ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர். 1939 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ப.இராமசாமி 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்…
-
- 18 replies
- 1k views
-
-
கொவிட் தொற்றினால் நாடு மாத்திரமல்ல எமது பொருளாதாரமும் முடங்கிப்போயுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற வேண்டும் என ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் ஆற்றிய உரையின் வடிவம் வருமாறு, தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு…
-
- 0 replies
- 340 views
-
-
'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு பொதுக்கூட்டம் நோர்வேயில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 618 views
-
-
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை, மக்களுக்காக ஆளுநரை…
-
- 0 replies
- 217 views
-
-
நாட்டில்... தினமும், 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்! நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது. சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப் படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது. இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1242003
-
- 0 replies
- 234 views
-
-
நாமல் ராஜபக்சவிற்கு... புதிய பதவி! இலங்கை – பிரான்ஸ் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. https://athavannews.com/2021/1243515
-
- 0 replies
- 310 views
-
-
எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத் தான் இருக்கும் - காரணத்தை கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் (நா.தனுஜா) இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும். இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன. எனவே அத்தகைய உதவிகளை வழங்குவதற்கு முன்வருகின்ற தரப்பினரிடமிருந்து அவற்றைப்பெற்று நாட்டை அபிவிருத்தி செய்கின்றோம். அதற்கு பலவாறு உள்நோக்கம் கற்பிப்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. சீனாவுடனான தொடர்புகள் குறித்து ஒவ்வொருவரும் பல்வேறு விடயங்களைக் கூறலாம். ஆனால் அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை என்று கடற்றொழில்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தகவல…
-
- 2 replies
- 467 views
-
-
இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை இலங்கையானது காசாவில் மேற்கொள்ளப்பட்டது போன்ற ஓர் போர்குற்ற விசாரணையினை எதிர்கொள்ள வேண்டிய தேவை எழலாம் என கூறியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேச்சாளர் ரூபேட் கொவில் அவர்கள் கூறுகையில்; இலங்கையில் போரின் இறுதி காலப்பகுதியில் என்ன நடந்தது என்ன நடக்கவில்லை என்று இன்னமும் முறையாக விசாரித்து அறியப்ப்படவில்லை என கூறியுள்ளார். ஆகவே இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் விசாரணை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த விசாரணை காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பினால் ஜூரி ரிச்சார்ட் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட வி…
-
- 0 replies
- 357 views
-
-
மயிலிட்டி துறைமுகம் : ஏனைய பிரதேசங்களை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு வலிகாமம் வடக்கு மயிலிட்டி மீன்பிடித்துறைமுகமும் அதனை அண்டிய சுமார் 54 ஏக்கர் காணியும் நாளை காலை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை ஏனைய பகுதிகளை யும் விடுவிக்கக்கோரி மயிலிட்டி துறைமுகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்தார். இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக குறிப்பாக 1990 ஆம் ஆண்டு இடப்பெ…
-
- 0 replies
- 340 views
-
-
இரசாயன உரதிற்கான தடையில் திருத்தமில்லை – சசீந்திர அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சேதன பயிற்செய்கையை பயன்படுத்துவதற்கான முடிவு மக்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது தேர்தல்வாக்குறுதி அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பதுளையில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவரும் விரும்பாத தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும், சுயநலமாக இந்த தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் எவ்வாறான குறைபாடுகள் இருந்தாலும் ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லும் என்றும் …
-
- 0 replies
- 136 views
-
-
