ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142966 topics in this forum
-
தாளம் தப்பிப் பாடும் மகிந்த ராஜபக்ச !! தெற்கில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் பேசுபொருள் மாறிவிட்டபின்னரும் , பழைய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடிவரும் மவுசுபோன பாடகரைப் போன்று பேசி வருகிறார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதன் மைய பேசுபொருளாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளும், ஏற்கனவே வெளியாகி இருக்கும் இடைக்கால அறிக்கையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதனைக் கருத்திற்கொண்டே தாமரை மொட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட முதலாவது பரப்புரைக்கூட்…
-
- 0 replies
- 475 views
-
-
சிங்கள கடும்போக்காளரும் யாதிக்க கெல உருமையவின் உறுப்பினரும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக பலத்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியிருந்தவருமான மேஜர் ஜெனரல் ஜனகப்பெரேரா கூட்டுப்படைத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கூட்டுப்படைத் தளபதியாகவிருக்கும் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுச் செல்வதால் அந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனகப்பெரேரா நியமனம் பெறவுள்ளார். இவர் தற்பொழுது இந்தோனிசியாவிற்கான உயர்ஸ்தானிகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:மட்டக்களப்பு ஈழநாதம் செம்மணி படுகொலைகளுக்கு இவரே பொறுப்பு என்று பலராலும் சொல்லப்பட்டு வந்ததுண்டு. அவுஸ்ரேலியாவிற்கு உயர்தாஸ்னிகராக இருந்தபோது எதிர்ப்பு…
-
- 0 replies
- 865 views
-
-
எனது கணவர், மருமகனை சுட்டுக் கொன்றுவிட்டனர். மகன், மகளை கடத்திவிட்டனர். மகளை கடத்தியவரை எனக்கு தெரியும். அவரிடம் மகளை கேட்டால் வீட்டிற்கு குண்டு வீசி அழித்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மூதாட்டி ஒருவர் நேற்று செங்கலடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். அத்துடன், மகளை கடத்தியவரை கண்டால் அடையாளம் காட்டுவேன். எனினும் நீண்ட நாட்களாகவே அவரை இப்பகுதியில் காணக் கிடைக்கவில்லை. மகளும் திரும்ப வில்லை என்றார். செங்கலடி பிரதேச செயலகத்தில் வைத்து கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது கணவர் கோபாலப்பிள்ளையை 1985 ஆம் ஆண்டு இராணவத்தினர் சுட்டுக…
-
- 0 replies
- 839 views
-
-
தமிழ்மக்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் உடனடியாக இடம்பெற்ற சம்பவம் அல்ல. இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னரே நன்கு திட்டமிட்டு எந்தெந்த இடங்களில தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் சேகரிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வதற்கும் தென்னிலங்கையில் இருந்து அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த வேளையில் திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாகி 13 இராணுவத்தினர் மரணம் அடைந்ததை காரணமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதே உண்மையாகும். இவ்வாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார். வட மாகாண சபையின் 11ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் இன்று பகல் அ…
-
- 0 replies
- 526 views
-
-
வெல்லப்போவது யார் – சிவசக்தி ஆனந்தனுக்கு சிறிதரன் சவால்… இரண்டு கோடி ரூபா வாங்கியதை சிவசக்தி ஆனந்தனால் ஆதாரத்துடதன் உறுதிப்படுத்த முடியுமா? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை வாங்கியதாக நேற்று(20) வவுனியாவில் தெரிவித்திருக்கிறார். எனவே நான் அவர்களிடம் சவால் விடுகின்றேன் முடிந்தால் அதனை ஆதாரத்துதடன் நிரூபிக்க முடியுமா என தெரிவித்துள்ளார் இன்று(21) கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப்…
-
- 1 reply
- 605 views
-
-
Oct 18, 2010 / பகுதி: செய்தி / சொல்ஹெய்ம் மீண்டும் சிறீலங்கை வருகிறார் நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அடுத்த வருட முற்பகுதியில் சிறீங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களை சொல்ஹெய்ம் சந்திப்பார் என ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது முந்தைய சிறீலங்கை விஜயங்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு முதல் தடவையாக விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சம…
-
- 0 replies
- 561 views
-
-
எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தின் தச்சனா மருதமடுப் பகுதியில் வெங்காய வெடி வெடித்ததால், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தோமஸ் ஸ்ரீபன் (வயது 31) என்பவர் புதன்கிழமை (02) மரணமடைந்ததாக மடு பொலிஸார் தெரிவித்தனர். விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வீட்டில் வெங்காய வெடிகளை தயாரித்துக்கொண்டிருந்தபோது இதிலொன்று தவறுதலாக வெடித்தது. இதன்போது படுகாயமடைந்த இவர், முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்; மரணமடைந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/116542-2014-07…
