ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் சிறப்புச் செய்தியாளர்Dec 15, 2019 | 4:26 யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்…
-
- 10 replies
- 1.3k views
-
-
தாயகத்தில் எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன-செல்வம் அடைக்கலநாதன் தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும். அவர்கள் அங்கேயே குடியுரிமையைப் பெற்று இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்தவர்கள் இங்குள்…
-
- 0 replies
- 293 views
-
-
அங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி! மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர…
-
- 0 replies
- 763 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாளை(செவ்வாய்கிழமை) முதல் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியம் 2.00 மணிக்கு…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது. யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பச்சைப் பீப்பாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழ்பக்க செய்தியாளர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்றனர். அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்…
-
- 35 replies
- 4.8k views
-
-
(ஆர்.யசி) இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் …
-
- 8 replies
- 1.1k views
-
-
என்.ராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எம். ஏ. சுமந்திரன் வந்த பின்னரே, அக்கட்சிக்குள் இருந்த அங்கத்துவக் கட்சிகள் சீர்குலைந்ததாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரன் என்பவர் எங்கிருந்தோ வந்து, திடீரென்று கூட்டமைப்பின் நுழைந்தாரெனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராஜா தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டாரெனவும் கூறினார். தலைமைப் பொறுப்பு என்பது சாதாரணமானது அல்லவெனத் தெரிவித்த அவர், அதை சரியாக வழிநடத்த தெரியாத ஒருவர்தான், தலைமைப் பதவி வகிக்கின்றாரெனவும் குற்றஞ்ச…
-
- 2 replies
- 435 views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/71104
-
- 5 replies
- 729 views
-
-
விசேட சுற்றிவளைப்பு – 340 பேர் கைது! மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்படாமல் இருந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். http://athavannews.com/விசேட-சுற்றிவளைப்பு-340-பேர/
-
- 0 replies
- 278 views
-
-
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு தடை! அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்கள் ஆகிய பிரிவுகளுக்கான நியமனங்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில் சில அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவன…
-
- 0 replies
- 221 views
-
-
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. கிளிநொச்சி: முல்லைத்தீவு: http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/நனவநதல-நகழவ/46-242485
-
- 5 replies
- 861 views
-
-
தீவகம், சாட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீமூட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் கட்டுங்கடங்காமல் அதிகரித்த நிலையிலேயே பொதுமக்கள் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மணல் கடத்தலில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை நேற்று (10) மறித்த சிலர் அவற்றை தீ வைத்து எரித்தனர். இதனால் இரண்டு உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்தன. மணல் கடத்தல் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டும், மணல் கடத்தல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த மக்களே உழவு இயந்திரத்திற்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வேலணை- சாட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு அண்மையில் தனியார் காணிகளில் கடந்த சில நாட்களாக பெருமள…
-
- 10 replies
- 1.7k views
-
-
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே விரைவில் இது குறித்தும் நாம் நடவடிக்கைகளை எடுப்போம் . மேலும் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கும் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்களது ஒத்துழைப்புக் காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா …
-
- 4 replies
- 490 views
-
-
ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023
-
- 8 replies
- 1.4k views
-
-
(நா.தனுஜா) நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கும், அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக அனைத்து சிறார்களுக…
-
- 3 replies
- 634 views
-
-
இந்த வருடம் இலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நட்டத்தில் இயங்கும் 19க்கும் அதிகமான அரச நிறுவனங்களை இலாபம் மீட்டும் நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-மனசர-சபயல-8000-கட-ரபய-நடடம/175-242458
-
- 1 reply
- 808 views
-
-
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றிருந்ததோடு, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் அதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தொடர்ச்சியான தீர்மானங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளாலும், வாக்குவங்கியை நோக்கிய அரசியலுக்காகவுமே அவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் விமர்சனம் வெளியிட்டிருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் ஐக்கியப்படு…
-
- 0 replies
- 271 views
-
-
குற்றப்புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த டீ சில்வா இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவுக்கும் தொடர்புள்ளது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவிதந்துள்ளார். இலங்கையை தமது இராணுவ தளமாக செயற்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். சுவிஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டும் ஒன்றிணைந்தே இந்த சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல் நாடகத்தை முன்னெடுத்துள்ளன என சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம், இலங்கையில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறினார்.…
-
- 3 replies
- 952 views
-
-
தர்மபுரத்தில் வீதியை மறித்துப் போராட்டம் கிளிநொச்சி பரந்தன் ஏ-35 விதியின் வெள்ள பாதிப்பை தடுக்கும்வகையில் தர்ம்புரம் நெத்தலியாற்றுப் பாலத்தினை மீளமைக்குமாறும் வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க கோரியும் தர்மபுரத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று 15-12-2019 காலை பத்து மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நெத்தலியாறு காலத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது இதில் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிது நேரம் ஏ35 வீதியின் ஒருபகுதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்க…
-
- 0 replies
- 347 views
-
-
ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம்-சுமந்திரன் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதற்கு இடமளிக்கமாட்டோம். அவ்வாறு தன்னிச்சையாக பிரேரணையிலிருந்து அரசாங்கம் அவ்வாறு தன்னிச்சையாக விலக முடியாது. இதேவேளை இலங்கை குறித்த ஜெனிவா பிரேரணையை மீளாய்வு செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு மீளாய்வு செய்த பின்னர் அரசாங்கம் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று நாங்கள் பார்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்…
-
- 6 replies
- 616 views
-
-
மட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி நிலை ஏற்படும் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாங்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில். நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் கடைசி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற குளிரூட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானை, அரசடி சந்தியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றை மோதியுள்ளது. இச்சம்பவம் இன்று (14 ) மாலை 2.10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரின் சாரதி மயிரிழையில் தப்பியுள்ளார். https://newuthayan.com/காரை-மோதிய-புகையிரதம்-சங/
-
- 3 replies
- 922 views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, “பயணிகளுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பிராந்திய விமானப் போக்குவரத்து…
-
- 0 replies
- 306 views
-
-
‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி! By admin - “எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள். தமிழர்கள் இப்படியானவரை ஆதரிக்க முடியுமா? எந்தக்காலத்திலும் இவர்களை மன்னிக்கக் கூடாது.“ ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் யாழ் சங்கிலியன் தோப்பில் இப்படி மக்கள் முன் எழுச்சி உரையாற்றிய இலங்கை தமிழ் அரசு கட…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழரின் கைகளுக்குள் வந்தால் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவர்! பாறுக் ஷிஹான் கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் மாத்திரமே தமிழ் மக்களை பாதுகாக்கப்படுவர் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் பொத்துவில், கோமாரி, ஊரணி ,பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை 5 மணி முதல் 8 மணிவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்…
-
- 0 replies
- 676 views
-