நாம் எடுத்த முடிவு. இந்த நாட்டுக்கு அதிகாரப் பகிர்வு தேவையானால், அல்லது அதிகாரச் சமநிலை தேவையானால், அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக…
-
- 1 reply
- 430 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார். அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30 ஆம் திகதிவரை நீதிவான் ஒத்திவைத்தார். யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நாளையும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்டு அந்த நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் …
-
- 3 replies
- 531 views
-
-
கே .குமணன் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளைய தினம்(மே 18) உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அறிவித்துள்ளது . இந்நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்த அருட் தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் கருத்து தெரிவிக்கையில் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை நாங்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க இருக்கின்றோம் . ஏற்கனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் மூலம் ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவித்தலில் படி நாளையதினம் குறித்த நேரத்துக்கு உரிய ஒழுங்குமுறையின் படி நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாட…
-
- 0 replies
- 407 views
-
-
கே.எல்.ரி.யுதாஜித் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நாளை (18) இரவு 07 மணிக்கு கோவில்கள், தேவாலயங்களில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் மணிகளை ஒலிக்கச் செய்து, அஞ்சலி செலுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மே 18ஆம் திகதி, தங்கள் வீடுகளில் மாலை 06 மணி தொடக்கம் இரவு 07 மணி வரையான காலத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தவும். “போர் அவலங்களுக்கு மத்தியிலே, உணவுக்கு வழியின்றி, வெறும் கஞ்சியைக் குடித்து எமது உறவுகள் உயிர்காத்த கொடுமையை நினைவுகூரும் முகமாக இன்றையதினம் …
-
- 1 reply
- 527 views
-
-
ஆண்டுதோறும் மரணித்த மக்களுக்காக நாம் நினைவேந்தலைச் செய்து வருகின்றபோதும் இம்முறை உலகத்தொற்று நோயான கொரோனாவால் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் எம்மக்கள் கொல்லப்பட்டு, மண்ணோடு மண்ணாகிய இந்நாளில் அவர்களை நினைவு கூருவது நம் எல்லோரதும் இதயபூர்வ கடமையாகும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து 11ஆண்டுகளாகின்ற நிலையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 11 ஆண்டு நிறைவையொட்டி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வில் ஆறாத ரணமாக இ…
-
- 0 replies
- 426 views
-
-
தமிழினப் படுகொலையின் மக்கள் அவலத்தை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி 2009, தமிழினப்படுகொலையின் போது மக்கள் உணவுக்காக பட்டதுன்பத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி திட்டம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்கநாளான இன்று தமிழர் தாயகத்தில் தொடங்கிவைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் வழங்கபட்டன. யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின் அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழினப்படுகொலையின் குறியீடாக ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ அமைகின்றது. இந்நிலையில் தமிழர் தாயகத்தில் எதிர்கால எதிர்கால சந்ததியினருக்கும் இளைய தலைமுறையினருக்கு தெரியப்ப…
-
- 4 replies
- 702 views
-
-
க.பொ.த (உ/த) பரீட்சையில் கல்குலேட்டர்களுக்கு அனுமதி! க.பொ.த (உ/த) பரீட்சையின் போது கணிபொறி எனப்படும் கல்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதியளித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி இம்முறை பரீட்சையின் போது கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம், பயோடெக்னொலஜி பொறியியல் மற்றும் தகவல் தாெழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்காக கல்குலேட்டர்களை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/க-பொ-த-உ-த-பரீட்சையில்-கல்/
-
- 2 replies
- 582 views
-
-
சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: உருத்திரகுமாரன் எம்.ஏ.சுமந்திரன் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச் செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப் புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் எச்சிரித்துள்ளார்;. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கருத்துப்பதிவில், “சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொ…
-
- 0 replies
- 680 views
-
-
“படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது. குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெற வேண்டுகின்றேன்” இவ்வாறு யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார். கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தியாகி அறக்கட்டளையினால் வீடு ஒன்று அமைத்து வழங்கப்பட்டது. இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமிருந்த பெருமளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தற்போது இராணுவம், கடற்படை மற்ற…
