ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அறிவித்துள்ள தமிழ் மக்கள், இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக பிரான்ஸ், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக அறியவருகின்றது. இன்று பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழீழ தேசியக் கொடிக்கு எதிராக சிறிலங்கா எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரித்தானியத் தூதரகம் முன்பாக தமிழீழ தேசியக் கொடியுடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்க…
-
- 2 replies
- 804 views
-
-
மூன்று ஆண்டுகளில் 32,000 இலங்கையர்கள், இரட்டைக் குடியுரிமையை பெற்றுள்ளனர்…. வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16.05.18) பத்தரமுல்லவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது. உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார். கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார். …
-
- 0 replies
- 353 views
-
-
கடன் நெருக்கடிக்கு தீர்வு காண கடுமையாக உழைத்து வருகிறோம் இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு தீர்வைக் கொண்டுவர சர்வதேச நாணய நிதியம் கடுமையாக உழைத்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜியேவா தெரிவித்துள்ளார். அமெரிக்க சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கும் வகையில் குறைந்த வருமானம் கொண்ட பல நாடுகள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை உலக நிதி நெருக்கடியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? "இதுவரை, இந்த நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி உலகளாவிய நெருக்கடியை உருவாக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை. செட் (Chad), எத்தியோப்பியா, ச…
-
- 0 replies
- 359 views
-
-
யாழில் தாக்கிய வைரஸ் நோய் சிக்குன்குனியா. அண்மைக்காலமாக யாழ்பாணத்தில் பெருமளவிலான மக்களை தாக்கிய வைரஸ் நோயானது சிக்குன்குனியா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ் வைரஸ் காய்சலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து கொழும்பில் உள்ள இலங்கை மருத்துவ ஆராச்சி கழகத்திற்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்நோயின் தாக்கத்திற்கு எண்ணாயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கியுள்ளமை அறியவந்துள்ளது. www.pathivu.com
-
- 0 replies
- 902 views
-
-
மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1319465
-
- 4 replies
- 434 views
- 1 follower
-
-
அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாழ்சென்றனர். அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு ஒன்று யாழ் குடாநாட்டிற்கு நேற்று விஜயம் செய்துள்ளது நான்கு போ அடங்கிய இந்த குழுவினர் யாழ் குடாநாட்டில் தற்போது தோன்றியுள்ள மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். யுhழ் குடுநாhட்டில் ஏற்பட்டுள்ள மனித பேரவலம் குறித்து தகவல்களை திரட்டும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. www.pathivu.com
-
- 0 replies
- 729 views
-
-
Feb 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / இலக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய ஊடகங்கள் - ஈழமுரசு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிலும், கொல்லப்படும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையிலும் உலகில் முன்னணியில் திகழும் நாடாக சிறீலங்கா இன்னமும் விளங்குகின்றது. ஊடகங்களின் மீதான சிறீலங்காவின் அடக்குமுறையும் வன்முறைகளும் போர் நடை பெற்ற காலங்களில் மட்டுமல்ல, போர் முடிவடைந்ததன் பின்னரும் தொடர்கின்றது என்பதற்கு அண்மையில் கொழும்பிலுள்ள ஊடக நிறுவனம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது வரையான சாட்சியங்கள் உள்ளன. போர் நடைபெற்றபோதும், அது முடிவுற்றதாக கூறப்பட்டதன் பின்னரும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிமலராஜன், தராகி சிவராம், லசந்த விக்கரமதுங்க... என ப…
-
- 0 replies
- 928 views
-
-
17 அக்டோபர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:43 ஜிஎம்டி புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புக்களை தடை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் 2001 ஆம் ஆண்டின் தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள உலக தமிழர் பேரவை அது குறித்து பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை கோரியுள்ளது. இந்த விடயம் குறித்து உலக தமிழர் பேரவையின் தலைவர் வண. டாக்டர் எஸ்.ஜே. இமானுவல் அவர்கள், பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து ஐநாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட 1373 ஆம் இலக்க தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் 16 புலம்பெயர் அமைப்புக்களையும்,…
-
- 1 reply
- 369 views
-
-
கோட்டாபயவுக்கு கதிர்காமத்தில் சொகுசு விடுதி? முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தியை, “கோட்டாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. …
-
- 1 reply
- 572 views
-
-
கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு 07 பகுதியிலுள்ள குதிரை பந்தயத் திடலில் நேற்று பிற்பகல் சடலமொன்று காணப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குதிரை பந்தயத் திடலுக்கு போலீஸ் குழுவொன்று சென…
-
- 1 reply
- 742 views
- 1 follower
-
-
யாழ். பயங்கரவாத நகரமாகிவிட்டது: உள்ளூர் அமைப்புக்கள் [புதன்கிழமை, 13 டிசெம்பர் 2006, 16:48 ஈழம்] [பூ.சிவமலர்] வெள்ளை வானில் வந்து ஆட்களைக் கடத்திச் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். நகரம் பயங்கரவாத நகரமாகியுள்ளது என உள்ளூர் அமைப்புக்கள் தெரிவித்தன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் யாழ். மாவடத்தின் வழமை நிலை முற்றாகச் சீர்குலைந்து விட்டது என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பு (CHA) அண்மையில் வெளியிட்ட "விரைவான அமைதியும் பிரச்சினையும் குறித்த ஆய்வு" என்ற அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் காரணமாக வேறு வழியின்றி யாழ். மாவட்டத்திலிருந்து கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என அவ்வறிக்கை க…
-
- 0 replies
- 638 views
-
-