கனடாவிக்கு கடந்த ஒக்டோபர் மாதம் சென்ற ஓசியன் லேடி கப்பலில் 76 பேர் சென்றிருந்தனர். இவர்களை கனேடிய அதிகாரிகள் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கப்பலும் கப்பலில் சென்றவர்களும் புலிகள் என இலங்கை அரசாங்க புரளியினை கிளப்பி விட்டதன் பின்னர். கனடா அதிகாரிகள் குறிப்பிட்ட அகதி தஞ்சம் கோரியோர் மீது தீவிர விசாரணைகளை வழமையான அகதி சட்டங்களை மீறி விசாரணை செய்து வருகின்றது. இந்த அடிப்படையில் 76 பேரின் உடைகளையும் கப்பலில் உள்ள பொருட்களையும் இராசயனபகுப்பாய்வு செய்த கனேடிய பொலிசார். சிலர் அணிந்திருந்த ஆடைகளில் டி.என்.டி வெடி மருந்து துகள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் போரில் சிக்கி வந்த மக்கள் ஆடைகள் மீது அவ்வாறான வெடிமருந்து புகைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்…
-
- 0 replies
- 740 views
-
-
வடக்கு மாகாணசபை தொடக்க அமர்வில் பங்கேற்பாராம் ஆளுனர் சந்திரசிறி [ செவ்வாய்க்கிழமை, 22 ஒக்ரோபர் 2013, 01:20 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபையின் தொடக்க அமர்வு தொடர்பான எல்லா, நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் புதிய கட்டட திறப்பு மற்றும், மாகாணசபையின் தொடக்க கூட்டம் ஆகியன தொடர்பான சமய நிகழ்வுகள் உள்ளிட்ட எல்லா நிகழ்வுகளிலும் தான் பங்கேற்பேன் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறியை மாகாண ஆளுனர் பணியில் இருந்து நீக்கிவிட்டு, சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இதன்காரணமாக…
-
- 0 replies
- 209 views
-
-
தீவகத்தில் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபா, காசுள்ளவன் மட்டும் குடிக்கலாம்! யாழ். தீவகப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சனைக்கு பிரதேசசபையோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு தீர்வையும் தரவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு பிரதேச சபையினால் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காசுள்ளவர்கள் மாத்திரமே நீரை வாங்குவதாகவும், ஏழைகள் குளத்துநீரை அல்லது கடல் நீரைப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பிரச்சனை தீவகத்தில் நீண்ட காலமாக நிலவி வருவதாகவும், இதனை பிரதேச சபை கண்டுகொள்ளாதிருப்பதுடன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அம்மக்கள் குற்றம் சாட்டியு…
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கைத்தீவில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தின் திறவுகோல் என்றழைக்கப்படும் திருகோணமலையானது, திரி கோண வடிவமைந்த நகரக்கை மையப்படுத்திய மலையும்-கடலுமாக, முக்கோண பக்கத்தினாலும் இயற்கை அன்னையின் அரண்களாக அமையப்பெற்றதால், இது என்றென்றைக்கும் வரலாற்று சிறப்புள்ள கேந்திரமையமாகும்.. தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் புமி, இன்று வரலாறுகள் மறைக்கப்பட்டு- சிதைக்கப்பட்டு ஐக்கிய இலங்கை எனும் கோசத்திற்குள்-பௌத்த சிங்கள பேரினவாத கட்டுமானங்களுடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பங்கு போடப்படுவது தொடர்கின்றது. 1948லிருந்து மாறிமாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசும்- அதன் அரசுயந்திரங்களும் இன்றுவரை திடடமிட்ட ஆத்துமீறிய குடியேற்றங்களால் சத்தமிடாமலேயே-சத்தங்கள் வெளி…
-
- 0 replies
- 752 views
-
-
இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. ஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர். இதன் பின்னர் இவர்கள் இந்தோ…
-
- 0 replies
- 686 views
-
-
தம்புள்ள கோயில் விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்: பிரபா கணேசன் தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் தகர்க்கப்பட்டது நாட்டில் இன ஐக்கியத்தை சீர்குலைக்கம் செயலாகும். இருப்பினும் இப்பிரச்சினையை இழுத்தடிக்க முடியாது. இதற்கான மாற்று திட்டமொன்றின் மூலமாக நீதி கிடைக்க வேண்டும்’ என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இச்சம்பவம் தொடர்பாக இதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் டி.எம்.ஜயரத்னவிடம் நேரடியாக எனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டேன். பிரதமரும் இச்சம்பவத்திற்கு பொற…
-
- 0 replies
- 322 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றம் தடை! முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 47 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த, 23 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், மாங்குளம், மல்லாவி மற்றும் ஐயன் குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 24 பேருக்கு குறித்த நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம், நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்…
-
- 0 replies
- 145 views
-
-
