ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
பொதுத் தேர்தல், இவ்வாண்டு ஏப்ரல் 25ஆம் திகதியன்று நடத்தப்பட மாட்டாதென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இந்த நிலையில், குறித்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துட், தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஏபரல-25இல-தரதல-இலல/150-247238
-
- 1 reply
- 501 views
-
-
கொரோனா சந்தேகம்: ஸ்ரீதரன் யாழ்.வைத்தியசாலையில் அனுமதி.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கோரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோவு காரணமாக இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவருக்கு கோரானா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்பியூலன்ஸ் மூலம்…
-
- 0 replies
- 490 views
-
-
பொதுத்தேர்தலுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு குறித்த தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என பிரதான கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இன்று வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மத்தியில் கூட்ட…
-
- 0 replies
- 376 views
-
-
பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது.பொதுத் தேர்தலுக்காக 357 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.பொதுத் தேர்தலை முன்னிட்டு 126 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.நேற்று மாலை வரை 124 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுவை கையளிக்கும்போது, ஆதரவாளர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலதிகமாக ஒருவர் ம…
-
- 0 replies
- 208 views
-
-
மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது பெரும் சவாலாகவே உள்ளது March 18, 2020 யாழ்.தர்மினி பத்மநாதன் சுய பாதுகாப்பு என்பது நல்லதொரு முதற் பாதுகாப்பு நடவடிக்கையும் ஆகும் .மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் (17.03.2020) மாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற போதே…
-
- 0 replies
- 252 views
-
-
தமிழ் தேசத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் – கஜேந்திரகுமார் தமிழ் தேசத்தை அடியோடு அழிக்கும் நோக்கில் இதுவரை காலமும் பிழையான வழிக்குச் சென்றவர்களுக்கு இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெ…
-
- 0 replies
- 431 views
-
-
பிள்ளையான் தோற்பது உறுதி – கருணா அம்மான் ஆரூடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் இன்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து தமிழ் கட்சிகளுடன் போட்டியிட அழைப்பு விடுத்தும் எங்களை பிள்ளையான் நிராகரித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர் தெரிவில் மதுபானசாலை உரிமையாளர்களையு…
-
- 0 replies
- 375 views
-
-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமை குறித்து அம்பிகா சற்குணநாதன் விளக்கம்! நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்ட நிபுணருமான அம்பிகா சற்குணநாதன் விளக்கமளித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பற்றி நான் ஆழமாக சிந்தித்தேன். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவர்களது தேசிய பட்டியலில் என்னுடைய பெயரை உள்ளடக்குவதற்கும் முன்வந்தனர். இதேவேளை, எனக்கு எதிராக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும்…
-
- 0 replies
- 439 views
-
-
பிரதான கட்சிகள் யாழில் வேட்புமனுத் தாக்கல் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் முக்கிய தமிழ்க் கட்சிகள் பலவும் இன்று (18) தாக்கல் செய்யதுள்ளன. இதற்கமைய யாழ். கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான வேட்பு மனுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன யாழ். மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன இதே போன்று ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவும் தத்தமது கட்சிகளின் வேடபுமனுக்களை தாக்கல் செய்துள்ளன. …
-
- 6 replies
- 760 views
-
-
-எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் படம் பொறிக்கப்பட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன், மூன்று பேர், கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்படனர். குறித்த தேர்தல் சுவரொட்டிகளை, ஓட்டோவில் கொண்டு சென்ற போதே, நேற்று இரவு, காங்கேசன்துறை வீதி - உப்புமடத்தடியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு, ஓட்டோ ஒன்றில் வந்தவர்கள், கொக்குவில் பகுதியில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதன் போது அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அவர்களைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, தேர்தல் சுவரொட்டிகளையும் ஓட்…
-
- 6 replies
- 1.2k views
-
-
மறு அறிவித்தல் வரும் வரையில், புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 முதல் மறுஅறிவித்தல் வரை இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/139266
-
- 7 replies
- 700 views
-
-
கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய சகல வழிபாட்டு நிகழ்வின் போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு முடிந்த வரையில் முயற்சிக்குமாறு அனைத்து மத தலைவர்களிடமும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தகளையும் நடத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு உதவும் வகைய…
-
- 49 replies
- 3.5k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா மற்றும் ராஜித்த சேனாரத்ன அகையோருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) விஷேட குழு சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையும் வகையிலும், கலவரமடையும் வகையிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக கூறியே அவர்களுக்கு எதிராக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். அவர்களின் கருத்துக்கள் அடங்கிய இரு வேறு இருவெட்டுக்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடை…
