Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் விவகாரம்: கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் கைது! (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தும் வண்ணம் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி செயற்பட்டமை தொடர்பில், நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிணையில் உள்ள 8, 9 ஆம் பிரதிவாதிகளான அனுர துஷார மெண்டிஸ் மற்றும் கஸ்தூரிகே காமினி ஆகியோரே இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்…

  2. மேலும் 110 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர் சீனாவில் கல்வி கற்கும் 110 மாணவர்கள் இன்று (29) நாடு திரும்பியிருப்பதாக சீனாவின் பேஜிங் நகரில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இதுவரை 380 மாணவர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று 66 மாணவர்கள் நாடு திரும்பினார்கள். மேலும் 484 மாணவர்கள் சீனாவில் இருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர் இனங்காணப்படுவாராயின், அதுபற்றி உடனடியாக அறிவிக்கப்படவிருக்கிறது. கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 23 பேர் அங்கொட தேசிய தொற்றுநோய் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் எட்டுப் பேரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, மூவரின் பரிசோதனை அறிக்கைகள் தற்சமயம் கிடைத…

  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். இவ்வருடம் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 24ஆம் திகதி வரையும் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர் என்றும் இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, “இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால்குறித்த அதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மேலும், ஆரையம்பதியில் 35, களுவாஞ்சிகுடியில் 21, வாழைச்சேனையில்16, செங்கலடியில் 22, காத்தான்…

  4. >இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ஊடக சந்திப்பு இன்று பகல் 2மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள சோலைவனம் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது. குறித்த ஊடகசந்திப்பின் போது தெரிவித்ததாவது, போரின் போது இடம்பெற்ற விடயங்களை நாம் கேட்கவில்லை யுத்தம் முடிவடைந்த பின்னர் ஓமந்தை யிலும் வட்டுவாகலிலும் இராணுவத்திடமே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அத்துடன் வவுனியா, மன்னாரில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள் எமது உறவுகள் காணாமல் போக செய்யப் பட்டுள்ளார் கள். இதற்கு பொறுப்புகூற வே…

    • 1 reply
    • 398 views
  5. இராணுவத்தினர் மீது தாக்குதல்; எட்டு இளைஞர்களுக்கு பிணை -எம்.றொசாந்த். யாழ். நாகர் கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். நாகர் கோவில் பகுதியில் கடந்த தைப்பொங்கல் தினத்தன்று அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியதை அடுத்து அங்கு கூடியவர்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி அதிகாலை இராணுவத்தினர் நாகர் கோவில் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். …

    • 0 replies
    • 540 views
  6. இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்! by : Jeyachandran Vithushan இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இனங்காணப்பட்ட 43 வயதான சீனப் பெண், சிகிச்சையைத் தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.எச். வைத்தியசாலை நிர்வாகம் இன்று (புதன்கிழமை) இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தவிர, மேலும் 7 பேர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சீனப்பெண் சிகிச்சைகளை அடுத்து குணமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பாரிய திட்டங்க…

    • 0 replies
    • 307 views
  7. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=125111

    • 0 replies
    • 249 views
  8. வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு மரண அச்சுறுத்தல் வெள்ளைவேன் ஓட்டுனர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட இருவருக்கும் மரண அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைபாடு செய்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=125046

    • 3 replies
    • 413 views
  9. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என அவர் மேலும் தெ…

    • 36 replies
    • 3.7k views
  10. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான இரு நாட்கள் விவாதம் அடுத்த மாதம் 18ஆம் ,19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த திறைசேரி முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை கடந்த வாரம் மத்திய வங்கியினால் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட போதிலும் சபாநாயகர் தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிக்காது இருந்தார். எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்சியாக இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில் கணக்காய்வு அறிக்கையில் இணைப்புகள் இல்லாத அறிக்கையை சபைப்படுத்திய நிலையில் அது குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலைய…

  11. வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கோரிக்கை Jan 26, 20200 கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கொழும்புக்கு வரும் அனைவரும் முகமூடி அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக கொழும்பு தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பொது இடங்கள் மற்றும் ஹோட்டல் உணவகங்களுக்குள் நுழையும்போது ஹோட்டல் ஊழியர்கள் வருபவர்களிடம் அவர்களது வாயை நன்றாக கழுவசொல்லுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பு நகரில் பெருமளவான சீனர்கள் வசிப்பதால் சீனர்களின் பாதுகாப்பிற்காக இந்த முறையைப் பின்பற்றுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார் http://www.samakalam.com/செய்திகள்/வைரஸ்-அச்சுறுத்தலை-அடுத்/

