Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வல்லிபுர ஆழ்வாருக்கு செல்ல கட்டுப்பாடுகள் இறுக்கம் June 22, 2020 வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை. சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்களே வழிபாடுகளில் ஈடுபட முடியும். அந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கூடுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தது. …

  2. ரயில்முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை! வவுனியா – பெரியகட்டு 41வது மைல் கல்லுக்கு அண்மையில் இன்று (22) காலை ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னார் – எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் இன்று காலை தனது காரை, ரயில் பாதையின் அருகில் நிறுத்திவிட்டு, மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சடலம், மடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பறையநாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/புகையிரதத்தின…

    • 2 replies
    • 606 views
  3. கருணா மீது சிஐடி விசாரணைக்கு உத்தரவு! தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த போது ஆனையிறவில் ஒரே இரவில் 2000 – 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனும் வி.முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். கருணாவின் குறித்த கருத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தென்னிலங்கை மக்களிடத்திலும் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. .https:/…

    • 14 replies
    • 1.6k views
  4. -எஸ்.எம்.எம்.முர்ஷித்- எங்களை நாங்களே பாதுகாத்துக் கொண்டு எங்களுடைய இளைஞர்களுக்கு வழிகாட்டிக் கொண்டு பிரச்சனைகளை மிக நாசூக்காக அனுக வேண்டிய காலம் வந்துள்ளது என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கீப் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில்பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபானை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- தமிழ், சிங்களம், முஸ்லிம் சகோதரர்கள் பயணித்தால்முஸ்லிம் சகோதரனை இறங்கி விசாரணை செய்கின்ற காலம் சஹ்ரானுக்கு பிற்பட்ட காலம். இலங்கையிலுள்ளஒவ்வொரு முஸ்லிம் சகோதரனைய…

    • 0 replies
    • 441 views
  5. நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு-ஹர்ஷ டி சில்வா நாட்டில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பணவீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியால் கடந்த செவ்வாய்க்கிழமை 115 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். குறித்த பணம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்குக் குறைந்த வட்டி அடிப்படையில் கடன்களை வழங்குவதற்காக அச்சிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் வங்கி அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப் பொருளாளரால் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ht…

  6. குமார் பொன்னம்பலத்தை சுட்டுக் கொன்றது யார்? வெளிவந்தது பகீர் தகவல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு நியாயப்படுத்தியவேளை குமார் பொன்னம்பலம் சந்திரிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நாடு ஒற்றையாட்சி எனவும் பௌத்த சிங்கள நாடு என சம்பந்தன் ஐயா ஏற்றுக் கொண்டிருக்கின்றார். விடுதலைப்புலிகளால் நல்ல நோக்கத்துக்காக…

  7. கருணா அம்மான் பயங்கரவாதியாகயிருந்தவேளை அநீதிகளில் ஈடுபட்டவர் எனினும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான போரில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ.பி. திசநாயக்க தெரிவித்துள்ளார். கருணா அம்மான் விடுதலைப்புலிகளை பிளவுபடுத்தினார்,என தெரிவித்துள்ள எஸ்.பி.திசநாயக்க இதன் காரணமாகவே அந்த அமைப்பிற்கு எதிரான போரில் அரசாங்கம் வெற்றிபெற முடிந்தது என தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் கருணா அம்மான் தீர்க்ககரமான சக்தியாக விளங்கினார் என அவர் தெரிவித்துள்ளார். கருணா அம்மானிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த விடயம் கவனத்திற்கு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்…

    • 1 reply
    • 525 views
  8. வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழின் பல பிரதேசங்களிலிருந்தும் பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழலில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆலய வளாகத்திற்குள் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிலரும் முப்படையினரும் பாதணிகளை கழற்றாது ஆலயத்திற்குள் பிரவேசித்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இவர்களின் இந்த செயற்பாட்டை அவதானித்த பக்கதர்கள் ஆலயத்தின் தொன்மையையும் மதிப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட…

    • 1 reply
    • 621 views
  9. வடக்கின் புராதன சின்னங்களை மாகாண சபையே காப்பாற்றத் தவறியது – தவராசா குற்றச்சாட்டு! சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது பயன்படுத்தாது அசமந்தப் போக்காக இருந்துவிட்டு இன்று மாயகண்ணீர் வடிப்பதில் அர்த்தம் இல்லை. வடக்கின் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை காப்பாற்றத் தவறியது வடக்கு மாகாணசபையே என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் வடக்கிலும் தொல்பொருள் மற்றும் புராதன சின்னங்களை அடையாளம் காண்பதற்கு செயலணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலணியின் உறுப்பினர் ஒருவர் கூறிய கருத்து தொடர்பில் கருத்து வெளி…

  10. கருணாவுக்கு கையை விரித்த மஹிந்த! முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தமது கட்சியில் போட்டியிடவில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். கடந்த நாட்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் போர்க்காலத்தில் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே பொதுஜன முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.ibctamil.com/srilanka/80/145554?ref=home-imp-flag

  11. விமானப்படையினரை தவிர இராணுவம், கடற்படையின் விசேட படைப்பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றவியல் விசாரணைப் பிரிவு, பொலிஸ் என பாதுகாப்பு துறையின் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போர் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வெளிநாடு சென்றால், கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரியும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூகா, சுவிஸர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் போலடிக் நாடுகளின் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சர்வதேச சட்டத்திற்கு அமைய இவர்களை கைது செய்யுமாறு…