-
- 0 replies
- 608 views
-
-
தமிழீழ விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பொருளாதா ரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சித்து வருவதாக வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை யில் மீண்டும் வன்முறை சம்பவங்களை கட்டவிழ்த்து விட முடியாது என அறிந்து கொண்ட புலி ஆதரவாளர்கள் வேறு வழிகளில் நாட்டை சீர்குலைப்பதற்கு முனைப்பு காட்டிவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் வருகையை தடுப்பதற்கும், இலங்கை பொருட்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பை தடுத்தல் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ள புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர். வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்து விட்டு நாட்டில் மீண்டும்…
-
- 1 reply
- 688 views
-
-
நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழிமூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப்பரீட்சையின் எழுத்துப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென …
-
- 2 replies
- 816 views
-
-
பதவி துறக்கப் போகிறாராம் விக்னேஸ்வரன்! - ஆரூடம் கூறுகிறது சிங்கள நாளிதழ் [Tuesday 2014-07-15 09:00] வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியை துறக்கத் திட்டமிட்டுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வடக்கிலிருந்து தகவல் கிடைத்துள்ளது என அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிவில் அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்ற போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. வடக்கு அரச நிர்வாகத்தின் கீழ் …
-
- 1 reply
- 479 views
-
-
வெற்றி பெற்றாலும் கவலைப்பட வேண்டிய விடயமும் உண்டு தமக்கு வாக்களிக்க இருந்தவர்கள் திசை திருப்பப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு - நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்திருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களுக்கு முகங்கொடுத்திருந்தது. அதனை நாங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இருப்பின…
-
- 1 reply
- 388 views
-
-
நடிகை தமிதாவை... விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவும் – சஜித். கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானபோது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தியத்த உயன வளாகத்தில் வைத்து நேற்று இரவு நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1298157
-
- 8 replies
- 847 views
- 1 follower
-
-
கிளாஸ்கோ திருப்பலிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தார் ஜனாதிபதி மகிந்த! [Thursday 2014-07-24 10:00] கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம், விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ம் திகதி கிடைத்ததாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்தன. புலிகளின் ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஜனாதிபதி இந்த அழைப்பை மறுத்துள்ளதாக தகவல்…
-
- 0 replies
- 348 views
-
-
’மேயராக மணிவண்ணன் நிறுத்தப்படுவார்’ "யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்ச…
-
- 0 replies
- 458 views
-
-
அனைத்து கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் 10 மணிக்கு பின்னர் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்தார். மேலும், நேரத்தை செலவிட நகரத்துக்கு வருவோரை இது பாதிப்பதாகவும் நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்த அவர், மன்னாரை பொழுது போக்கு வலயமாக மாற்றலாம் என்றும் மேலும் சில சர்சை கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மன்னார் குறித்த அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
இந்தியாவை எச்சரிக்க மன்னாரில் சீனா, ஜப்பானுக்கு சிறிலங்கா அனுமதி >>>>>>>>>>>>>>>>>>>>> http://www.eelampage.com/?cn=27875
-
- 0 replies
- 1.1k views
-
-
Nov 21, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும் - காசி ஆனந்தன் இனிய தமிழீழ நெஞ்சங்களே கனடாவில் மொன்றியலில் தமிழீழ மாவீரர்களின் பெற்றோர்களை போற்றும் மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்களுக்குத் தெரியும் தமிழீழ விடுதலைக் களத்தின் தலை நிமிர்ந்த மாவீரர்கள் உலக விடுதலையாளர்களின் வரலாற்றிலேயே தன்னிகர் அற்றவர்கள் கழுத்தில் நஞ்சுகட்டிய ஒரே ஒரு விடுதலைப் படையாய் களத்தில் நின்று உலக வரலாறு படைத்தவர்கள் தமிழீழ நிலத்தில் விளைந்த புலிகள் அஞ்சுதலும் கெஞ்சுதலும் அறியாராய் நெஞ்சுரம் கொண்டு விஞ்சமர் கண்ட விடுதலையாளர்கள் ஈடினை அற்ற அந்த விடுதலையாளர்களை போற்றும் இவ் வேளையில் அவர்களை ஈன்று தமிழீழ ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
