ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
கடந்த நான்கு ஆண்டுகளாக “இசைப்பிரியா” எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர் சோபனா அருட்செல்வன் அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வசதிக்கேற்ப கதையமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா? அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன். தமிழ் ஊடகங்களும் அதற்கு சான்று பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும் அமைய வேண்டும். இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப…
-
- 27 replies
- 3.1k views
-
-
இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார். தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெ…
-
- 19 replies
- 3.1k views
- 1 follower
-
-
மக்கள் குடியமராத மயிலிட்டியில் படையினரின் யோக்கட் ஆலை மக்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத மயிலிட்டிப் பகுதியில், படையினரால் பசுப்பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டிப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 23 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலேயே தங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அந்தப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மயிலிட்டிப் பகுதியில் படையினரால் "யோக்கட்' உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று திறந்து…
-
- 1 reply
- 3.1k views
-
-
நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன். ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் [] யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது. வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெரு…
-
- 11 replies
- 3.1k views
-
-
தூக்கமில்லாத இரவுகளுடன் கரைகின்றன தமிழர்கள் பெரும்பாலோரினது இரவுப் பொழுதுகள். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் , இழப்புக்களை தாங்கிக்கொள்ள இயலாமல் விம்மிவெதும்பும் கனத்த இதயங்களுடன், விழியோரத்தில் கண்ணீருடன் கேள்விக் குறிகளாய் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புக்கள். இறுதியாக நடந்துமுடிந்த போரில் தமிழினம் அனுபவித்த வலிகளை வார்த்தைகளினால் விபரிக்க முடியாது. சர்வதேசம் முழுவதினாலும் முற்றுமுழுதாக கைவிடப்பட்ட நிலையில், சிங்கள கொலைவெறி அரசினாலும் பல வல்லாதிக்க வல்லரசுகளின் சுயநலத் தேவைகளுக்கான அவற்றின் கூட்டுதவியினாலும் ஈழத்தமிழினம் அழித்து சின்னாபின்னமாக்கப்பட்டது. யாருமற்ற நிலையில் அநாதரவாய் அந்தரித்து நின்றது ஈழம். முப்பது வருட காலமாய் தனியே நின்று போராடிய தமிழர்படையை வெல்ல ம…
-
- 16 replies
- 3.1k views
-
-
ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன் அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்! சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை
-
- 54 replies
- 3.1k views
-
-
நாகை: நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற இடத்தில் வழி தவறி இறங்கிய கடற்படையினர் மூவரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதால் இலங்கையிலிருந்து விடுதலைப் புலிகள் தப்பி வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் அன்னியர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கடலோர காவல்படையின் ஒரு பிரிவான கடலோர போலீஸ், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் விழுந்தமாவடி அருகே மணமேடு கிராமத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் 3 பேர் நடமாடுவதாக அப…
-
- 0 replies
- 3.1k views
-
-
இந்நிலையில் புலிகளின் விமானத்தாக்குதல் சம்பந்தமாகவும் அவற்றில் வெளிநாடுகளின் உதவிகளின் சாத்தியம் பற்றியும் உடனடியாக ஆராய்ந்து மேற்படி சந்தேகங்களுக்கு விடை காண்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமாகும். அரசியல் தீர்வுக்காக அலையும் மேற்கு நாடுகளும் மற்றும் அயல்நாடுகளும் புலிகளுக்கு எதிரான அரசின் யுத்தத்தை நிறுத்தவோ அல்லது முறியடிக்கவோ இரகசியமாக முயற்சி செய்து வருவதாகவே தெரிகிறது. இந்த முயற்சிகள் அடையாளம் காணப்பட்டாலன்றி இறுதியில் வெற்றிபெறப்போவது அரசும் அரச படையினரும் அல்ல எமது நிலைப்பாட்டுக்கு எதிராக இடத்துக்கு இடம் யுத்த நிறுத்தம் பற்றியும் புலிகளுடன் பேச்சுப்பற்றியும் அரசியல்தீர்வுபற்றியும் பேசிவரும் அமெரிக்க தூதுவரும் சம்பத்தப்பட்ட வெளிநாட்டு சக்திகளுமே ஆகும். …
-
- 6 replies
- 3.1k views
-
-
இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என்று நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வுக்கு அனைத்துலக ம…
-
- 15 replies
- 3.1k views
-
-
’சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்’ -என்.ராஜ் சைவர்கள் யாரும் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாமெனத் தெரிவித்த மறவன்புலவு பகுதியில் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தன், 1,000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி சுமந்திரனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூறினார். மறவன்புலவு பகுதியில், சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்ததினால் அமைக்கப்பட்டுவரும் புதிய கோவிலின் கருவறைக்குள் சுமந்திரனின் சுவரொட்டிகள் நேற்றைய தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி, கோவிலின் கருவறை…
-
- 29 replies
- 3.1k views
-
-
