Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியாக தேர்தலில் களமிறங்கியுள்ளது – அனந்தி சசிதரன் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை அல்லது முன்னாள் போராளிகளை நான் அரசியலுக்குக் கொண்டுவர விரும்பினேன்.இவ்வாறிருக்க, சுமந்திரன் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறி, இன்றும் தமிழ் அரசியல் கைதிகளாக புனர்வாழ்வு பெற்று அரசியல் கைதிகளாக இருந்த முன்னாள் போராளிகள் இன்றைக்கும் தடுப்பில் இருக்கின்றார்கள்.ஆனால், தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப் புலிகளுடைய அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கு மாறுபட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்த சுமந்திரன் திடீர் அக்கறை கொண்டுள்ளார்.விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஆயுதப்…

  2. கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் தந்தை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது உடல் பூராகவும் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர…

  3. -விஜயரத்தினம் சரவணன் ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள - முஸ்லிம் கட்சிகள், தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார். முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில், நேற்று (16) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/உணர்வின்றி-வாக்களிப்பதை-கைவிடவும்/72-252068

    • 0 replies
    • 457 views
  4. -எம்.றொசாந்த் சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோமெனவும் கூறினார். வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரம் கிடைத்தால், அதனால் கிடைக்கும் நிதியையும் மக்களுக்கே வழங்குவோமெனவும், அவர் தெரிவித்தார். நல்லூரில், இன்று (17) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களிடமே-சலுகைகளை-வழங்குவோம்/71-252066

    • 0 replies
    • 378 views
  5. கடற்படையை தாக்கியதாக கைதானவர்களில் மூவருக்கு பிணை! யாழ்ப்பாணம் – அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு, இன்று (17) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றநிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 9ம் திகதி யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தை, கடற்படையினர் சுற்றிவளைத்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 10ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையி…

  6. எழுதுமட்டுவாழில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும், இதனைப்பயன்படுத்தி…

  7. (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொது காரணிகளின் நிமித்தம் தீர்வு வழங்கப்படும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் புதிய அரசாங்கத்தில் பரிசீலனை செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய அரசாங்கத்தில் உரிமைக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமோக வெற்றிப் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட…

  8. - Abu Zainab - ஜேர்மன் நாட்டின் University of Cologne யினால் ஏற்பாடு செய்யப்பட்ட Tilbury House World Schools Debate Championship எனும் சர்வதேச பாடசாலை மட்ட விவாத மேடையில் இலங்கை அணி வெற்றி பெற்று உலகளாவிய Champion பட்டத்தை வசப்படுத்தியிருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற உழைத்த அந்த மாணவர் அணியினையும் பயிற்றுவித்த ஊக்கப்படுத்திய அக்கறைக் குழுக்கள் அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். இவ்வெற்றி 1996 உலகக் கிண்ண வெற்றிக்கு சமாந்தரமான ஒரு வெற்றியகும். குறித்த விவாத அணிக்கு தலைவராக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் குறித்த தொடரில் உலகளாவிய ரீதியில் சிறந்த விவாதப் பேச்சாளருக்கான முதலாம் நிலையையும் றோயல் கல்லூரியின் மாணவன் Shalem Sumanthiran (ஜனாதிபதி சட்டத்தரண…

    • 54 replies
    • 6.3k views
  9. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றுவேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) நீர்கொழும்பில் நடைபெற்ற கட்சியின் பிராந்திய காரியாலய திறப்பு நிகழ்வில் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தவறான நிர்வாகம் காரணமாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் லீசிங் கம்பனிகள் வாகனங்களை கடத்துகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை அவர்கள் மதிக்கவில்லை. அரசாங்கம் மாபியாக்களுக்கு அடிப்பணித்துள்ளது. டின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி அறிவித்த …

    • 1 reply
    • 890 views
  10. (எம்.ஆர்.எம்.வஸீம்) அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கையால் அமைச்சர்களுக்குள் மாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளும் முரண்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியே எமக்கு சவாலாக இருக்கப்போகின்றது. 26 வருடங்கள் நிராகரிக்கப்பட்ட தலைவர் தற்போது சிறந்தவராக முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அரசாங்கத்தில் இருக்கும் அதிகாரங்களை தனக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக…

  11. இ.தொ.காவின் பொதுச் செயலாளராக ஜீவன் நியமனம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று கொட்டகல சீ.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபை,நிர்வாக சபை ஆலோசனையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். அத்துடன் பொதுச் செயலாளர் பதவியை வகித்த அனுசா சிவராஜா அவர்கள் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.-(3) http://www.samakalam.com/செய்திகள்/இ-தொ-காவின்-பொதுச்-செயலாள/

    • 1 reply
    • 717 views
  12. தாமும் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள் - ஆனந்தசங்கரி . தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள் இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள். என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ , அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வ…

