ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் (Batticalao Campus (PVT) Ltd) தொடர்பாக கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்திருந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. அத்துடன் மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்து துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை …
-
- 5 replies
- 692 views
-
-
அரசின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழீழம்.! முன்னைய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக போடிநந்த குணதிலக தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரே நிறத்தில் அறிமுகப்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டை அழிக்கும் விளைவை ஏற்படுத்தும் என்று அவர் குற்றம் சாட்டினார். நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாடநூலில் வட மத்திய மாகாணத்தில் ஒரு குழந்தையின் ஓவியம் உள்ளது. இது நாட்டில் பெருமை சேர்க்காது. வட மத்திய மாகாணத்தின் அறிமுகத்தில் இப்பகுதியில் உள்ள ஒரு…
-
- 0 replies
- 673 views
-
-
யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனரெனவும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் தம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று (24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், யாழில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன, புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக…
-
- 3 replies
- 1.1k views
-
-
‘வெள்ளை வேன்’ விவகாரம்: ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல – சுமந்திரன் ‘வெள்ளை வேன்’ விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்…
-
- 3 replies
- 562 views
-
-
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும். இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின…
-
- 10 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு நகரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கோவில்குளம் காசிலிங்கேஸ்வரர் ஆலயம் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென்று குடியேறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் குளம் (சிகரம்) உண்மையிலேயே தமிழ் மக்களின் பாரம்பரிய கிராமமா? எப்படி முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்பட்டார்கள்? முஸ்லிம் தரப்பு கூறுகின்ற நியாயப்பாடுகள் என்ன? பல நூற்றாண்டுகள் வரலாறு கொண்டதாக கூறப்படுகின்ற தமிழ் மக்களின் கோவில்குளம் கிராமம் ஆக்கிரமிக்கப்படுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா? இந்த விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: https://www.tamilwin.com/srilanka/01/234181?ref=rightsidebar
-
- 8 replies
- 1.1k views
-
-
அடுத்த பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதமளவில் நடக்கக்கூடும். ராஜபக்ஷ அணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டது. அப்பொழுதுதான் தமக்கு முழு வெற்றி கிடைக்கும் என்று அந்த அணி நம்புகிறது. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொதுத் தேர்தலை நோக்கி உழைக்கத் தொடங்கி விட்டனவா? ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே பேரவை சுயாதீனக் குழுவைத் தொடக்கி வைத்தது. அப்படித்தான் இம்முறையும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் அறிவித்த பின்னர்தான் தமிழ்த் தேசியக் கட்சிகள் திடுக்கிட்டு விழித்தெழுமா? தமிழ் மக்கள் மத்தியில் இப்பொழுது இரண்டு தெரிவுகள் தான் உண்டு. முதலாவது வெகுசனக் கிளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் ஒரு மக்கள் இயக்கம். இ…
-
- 1 reply
- 703 views
-
-
(இராஜதுரை ஹஷான்) இந்நியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச்சட்டத்தினால் அங்கு வாழும் இலங்கை அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புல்ல நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் ஒருங்கினைப்பை ஏற்படுத்தி தீர்வினை எட்டுவதற்காக பிரதிநிதி ஒருவரின் பெயரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும், இந்தியவாழ் இலங்கை அகதிகளை நாட்டிற்குள் மீளவரவழைத்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும் என்று நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்நிய பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தில் அங்கு வாழும் இலங்கை அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யுத்தம் இடம் பெற்ற …
-
- 1 reply
- 456 views
-
-
செஞ்சோலைச் சிறுவர்களிற்கு பகிரப்பட்ட காணிகளுக்கு, உரிமையாளர்கள் உரிமை கோருகின்றனர்… கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் செஞ்சோலை அமைந்திருந்த தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். “1990ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு சென்று அங்கு முகாம்களில் வாழ்ந்து வந்தோம். யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் எமது காணிகளில் குடியேறுவதற்காக வருகை தந்திருந்தபோது அக்காணிகளில் படையினர் முகாம் அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் படையினர் குறி்த்த முகாம்களை அகற்றி காணிகளை விடுவித்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் …
-
- 2 replies
- 869 views
-
-
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீங்கள் வாள் எடுத்தால் நாங்களும் வாள் எடுக்கத் தயங்கமாட்டோம். ஆனாலும் அந்த நிலைமைக்கு எங்களையும் நிர்ப்பந்திக்காதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென்று தெற்கில் எழுப்பப்படுகின்ற கோரிக்கை மற்றும் வாள் கொண்டு விரட்டியடிப்போம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே அவர் மேற…
-
- 4 replies
- 557 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 14,15 ஆம் திகதிகளில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந் நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மரியா ஸகரோவா தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள், அரசியல் உரையாடலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்புகள், வர்த்தக-பொருளாதார, மனிதாபிமான மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது, அத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் சட்ட அடிப்படை…
-
- 1 reply
- 507 views
-
-