வன்னியில் இன்னும் 15 ஆயிரம் விடுதலைப்புலிகளின் வீரர்கள் உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 53வது ஆண்டு மாநாட்டில் அவர் பேசியது: விடுதலைப்புலிகளை அழித்து வருவதாக இந்த அரசு சொல்வது உண்மையல்ல. கிளிநொச்சி கைப்பற்றப்படவில்லை. வன்னியில் இன்னும் 15 ஆயிரம் புலிகள் இருக்கின்றனர். போர் பகுதிகளில் ஊடகங்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாதது மிகப் பெரிய குறைபாடு. அதிபர் ராஜபக்சேவும் புலிகள் தலைவர் வேலு பிள்ளை பிரபாகரன் இடையேயான போர் முறை வித்தியாசமாகவுள்ளது. பிரபாகரன் இரவு நேரங்களில் கொழும்பில் தாக்குதல் நடத்துகிறார். ராஜபக்சேவின் தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்று ரண…
-
- 0 replies
- 3.1k views
-
-
வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேள்வி – பதில் வடிவத்தில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது…
-
- 35 replies
- 3.1k views
-
-
தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…
-
- 27 replies
- 3.1k views
-
-
சம்பூரை இராணுவத்தினர் மீட்ட வெற்றியை `கேக்' வெட்டி கொண்டாடிய ஜனாதிபதி சம்பூரை இராணுவத்தினர் கைப்பற்றிய வெற்றியை மகிந்த ராஜபக்ஷ கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் பாதுகாப்பு விவகார ஆய்வாளரின் கட்டுரையில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து 4 கிலோ எடையுள்ள கேக்கை ஜனாதிபதி வாங்கியுள்ளார். எனினும் அந்தக் கேக்கை சாதாரணமாக பரிமாற அவர் அனுமதிக்கவில்லை. இக் கேக்கை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை அழைத்து வெட்டச் சொல்லியுள்ளார். அதன்பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவையும் அவரைத் தொடர்ந்து விமானப்படைத் தளபத…
-
- 8 replies
- 3.1k views
-
-
விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்
-
- 4 replies
- 3.1k views
-
-
[சனிக்கிழமை, 10 நவம்பர் 2007, 06:40 PM ஈழம்] [புதினம் நிருபர்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு ஆனந்த விகடன் வார இதழ் (14.11.07) வெளியிட்டுள்ள கார்ட்டூன்: http://www.puthinam.com/full.php?22YUmb200...d44UXC2b02COA3e
-
- 4 replies
- 3.1k views
-
-
TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:- 23 ஆகஸ்ட் 2015 நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது. இ…
-
- 18 replies
- 3.1k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் ஆகியன தொடர்பாக நாளைய தினம் கருத்து வெளியிப்படும் என பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கான வாழ்வு நிலை சுய கௌரவத்துடனும் சம உரிமையும் வாழ வழியேற்படுத்தல் மறுவாழ்விற்கான உதவி என்பன தொடர்பாகவே கருத்துக்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையேஇ பாரதீய ஜனதா கட்சி இலங்கை தமிழர் தொடர்பாக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் யஷ்வந் சின்ஹா தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56423
-
- 5 replies
- 3.1k views
-
-
24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர். - பண்டார வன்னியன் Sunday, 28 January 2007 12:30 சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர…
-
- 17 replies
- 3.1k views
-
-
மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு ஏற்படும் பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ராஜபக்ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/2015/01/16/8124/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%…
-
- 47 replies
- 3.1k views
-
-
-
பிரபாகரன் தப்புவதற்கு பல வழிகளை வைத்திருந்தார் றொகான் ‐ இப்போது இத்தகவலை வெளியிட்டிருப்பது சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது ‐ இராணுவ ஆய்வாளர் 21 May 10 12:15 pm (BST) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்புவதற்குப் பல வழிகளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றின் அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளராக இருக்கும் றொகான் குணரத்ன தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாக கிறிஸ்ரினா என்ற கப்பலை வரவழைத்து அதிலிருந்து ஹெலி கொப்டரைப் பயன்படுத்தி தப்பவது அவருடைய திட்டமாக இருந்தது. கனடாவைச் சேர்ந்த சங்கிலி என்றழைக்கப்படும் ரவிசங்கர் கனகராஜா கப்பலை ஒழுங்கு செய்வதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்…
-
- 0 replies
- 3.1k views
-
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாக அறிவித்துளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இருப்பதான விடயத்தை அவர் தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு,கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்…
-
-
- 37 replies
- 3.1k views
- 1 follower
-
-
இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை – பிரித்தானிய ஏடு [ ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2012, 01:56 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- சிறிலங்கா படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20120311105756
-
- 14 replies
- 3.1k views
-
-
Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni. 14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT. http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm [தமிழ் மொழி பெயர்ப்பு] இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெ…
-
- 10 replies
- 3.1k views
-