ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது. ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டன. கலந்துரையாடல் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாம் தொடர்சியாக முன்னெடுத்…
-
- 1 reply
- 893 views
-
-
“எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால், எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது” July 21, 2019 பாறுக் ஷிஹான் “கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது. எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம் கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி பயணம் செய்கிறோம்” என முன்னாள் வட மாகாண அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தில் செயலாளர் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்தார். கல்முனையில் சனிக்கிழமை (20) மாலை 4 மணியளவில் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தன…
-
- 0 replies
- 301 views
-
-
மன்னார் பாலியாற்றில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு -அணைக்கட்டு இடிந்து விழும் நிலையில் July 21, 2019 மன்னார் – பாலியாற்று அணைக்கட்டுப் பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடம்பன் குளம் , பெரிய வெள்ளாங்குளம் , முள்ளிக்குளம் , உயிலங்குளம் , போன்ற பகுதிகளில் உள்ள 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வடக்கு மாகாண ஆளுநர் இவ்விடையத்தில் தலையிட்டு பாலியாற்று மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி விவசாய…
-
- 0 replies
- 354 views
-
-
சிவனொளிபாதமலையில் மண்சரிவு நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலையின் மகாகிரிதம்ப பகுதியில் 20ஆம் திகதியன்று இரவு சுமார் 15 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் கம்பங்கள் மற்றும் நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளமையால் நீர் மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற்படையினர் படிக்கட்டு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் மழை பெய்தமையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/60867
-
- 0 replies
- 371 views
-
-
3 மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி ; பாதிக்கப்பட்டோர் உட்பட பலர் பங்கேற்பு ! கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் திறக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர். கட்டுவாப…
-
- 0 replies
- 278 views
-
-
சிங்கள பௌத்த அடிப்படைவாத பயங்கரவாதத்தை நிறுத்துக - சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் திருகோணமலையில் அமைந்துள்ள கன்னியா வெந்நீரூற்றில் நடந்த அசம்பாவிதங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிசாருடன் சென்ற தென்கயிலை ஆதீன முதல்வருக்கு நேர்ந்த அவமானத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது என்று அக்கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை இலங்கை வாழ் சகல மக்களும் அறிவர். அதேசமயம், 1987ஆம் ஆண்டு அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் இடையில் செய்…
-
- 0 replies
- 243 views
-
-
அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழு நிர்வாக அதிகாரத்துடன் தரமுயர்த்தும் விடயத்தில் நிரந்தர தீர்வைக்காண சில கிராமசேவகர் பிரிவுகளின் எல்லைகளில் நிலவும் தெளிவற்ற தன்மையை தீர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, நேற்று இரா.சம்பந்தனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் குறித்த விடயத்தை தெரிவித்தார். http://www.hirunews.lk/tamil/220690/தெளிவற்ற-தன்மையை-தீர்க்க-வேண்டும் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டு கல்முனை வடக…
-
- 0 replies
- 600 views
-
-
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். நேற்று (19) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பு நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று 879 நாளாக எமது தொடர…
-
- 3 replies
- 618 views
- 1 follower
-
-
இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இலங்கையின் பல பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கடும் மழை மற்றும் கடும் காற்றுடன்…
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
ரயில் விபத்தில் இருவர் பலி கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் ரயிளோடு மோதி குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்த இடம்பெற்ற பகுதியில் தமது வீட்டுக்கு அருகில் ரயில் கடவையில் அமர்ந்திருந்து சம்பாசித்துக்கொண்டிருந்ததாகவும், ரயில் வருவதை அவதானிக்காமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத…
-
- 4 replies
- 969 views
- 1 follower
-
-
நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரினவாதமே தலைதூக்கியுள்ளது. மலையகம், வடக்கு, கிழக்கு என்று அனைத்துப் பகுதிகளிலும் தாம் வேரூன்ற வேண்டும் என்றே பேரினவாதிகள் கருதுகிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் விடுக்கொடுப்புடன், ஒரு மனம் திறந்த பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாவிடின், இந்த பேரினவாத சக்திகளை எதிர்க்க முடியாது என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: …
-
- 0 replies
- 873 views
-
-
தமிழ் முஸ்லிம் உறவின் அவசியத்தை ஏப்ரல்-21 தாக்குதல் உணர்த்தியுள்ளது என மண்முனை பிரதேச மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின்செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம்மக்களின் தன்னிலையை அவர்களுக்கு உணர்த்தியுள்ளதுடன் தமிழ்-முஸ்லிம்மக்களது உறவின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளதாக மண்முனைபிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புதொகுதி மண்முனை பிரதேசசெயலகத்திற்குட்பட மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமைகாலை 10.30 மணிக்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரையிலையே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். க…