  12. லெமூறியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் ; தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம் Post Views: 18 June 21, 2020 கனகராசா சரவணன் லெமூறியா கண்டத்தின் ஆதிக்குடிகள் தமிழர்கள் அந்த கண்டத்தின் நாடுகளிலே ஈழம் என்கின்ற ஒரு நாடு இருந்தது. அந்த கண்டம் வெடித்து சிதறிய போது அதில் உருவாகிய ஒரு தீவு தான் இலங்கை எனவே சிங்கள மக்களாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் என தமிழரசு கட்சியின் செயலாளரும் நாடாளமன்ற வேட்பாளருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார் . இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு அடி நிலம் கூட சொந்தமில்லை என் ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை கண்டித்து ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசு கட்சிய…

  13. மீண்டும் மன்னாரில் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள், ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. அதேநேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக இனம் தெரியாத சந்தேகநபர்களால் சேதப்படுத்தப்பட்டு…

    • 4 replies
    • 752 views
  14. பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் – மாவை ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களைவிட பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கனிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தேர்தலில் எந்த அரசாங்கம் அமையப்போகின்றது என்று தெரியாது. எனினும் எந்த அரசாங்கம் ஆட்சியமைகின்றது என்று பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பெரும்பான்மை பலத்துடன் வெற்ற…

    • 3 replies
    • 606 views
  15. அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் கோமாரி வாடியடி கடற்கரைப் பகுதியில் சுமார் 15 அடி நீளமான இராட்சத மீன் ஒன்று கரையொதிங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் கோமாரி கடற்கரையில் கரையொதியுள்ளதுடன் இதனை பார்வையிடுவதற்காக கிராம மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு சென்ற கோமாரிப்பகுதி இராணுவம் மீனை பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிசாருக்கும் மீன் பிடி திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவ் இராட்சத மீனை துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் புதைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்பகுதி பிரதேச சபை உறுப்பினர…

  16. In இலங்கை June 20, 2020 1:56 pm GMT 0 Comments 1304 by : Litharsan மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான தரவன் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பனை மரக் காட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் சனிக்கிழமை (20) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப் பரவல் இன்று காலை (சனிக்கிழமை) ஏற்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் நகர சபையின் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் உடனடியாக வவுனியாவிலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனி…

  17. யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன்நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/145535

    • 7 replies
    • 1.2k views
  18. In இலங்கை June 21, 2020 4:31 am GMT 0 Comments 1132 by : Dhackshala தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் நேற்று மாலை 6.30 மணியளவில் பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138ஆவது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.…

    • 0 replies
    • 470 views
  19. எப்போது சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது. இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். பொத்துவில் ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன். வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.…

    • 0 replies
    • 434 views
  20. In இலங்கை June 21, 2020 4:51 am GMT 0 Comments 1123 by : Dhackshala மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 88 ஆயிரத்து 842 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆவணி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பொது தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் முக்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியிலும் சுகாதார முறைப்படி நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை மன்னார் ம…

    • 0 replies
    • 374 views
  21. வல்வெட்டித்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதன்போது நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை, கொம்மாந்துறையில் கடந்த வாரம் கிணறு ஒன்றிலிருந்து 3 குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் மீட்கப்பட்டன. இந்நிலையில் சீலாப்புலம் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணிவரை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. ஊரணி இராணுவ முகாம் பட…

  22. குப்பை கொட்டியவரை பிடிக்க சென்ற சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்! யாழ்ப்பாணம் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு சென்ற நபர் அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று (21) அதிகாலை 4.40 மணியளலில் ஸ்டான்லி வீதி அத்தியடிச் சந்தி பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதர பரிசோதகர் சிகிக்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுவதால் அதற்கு அண்மித்த இடங்களில் உள்ளவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். …

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய பெருமை எனக்கே - விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே. போர் நடைபெறுகையில் நாடாளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்கதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் கூறி நானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். பொத்துவில் – ஊறணியில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-“வடக்கு, கிழக்கில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர…

    • 5 replies
    • 643 views
  24. போரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை கருணா வழங்கியதன் காரணமாகவே போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது." இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில்அவர் மேலும் தெரிவித்ததாவது "போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் படையினர் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் அமைப்பினர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். இராணுவத்தினருக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் பல்வேறு வழிமுறைகள் ஊடாகத் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். போர்க்காலத்தில் கருணா அம்மான் கி…

  25. மீண்டும் ஐந்து அம்ச கோரிக்கை முன்வைப்பு! முல்லைத்தீவு மாவட்ட ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (20) 1200வது நாளில் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து குறித்த மகஜர் அனுப்பப்பட்டது. அவ் மகஜரில் உள்ள கோரிக்கைகள் வருமாறு, 1. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும், இறுதி யுத்தம் முடிவிற்கு வந்த (2008-2009) தருணத்தில் சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக கைது செய்யப்பட்டவர்கள், சகலரினதும் பெயர்ப் பட்டியலை உடனடியாக வெளியிட ஸ்ரீலங்கா அரசுக்கு சர்வதேசம…

    • 2 replies
    • 539 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.