ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலல் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி இஸ்ஸடீன் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோ…
-
- 1 reply
- 619 views
-
-
“என்னிடம் இன்னும் பல குரல் பதிவுகள் உண்டு“ – நாடாளுமன்றத்தில் மிரட்டிய ரஞ்சன் by : Yuganthini பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அவர்களின் மனைவிமாரின் குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் கூறிய விடயங்களை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை உருவாக்க வேண்டும். அப்போது ஆவணங்களுடன் அதில் முன்னிலையாவதற்கு தயாராக இருக்கின்றேன். மேலும் தன்னிடம் இருக்கும் குரல் பதிவுகளில் ஜனாதிபதி கோட்டாப…
-
- 2 replies
- 840 views
-
-
பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் கட்டாயமானது! -சிவசக்தி ஆனந்தன் [Tuesday 2020-01-21 08:00] எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்? …
-
- 1 reply
- 390 views
-
-
கூட்டமைப்புடன் இணைவது குறித்து விஜயகலா பேசவில்லை! [Tuesday 2020-01-21 18:00] முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக தம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் அது குறித்து சுமந்திரனுடன் பேசியதாகவும் இணையத்தளங்களில் செ…
-
- 3 replies
- 702 views
-
-
புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை! [Tuesday 2020-01-21 18:00] ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுக்கள், அவரின் குடும்ப உறவுகளின் மரபணுவுடன் பொருந்தவில்லை என்று விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று …
-
- 1 reply
- 1.2k views
-
-
கவனிப்பாரற்றுக் கிடக்கும் வவுனியா சர்வதேச தர விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை! வவுனியா, ஓமந்தையில் சர்வதேச தரத்துடன் பல கோடி ரூபாய் செலவுடன் அமைக்கப்பட்டு கவனிப்பாரற்றுக் கிடக்கும் விளையாட்டரங்கை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த விளையாட்டரங்கு கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை தொடர்பாக விளையாட்டு வீரர்களால், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அதனை உடன் திறக்க நடவடிக்கை மேற்கோள்ளப்படவுள்ளதாக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “வவுனியா மாவட்டத்தில் பல கோடி ரூபாயில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் திறந்து வைத்து வவுனியா மட்டுமன்றி இலங…
-
- 0 replies
- 257 views
-
-
வடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் – ஸ்ரீநேசன் சுயநலத்திற்காக செயற்படும் சிலர், பிழையான இளம் சமூகத்தை உருவாக்கும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரலாற்றுப் பாடத்தினை மறந்து செயற்படுகின்ற எவரும் நிலையாக நிற்கமுடியாது எனவும் தவறாக வழிநடத்துபவர்கள் தொடர்பாக விரைவில் முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த உடல் திறனாய்வுப் போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அதிபர் சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரீநேசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்…
-
- 0 replies
- 474 views
-
-
விக்கி தலைமையிலான மாற்று அணி படுபாதகமானது! [Tuesday 2020-01-21 08:00] மாற்று அணி உருவாக்கமென்பது தமிழ்மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் சதி நடவடிக்கை என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். கூட்டமைப்புக்குள் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சுமுகமாக பேசித்தீர்த்து வருகின்றோம். தேர்தல் தொடர்பாகவும் சுமுகமான தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எதிலும் எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. இதில் …
-
- 9 replies
- 1.5k views
-
-
மிருசுவில் படுகொலை - குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்! [Tuesday 2020-01-21 08:00] யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை, வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே, பாதிக்கப்பட்டவர்களால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில்,…
-
- 1 reply
- 382 views
-
-
பொங்கு தமிழ் பிரகடனம்: யாழ்.பல்கலை மாணவர்களின் பிரகடனம் வெளியீடு by : Litharsan பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தி இவ்வாண்டின் இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை பல்கலைக்ககழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் வருமாறு, “ஈழத் தமிழ் மக்களின்…
-
- 4 replies
- 1.2k views
-
-
ரஞ்சனுடனான தொலைபேசி உரையாடலின் எதிரொலி: நாட்டை விட்டு தப்பியோடினார் நடிகை பியூமி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஞ்சன் போன்ற அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டதற்கு வருத்தம் அடைவதாக அவரது சமூக வலைப்பின்னல் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இந்த குரல்களால், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஞ்சன் ராமநாயக்க மாதிவெலயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டார். இதன்போது பல இறுவட்டுக்கள் அவரின் இல்லத்தில் இருந்து மீ…
-
- 13 replies
- 2k views
-
-
ரஜினியை சந்தித்த விக்னேஸ்வரன் : ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து விளக்கினார் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கை தமிழர்களில் பிரச்சினைகள் தொடர்பாக விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிக்கு விளக்கியுள்ளர். இதேவேளை வடக்கிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் விக்னேஸ்வரனால் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ரஜினியை-சந்தித்த-விக்னேஸ/
-
- 49 replies
- 5.7k views
- 1 follower
-
-
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடக்குமுறை தொடர்பாக சர்வதேசத்திடம் முறையிட ஐ.தே.க. திட்டம்! by : Jeyachandran Vithushan எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரிவான வேலைத்திட்டத்தை தொடங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கும் செயல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாயை அடைப்பதற்கு அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எனவே…
-
- 1 reply
- 262 views
-
-