    • 1 reply
    • 531 views
  13. காணிகளை அபகரிக்கும் நில அளவை திணைக்களம்: மக்கள் எதிர்ப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை இன்று (17) காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றும் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத் திணைக்…

  14. “தொல்பொருள் சின்னங்களை அழிப்பது முன்னோர்களை அவமதிப்பதாகும்” -ஜே.ஏ.ஜோர்ஜ் எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பாதுகாப்பு செயலாளரான எனது தலைமையில் இரண்டு…

  15. ’தவளை அரசியலை நான் மேற்கொள்ளேன்’ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தான் விலகப்போவதாக வெளியாகும் செய்தி, திட்டமிடப்பட்ட பொய் என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொழும்பு மாவட்ட அரசியல் பிரமுகர்களின் இரகசியக் கும்பல்களால் நடத்தப்படும் இணையத்தளங்களில், சஜித்தை விட்டு மனோ விலகுகிறார் என்ற செய்தியொன்று, சிங்களத்தில் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இது அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்துள்ளார். …

  16. தேர்தலில் வெற்றிப்பெறுவதோடு சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன் பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் சகல குடும்பங்களுக்கும் 20,000 ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வீழ்த்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் வரை அந்த உதவித் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் 154 பிரச்சார கூட்டங்களை நடத்தியதாகவும், இந்த முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு 1000 கூட்டங்களை நடத்த எதிர்பார்பதாகவும் அவர் கூறினார். அதற்கும் அதிகமாக பிரச்சார கூட்டங்களை நடத்தி காட்டுமாறு …

    • 0 replies
    • 463 views
  17. மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு by : Jeyachandran Vithushan மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறிகள் விநியோகத்தின் ஊடாக 784.89 மில்லியன் ரூபாய் நேரடி நாட்டம் ஏற்பட்டிருந்ததாக அப்போது மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்ப…

    • 0 replies
    • 324 views
  18. கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை! by : Vithushagan இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- “இலங்கையில் முருகப்பெருமான…

    • 0 replies
    • 235 views
  19. எதிரிசிங்க குடும்பத்தை கைது செய்ய உத்தரவு! ஈரிஐ பினான்ஸ் நிறுவன பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசாங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றில் ஆஜராகாதமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/எதிரிசிங்க-குடும்பத்தை-க/

    • 5 replies
    • 802 views
  20. தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் – விக்னேஸ்வரன் தமிழர்கள் மான்புடன் வாழும் காலம் கட்டாயம் வரும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று(15) வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார். அவ்வறிக்கை வருமாறு, https://newuthayan.com/தமிழர்கள்-மான்புடன்-வாழு/

  21. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கத்தயார் – சுமந்திரன் புதிய அரசியலமைப்பில் எமது அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களிற்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த வேட்பாளர்களோடும் ஆதரவாளர்களோடும் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இன்று எமது கட்சியின் வவுனியா மாவட்ட குழுவினருடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வன்னி மாவடத்திலே இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆரா…

    • 1 reply
    • 434 views
  22. பாட்டலி, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர்களான விஜயதாக ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (17) முன்னிலையானார்கள். இதன்படி எவன்கார்ட் நிறுவனம் அரசாங்கத்தால் கையகப்படுத்தும் போது இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவித்து அதன் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளுக்காகவே குறித்த இருவரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். https://newuthayan.com/பாட்டலி-விஜயதாச-ராஜபக்ஷ/

  23. முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல் Bharati May 18, 2020 முன்னணி செய்தி இணையத்தளம் முடக்கப்பட்டது; இன்று காலை சைபர் தாக்குதல்2020-05-18T09:09:53+00:00Breaking news, உள்ளூர் இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் வைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக குறிப்பிட்ட இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டிருக்கின்றது. Tamil Eealam Cyber Arm என்ற அமைப்பே இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது. தமது வலைத்தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ள குறிப்பிட்ட இணையத்தள முகாமைத்துவம், இதை தமது ச…

  24. கடத்தல் வழக்கில் ஹிருனிகாவிற்கு அழைப்பாணை இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருனிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாகவே ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார். https://newuthayan.com/கடத்தல்-வழக்கில்-ஹிருணிக/ இது என்னடா இது மருதருக்கு வந்த சோதனை...........

    • 1 reply
    • 830 views
  25. டிரோன் கமராவின் மூலம் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு! மூவர் கைது! டிரோன் கமரா மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும் வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். நேற்று (16) அதிகாலை கிடைத்த தகவலில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில அடர்ந்த காட்டுப் பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் இரு கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டன. குறித்த சுற்றி வளைப்பினை மொனராகலை, அம்பாறை, பண்டாரவளை மதுவரி திணைக்களத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 பேர் கொண்ட குழு ஈடுபட்டனர். இதன் போது குறித்த பாரிய அளவிலான கஞ்சா சேனை டிரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு செய்யப்பட்டு சுற்றிவளைப்பு மேற…

    • 1 reply
    • 393 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.