ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142755 topics in this forum
-
சிறிலங்கா தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்? – உபுல் ஜோசப் பெர்னான்டோAUG 08, 2015 | 13:44by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா தேர்தல் வரலாற்றின் பிரகாரம், தோற்கடிக்கப்பட்ட எந்தத் தலைவர்களும் அல்லது தோற்கடிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்பதே உண்மையாகும். இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. 1994ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்ற பின்னர், இதற்கு சில மாதங்களின் பின்னர் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் காமினி திசநாயக்க போட்டியிடத் தீர்மானித்தார். இது அன…
-
- 0 replies
- 570 views
-
-
நேற்று இரவு நீர்கொழும்பு, பலகத்துறை, செல்லக்கந்த உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாக்குதல்களில் முஸ்லிம்களுடைய உடமைகளுக்கு கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்களுடைய, வாகனங்கள் வீடுகள், வீட்டு பாவனை பொருட்கள் , கடைகள் என பல பெறுமதிமிக்க பொருட்கள் தாக்கி நாசம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுடைய சொத்துக்களை தாக்கி. சேதம் ஏற்படுத்துவதிலேயே வன்முறையாளர்கள் குறியாக செயற்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கவலை வெளியிட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2019/05/yt.html
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை குற்றம் சுமத்திக்கொண்டிருப்பதால் மாத்திரம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது என்று நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க வேண்டும். அத்துடன் அரசியல் பேதங்களை களைய வேண்டும். இவற்றை மேற்கொள்ளாத போது இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை, சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் பலர் அவையவங்களை இழந்துள்ளனர். ஆனால், இலங்கை அரசாங்கம் போரினால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை என்று ம…
-
- 5 replies
- 858 views
-
-
TNA Canada 2 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள்!- தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அவர்களது கைகளைப் பலப்படுத்துங்கள் என கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை அப்படியே வருமாறு, மே 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ்மக்களுக்கு இருக்கிற ஓரே அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) விளங்கி வருகிறது. 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் நடந்த தேர்தல்களிலும் தமிழ்மக்கள் ததேகூ க்கே ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள். இந்த…
-
- 0 replies
- 392 views
-
-
யாழில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட குழு சிக்கியது யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய ஆறு பேர் கொண்ட கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரும் அரியாலை பூம்புகார் பகுதியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 33 தங்கப் பவுண் நகைகளும் 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன” என்று பொலிஸார் குறிப்பிட்டனர். “யாழ் குடாநாட்டில் அண்மைய நாட்களாக திருட்டுக்கள், கொள்ளைகள் மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம்,கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களின் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு…
-
- 0 replies
- 660 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னுதாரணம் காட்டி இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசினது மக்கள் தொடர்பு மற்றும் பொதுவிவகார அமைச்சராகவுள்ள சர்ச்சசைக்குரியவரான மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை எந்த ஒரு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனவும் தம்மீதான குற்றச்சாட்டுக்கு ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்குமாறு தானே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கேட்டுக்கொண்டதாகவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பௌத்த மத தலைவர்கள் மாத்திரமல்லாது களனி மக்களும் தன்னுடயே இருப்பதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். http:/…
-
- 4 replies
- 760 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று (19) மாலை முன்னாள் போராளிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் 40 பேருக்குத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக விசே…
-
- 0 replies
- 347 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6acf9c726942a1e
-
- 1 reply
- 2.2k views
-
-