யாழ்.குடாவின் பாதுகாப்பு மீண்டும் இராணுவத்தினர் வசம்: சோதனைக் கெடுபிடிகள் திடீர் அதிகரிப்பு... சனிக்கிழமை, 26 பிப்ரவரி 2011 05:11 check_pointயாழ்.குடாநாட்டில் இராணுவத்தினன் சோதனைக் கெடுபிடிகள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அசௌகயங்களுக்குள்ளாகி வருகின்றனர். குடாநாட்டின் பாதுகாப்பு மீண்டும் இராணுவத்தினரின் கைக்குச் சென்றுள்ளது. இதன் விளைவாக இராணுவத்தினர் சந்திக்குச் சந்தி நின்று மக்களைச் சோதனையிடும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். வீதியில் வாகனங்களில் செல்வோரை உடல் சோதனை செய்துவருகின்றனர்.அத்துடன் அடையாள அட்டைப்பரிசோதனையையும் மேற்கொள்கின்றனர். வலி.மேற்குப்பகுதியில் வாகனங்களில் குறிப்பாக தனியார் பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரையும் இறக்கிச் சோதனை செ…
-
- 0 replies
- 449 views
-
-
நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்…
-
- 0 replies
- 248 views
-
-
சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற…
-
- 19 replies
- 1.1k views
-
-
b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே. ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது. இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு 1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள் 2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety) 3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs ) 4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs) 5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழர் திருப்தி கொள்ளும் தீர்வை முன்வைத்தால் அமைச்சுப் பதவிகளை ஏற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் [sunday, 2011-03-13 02:49:46] வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமானதும் நிரந்தரமானதுமான தீர்வு ஒன்றினை அரசு முன்வைத்து அதனைச் செயற்படுத்துமானால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று இயங்குவது தொடர்பாக தமிழ் மக்களின் ஆலோசனையை பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்து வேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகமொன்று தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். பண்டா- செல்வா ஒப்பந்தம் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்த…
-
- 0 replies
- 722 views
-
-
மட்டக்களப்பில் நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலை – அதிருப்தியில் மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வவுணதீவு,கரடிவெட்டியாறு விஜிதா வித்தியாலயத்தினை மீண்டும் திறக்குமாறு பிரதேச மக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் கரடிவெட்டியாற்றில் கடந்த 25வருடங்களாக இயங்கிவந்த பாடசாலை ஆசிரியர் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் இங்கு கல்வி கற்ற மாணவர்கள் உன்னிச்சை பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பாடசாலையில் அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒரு…
-
- 0 replies
- 639 views
-
-
'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' ஜனாதிபதியினால் திறந்து வைப்பு. "கலாசாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியின் பாலம்" "வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்" - 'யாழ்ப்பாண கலாசார நிலையம்' திறப்பு விழாவில் ஜனாதிபதி நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட…
-
- 1 reply
- 374 views
-
-
நிட்டம்புவையில் பேருந்தில் இன்று மாலை குண்டு ஒன்று வெடித்துள்ளது. நிட்டம்புவை கிரியுள்ள மார்க்த்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ் ஒன்றினுள்ளே இக் குண்டு வெடித்துள்ளது. பேருந்து முற்றாக எரிந்தாக செய்தி. ஜந்து பேர் ஸ்தலத்திலே மரணமானார்கள். படுகாயங்களுடன் சிலர் வைத்திய சாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் கொழும்பு கண்டி மார்க்கத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் தொடரும் ஜானா
-
- 6 replies
- 2.2k views
-
-
புலிக் கொடி விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு மற்றும் புலிக் கொடிகள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் தப்பியோடியிருந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரிடம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், பேராறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது 15 கிலோ கிளைமோர் குண்டு…
-
- 1 reply
- 622 views
-
-
நாடாளுமன்றத்திற்குள் எதிர்கட்சியினர் போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1324788
-
- 1 reply
- 197 views
-
-
கருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு! ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், திருக்கோவில் பகுதியில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தான் முரளிதரனுக்கு எதிராக, ஜெனீவா மனித உரிமை பேரவையில் சாட்சி வழங்க தயார் என, புலம்பெயர்ந்தவரான கலாநிதி போல் நிவுமன் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்த…
-
- 1 reply
- 438 views
-
-
தற்போது இடம்பெற்று வரும் வன்முறைகள், மோதல்களினால் புதிதாக 2 இலட்சத்து 13 ஆயிரம் பேர் அகதிகளாகியிருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் உதவுவதற்காக 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. வடக்கு - கிழக்கு மோதல்களினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு 2006 ஏப்ரலின் பின்னர் மீண்டும் வெடித்த வன்செயல்களும், மோதல்களும் மனிதாபிமான ரீதியாக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 582 views
-
-
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிடும் தனியார் சேவையை ஆரம்பிக்கவுள்ள அரசு! சனி, 02 ஏப்ரல் 2011 08:54 அரச வைத்தியசாலைகளில் கட்டணம் அறிவிட்டு சேவை வழங்கும் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகள் பொதுமக்களிடம் அசாதாரணமான முறையில் கட்டணங்களை அறவிடுவதுடன், அவற்றுக்கென நிலையான கட்டண முறையொன்று இல்லை. இதனால் அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த முறை இவ்வாண்டு இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் செய…
-
- 0 replies
- 682 views
-
-
சீனா ஆர்வம் காட்டாமையினாலேயே மத்தளவை இந்தியாவுக்கு வழங்கினோம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் அந்நாட்டிலிருந்து எமக்கு எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. அப்படி அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. மத்தள விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவே நாம் முற்பட்டோம் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சீனா ஆர்வம் காட்டமையின் காரணமாக இந்தியாவுக்கு குத்தகை வழங்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். சுயாதீன இராஜ்ஜியமாக சீனாவுடனும் இந்தியாவுடனும் சமமாக கொடுக்கல் வாங்கல் ச…
-
- 3 replies
- 535 views
-