ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 17 replies
- 3.1k views
-
-
புலிகளின் தங்கத்தை பீகொக் மாளிகையில் மறைத்து வைத்தாரா மகிந்த? மகிந்த ராஜபக்ச மோசடி செய்து பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான தங்கம் பீகொக் மாளிகையில் நீச்சல் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மகிந்த குடும்பம் அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லிய…
-
- 5 replies
- 1k views
-
-
ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த? பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தன…
-
- 20 replies
- 1.3k views
-
-
மேற்குலகத்துடன் மிகவும் ஆபத்தான விளையாட்டுக்களில் சிறிலங்கா ஈடுபடுகின்றது என்று சிங்களப் பத்தி எழுத்தாளர் சோனாலி சமரசிங்க சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 953 views
-
-
மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த போது கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும், வன்னி இறுதி யுத்தத்தில் இருந்து இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மீள்குடியேற்றினேன். இவ்வாறு மனித நேயத்துடன் தமிழ் மக்களுக்கு நான் இனம், மதம், மொழி கடந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில வங்குரோத்து நிலைக் கொண்ட ஆயுதக் குழுக்களில் இருந்து வந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றவர்களும், அவருக்கு துணைபோகும் சிலரும் என்னை தமிழ் மக்களின் விரோதிகளாக காட்ட முயலுகின்றார்கள் என தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,…
-
- 2 replies
- 698 views
- 1 follower
-
-
Posted on : 2008-05-08 தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம் இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]'கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது! - சிறிலங்கா எச்சரிக்கை!![/size] [size=4] [/size] [size=4]கியூபெக்கில் மனிதவுரிமைகளைப் பேணாத கனேடிய அரசு, மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் ஏனைய நாடுகளை குற்றம் சுமத்தக் கூடாது என சிறிலங்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 20வது அமர்வில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில் கியூபெக் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பிலும் உள்ளடக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.[/size] [size=4] [/size] [size=4]நவநீதம்பிள்…
-
- 2 replies
- 849 views
-
-
மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட நகல் யோசனைகள் முதலமைச்சரிடம் கையளிப்பு தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான நகல் யோசனைகள் இன்று பேரவை இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்தியும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உபகுழுவின் உறுப்பினர் தெரிவித்தார். கடந்த ஒருமாத காலமாக உபகுழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் பெறப்பட்ட யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் …
-
- 4 replies
- 479 views
- 1 follower
-
-
30வருட பயங்கரவாத யுத்தத்திற்குள் அகப்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய வட,கிழக்கு மக்கள் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஐக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்துவரும் சூழ்நிலையில், தமிழ், முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். இவரது செயற்பாடுகளினால் தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்பட்டு இன மோதல்கள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தவிடயம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, …
-
- 3 replies
- 587 views
-
-
திருமுறிகண்டியில் மீளக்குடியமர்விற்காக காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றிரவு 7.30 மணியளவிலேயே இவர்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கதறக்கதற வாகனங்களில் ஏற்றிச்சென்றுள்ளனர். முறிகண்டியில் பொது மக்களது நிலங்களை பறிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ள நிலையிலேயே, இச்செயற்பாட்டை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். முறிகண்டியில் தங்கியிருந்து சுமார் 64 குடும்பங்களை அவர்களது விருப்பமின்றி வலுக்கட்டாயமாக, இரண்டு பஸ் மற்றும் இரண்டு லொறி ஆகியவற்றில் ஏற்றி மீண்டும் வவுனியாவிலுள்ள முக…
-
- 1 reply
- 941 views
-
-
குரங்குகள் பயிர் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, பயிர் செய்யப்பட்ட நிலங்களை சுற்றி சிறுத்தையின் சிறுநீரைத் தெளிப்பது குறித்து விவசாயத் துறை கவனம் செலுத்தியுள்ளது. விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் நுழைவதைத் தடுக்க சிறுத்தை சிறுநீரை விரட்டியாகப் பயன்படுத்தலாம் என்று விவசாய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாசனை குரங்குகள் மற்றும் பபூன்கள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்றும், சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழ்நிலையால், சிறுத்தையின் சிறுநீர் போன்ற ரசாயனத்தை செயற்கையாக உற்பத்தி செய்து,இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை …
-
- 4 replies
- 435 views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியேற்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான், கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதன் பின்னர், பௌத்தர்களின் புனித தலமான தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
'20 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தே நானும் ஆட்சி செய்தேன்' 04 பெப்ரவரி 2016 'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார். தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக ஆரம்…
-
- 0 replies
- 327 views
-
-