மே 18இன் பின்னரான சவால்களும் வாய்ப்புகளும் [img முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை நடைபெற்று இரண்டு வருடங்களாகின்றன. அந்கப்படுகொலை தந்த அதிர்ச்சியிலிருந்து தாயகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகத்தமிழ் மக்களே இன்னும் விடுபடவில்லை. படுகொலையில் இருந்து தப்பியவர்கள், காயமடைந்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவேயில்லை. மீள்வதற்குரிய பணிகளும் சீராகக் கட்டியெழுப்பப்படவில்லை. போர் அவலத்தைச் சுமந்த மக்கள் இன்று போரின் பின்னரான அவலத்தையும் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் ஒரு அரசியல் சமூகமாக வாழ அனுமதிக்கப் படாததினால் இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பணிகளைச் சக தமிழர்களாலும் மேற்கொள்ள முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை. தம…
-
- 1 reply
- 696 views
-
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் நவம்பர் மாதம் கட்டுநாயக்க வரை நீடிக்கப்படவுள்ளது. வெளிச்சுற்று வீதி அமைக்கப்பட்வுடன் கடவத்தையில் இருந்து கெரவெலப்பிட்டி ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.dailyceylon.com/183507/
-
- 0 replies
- 474 views
-
-
முல்லைத்தீவு ஏ-9 வீதியில் விபத்து : ஒருவர் பலி ; மூவர் படுகாயம்! 11 JUL, 2024 | 12:16 PM முல்லைத்தீவு ஏ9 வீதியில் திருமுறிகண்டிக்கும் கொக்காவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹை-ஏஸ் ரக வாகனமானது முன்னே சென்றுகொண்டிருந்த பாரஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
யுத்தத்தின் பின்னரான மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. யுத்த நிறைவின் பின்னர் இடம்பெற்ற காணாமல் போதல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை மாநாட்டில் கேள்வி எழுப்பப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த இருவரும…
-
- 1 reply
- 498 views
-
-
சிறிலங்கா வான்படையின் பேச்சாளரும், வான்படைத் தளபதியின் பிரதம அதிகாரியுமான குறூப் கப்டன் அஜந்த சில்வா பாகிஸ்தானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 754 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என இரகசிய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிறந்த அதிகாரிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளியிட்டு, அந்த திறமையான அதிகாரிகளை காட்டிக் கொடுக்க வேண்டாம். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வரும் ஒரு சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மோசமான அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள ஒட்டுமொத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினையும் இவ்வாறு காட்டிக் கொடுப்பது மிகவும் சோகமான ஒர் நிலைமையாகும். பிரகீத் எக்னெலிகொட கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் வரையில், எக்னெலிகொட புலிகளுடன் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்படவில்ல…
-
- 0 replies
- 339 views
-
-
Published By: VISHNU 31 JUL, 2024 | 03:17 AM வவுனியாவில் 60 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது சரியான தராசை பயன்படுத்தாமை, விற்பனைக்கு பொருளை மறுத்தமை, விலை அழிக்கப்பட்டிருந்தமை, விலை குறிக்கப்படாமை, காலாவதியான பொருள்களை வைத்திருந்தமை, தகவல் குறிக்கப்படாமை, உத்தரவாதம் வழங்காமை போன்றன தொடர்பில் 54 வழக்குகளும், பேக்கரி தொடர்பில் 6 வழக்குகளுமாக 60 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 395 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மிகப்பெரும் குழுவினர் ஜப்பான் சென்றமை குறித்து ஜப்பானிய ஊடகங்கள் தமது அதிர்ச்சிகளை வெளியிட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.9k views
-
-
அடுத்து வரும் மூன்றாவது வாரத்தில் ஆரம்பமாகப்போகும் ஜெனிவா ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் மாநாடு சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பெரும் சவாலாகவே இருக்கப் போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாவது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில் கூடவிருக்கும் இந்த மாநாட்டில் சிறிலங்காவை நோக்கிப் பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படலாம் என்றே நம்பப்படுகின்றது. இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறும் கடப்பாட்டையும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் முன்வைத்து சிறிலங்கா ஆட்சியாளர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இந்த மாநாட்டிலும் மென்மையான போக்குக்களைக் கடைப்பிடிப்…
-
- 1 reply
- 784 views
-
-
