ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வட மாகாண ஆளுநர் யார்? இலங்கையில் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன. 01.வடக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம். 02.கிழக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 03.மத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம். 04.ஊவா மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 மாதங்கள். 05.சப்ரகமுவ மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 06.வடமத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 07.வடமேல் மாகாண …
-
- 0 replies
- 442 views
-
-
உலக அழகியான இலங்கைப் பெண் 2020 ஆம் ஆண்டுக்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி உலக அழகியாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/உலக-அழகியான-இலங்கைப்-பெண்/175-242158?fbclid=IwAR3MmFEWtPp5UoncD-5oEQMAfoHBTB_ykT5MT4sbi28yVxqqdBvgy_A5Z2c
-
- 0 replies
- 316 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான், யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை பொலிஸாருக்கு இன்று அனுமதியளித்தார். பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, களனி, வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க நீதிவான் பொலிஸாருக்கு அனுமதியளித்தார். https://www.virakesari.lk/article/70518
-
- 16 replies
- 2.2k views
-
-
சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தத சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் மாணவர்களை அச்சுறுத்திய செயற்பாடு நடந்த போதும் பல்கலைக்கழக நிர்வாகம் வேடிக்கை பார்த்ததுடன், அவர்களை உள்ளேவிட்டு பிரதான வாயிலையும் மூட மறுத்தனர் எனத் தெரிவித்து மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக வாயிலில் பதற்ற நிலை காணப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் மாணவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்தச் சம்பவம் …
-
- 1 reply
- 440 views
-
-
காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் : வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் (நா.தனுஜா) காணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்களே தற்போது மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றார்கள். எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்துவோமே தவிர, அதனை மலினப்படுத்த மாட்டோம் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார். அதேவேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இதுவரையில் எமது அலுவலகத்தின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக…
-
- 1 reply
- 302 views
-
-
புதிய அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை- மாவை சேனாதிராஜா கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.மேலும் நல்லிணக்கம் குறித்து பேசிய மாவை சேனாதிராஜா, நல்லிணக்கம் என்பது அரசாங்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் இதுவரை, இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தக் கொள்கையையும் குறிப்பிடவில்லை எனமாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்தோடு இந்த விவகாரங்கள் தொடர்பாக முந்தைய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை எடுத்துரைத்த சேனாதிராஜா, “தமிழர்களின் பிரச்சினைகளை புதிய அரசியலமைப்பு மூலம் மட்டுமே தீர்க்க முடியு…
-
- 2 replies
- 476 views
-
-
இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் முஸ்தீபுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) என்பன ஈடுபட்டுள்ளன. இதற்கான கலந்துரையாடல்களில் இரண்டு தரப்பும் ஈடுபட்டுள்ளன என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்- யுத்தத்தின் பின்னர்- ஏகபோக தலைமைத்துவமாக உருவெடுத்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி, கூட்டணி தர்மங்களை துளியும் கணக்கெடுக்காமல் ஏகபோகமாக செயற்பட்டு வரும் நிலையில், தமிழ் அரசு கட்சியுடன் கூட்டு வைத்துள்ள இறுதி கட்சிகளும் வெளியேறும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இதற்கான சில சுற்று பேச்சுக்கள் இந்த இரண்டு கட்சிகளிற்குமிடையில் நடைபெற்றுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது. இந்த பேச்சுக்களில் க…
-
- 1 reply
- 462 views
-
-
8 வயது சிறுமியை ஒரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த தந்தையை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள 4ஆம் காலனி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய கூலித் தொழிலாளியான தந்தை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை தனது 8 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார். இதனையடுத்து சம…
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார். சர்வதேச பிக்குகள் மகா சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், அமெரிக்காவின் லொஸ் அஞ்ஜலீஸ் நகர ஸ்ரீ லங்கா பௌத்த விகாரையின் விகாராதிபதியுமான வல்பொல பியநந்த தேரர் தெரிவித்ததாக இன்றைய (08) சகோதர தேசிய வார இதழொன்று இதனைக் கூறியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தேரர் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கும் வருகை தந்துள்ளார். இதன்போது தேரர் கூறிய கருத்துக்களையே இன்றைய வார இதழ் இவ்வாறு வெளியிட்டுள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்வது ஒரு வியாபாரம். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அடிப்படைவாத குழுக்களுக்கும் வேண்டிய…
-
- 1 reply
- 492 views
-
-
விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சித்தார்கள் என இருவர் கைது! மூதூர், கட்டைப்பறிச்சான் அம்மன்நகர் – 02 ஆம் பகுதியைச் சேர்ந்தஎதிர்மனசிங்கம் பிரபு மற்றும் மூக்கையா கணேஸ் ஆகிய இருவரும் நேற்று இரவில் இருந்து தொடர்புகளற்றுப் போயுள்ளனர். — கொடுக்கல் வாங்கல் விடயமொன்று தொடர்பாகச் சம்பூருக்குச் செல்வதாக நேற்று 07.12.2019 மாலை புறப்பட்ட இருவரும் குறித்த வீட்டிற்குச் செல்லவில்லை என்பது இன்று காலை தெரியவந்துள்ளது. — காவல்துறை முறைப்பாடுகளை அடுத்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது அவ்விருவரும் பயங்கரவாதப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. — இருவரையும் கைது செய்து இன்று காலை வீடுகள…
-
- 1 reply
- 482 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலநறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அரசியல் பயணத்தில் இருந்து தான் விலக்கபோவதில்லை என கூறியிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, “அரசியலில் மீண்டும் வர வேண்டும் என்று நம்புவதாகவும், தன்னால் முடியும் வரை அரசியலில் தொடருவதாகவும்” கூறியிருந்தார். அத்தோடு “தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் வரை நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது” எனவும் தெரிவித்திருந்தார். இ…
-
- 0 replies