கதிர்காமர் கொலை- ஜேர்மனியில் முன்னாள் புலி உறுப்பினருக்கு சிறை! [Tuesday 2020-01-21 08:00] இலங்கையின் முன்னாள்வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் தொடர்பாக, புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரை 6 வருடங்கள், 10 மாதங்கள் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்ய தகவல் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜேர்மனில் புகலிடம் கோர…
-
- 0 replies
- 436 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேரை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று ( 21) எடுத்துக் கொள்ளப்பட்டது. மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேற…
-
- 0 replies
- 457 views
-
-
தெரிவுக்குழு பெயர்ப் பட்டியல் இன்று சமர்ப்பிப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்காக அரசியல் கட்சிகளினால் பிரேரிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான அனுமதி இன்று (21) பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இன்று (21) மதியம் ஒரு மணிக்கு நாடாளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதுடன், இன்றைய ஒழுங்குபத்திரத்தில் தெரிவுக்குழுக்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் 9 உறுப்பினர்களினதும் எதிர்க்கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களினதும் பெயர்ப்பட்டியல், நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சபாநாயகர் தலைமையிலான…
-
- 0 replies
- 252 views
-
-
யாழ்.கொழும்புத்துறையில் காணி கபளீகர முயற்சி தோல்வி..! அதிகாரிகள், அளவையாளர்களை விரட்டியடித்த மக்கள்! யாழ்.கொழும்புத்துறை- நெடுங்குளம் பகுதியில் மக்களின் காணிகளை சுவீகரிப்பிற்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மோற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர். ஆயினும் காணிகளை அளவிடுவதற்கு காடுகளின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசுயல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பா…
-
- 1 reply
- 456 views
-
-
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஒரு சிறப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவையின் துணைத் தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி தெரிவித்தார். அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விமானம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் பிரதிநிதிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அத்துடன் மாத்தளை விமான நிலையத்தை பயன்படுத்த விமான நிறுவனங்களை ஊக்கவிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ரஜீவசிறி சூரியாராச்சி தெ…
-
- 0 replies
- 326 views
-
-
ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் எதிரொலி- பணி நீக்கப்பட்டார் பி.பி.சி.யின் செய்தியாளர் அமீன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளராக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் அஸாம் அமீனை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு சில தினங்களின் முன்னர் வெளியாகியிருந்தது. இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு வெளியாகி உள்ளமையால் பி.பி.சி. அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளிய…
-
- 0 replies
- 433 views
-
-
இலங்கைக்கு மலேசிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள், தங்களது நாட்டுக்கு அனுப்பிவைத்த பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களை, மீள அனுப்பிவைக்க உள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது. தமது நாட்டை கழிவுகளை வெளியேற்றும் இடமாக்குவதற்கு சில நாடுகள் மேற்கொள்ளும் முயற்சி கனவு மாத்திரமே என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் யெவோ பீ யின் தெரிவித்துள்ளார். பிளாஸ்ரிக் பொருட்கள் ஏற்றுமதியை சீனா கடந்த 2018ஆம் ஆண்டு நிறுத்தியதை அடுத்து அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு கழிவுகள் வர தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 3737 மெற்றிக் டொன் பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 150 கொள்கலன்களில் பிரான்ஸூக்கு சொந்…
-
- 0 replies
- 458 views
-
-
கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினர் – யாழில் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோயிலடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள், மகளின் கணவர் ஆகிய மூவர் நஞ்சருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளனர். இதன்போது தாயார் உயிரிழந்த நிலையில், அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் …
-
- 0 replies
- 281 views
-
-
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை விவகாரம்: புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு சிறை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஜேர்மனின் ஸ்டட்காரர்ட் ( Stuttgart) நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தினால் இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜி.நவநீதன் என்ற குறித்த சந்தேகநபருக்கே ஜேர்மன் சட்டத்தின் பிரகாரம் ஆறு வருடங்களும் 10 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இருந்த இடம் குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தகவல் வ…
-
- 0 replies
- 378 views
-
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் நிரந்தர படை முகாம்கள் அமைக்க இராணுவம் திட்டம்..! 2ம் தடவையாகவும் நிராகரித்த மக்கள். முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இடங் களில் உள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்க 96 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் , வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே உள்ள படை முகாம்கள் அமைந்துள்ள 96 ஏக்கர் நிலத்தையும் படையினருக்கு வழங்குமாறு கடந்த ஆட்சியில் கோரப்பட்ட சமயம் அதற்கான அனுமதி அப்போது மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அரசின் காலத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி தலைவர்…
-
- 0 replies
- 245 views
-
-
மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அ…
-
- 2 replies
- 1.2k views
-
-
விசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ விசேட தீர்வு திட்டங்கள் மற்றும் சலுகைகளுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரசியல்வாதிகள் மாத்திரமின்றி இளைஞர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போத…
-
- 3 replies
- 980 views
-