நாட்டின் சட்டதிட்டங்கள் பற்றி, எதுவும் தெரியாது என எவரும் கூறமுடியாது எனவும் குறிப்பாக இந்த விடயத்தில் பெண்கள் ஒரு படி முன்னேறி, சட்டப் பாதுகாப்பு அறிவுப் புலமையைப் பெற்றிருக்க வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார். இதனால் மட்டக்களப்பிலுள்ள இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு அறிவூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் குறித்து, இன்று (26) அவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடை…
-
- 0 replies
- 527 views
-
-
எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச உறவுகளின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் சாதாரணமாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இருந்து மார்ச் மாத நடுப்பகுதி வரை நடைபெறும். தற்போதைய நிலையில் புதிய மக்கள் ஆணையைப் பெற்ற புதிய அரசாங்கம் தற்போது அதிகாரத்திலுள்ளது. எனவே புதிய அரசாங்கத்தின் நிலையை நாம் விளக்கவேண்டும். அத்துடன் புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோரின் நிலையையும் நாம்…
-
- 0 replies
- 381 views
-
-
668 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் 2019ஆம் ஆண்டில் 668 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி எஸ். நிலாந்தன் தெரிவித்தார். கடந்த வருடம் தமது திணைக்களத்தால் மேற்கோள்ளபட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தமாக 668 வியாபார நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள…
-
- 0 replies
- 483 views
-
-
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமிழ் மக்கள் பழிவாங்கப்படுவர் என ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் போலித்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கோத்தபாய ராஜபக் ஷ வெற்றி பெற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. மாறாக சகலருக்குமான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி பொதுச்செயலாளரும் ஆளுநருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் பிரசா…
-
- 0 replies
- 329 views
-
-
தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு பெருமெடுப்பில் தயாராக வேண்டும் என வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், நடத்தப்படவுள்ள 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இந்த முடிவு தமிழ் மக்களுக்கு எத்தகைய மனக்கசப்பையும், நெருடலையும் தரவில்லை. மாறாக அளவற்ற மகிழ்ச்சியையே தருவதாகவும், இந்த முடிவுக்கு அமோக வரவேற்பு அளிப்பதாகவும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு …
-
- 0 replies
- 279 views
-
-
(நா.தனுஜா) 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விபத்துச் சம்பவமொன்றுக்காக கைதுசெய்யப்பட்ட நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் தலைவருமான சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத அனுஷ்ட்டான நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க, 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றியடைந்தது. எமது ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த 9 தேரர்கள் ஊடாகவே அவர்களுக்குப் பெரும்பான்மையைப் பெறமுடிந்தது. அவ்வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கே தீர்மானித்திருந்த…
-
- 5 replies
- 771 views
-
-
உலகவாழ் கிறிஸ்தவர்களால் கிறிஸ்மஸ் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய இலங்கையிலும் இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மக்கள் மகிழச்சியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கமைய இயேசு பாலனின் பிறப்பைக் குறிக்கும் நத்தார் பண்டிகைக்கான நள்ளிரவு ஆராதனைகள் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலை…
-
- 3 replies
- 825 views
-
-
மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி…
-
- 0 replies
- 537 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி காவல்துறைஅதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு. சந்திகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதுதாவது சுற்றுச் சூழல் பாதிப்புக்களை கருதி கணியவளத் திணைக்களத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இத்தீர்மானம் இதுவரை நடைமுறைக்கு வந்ததாக தெரியவில்லை எனவே தற்போதும் மாவட்டத்தின் பல இடங்களில் சட்டவிரோத மணல…
-
- 1 reply
- 658 views
-
-
(லங்கா ஈ நியூஸ் 2019 டிசம்பர் 25 பிற்பகல் 06.20) முன்கூட்டியே எச்சரிக்கை தகவல்கள் கிடைத்து இருந்த போதும் ஞாயிறு குண்டு தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்திற்கு செய்தி வந்துள்ளது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடமை பொறுப்புகளை தவறியமை, 250 மனித உயிர்கள் கொலை செய்யப்பட இடமளித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே அழைப்பாணை விடுத்துள்ளார். தான்…
-
- 1 reply
- 587 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாணத்தில் இன்று காலை தொடக்கம் இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்ப்பாணத்தில்-இன்று-கா/
-
- 16 replies
- 1.9k views
-
-
கிறிஸ்மஸ் தினத்தில் பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1040 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமது போராட்ட கொட்டகை முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் படத்தை நத்தார் தாத்தா வேடமணிந்து, நாத்தார் வாழ்த்துக்கள்- அடுத்த நத்தாருக்குள் தீர்வு என வாசகத்தையும் பொறித்து ஏந்தியிருந்தனர். மேலும், ' துப்பாக்கிகள…
-
- 1 reply
- 426 views
-
-
கடமையில் இருந்த இராணுவ வீரரின் கழுத்தில் தாக்கி துப்பாக்கி பறிப்பு – வவுனியாவில் சம்பவம் வவுனியா, போகஸ்வெவ முகாமில் கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த இராணுவ வீரர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கடமையில்-இருந்த-இராணுவ-வ/
-
- 2 replies
- 484 views
-
-
ஜனாதிபதியின் வருகையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம் வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோட்டபாயவின் வருகையை அடுத்து காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது. புதிய ஜனாதிபதி கோட்டபாய தமிழ் பகுதிகளில் தமிழ் மொழி நடைமுறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதையடுத்து, வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளில் இயங்கி வந்த பொலிஸ் நிலையங்களில் காவல்துறை என்ற தமிழ் மொழியிலான பெயர்ப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஜனாதிபதியின்-வருகையை-அடு/
-
- 11 replies
- 1.1k views
-