கடந்த 75 நாட்களில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 700 என குறிப்பிடப்படுகின்றது. கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக செய்தி அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் தகவலுக்கமைய இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேகமாக வாகனம் ஓட்டுகின்றமையே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyJSYSVjt7C.html
-
- 1 reply
- 508 views
-
-
அமைச்சுக்களை துறந்த, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மீண்டும் பதவியேற்பர்? June 18, 2019 அமைச்சுப் பதவிகளைத் துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர், மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளைப் பொறுப்பேற்கத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், கபீர் ஹஸீமும் அப்துல் ஹலீமும், தாங்கள் ஏற்கெனவே வகித்த அமைச்சுப் பொறுப்புகளை மீண்டும் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரைத் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் ஆகியோரும் முன்னர் இராஜாங்க அமைச்சுகளைப் பொறுப்பேற்றிருந்த நால்வரும் பிரதிய அமைச்சராகவிருந்த மற்றொருவருமான ஒன்பது பேர், ஏற்கனவே தமது பதவிகளை இராஜினாமா செய…
-
- 1 reply
- 407 views
-
-
சிறீலங்காவிற்கு 59 கோடி அமெரிக்க டொலர் நிதி மறுப்பு - அமெரிக்கா [Tuesday December 18 2007 02:11:02 PM GMT] [pathma] அமெரிக்காவின் "மிலேனியம் சலன்ஜ் கோப்பரேசன்" (Millennium Challenge Corporation) என்ற நிறுவனத்தினால் சிறீலங்காவின் அபிவிருத்திப் பணிகளுக்கென வழங்கப்பட இருந்த 59 கோடி அமெரிக்க டொலர் நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசிற்கான நிதி நிறுத்தம் தொடர்பான அறிவித்தல் இந்த அமைப்பின் இணையத்தளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளமை தற்பொழுது தெரிய வந்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பின்மை என்பவற்றை உதாரணம் காட்டியே சிறீலங்கா அரசிற்கான நிதி அமெரிக்க அரசினால் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்…
-
- 2 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள வலுமிக்கஉறவு ஒரு முக்கோண வடிவ, கொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங் என்ற இணைப்பு சமூக அரசியல் அளவிலான மனதார ஏற்று கொள்ளக்கூடிய உடன்பாட்டை உருவாக்கி இருப்பதாகவே ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி. அனைத்துலக மட்டத்தில் ஈழத்தமிழர்கள் தற்போது நடாத்தி வரும் கருத்தாதரவுப் போரிலே சிறிலங்கா அரசுடன் பொருதி நிற்கின்றனர். தமது போராட்டத்தை பற்றி சிந்திப்பதற்கு முன்னர் வல்லரசுகளின் நலன்கள் குறித்த கரிசனையில்தான் கூடிய கவனம் செலுத்துகின்றனர். வல்லரசுகள் தமது நலன்களிற்கு ஏற்றவாறே எமது போராட்டத்தை நோக்குகின்றன என்பதனையும் ஈழத்தமிழர்கள் சரியான பார்வையாக கருதுகின்றனர். எதிர…
-
- 2 replies
- 862 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 AUG, 2024 | 06:38 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான் ) உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் மாத்திரம் 1680 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொண்டுள்ளன. மதுவரி திணைக்களம் பிரதான மதுபான நிறுவனங்களிடமிருந்து 7.9 பில்லியன் ரூபா வரியை இதுவரை அறவிடவில்லை என பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது வழிவகைகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் அறிக்கையை சபைக்கு முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தொடர்பாக இதுவரை வெளிவராத சில தகவல்களை, அந்த அமைச்சின் செயலாளர் திலக் கருணாரத்ன அமுனுகம ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் இணைந்துகொண்ட செயலாளர் அமுனுகம, சேனுகா செனவிரத்னவின் ஊழல், மோசடிகளையும் அவரது சரித்திரத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். சேனுகா செனவிரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் எனத் தெரிவித்துள்ள அமுனுகம, அவர் வெளிவிவகார அமைச்சில் இணைந்துகொள்வதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.எவ்.எம். ஹமீட்டே காரணம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகவியலாளர் மஹின் சில்வாவவே சேனுகாவை முன்னாள் அமைச்சர் ஹமீட்டிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதன்பின்னர…
-
- 2 replies
- 686 views
-
-
வெதமுல்லையில் பாரிய மண் சரிவு: ஐவர் பலி; 9 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிப்பு (பின்னிணைப்பு) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (Lily's Lane Estate) தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவில் ஐந்து பெண்கள் பலியாகியுள்ளதாகவும் இவர்களது சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருகால்களும் உடைந்த நிலையில் செல்லையா கணேசன் (வயது 50) என்பவர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ் அனர்…
-
- 0 replies
- 481 views
-