ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்க வேண்டுமா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எனினும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் கூறினார். அதேபோல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை, பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். "2020ஆம் ஆண்டுக்காக வரவு செலவு திட்டமொன்று அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுமா? அவ்வாறு இல்லையென்றால் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றாவது முன்வைக்கப்படுமா? அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டு…
-
- 0 replies
- 173 views
-
-
யாழ்.ஸ்ரான்லி வீதியில் அட்டகாசம் செய்த இரு ரவுடிகளை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனா். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் சை்க்கிளில் தலைக் கவசமுமின்றி நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இரு குழுக்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த சிலர் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து நகரில் கடமையில் இருந்த பொலிசார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓட முயற்சித்த இருவரை மடக்கிப் பிடித்த பொலிசார் இருவரையும் விலங்கிட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதையடுத்து குறித்த கைது சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/64054
-
- 0 replies
- 211 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் வலிமை முஸ்லிம்களுக்கு உண்டு – ஹிஸ்புல்லா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். அவ்வாறு மக்கள் வாக்களிக்கும் மூன்று அல்லது நான்கு இலட்ச வாக்குக்கள் பெரும்பான்மை கட்சிகளை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும் என கூறினார். இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே ஹிஸ்புல்லா மேற்கண்டவாறு கூறினார்…
-
- 1 reply
- 319 views
-
-
தானியங்கி இயந்திரத்தை உடைத்து, பணம் கொள்ளியிட முயற்சித்த 6 இளைஞர்கள் கைது! கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் அரச வங்கி ஒன்றின் தானியங்கி இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளியிட முயற்சித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக முழங்காவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, முன்னர் பல சந்தர்ப்பங்களில் பணத்தை கொள்ளையடிக்க இந்த குழு முயன்றுள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட வங்கியால் முழங்கவில் பொலிஸில் பல முறைப்பாடுகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து வங்கியின் சி.சி.டி.வி. கமராக்களை ஆய்வு செய்த பொலிஸார், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற இளைஞர்களை அடையாளம் கண்…
-
- 0 replies
- 242 views
-
-
வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் முன்பாக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், தமக்கான நியமனத்தை கால தாமதமின்றி விரைந்து வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் உள்வாரி பட்டதாரி, வெளிவாரி பட்டதாரி என பாகுபாடு …
-
- 0 replies
- 260 views
-
-
சிங்களத் தலைவர்கள் முரண்படுவது அரசியல் தந்திரமே – சிவமோகன் சிங்களத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவது அரசியல் தந்திரமே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். அத்தோடு, இவ்வாறான குழப்ப நிலைகளை காரணம்காட்டி ஆட்சிக்கு வரும் அவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒரே முடிவையே எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்பொழுது நாங்கள் அரசியல் அமைப்பினை சமர்ப்பித்தோமோ அப்பொழுதே தனது கட்சியை இரண்டாகப் பிரித்துவிட்டார். ஒரு பிரிவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்னும் பொய் பெயரில் அரச…
-
- 0 replies
- 287 views
-
-
வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை கோரும் தேர்தல்கள் ஆணையாளர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 10 முதல் டிசம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரியதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் கட்சி …
-
- 0 replies
- 282 views
-
-
சஜித்திற்கு பதவி ஆசை வந்துவிட்டது – சரத் பொன்சேகா அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பதவி ஆசை வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. சிலர் தற்போது, தங்களைத் தாங்களே வேட்பாளராக அறிவித்துக்கொண்டுள்ளார்கள். எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் கட்சிக்குள் எந்தவொரு பிளவும் ஏற்படவில்லை என்பதையும் கூறிக்கொள்ளவேண்டும். வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் அ…
-
- 0 replies
- 253 views
-
-
சர்வதேச ஒப்பந்த சட்டம் பொலிஸாரினால் பிழையான முறையில் பயன்படுத்தப்படுகின்றது – பிமல் ரத்நாயக்க! சர்வதேச ஒப்பந்த சட்டம் பொலிஸாரினால் மிகவும் பிழையான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கட்டளை ஒழுங்குவிதிகள் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அப்பாவி மக்கள் அடிப்படைவாதத்தின்பால் தள்ளப்படும் வகையிலே சிவில் மற்றும் சர்வதேச உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டம் பொலிஸாரினால் மிகவும் பிழையான …