2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் பொது மக்களை பாதுகாக்க தவறியமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரசன்னத்தை தடுத்தமை, மனித உரிமை மீறல் ஆகிய காரணங்களால் இந்த மா நாடு இலங்கையில் வைக்க கூடாது என கருதுவதாக கோடன் பிறவுன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் இன்று மேற்கிந்திய ரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ள, பொதுநலவாய மாநாட்டில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். இது தொடர்பில் அவர் ஏற்கனவே பொதுநலவாய நாடுகளின் செயலாளர்,கமலேஸ் சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரட்டுடனும் கோடன் பிரவுண் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டு வருட…
-
- 0 replies
- 494 views
-
-
காணொளி: இசைப்பிரியாவின் தாயார் சணல்-4 இற்கு வழங்கிய பேட்டி பேட்டியை காண.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9941:----4---&catid=1:latest-news&Itemid=18
-
- 10 replies
- 1.7k views
-
-
ஐ.நா.அரசியல் செயலரிடம் முறையிட்டது அரசாங்கம் காணிகள் விடுவிக்கப்படும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் (ரொபட் அன்டனி) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பென் எமர்சன் உண்மைக்கு புறம்பான மற்றும் பொருத்தமற்ற சில விடயங்களை தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார். நாம் அதுதொடர்பில் ஐ.நா.வின் உயர்மட்டத்திடம் எடுத்துக் கூறியிருக்கின்றோம். இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிசெயலர் ஜெப்ரி பெல்ட்மனிடம் இது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் ஐ.நா.வின் உ…
-
- 0 replies
- 301 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று சற்று முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன…
-
- 0 replies
- 255 views
-
-
நேற்றிரவு அப்பகுதி மக்கள் பதற்றம் திருகோணமலை 10 ஆம் குறிச்சிக் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக் குள் நேற்றிரவு 7.15 மணியளவில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பதற்ற மடைந்து அல்லோலகல்லப்பட்டனர். கடற்கரையோரமாக உள்ள வீடுகளுக்குள் திடீரென கடல்நீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் உடைமைகளை அப்புறப் படுத்துவதிலும், சின்னஞ்சிறுசுகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டிச் செல்வதிலும் ஈடுபட்டிருந்தனர். மண் அணைகளை அமைத்து மேலும் கடல்நீர் உள் புகாதவண்ணம் தடுப்பு நட வடிக்கையில் பிரதேச மக்கள் தீவிரமாக செயலில் இறங்கி இருந்தனர். கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வள்ளங்களை எல்லாம் இழுத்துவந்து வீதி ஓரங்களில் வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கரையோரப்பகுதி மக்களுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் உள்நாட்டு, விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், விசாரணைகள் முற்றிலும் சுதந்திரமானவையல்ல. அவற்றில் பெரும்பாலானவை இராணுவம் தலைமை தாங்கும் விசாரணைகள். போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, சரியான, சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதையே எதிர்பார்க்கிறோம். சிறிலங்கா விவகாரம் தற்போது, பிரித்தானிய வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதியாக உருவ…
-
- 37 replies
- 2.1k views
-
-
சிங்கப்பூரில் இருந்து அவசரமாக நாடு திரும்பினார் ஜனாதிபதி ! சிங்கப்பூருக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தனது பயணத்தை விரைவில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்த அவர் நாளையதினமே நாடு திரும்ப இருந்தார். ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில் நேற்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதனை அடுத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இன்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார் மறுபுறம் ஜனாதிபதியின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டுமென ஆளுங்கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் …
-
- 4 replies
- 456 views
-
-
இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு 675 குடும்பத்தினை சேர்ந்த 2270 பேர் சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட உதவி திட்ட பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் வலையம் 1, 2, கதிர்காமர் முகாம் ஆகிய தடுப்பு முகாமில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கேதீஸ்வரன் தெரிவித்தார். வந்தவர்களில் 349 குடும்பத்தினர் பூனகரி, பரமன்கிராய், பொன்னாவெளி,மட்டுவில் நாடு, இரணை மாதா நகர், நல்லூர் போன்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் அந்தந்த பாடசாலைகளில் தங்க வைக்கபட்ட பின்னர் கிராமங்களுக்கு செல்வர் என கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதே வேளை கரைச்சி வடக்கினை சேர்ந்த மக்கள் இன்று தமது காணிகளுக்கு சென்று துப்பரவு செய்ததாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். முழங்காவில், அம்பலபெருமாள், …
-
- 0 replies
- 767 views
-