-
- 2 replies
- 655 views
-
-
ஆயுதப் போராட்டத்தை ஒருநாளும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஆயுதம் தூக்கியதால் பிரபாகரனையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. 5 வயதில் இருந்து சிங்களவர்களுடன் வாழ்ந்து பழகிய நான், அவர்களுடன் வாழ்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தானது தமிழர்கள் மத்தயில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து தவறென பல்வேறுபட்டோர் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கும் நியாயப்படுத்தல்களுக்கும் தமிழ்ப்பெண் வெளியிட்ட காணொளி இதோ, https://www…
-
- 2 replies
- 926 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது. நேற்று இரவின் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், யாரோ மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர். அரசியல்ரீதியான விவகாரங்கள் வேறு வடிவங்களை பெறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது. https://www.pagetamil.com/123675/
-
- 40 replies
- 3.5k views
-
-
பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன் by செய்தியாளர் பூங்குன்றன் ‘போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய மிதவாத நடிப்பாளர்கள் எம்மைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள்.’ எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் ஆயுதப் போராட்டம் செய்ததால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் நிராகரிப்பதாகவும் ,…
-
- 21 replies
- 2.4k views
-
-
தஞ்சையில் உள்ள ஈழப்போர் நினைவிடம் போல் முள்ளிவாய்க்காலிலும் நினைவிடம்- நினைவுகூரல் அறிக்கையில் மாவை தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்தள்ள அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், வரும் 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் (18.18.18) தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்…
-
- 2 replies
- 570 views
-
-
புதினம் பார்க்க...மக்கள் கூடினர். கூடவே சொறீலங்கா பொலிஸ் மற்றும் இராணுவம் போர்க்கால அடிப்படையில் ஆயுதங்களுடன் குவிப்பு. நன்றி: முகநூல்.
-
- 35 replies
- 3.8k views
-
-
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட வேண்டும் -மாவை சேனாதிராஜா முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விடுத்தள்ள அறிக்கையில் வரும் 18 ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்தில் தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்களுக்காக கோயில்களில், வீடுகளில் அமைதியாக விளக்கேற்றி அஞ்சலிப்போம் என அவர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் தமிழ்நாட்டில் தஞ்சையில் ஈழப்போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளமை போல், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நினைவிடம் ஒன்று நிறுவப்பட்டு அறக்கட்டளையினால் நிர்வகிக்கப்படுவதற்கு பொருத்தமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது த…
-
- 2 replies
- 455 views
-
-
மீட்பு நிவாரண பணிகளில் கடற்படையினர் சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கும் இலங்கை கடற்படையின் பல பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளிற்காக கடற்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கடற்படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தென்மாகாணத்தில் தவளம, உடுகம,நாகொட பகுதிகளிலும் சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரவிலும் கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது. துரித நடவடிக்கை மீட்பு பிரிவினரும்,விசேட படைப்பிரிவொன்றை சேர்ந்தவர்களும் நடவடிக்கையில் ஈடுபடுத…
-
- 0 replies
- 438 views
-
-
மே 18 தமிழர் வரலாற்றில் உச்சம் தொட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் அறிக்கை 2020 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி – இன்றுடன் – முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடைபெற்று 11 வருடங்கள் நிறைவடைகின்றது. காலம்காலமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்குள் ஈழத்தமிழினம் சிக்குண்டு பல்வேறு படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் . இத்தகைய இனப்படுகொலைகளின் உச்சம்தொட்டு ஈழத்தமிழர்கள் மிக மோசமாக 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசம் பார்த்திருக்க முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட வலிநிறைந்த நினைவு நாளே இன்றாகும். மகாவம்ச மனநிலைகொண்ட, சிங்கள-பௌத்த பேரினவாத அரசால் இந்த நூற்றாண்டின் இன அழிப்பு ஈழத்தமிழர் தாயகத்தில் மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்…
-
- 0 replies
- 511 views
-
-
யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில தினங்களாக மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றன. இந்நிலையில் சங்கானை, உரும்பிராய் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகம…
-
- 0 replies
- 549 views
-