-
- 0 replies
- 229 views
-
-
மத்தியவங்கி ஊழல் – அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை! இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன, சம்பா ஜனாகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய விடேச மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு விசேட மேல்நீதிமன்றில் கடந்த மாதம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சிங்கப்பூர் பிரதமரி…
-
- 3 replies
- 767 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் மூலம் விரைவில் இரண்டாயிரம் ஏக்கருக்கு கற்றாழை செய்கை செய்யப்பட உள்ளதாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி கேணிநகர் பகுதியில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உங்களிடம் காணிகள் இருக்கும் பட்சத்தில் கற்றாழை செய்கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம்…
-
- 0 replies
- 364 views
-
-
திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் அணிந்திருந்த சேலையால் இன்று மதியம் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது. குறித்த பெண் தனது பிள்ளையுடன் வயதான பெண்ணெருவருமாக திருகோணமலை நகரிற்கு ஆலய வழிபாட்டிற்காக வந்தபோதும் அவர் புத்தரின் உருவம் பொறித்த சோலை அணிந்திருந்ததனால் இப்பதற்றநிலைமை ஏற்பட்டது. குறித்த சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சில பெரும்பான்மையினத்தவர்கள் இதுதொடர்பாக பலருக்கும் அறிவித்ததுடன் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து கூடியதுடன் குறித்த சேலை தொடர்பாக பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில் பஸ்நிலயத்தில் நின்ற பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர…
-
- 34 replies
- 4.7k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக இந்திய பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவுக்கு சென்றுவரும் வழியில் நான்கு மணித்தியால அவசர விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டிந்தார். இதன்போது ஜனாத…
-
- 6 replies
- 1.2k views
-
-
(செ.தேன்மொழி) பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட குழுவினர்களின் தாக்குதல்கள் தொடர்பில் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு பிரிவினர் கடந்த மூன்று வருடங்களில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2017, 2018 மற்றும் 2019 ஆகிய வருடத்திற்குள் தேசிய புலனாய்வு துறையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தன முன்வைத்துள்ள சத்திய கடதாசி மற்றும் ஏனைய ஆவணங்களின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களை தடுக்க தவறியமையினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னா…
-
- 0 replies
- 246 views
-
-
ஈழபோராட்டத்தின் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடி அமைந்திருந்த ஓமந்தை இறம்பைக்குளம் வரை போரணியாக சென்றனர். அங்கு ஆரப்பட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தமது காணாமல் போன உறவினர்களை ஒப்படைக்குமாறும், அரசு நீதியை தரவேண்டும், ஓ.எம்.பி அலுவலகம் வேண்டாம் எனவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான …
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்! மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஈஸ்டர் குண்டுதாரி மொஹமட் ஆஷாத்தின் உடற்பாகங்களை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இந்த உடற்பாகங்களை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மட்டக்களப்பில் தமது பகுதிகளில் பயங்கரவாதியின் உடற்பாகங்களை புதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். …
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணித் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் நியமிக்கப்பட்டமையால் அக்கட்சியில் உள்ள பலரும் அதிருப்தியில் இருப்பதாக அறிய முடிகிறது. குறிப்பாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக கொட்டக்கலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் நியமிக்கப்படுவாரென அக்கட்சியின் இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் நியமனம் ஏமாற்றத்தையளித்திருப்பதாகவும் தெரியவருகிறது. இ.தொ.காவின் தேசிய சபையிலேயே ஜீவன் தொண்டமானை அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இத்தெரிவின்போது வாக்கெடுப்பு எவையும் நடத்தப்படவில்லை என்றும் தெரியவருகிறது. இதேவேளை இ.தொ.காவின் உயர் பதவிகளில் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்க…
-
- 2 replies
- 390 views
-
-
(நா.தனுஜா) ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவது குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வை குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, தமது மேற்பார்வை அறிக்கையை அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் நேற்று கையளித்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் பெற்ற தரவுகள் மற்றும் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தயாரித்த சுருக்கமான அறிக்கைய ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வைக்குழு அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் கையளித்திருப்பதாக கொழும்பிலுள்ள …
-
- 1 reply
