ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143183 topics in this forum
-
எந்த பதவி நிலைகளில் உள்ளவர்களாயினும் மகாசங்கத்தினரை அவமதிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அதனை கடுமையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மேலும் சிறந்ததொரு நாட்டையும் சமூ கத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று பிற்பகல் பெலேந்த ரஜ மகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி முதலில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நினைவுப்பலகையை திர…
-
- 0 replies
- 435 views
-
-
தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார். பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபத…
-
- 2 replies
- 639 views
-
-
சேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கலந்துரையடலில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர். இந்த சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடினர். சோபா உடன்…
-
- 1 reply
- 606 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என பிரிட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அன்றூ மியுரிசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையை வலியுறுத்தி வருவதுடன் ஆதரவு வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதி மற்றும் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த கட்டமைப்பு என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திற்கு இதனை வலியுறுத்தி வருகின்றது பிரிட்டிஸ் தூதுவ…
-
- 0 replies
- 475 views
-
-
கோதுமை மாவின் விலையினை குறைப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து நேற்று முதல் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து உள்ளூர் மட்டத்தில் கோதுமை மாவின் விலை செவ்வாய்க்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக கோதுமை மா உற்பத்திசார்ந்த உணவு பொருட்களின் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவை பேக்கரி உரிமையாளர் சங்கத்திற்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60709
-
- 0 replies
- 446 views
-
-
(இராஜதுரை ஹஷான்) 115 வருட கால பழைய மஹவ - ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்டு தற்போது பாவனையில் உள்ள புகையிரத பாதையினை முழுமையாக நீக்கும் வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. செயற்திட்ட ஒப்பந்த நிறுவனமான ஐகோன் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் குறித்த நிர்மாணப்பணி ஒப்பந்தத்தில் அமைச்சர் கைச்சாத்திட்டார். வடக்கு புகையிரத சேவையில் மஹவ - ஓமந்தை இடையிலான புகையிரத பாதை 133 கிலோ மீற்றராகும். மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரதப்பாதை 1904…
-
- 0 replies
- 366 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பிரிஜிங் லங்கா நிறுவனத்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வண்ணா குளம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரோக்கியா உணவகம் மற்றும் கல்வி நிலையம் ஆகியவற்றை இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிற் கோலி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வண்ணா குளத்தைச் சேர்ந்த பெண்களினால் குறித்த உணவகம் முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது. போரினால் கணவனை இழந்த பெண்கள்,கைவிடப்பட்ட பெண்கள்,வலுவிழந்த கணவர்களுடன் வாழும் பெண்கள் தொடர்ச்சியாக வருமான…
-
- 0 replies
- 379 views
-
-
July 18, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் கடந்த செவ்வாய்க்கிழமை(16) நள்ளிரவு நிகழ்ந்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட…
-
- 0 replies
- 292 views
-
-
மன்னார் குருந்தன் குளம் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் ஆலயம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/16/பழமையான-விநாயகர்-ஆலயம்-க.html
-
- 6 replies
- 1.1k views
-
-
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும…
-
- 2 replies
- 1.1k views
-
-
கல்முனை விவகாரம் – பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல் கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் குறித்து தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தவிடயம் தொடர்பாக ஏற்கனவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதன் அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை…
-
- 1 reply
- 813 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமென தமிழ் தலைவர்கள் கூறுவார்களானால் அது அவர்களின் அரசியல் அறிவற்ற தன்மையே - சித்தார்த்தன் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என யாராவது தமிழ் தலைவர்கள் கூறுவார்களாக இருந்தால் அது அவர்களின் அரசியல் அறிவு அற்ற தன்மையே என தமிழ் விடுதலைக் கழகத்தின் ( புளொட்) தலைவரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஓன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. ஏன் மக்கள் தியாகம் செய்தார்களோ. அந்த இலக்கை அடையும் வரை நாம் செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் செய்த தியாகங்கள் வீண்போகக் க…
-
- 2 replies
- 527 views
-
-
இரண்டு ஆண்டுகால அவகாசத்தில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஆரோக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் கல்முனை விவகாரம் குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்திற்…
-
- 5 replies
- 705 views
-
-
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடிஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/60690 கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் : ஜனாதிபதியை சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில்…