    • 21 replies
    • 2.3k views
  12. காலி பிரதேசத்தில் நேற்று இரவு வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கு பொருட்களை திருடும்போது வீட்டிலுள்ளவர்கலிடம் சிக்கி உள்ளான். இந்நிலையில் குறிப்பிட்ட திருடன் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் . எனது அருகில் வந்தால் உங்களுக்கும் அது பரவும் என எச்சரித்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தம்மை நெருங்கவிடாமல் செய்து அவ் வீட்டில் இருந்த தங்க நகைகள் சிலவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகி https://www.madawalaenews.com/2020/01/blog-post_157.html

    • 2 replies
    • 844 views
  13. சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சீன நாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தருவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. எனினும் இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டற…

    • 1 reply
    • 354 views
  14. விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கரை நேற்று (சனிக்கிழமை) சந்தித்த ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எ…

    • 12 replies
    • 1.8k views
  15. 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று (28) நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செ…

    • 0 replies
    • 530 views
  16. வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மீது முல்லைத்தீவு பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற அவர் பிணையில் விடுதலையாகியிருந்தார். இதேவேளை வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜ…

    • 0 replies
    • 274 views
  17. இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை – சுமந்திரன் இலங்கையில் நீதித்துறை சுயமாக செயற்படாதவாறு பலர் செயற்படுகின்றனர். நீதித்துறையை சுயாதீனமாக செயற்படவிடவில்லை என பலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.முக்கியமாக வழக்குகள் இவ்வாறு நடத்தப்படாது தடை செய்யப்படுமாக இருந்தால் இதைவிட நீதித்துறையில் தலையீடு வேறு எதுவுமாக இருக்க முடியாது என சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக உள்ளது என கூறுவதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு தகுதி இல்லை.பல சம்பவங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிரதேசங்களிலேயே பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது இப்படியாக நடக்குமாக இருந்தால், இந்தநாட்டிலே நீதித்துறை சுயாதீன…

  18. ’ஆதரவு வழங்கினால் வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயார்’ -எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன் பல்கலைக்கழகச் சமூகம் தமம்மால் முன்வைக்கப்படும் வணக்கஸ்தல அமையவுள்ள திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால், ஆதீனம் பொறுப்பெடுத்து வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயாராக உள்ளதாக, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டெனியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கண்டி - பேரதெனியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தென்னிந்திய திருச்சபையால் வணக்கஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் அதேபோன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலும் அமைப்பதற்கு தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். அதற்கு பல்கலைக்க…

  19. நீதியை பெற்றே தீருவோம் - எம். ஏ.சுமந்திரன். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காலங்கடந்தாலும் நீதியை பெற்றே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் அவர்கள் தெரித்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தின் திறப்பு விழாவும் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று(27-01-2020) நடைபெற்றுள்ளன. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பா.ம.உறுப்பினர் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட சனசமூக நிலையம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் தே.கூ.அமைப்பின் பிரதிநிதிகள், மாணவர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்ட னர் இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எ…

  20. யாழ். பல்கலை வளாகத்தில் பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை, குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் நான்கு வணக்கஸ்தலங்கள் அமைப்பதற்கு தலா ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த இடத்தில் ஏனைய வணக்கஸ்தலங்களை அமைப்பதற்கு சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நான்கு வணக்கஸ்தலங்களும் சம அளவு உயரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்பது பல்கலைக்கழகத்த…

    • 3 replies
    • 970 views
  21. தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐக்கி…

  22. -செ.கீதாஞ்சன் 2020 ஜனவரி 27 , பி.ப. 03:48 முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த தினத்தன்று 2009.05.18 அன்று பிறந்த மாணவியான நிஷாந்தி உஷாந்தன் (வயது 10) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார். இந்த மாணவிக்கு ஆங்கில கல்வி நிறுவனமொன்றினால் விருது வழங்கி கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. 24ஆம் திகதியன்று, கூளாமுறிப்பு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குறித்த மாணவி உட்பட புலமைபரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். http://www.tamilmirror.lk/வன்னி/இறுத…

    • 0 replies
    • 929 views
  23. இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்.! மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ஸ திறந்துவைத்த தும்பு தொழிற்சாலையின் பெயர் பலகையில் தமிழ் மொழி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி 1ம் இடத்தில் இருந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் கூச்சலினால் இனவாத அமைச்சரின் உத்தரவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிற தர்க்கம் பேசப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேற்படி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சிறு வணிக அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு பனந்தும்பு …

  24. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் விசேட மருத்துவப் பிரிவினூடாக பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் விமான நிலையத்தின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களையும் முகக்கவசத்தை அணிந்துகொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாட…

    • 1 reply
    • 867 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.