- 360 views
-
-
தொடர்ச்சியான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அனைவரும் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிக்கும் உரிமை உடைய ஏராளமானவர்கள் தமது பதிவுகளை இதுவரையில் மேற்கொள்ளாமல் உள்ளமை தேர்தல் அலுவலகர்கள் நடத்திய ஆராய்வுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே திருத்தம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேருநர் இடாப்பு தொடர்பான உரிமைக் கோரிக்கைகளை எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பிலுள்ள பெயர்களுக்கு மேலதிகமாக சேர்க்கப்பட வேண்டியவர்களது பெயர்களும், அவ்வாண்டு தேருநர் இடாப்பி…
-
- 0 replies
- 374 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில், படையினர் வசமுள்ள 4,207.2 காணிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வடக்கு மாகாண ஆளநர் சுரேன் ராகவனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். காணி விடுவிப்பு குறித்து, சிவஞானம் சிறிதரன் எம்.பியால், ஆளுநருக்கு நேற்று (02) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 2,119.7 ஏக்கர் வரையான அரச காணிகளும் 2,088.13 ஏக்கர் தனியார் காணிகளும் உள்ளடங்கலாக, சுமார் 4,207.2 ஏக்கர் காணிகள் படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், கடற்படையினர் வசமுள்ளதகாவும், அவர் அக்கடிதத்த…
-
- 0 replies
- 378 views
-
-
-எஸ்.நிதர்ஷன் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே திட்டங்கள் இல்லாத கொள்கையே இருப்பதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா, அவர்கள் காகிதப் புலிகளை வைத்து அரசியல் செய்வதையே பார்க்கக் கூடியதாக இருப்பதாகவும் கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமர்ர் வி. தர்மலிங்கத்தின் 34ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் - தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில், நேற்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எவையும் தமிழ் அரசியல்வாதிகளிடத்தே இல்லையெனவும் தெரிவித்தார். நாட்டில் தேர்தல்கள் வரவிருக்கின்ற…
-
- 1 reply
- 360 views
-
-
-செந்தூரன் பிரதீப் யாழ்ப்பாணத்தில், தற்போது நூதனமுறையில், வழிப்பறி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணம் சிறுகுற்றத்தடுப்புப் பொலிஸார், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், குறிப்பாக இளைஞர்கள் விழிப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்துரைத்த பொலிஸார், வீதி வழியே மோட்டார் சைக்கிளில் வரும் குழுவினர், அவர்கள் வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்களை மறித்து, “எனது சகோதரியைப் புகைப்படம் எடுத்தாயா? அந்த புகைப்படம் உனது அலைபேசியில் இருகிறது” எனக் கூறி, அலைபேசியை வாங்கி பார்த்துக்கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர். பின்னர், வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரம் பார்த்து, வாங்கிய அலைபேசியை அபகரித்துக்கொண்ட…
-
- 0 replies
- 410 views
-
-
பிரதமர் ரணிலின் கோரிக்கையை மீறி செயற்படும் சஜித் ஆதரவாளர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க கோரும் போராட்டத்தை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இருந்த போதிலும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான சிலர் செப்டம்பர் 5 ஆம் திகதி குருநாகலில் பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. குறிப்பாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க கோரி அவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கூட்டம் ஒன்றுக்காக கட்சியின் உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளை அவர்கள் கொழும்புக்கு அழைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கட்சித் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின்போது, கட்சியின் ஒப்புதல் இல்லாமல் அனை…
-
- 0 replies
- 373 views
-
-
சஜித் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்: பொன்சேகா அறிவுரை அமைச்சர் சஜித் பிரேதமதாச மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் கருத்துக்களை வெளியிடுட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாஸ கூறினார். தான் ஜனாதிபதியாக வந்தால், பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவதுடன் ஆண்கள் பத்திரிக்கையை வாசித்து கொண்டு இருக்க முடியும் என்றார். மேலும் இந்த நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாகவும் அதற்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்…
-
- 0 replies
- 240 views
-
-
பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – உச்சநீதிமன்றம் பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் அடிப்படையில், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என்று, சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, உச்சநீதிமன்றம் இது தொடர்பான வியாக்கியானத்தை அளித்துள்ளது. மாகாணசபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போதும், தேர்தல்களை நடத்துவதற்காக, எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் பழைய முறையில் தேர்தலுக்கு உத்தரவிடும் வாய்ப்பு உள்ளதா என, உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம…
-
- 0 replies
- 296 views
-