-
- 0 replies
- 517 views
-
-
பிக்குகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியுள்ளார். பிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதற்காக அஸ்கிரிய பீடத்தால் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று மாலை அஸ்கிரிய விகாரைக்கு வந்து அந்த பீடத்தின் மாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்துடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/220645/காலில்-வீழ்ந்து-மன்னிப்பு-கோரிய-அமைச்சர்-ரஞ…
-
- 4 replies
- 919 views
-
-
வவுனியா நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு வுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது.இதனை எதிர்த்து அவ்வூர் மக்களால் கடந்த 15.07.2019 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ பொ.தேவராசா,ஜேசுதாகர்,பார்த்தீபன்,தமிழ்செல்வன், கோட்டக்கல்வி அதிகாரி திரு. கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, இப்பாடசாலையினை தற்காலிகமாக மூடப்படுவதனை அவ்வூர் மக்கள் விரும்பாத நிலையில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொட…
-
- 1 reply
- 673 views
-
-
போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் இன்று காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போரா…
-
- 16 replies
- 1.9k views
-
-
கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பின்போது கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனின் ஏற்பாட்டில் கன்னியா வென்னீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்தார். இதற்கென நேற்று 11 மணிக்கு விசேட கூட்டத்தையும் ஜனாதிபதி ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார். …
-
- 9 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு கோட்டை அழிவுறும் தருவாயில்; கவனமெடுக்காத தொல்பொருள் திணைக்களம் ! வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது . தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் . தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடம் என தொல்பொருள் திணைக்களம் இதனை அடையாளப்படுத்தியுள்ளபோதிலும் இங்கே தொல்பொருள் திணைக்களத்தின் அறிவித்தல் பலகைகள் எதனையும் காணக் கிடைக்கவில்லை அத்தோடு சிதைவடைந்து செல்லும் கோட்டையின் எச்சங்களை பாதுகாப்பதற்கோ தொல்பொருள் திணைக்களம் எந்தவிதமான…
-
- 1 reply
- 720 views
-
-
பேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார். . பேராதனிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து குறித்த பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/60802 மட்டு. பல்கலை.யினை மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் கையளிக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் - ஆசுமாரசிங்க மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்கள…
-
- 3 replies
- 853 views
-
-
பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார் இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கலாம், பொதுஐன பெரமுனவாக இருக்கல…
-
- 1 reply
- 428 views
-
-
தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் பொது மக்களும் தமது அனைத்து சக்திகளையும் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது; …
-
- 4 replies
- 881 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய் கிராம மக்களின் ஒருதொகுதி மானாவாரி பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்துள்ளதாக கொக்குத்தொடுவாய் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொக்குத்தொடுவாய் கிராம மக்களுக்கு சொந்தமான ஆங்கிலேயர் காலத்து உறுதிக் காணிகளான மேட்டு மானாவாரி பயிர் செய்கை இடங்களான வெள்ளை கல்லடி ,தீமுந்தல் ,குஞ்சுக்கால்வெளி ,கோட்டைக்கேணி போன்ற பயிர்ச்செய்கை நிலங்களை கொக்கிளாய் சரணாலயம் என்னும் பெயரில் வனஜீவராசிகள் திணைக்களம் புதிதாக பெயர் பலகைகளை நாட்டி அபகரித்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . வனஜீவராசிகள் திணைக்களத்தின் இந்த நில அபகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்…
-
- 0 replies
- 1k views
-
-
இனங்களுக்கு இடையில் புரந்துணர்வை ஏற்படுத்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் முக்கியமானது என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது, தன்னிடமுள்ள பெரும் குறைபாடு என்றும் தெரிவித்துள்ளார். வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் இன்மையே, யுத்த சூழ்நிலைக்கு வழிவகுத்து என்றும் அவர் கூறினார். மொழிப் பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்தக் காலத்தில் தாங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை எனவும் அது தனது குறைபாடு என்றும் குறிப்பிட்டார். எனினும் அப்போது ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், தமது ஊர்ப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு மொழியை …
-
- 1 reply
- 700 views
-
-
அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு. அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி, பரப்புரை செய்யப்படும், தவறான தகவல்கள் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும், கலந்துரையாட விரும்புகிறேன். அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைக…
-
- 0 replies
- 446 views
-
-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை அடுத்து பதற்ற நிலை அப்பகுதியில் ஏற்பட்டது. குறித்த காணியில் வெள்ளிக்கிழமை (19) காலை அதன் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு உலாவிக் கொண்டிருந்த நிலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காணி உரிமையாளர் அவர்களை நோக்கி சென்றதுடன் துப்பாக்கி ஏந்தியவர்கள் தன்னை சுட முயன்று அச்சுறுத்தியதாகவும் தான் அதிலிருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 655 views
-