-
- 2 replies
- 342 views
-
-
நாட்டுக்கு வருகைதரும் விமானங்கள் இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்தம் கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தீர்மானம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலணியுடன் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இ…
-
- 1 reply
- 327 views
-
-
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை March 17, 2020 சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும், தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே, நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா வைரஸ் என்ற COVID -19 வைரஸ் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி உங்களை தெளிவுபடுத்துவதற்கேயாகும். இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை இலங்கைக்கு அழைத்துவர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் …
-
- 2 replies
- 469 views
-
-
யாழ்.மாவட்ட மக்களுக்கு மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை..! பரவ ஆரம்பித்தால் இத்தாலியை போல் பலரை காப்பாற்ற முடியாமல் போகும்..! யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட மக்கள் செயற்படு கிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமா டுகிறாா்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். யாழ்.மாவட்டத்தில் உள்ளவா்களுக்கு கொரோனா பரவாது என்பதுதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. பரவும் என்பதற்கு 100 வீத சாத்தியங்கள் உள்ளது. பரவினால் இத்தாலி எடுத்துள்ள முடிவைபோல் பலரை காப்பாற்ற முடியாமல்போகும். மேற்கண்டவாறு இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா…
-
- 0 replies
- 513 views
-
-
சீன அபிவிருத்தி வங்கியுடன் இலங்கை ஒப்பந்தம் இலங்கை மற்றும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் நிதியொப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒப்பந்தம் ஒன்றே இவ்வாறு கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/சன-அபவரதத-வஙகயடன-இலஙக-ஒபபநதம/175-247170
-
- 3 replies
- 520 views
-
-
கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கு தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.அத்துடன், சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில் அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தனியார் வைத்தியசாலைகளுக்கு இது குறித்து அரசாங்கம் அறிவுறுத்தல் எவற்றையும் முன்னெடுக்கவில்லை. இது தொ…
-
- 11 replies
- 1k views
-
-
கூட்டமைப்பு 20 ஆசனங்களை நிச்சயம் கைப்பற்றும்- செல்வம் எம்.பி. by : Litharsan எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20இற்கும் மேற்பட்ட ஆசனங்களைக் கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் பேசுகையில், “தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கபட்ட கூட்டமைப்பு தனித்துவமான வரலாற்றுத் தன்மை கொண்டது. மக்களின் ஆணை எமக்கு நிச்சயம் கிடைக்கும். வன்னியில் 5 ஆசனங்களை நிச்சயம் நாம் பெற்று…
-
- 3 replies
- 818 views
-
-
கொரோனாவைக் கட்டுப்படுத்த நூரளையில் விசேட வேலைத்திட்டம் நீலமேகம் பிரசாந்த் நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல், நுவரெலியா பிரதேச சபையில், நேற்று (18) நடைபெற்றது. இதன்போது நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை தெளிப்பதோடு மக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுவதோடு மக்கள் நடமாட்டமுள்ள இடங்களி…
-
- 1 reply
- 348 views
-
-
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தற்போது ஸ்ரீலங்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்போது வரை 43 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், ஸ்ரீலங்காவில், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இத்தாலி உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 6000க்கும் அதிகமானோர் வீடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
-
- 2 replies
- 340 views
-
-
அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! by : Litharsan தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இன்று (புதன்கிழமை) பகல் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கவீந்திரன் கோடீஸ்வரன் களமிறங்குவதுடன்…
-
- 1 reply
- 564 views
-
-
போலி ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகத் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியாகும் ஆயுர்வேத மருத்துவக் குறிப்புக்கள் தொடர்பிலான தகவல்களை நம்ப வேண்டாம் என, ஆயுர்வேத திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மருத்துவக் குறிப்புக்களை இணையத்தளத்தின் ஊடாக சிலர் பரப்பிவருவதாக, ஆயுர்வேத ஆணையாளர் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார். போலி மருத்துவக் குறிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுள்ளார். தற்போது பரவும் Covid19 எனப்படும் கொரேனா வைரஸுக்கான சிகிச்சை வழங்க ஆயுர்வேத வைத்தியர்கள் என்ற போர்வையில், பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆயுர்வேதப் பொருட்களை அறி…
-
- 3 replies
- 442 views
-
-
விசேட விமானம் மூலம் ஸ்ரீலங்காவிற்கு அழைத்துவரப்படவுள்ள 900 பேர்! மத வழிபாட்டிற்காக ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தில் ஸ்ரீலங்கா உறைந்துள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டிற்காக ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு சென்றவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த 900 பேரையும்…
-
- 0 replies
- 348 views
-
-
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் , சிகிச்சை பிரிவுடன் இணைந்த மலசல கூடம் , ஒட்சிசன் வசதிகள் கொண்டதாக இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.மகேந்திரன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் , ஊழியர்கள், வைத்தியர்…
-
- 0 replies
- 166 views
-