ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு ( காணொளி இணைப்பு ) படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சட்டத்தரணி சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை…
-
- 1 reply
- 477 views
-
-
சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை வீசா மறுப்பு: இவருடன் செல்லும் மற்ற பிரித்தானிய, ப்ரென்ச் அமைச்சர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. காரணம் : பல முக்கிய பிரமுகர்களை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதாம். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8022190.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள சிறிலங்கா, இந்த ஆர்ப்பாட்டங்களில் விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்துவதற்குக் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 501 views
-
-
தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது ! [Friday, 2013-05-17 21:20:04] முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார். கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்து…
-
- 0 replies
- 519 views
-
-
பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள்!' - காசி ஆனந்தன் பேச்சு ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், என்றார் கவிஞர் காசி ஆனந்தன். திரைப்பட ஒளிப்பதிவாளர் (படம்: தூண்டில்) கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்தது. கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், இயக்குநர் பாலுமகேந்திர முதல் பிரதியை வெளியிட, ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக் குமரனின் தந்தை குமரேசன் பெற்றுக் கொண்டார். தலைமை உரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது: ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இது தேர்தல் காலம் என கூறுகிறார்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
எமது ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை அதிகாரத்தில் இருப்போர் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் (க.கமலநாதன்) தமிழ் மக்கள் பழைமையானதும் ஆழமானதுமான வரலாற்றி னைக் கொண்டவர்கள். அவர்களை அழித்துவிடலாமென நினைத் தால் அது சாத்தியப்படாத ஒன்றாகும். நாட்டில் பல பகுதிகளிலும் வாழும் சகல தமிழ் மக்களினதும் இறைமையை பாதுகாக்கும் வகையில் நியாயமான தீர்வு அமையவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலிறுத்தினார். அதேநேரம் இந்த செயற்பாடுகளுக்கான எமது ஒத்துழைப்புக்கள் எத்தகையது என்பதை அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர…
-
- 0 replies
- 177 views
-
-
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் குறித்து மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு கூறுவதென்ன ? (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவை நாடுவதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் மிகவும் முக்கியமான தருணத்தில் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவத…
-
- 0 replies
- 300 views
-
-
-
மேர்வின் சில்வாவிற்கு புதிய அதிகாரம்! குரங்கின் கையில் பூமாலையா? செவ்வாய்க்கிழமை, 28 மே 2013 08:46 அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வழங்கப்படவுள்ளது. கடமைகளை உரிய முறையில் ஆற்றத் தவறும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய பூரண அதிகாரம் அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கென பாராளுமன்றில் விசேட சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய சட்ட மூலத்திற்கான அனுமதி அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அமைச்சுக்களில் கடயைமாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தி, சட்ட நடவடிக்கை எடுக்கவும், பரி…
-
- 0 replies
- 575 views
-
-
கருங்கல்லை வைத்து குண்டெறிதல் பயிற்சி பெறும் மாணவி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கலவான தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக இந்தப் பாடசாலையின் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குண்டெறிதல் பயிற்சியை பெறுவதற்கு இரும்பு குண்டு இல்லாத காரணத்தினால் கருங்கல்லைக் கொண்டு மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகின்றார். http://www.onlineuthayan.com/news/23238
-
- 0 replies
- 541 views
-
-
சென்னை தீவுத்திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தியும், முதலமைச்சர் கருணாநிதியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் பேசிய சிதம்பரம் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், இலங்கை போரில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றுங்கள். உங்களால்தான் முடியும். உங்களை அன்புடனும், பணிவுடனும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு போர் தொடுக்கும் என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை தடுத்து நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள் எ…
-
- 14 replies
- 2k views
-
-
அப்பாவிப் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு அமெரிக்கா ஜனாதிபதி பாராக் ஓபாமாவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான நிகழ்வுகள் தொடர்பாக உடனடியாக கலந்து ஆலோசித்து அங்கு நடக்கும் சர்வதேசச் சட்ட மீறல்களை விசாரிக்க ஐ.நா. விசாரணைக் குழுவொன்றை அனுப்பிவைக்குமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கத்துவர்களுக்கும் மனித உரிமை அமைப்புக்கள் அழைப்புவிடுத்துள்ளன. பாதுகாப்பு வலயத்துக்குள் இயங்கும் வைத்தியசாலை தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளான பின்பே சர்வதேச மன்னிப்புச் சபையால் இவ் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தாக்குதல்களில் 38 நோயாளிகளுக்கு மேலானோர் பலியானது இங்கு குறிப்பிட…
-
- 2 replies
- 769 views
-
-
காணிகளிலுள்ள எமது அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! கேப்பாப்பிலவு மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் விரைவாக கையளிக்கவேண்டும் எனக்கோரி பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பனியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்னான்காவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமது காணிகளிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் என்பவற்றை இராணுவத்தினர் அழிப்பதாக நேற்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர் இந்த இடத்தில் வருகை தருபவர்களிடம் தமது காணி…