- 362 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகள், வாசனைத் திரவியங்கள் இறக்குமதிக்குத் தடை – பிரதமர் ராஜபக்ச உத்தரவு சிறு உற்பத்தியாளருக்கு ஊக்குவிப்பு பிரதமர், தந்து நிதி அமைச்சுப் பொறுப்பின்கீழ் இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களை விடுத்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளரை ஊக்குவிக்குமுகமாக 9 வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது ஆனாலும் உள்நாட்டு மறுசுழற்சி (recycling) நிறுவனங்கள் தொடர்ந்தும் செயற்பட அனுமதியுண்டு வெசாக் லாம்புகள், பட்டங்கள், ஊதுபத்தி இறக்குமதிக்குத் தடை பிரதமர் ராஜபக்ச சிறிய விவசாய, உற்பத்தியாளரைப் பாத…
-
- 0 replies
- 826 views
-
-
(ஆர்.யசி) புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கில் எமது மக்களை அடையாளப்படுத்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்தால் அதனை நாம் ஆதரிப்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எனினும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அழுத்தங்களை முழுமையாக பிரயோகிப்போம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலைங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் இப்போ…
-
- 5 replies
- 628 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா…. December 6, 2019 யாழ்ப்பாண பல்கலைக்கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இன்றைய தினம் ஆரம்பமான பட்டமளிப்பு விழா நாளை, நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்கள் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் 11 அமர்வுகளாக நடைபெறும். இந்த பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள் , வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், …
-
- 1 reply
- 665 views
-
-
இரண்டு கருங்கற்கள் கட்டப்பட்டு சமுத்திரத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளேன் : நீந்தி கரையேறுவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் இரண்டு கருங்கற்கள் கட்டப் பட்டு சமுத்திரத்தில் நான் தள்ளிவிடப்பட்டுள்ளேன். எனி னும் நீந்தி கரையேறுவேன் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம், பழைய பேரூந்து நிலையம், புதிய பேரூந்து நிலையம், மரக்கறி மொத்த விற்பனை நிலையம் என்பவற்றிற்கு சென்று அங்கு பலரையும் சந்தித்ததன் பின்னர் வவுனியா வாடி வீட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், இங்கு தொடர்ந்தும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், பலரின் கோ…
-
- 3 replies
- 625 views
-
-
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழ் மக்களை சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்க…
-
- 5 replies
- 797 views
-
-
மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்கள் இறக்குமதிக்கு தடை! மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) இவ்வாறு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், கருவா, சாதிக்காய், வசவாசி, இஞ்சி, ஏலக்காய், மஞ்சல் மற்றும் கராம்பு போன்ற பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி மீள் ஏற்றுமதி மற்றும் சிறு தயாரிப்புகளின் பின்னர் மீள் ஏற்றுமதிசெய்யும் நோக்கில் மசாலாப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கழிவு பொருள் மீள் ஏற்றுமதி வெசாக் விளக்குகள் மற்றும் பட்டம் என்பனவற்றின் இறக்குமதிக்கும் உடனடி தடை வித…
-
- 4 replies
- 769 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 2…
-
- 10 replies
- 973 views
-
-
மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தன்னுடையவும் மாலைத்தீவின் ஜனாதிபதி மொஹமட் சாலிஹ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் தற்போதைய முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர், இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பிராந்திய கூட்டுறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஜனாதிபதி கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர், “எனது நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திர…
-
- 2 replies
- 456 views
-
-
டிரென்டிங்கில் இடம்பிடித்த 3 தமிழர்கள் ! யார் அவர்கள்? Published by R. Kalaichelvan on 2019-12-06 15:39:18 சில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகின்றது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் முதல் இடத்தில் இந்தியாவின் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார். உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்க இதுவே காரணம் என்கின்றனர் அஸ்கிரிய மல்வத்து பீடங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் சர்வதேச சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது தெளிவாக தெரிவதாவும் ஆகவே நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தும் அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள் அதனாலேயே ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் என்ற கருத்துக்கள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் இரண்டு அரசுகள் உருவாக்கப்பட்டால் மட்டுமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்ததாக கூறப்படும் காரணியில் இலங்கை அரசாங்கம் அதன் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் இலங்கையின் பிரதா…
-
- 5 replies
- 852 views
-
-
இலங்கையும் சீனாவும் தங்களின் நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் ஆராய்வதற்கு இணங்கியுள்ளன. சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான முன்னாள் தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராயப்பட்டதாகவும்,இரு தரப்பும் இது குறித்து கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்ட பின்னர் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்ட கால நட்புறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு இணங்கியத…
-
- 24 replies
- 1.9k views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தேசிய உளவுத் துறையின் பணிப்பாளராக, முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலையில் இதுவரை அந்த பதவியில் இருந்து வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு அந்த பதவி இல்லாமல் போயுள்ளதால் அவர் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மாற்றம் அடைந்துள்ளார். தேசிய உளவுத்துறை பணிப்பாளர் பதவி இல்லாமல் போனதையடுத்து அவர் இவ்வாறு பொலிஸ் தலைமையகத்துக்குட்பட்ட பொலிஸ் அதிகாரியாக கணக்கில் கொள்ளப்படுவதாகவும், அது இடமாற்றம் அல்ல எனவும் பொலிஸ் ஆணைக் குழு தகவல்கள…
-
- 1 reply
- 533 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி …
-
- 4 replies
- 636 views
-
-
மன்னாரில் கிராமமொன்று வெள்ளநீரில் மூழ்கியது ; 30 குடும்பங்கள் இடம்பெயர்வு Published by Daya on 2019-12-06 16:32:18 மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த மு…
-
- 0 replies
- 358 views
-