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மேலதிக கொடுப்பனவினை வழங்க அனுமதி! தகுதி வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு மேலதிக கொடுப்பனவு ஒன்றை வழங்க திரைசேறி அனுமதி வழங்கியுள்ளது. திரைசேறியினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு செலுத்த தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய, அவர்களின் 2018 …
-
- 3 replies
- 579 views
-
-
உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர் சார்பில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிப்பு! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையாக 74 ரூபா முதல் 160 ரூபா என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்புக்கு தனித்தனியாக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகை மன்னாரில் ஆகும். அங்கு அந்த தொகை 74 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ள. அ…
-
- 1 reply
- 207 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவுசெய்யப்படாமையானது ‘ஒழுங்காக நடந்துகொள்ளவேண்டும்’ என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியிருப்பதாக படுகொலைகள் மற்றும் காணாமல்போதல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாகச் செயற்படுகிறது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விடயங்களைத் தவிர்த்து இலங்கை விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகள் இரட்டை வேடம்போடுவதாகக் குற்றஞ்சாட்டுவதற்கே இலங்கை விரும்பியது. “எனினும், அந்த நாடுகள் சர்வதேச ரீதியில் அரசியல் சக்திவாய்ந்த நாடுகள். ஆனால், எமது விடயத்தில் அவ்வாறு இல்லை. அங்கு சிறுபான்மையினர் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளத…
-
- 0 replies
- 943 views
-
-
நாட்டில் பிக்குகள் இல்லை : விகாரைகள் மூடும் அபாயம் நாளொன்றுக்கு 6, 7 பொளத்த பிக்குகள் சங்கத்தை விட்டும் விலகிச் செல்லும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதனால், விகாரைகள் பல மூடப்பட்டு வருகின்றன. சங்கத்துக்கு பிக்குகளை இணைத்துக் கொள்ள பிள்ளைகளைத் தேடிக் கொள்வது மிக சிரமமான ஒன்றாக மாறியுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அலவ்வ, வென்னொருவை சாராநன்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/2981
-
- 5 replies
- 419 views
-
-
இரணைதீவில் கடலட்டை கிராமம் ஒன்றை உருவாக்குவதற்க்கு டக்ளஸ் நடவடிக்கை கடந்த பல ஆண்டுகளாக யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் அண்மையில் இரணைதீவில் மீளக் குடியேறியிருந்தனர். எனினும், கடற்றொழில் நம்பி வாழுகின்ற இரணைதீவு மக்களின் புனர்வாழ்வுக்கு கடந்த அரசாங்கத்தினால் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் குறித்த மக்களின் பிரச்சினைகள் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, இரணைதீவு கடல் பிரதேசத்தின் சூழலியல் தன்மைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் ட…
-
- 0 replies
- 340 views
-
-
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு! இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர்…
-
- 0 replies
- 122 views
-
-
வன்னியில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வில் படையினரால் ஜானகபரத்தின் வடக்கேயுள்ள விடுதலைப்புலிகளின் பிரதான ஆயுத பரிமாற்று தளமான முன்னாகம் படைத்தளம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வீரகேசரி நாளேடு
-
- 0 replies
- 952 views
-
-
ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனி…
-
- 1 reply
- 985 views
-
-
மைத்திரி வைத்த வெடிகுண்டு! சிதறி போன மஹிந்தவின் கனவு [ திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2016, 04:07.08 AM GMT ] இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்ஷர்களின் பூரண ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளளார். இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பது தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதால், மஹிந்த அணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கத்திலிருந்து விடுவிட்டு, அதற்கு மாற்றீடாக வேறொரு அமைப்பினை உருவாக்கும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்…
-
- 0 replies
- 384 views
-
-
ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய வாகன கவன ஒலி போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர். அரசாங்கம் இந்தப்போராட்டத்தை நிறுத்த பல வழிகளிலும் முயற்சித்தது எனினும் அவையாவும் தோல்வி கண்டன. முதலில் அச்சுறுத்தலை விடுத்த அரசாங்கம் பின்னர் காவல்துறையினரை கொண்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு முனைந்தது எனினும் நீதிமன்றம் இந்தப்போராட்டம் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் இடம்பெறுவதாக கூறி அதனை தடுக்கமுடியாது என தீர்ப்பளித்தது. இந்தநிலையில் சில இடங்களில் காவல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்ற வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பம்பலபிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க மீது காவல்துறையினர் த…
-
- 0 replies
- 732 views
-
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் சட்டம் ஒரேமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது ” தீர்வை வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது எனவும், அதன்முதலாவது கூட்டு அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 2025 ஆம் ஆண்டி அதிகளவான ஏற்றுமதி வருமானத்தினை பெறுவதற்கு தாம் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தியின் ஆட…
-
-
- 5 replies
- 374 views
-
-
எமன்னார் மருத்துவமனை பெண் பணியாளர்கள் தங்கும் அறைக்குள் உறக்கத்தில் இருந்த பெண்களிடம் முறைகேடாக நடக்கும் நோக்கில் அதிகாலையில் அத்துமீறி புகுந்த படையினரின் செயற்பாட்டைக் கண்டித்து மன்னார் மருத்துவமனையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 638 views
-