-
- 2 replies
- 380 views
-
-
‘வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பு?’ ஜே.ஏ.ஜோர்ஜ் “கேப்பாப்புலவு மக்கள் 22 நாட்களாக, வீதியில் அமர்ந்து சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, தமது காணிக்காகப் போராடிவருகின்றனர். இவ்வாறு வீதியில் சமைத்து உண்பதா பாதுகாப்பானது?” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பினார். தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தொ…
-
- 3 replies
- 288 views
-
-
இலங்கையில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக இலங்கை சார்பாக செயற்பட முனைப்பு, நம்பியார் இலங்கையிலுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு, பிரான்ஸ் செய்தித் தாள் ஒன்று இச் செய்தியை வெளியிட்டது. UN deliberately downplaying civilian death toll in order to stay in SL
-
- 4 replies
- 1.3k views
-
-
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “இதுதொடர்பாக நாம் இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது. இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், சிறிலங்கர்களால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவினால் அல்ல. தேசியப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வு ஒன்றே காணப்பட வேண்டும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பான விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காது. இந்தியா எமது நண்பன். தொடர்ந்தும் நல்ல உறவுகளை நாம் கொண்டிருக்க வேண்டும்.…
-
- 1 reply
- 1.4k views
-
-
கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் காரணம்- உலமா கட்சி குற்றச்சாட்டு! கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு விடுதலைப்புலிகளும் ஒரு காரணமென உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அத்தோடு, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு தற்போது, சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ கல்முனை பிரதேச செயலக பிரச்சினைக்கு …
-
- 1 reply
- 491 views
-
-
புலம்பெயர்ந்து தமிழர்கள் அதிகமாக வாழும் பிரித்தானியா, கனடா, யோ்மனி, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேற்று முன்நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
சர்வதேச சதியை புரிந்துகொள்வோம் - சுவிசிலிருந்து துருவாசன் - தோல்வியில் இருந்து மீண்டெழுதல், இன்றைய வரலாற்றுக் கடமை இது 'இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி." இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து. இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது. அதேவேளை, நடந்து போன துயரமான நிகழ்வுகள் வெறும் வரலாறாக மட்டும் இருந்துவிட முடியாது. அவை, எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் செம்மையான, திருத்தமான செயற்பாடுகளை நோக்கி முன்செல்ல முடியும். வன்னியில் கடந்த மே 19 ஆம் திகதி முடிவுக்கு வந்த போர் தமிழினத்தின் வரலாற்றில் மிக மோசமான வடுவாக மாறிவிட்டது. இதன் தாக்கத்தில் இருந்து - …
-
- 13 replies
- 2.9k views
-
-
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வரும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ருட் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23357
-
- 0 replies
- 407 views
-
-
பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் வாதாடுவேன் : எம்.ஏ சுமந்திரன் பன்னங்கண்டி மக்களுக்காக நீதிமன்றில் அவர்கள் தரப்பு சட்டத்தரணியாக வாதாடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை. இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி இன்று ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நில…
-
- 0 replies
- 258 views
-
-
தமிழகத்தின் செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை, ஈழத்தமிழர்களின் செயற்பாட்டினால் தமிழகமும் பாதிக்கப்பட்டிருந்ததாக அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பழைய சிந்தனைகளுடன் மாத்திரம் நாங்கள் இருந்தால் புதிய போக்கில் காலடி எடுத்து வைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டம் உருவாக்கம் என்பது, ஈழத்தின் மறு உருவாக்கத்திற்கான விதையாகவே தாம் பார்ப்பதாக மேலும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/portcity-project-is-the-reconstruction…
-
- 3 replies
- 735 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற 'கேப் கொலராடோ' கப்பலை சிறிலங்கா கடல் எல்லைக்குள் அனுமதிக்க அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது. இதனால், நிவாரணப் பொருட்கள் சிறிலங்கா சென்றடைவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 492 views
-
-
ஒருதொகை டைனமைற் குச்சிகளுடன் ஒருவர் கைது தடைசெய்யப்பட்ட வெடிபொருளான டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிழக்கு கடற்படை தளத்தின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கையில் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் நிறையுடைய 49 டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் டைனமைற் வெடிபொருள் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 266 views
-
-
வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு உணவு விநியோகஸ்த்தர்கள் அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய 50 கோடி ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா முகாம்களில் உள்ள மூன்று லட்சம் பேருக்குமான உணவுப் பொருட்களின் விநியோகத்தை மேற்கொள்வதற்காக 105 விநியோகஸ்த்தர்களுடன் அரசு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது. இதன்படி முகாமில் உள்ள ஒருவருக்கு ஒரு நாளுக்கான மூன்று வேளை உணவுக்குமாக 130 ரூபாவைத் வழங்குவதற்கு அரசு உடன்பட்டிருந்தது. இருந்தபோதிலும் இதனை 100 ரூபாவாகக் குறைக்கப்போவதாக அரசு பின்னர் தெரிவித்தது. இது தொடர்பாக உணவு விநியோகஸ்த்தர்களுடன் ஆறு தடவைக்கு மேல் அதிகாரிகள் பே…
-
- 0 replies
- 411 views
-