-
- 0 replies
- 252 views
-
-
திருகோணமலை - கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும் போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள் முயற்சிக்கவில்லை எனவும் பொது அமைப் புக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா்.கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை கண்டித்து அடையாள ஊா்வலம் ஒன்றையும் விசேட வழிபாடு ஒன்றையும் தென் கைலை ஆதீனம் ஒழுங்கமைத்திருந்தது.இதனை அடுத்து நீதிமன்ற தடை உத்தரவை பெற்ற பொலிஸாா், கலக தடுப்பு பொலிஸாா் மற்றும் இராணுவத்தினரை களமிறக்கி மக்களுடைய வழிபாட்டு உாிமையை தடை செய்திருந்தனா்.இதன்போது பௌத…
-
- 0 replies
- 749 views
-
-
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. கடந்த (06.07. 2019) அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர…
-
- 1 reply
- 643 views
-
-
ஐ.தே.க.வை ஆட்சியில் வைத்திருக்க முயற்சிக்கவில்லை – அமெரிக்கா ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். முகநூல் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேற்று (புதன்கிழமை) பதிலளித்தபோதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கை மக்களே தற்போதைய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இன்னும் சில மாதங்களில் அடுத்த அரசாங்கத்தை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மக்களின் விருப்பத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது. அடுத்து எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது. ஒரு வலுவான, இறைமை கொண்ட, சுதந்திரமான இலங்கையை அமெரிக்கா ஆதர…
-
- 0 replies
- 393 views
-
-
இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் பலவந்தமாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர். அமைச்சர் மனோகணேசனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார். அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இத…
-
- 0 replies
- 291 views
-
-
நாளை சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 18ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார். கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களைய…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த, இணக்கம் காணப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25, 26ஆம் நாள்களில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்கள…
-
- 4 replies
- 735 views
- 1 follower
-
-
கட்டுநாயக்கவில் மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய மற்றொரு அமெரிக்க சரக்கு விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெஸ்ரேன் குளோப் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான McDonnell Douglas 11 வகையைச் சேர்ந்த இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. நேற்று அதிகாலை 2.50 மணியளவில் இந்த சரக்கு விமானம், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள புஜாரா விமான நிலையம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த விமானம், பசுபிக் தீவாக குவாமில் உள்ள அமெரிக்காவின் அன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்தே, கட்டுநாயக்க விமான நில…
-
- 12 replies
- 1.7k views
-
-
திருகோணமலை, கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு வெளிப்பாடாகும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பல்லாயிரம் காலங்களுக்கு முற்பட்ட இந்த புராதன வரலாற்றுப் பகுதியை தமிழ் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கடும் எதிர்ப்புக்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டப்பட்டுவரும் செய்தி தம…
-
- 2 replies
- 1k views
-
-
குளவிகள் கொட்டியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி ; வாகரையில் சம்பவம் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற குளவித் தாக்குதலில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலைய வளாகத்தை அவர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த கருங்குளவிகள் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையிலும் மார்பிலும் கொட்டியுள்ளன. உடனடியாக மயக்கமடைந்த அவர் அருகிலுள்ள வாகரை மாவட்ட வைத்தியசாலையில் சேர்ப்பிக்கட்டார். எனினும், கருங்குளவித் தாக்குதலுக்குள்ளாகி சுமார் 45 நிமிட நேரத்தில் அவர் உயிர் பிரிந்து விட்டது. அவரைப் பரிசோதனை செய்யதபோது அவரது தலையில் 4 இடங்களிலும் மார்பில் ஒரு இடத்திலும் …
-
- 2 replies
- 808 views
-
-
சிறிலங்காவில் கால் வைக்கிறது சீன எண்ணெய் நிறுவனம் சினோபெக் (Sinopec) எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம், சிறிலங்காவில் எரிபொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சினோபெக் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இந்த நிறுவனம் செயற்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. http://w…
-
- 3 replies
- 648 views
-
-
இலங்கைக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் சீனா! அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டுமென இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார். அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “சீனா, இலங்கை போன்ற நாடுகள் மேற்கத்திய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் பொதுவான வரலாற்றைக் கொண்டவை. எனவே அந்நிய சக்திகளின் தலையீடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய தலையீடுகள் சிக்கல்கள் மற்றும் பேரழிவுகளைத் தருமே தவிர ஒருபோதும் நன்மைகளைத் தராது. சுயாதீனமான மற்றும் அமைதியான இராஜதந்திர கொள்கைகளை கடைபிடி…
-
- 5 replies
- 1.1k views
-