திங்கள் 07-08-2006 18:06 மணி தமிழீழம் [நிலாமகன்] தாக்குதலை முடிவுக்கு கொண்டுவரும் ஹன்சன் பெளயரின் 2வது முயற்சியும் படுதோல்வி. மாவிலாற்று நீர்த் தடுப்பு விவகாரத்தை அடுத்து எழுந்துள்ள இராணுவ மோதல்கைள முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் நோர்வே எடுத்து இரண்டாவது முயற்றியும் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் இன்று காலை 10 மணியளவில் திருமலை சென்றுள்ளார். ஹன்சன் பெளயர் உலங்கு வானூர்த்தி மூலம் திருமலையில் சென்று இறங்கிய அடுத்த 5 நிமிடங்களில் சிறீலங்காப் படையினர் பல்குழல் எறிகணைத் தாக்குதலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி நடத்தியுள்ளனர். சிறீலங்கா படையின் திருமலை…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை வீட்டில் மூன்று பகைக் கிரகங்கள் பாம்புக்கு எதிரி கீரி.எலிக்கு பகை பூனை. புலியால் சைவம் உண்ண முடியாது. இறைவனின் படைப்பில் புலி மாமிசத்தைத் தவிர வேறு எதனையும் உண்ண முடியாது-உண்ணவும் கூடாது. தவளையாயின் யமன் அதன் வாயிலேயே இருக்கிறான்.இந்த நியதிகள் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம், மதத்துக்கு மதம், மொழிக்கு மொழி என்றவாறும் இருக்கவே செய்கிறது. வெள்ளையர்களுக்கு கறுப்பர்களைப் பிடிப்பதில்லை.சிலுவைப் போருக்கு முடிபேயில்லை. சிங்களம் தமிழைநேசிப்பதில்லை.இப்படியே காலங்கடக்கிறது.நிலைமை இதுவாக இருக்கையில்,உலக நாடுகள் எல்லாம் பிரச்சினைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளன என்றே கூறவேண்டும். இவ்வாறு வெற்றி கிடைப்பதற்குக் காரண…
-
- 1 reply
- 1.4k views
-
-
2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில், "22 பில்லியன் ரூபாய்" இழப்பு! நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளது. மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது. அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1301685
-
- 10 replies
- 903 views
-
-
கம்போடியாவில் இனப்படுகொலை செய்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்குமாறு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது ஐ.நாவின் சர்வதேச விசாரணை நீதிமன்றம். 30 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் போர்க் குற்றாவளிகளாக இனங்காணப்பட்ட 88 வயதான நௌவான்சியா, 83 வயதான கெஹியூசம்பான் ஆகியோருக்கே நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1975 -79 கள் வரை கம்போடியாவை பொல்பொட் தலைமையில் இயங்சரே, நௌவான்சியா, கெஹியூசம்பான் ஆகியோர் ஆட்சி செய்தனர். வியட்நாமில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற மக்கள் இவர்களின் ஆட்சியை எதிர்த்திருந்தனர். தம்மை எதிர்த்துப் போராடிய அந்த மக்களில் 17 இலட்சம் பேரை இந்த ஆட்சியாளர்கள் கொன்று குவித்திருந்தனர் என்று கூறப்பட்டது. மிகப்பெர…
-
- 2 replies
- 415 views
-
-
இந்தியாவை தஞ்சமடையவோ இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்கும் தேவையோ எனக்கு இருக்கவில்லை.. இந்தியத் துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களுக்கான பிரிவு உபசார வைபவம் வடமாகாண சபை அலுவலக கேட்போர் கூடம், கைதடி 04.03.2018 ஞாயிற்றுக் கிழமை பி.ப 4.30 மணியளவில் முதலமைச்சர் உரை இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்கொண்டிருக்கின்ற அவைத்தலைவர் கௌரவ சீ.வீ.கே. சிவஞானம் அவர்களே, எமது அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்திருக்கும் இலங்கையின் வடபகுதிக்கான இந்தியத்துணைத் தூதுவர் உயர்திரு யு.நடராஜன் அவர்களே, வடமாகாண சபையின் கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, மற்றும் …
-
- 2 replies
- 537 views
-
-
எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது – பிரதமர் நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைக…
-
- 1 reply
- 242 views
-
-
சனி 19-08-2006 13:52 மணி தமிழீழம் [மகான்] தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண…
-
- 14 replies
- 5k views
-
-
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்பாக, அதிபர் தேர்தலை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என்று அறிந்து கொள்ள உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நொவம்பர் 19ம் நாளுக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்த முடியுமா என்று உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். அதிபர் சட்டத்தின்படி, தேர்தலுக்கு 35 தொடக்கம் 65 நாட்களுக்குள், அழைப்பு விட வேண்டும். முன்னதாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் ச…
-
- 1 reply
- 259 views
-