ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
பொலிஸ் உத்தியோகத்தர் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் 3 பேர் கைது மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போனார். இந்நிலையில் கடந்த வருடம் வவுணதீவு இரு பொலிஸார் து…
-
- 0 replies
- 750 views
-
-
“நிரந்தரத் தீர்வு காண, எதிர் வரும் ஆண்டுகளில், உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புகிறோம்” May 24, 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும், பிரதமர் மோடிக்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் எழுதியுள்ளார். மோடிக்கு ஆங்கிலத்தில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது முறையாக பதவியைப் பெறுவதற்கு மக்களின் நம்பிக்கையை வெகுவாகப் பெற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய தங்களுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்களுக்கு தொடர்ந்து …
-
- 7 replies
- 733 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. அத்துடன் இதற்கான நிதியும் சட்டவிரோதமாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது என ஆசுமாரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மட்டககளப்பு மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் இருக்கின்றன அவற்றில் காத்தான்குடி கல்வி வயத்தில் புதிதாக 5 பாடசாலைகள் உட்பட மொத்தம் 8 பாடசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த…
-
- 1 reply
- 537 views
-
-
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளின் செயற்பாடுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அதற்கமைய, 134 மில்லியன் ரூபா பெறுமதியான 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். https://www.newsfirst.lk/tamil/2019/05/24/ஏப்ரல்-21-தாக்குதல்-சந்தேக/
-
- 1 reply
- 326 views
-
-
இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் இந்துத் தமிழ் மக்களே என்றும் அவர்கள் புத்தபிரான் பிறக்கமுதலே இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர், முன்னாள் முதலமைசசர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த மதமானது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அந்த மதத்தை தமிழர்கள் தான் முதன்முதலில் தழுவினர். தேவநம்பியதீசன் ஒரு தமிழ் மன்னன். சில நூற்றாண்டு காலங்கள் இலங்கையின் வடகிழக்கைச் சேர்ந்த இந்துத் தமிழர்கள் பௌத்தர்களாக மாறி தமிழ் பௌத்தர்களாகவே வாழ்ந்தார்கள். அந்த காலத்தில் வழக்கில் இருந்த தொல்லியல் பௌத்த எச்சங்களே இன்ற…
-
- 5 replies
- 914 views
-
-
பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் விடுதலைசெய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் உரிய பாதுகாப்பை வழங்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் என்னை தூற்றி வந…
-
- 3 replies
- 487 views
-
-
இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரர் இன்று அமெரிக்க தூதுவரிடம் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டார். பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படும் நிலையில், இருதரப்பிற்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த நேருக்கு நேர் கதைப்பது உகந்தது என தாம் கருதுவதாக மல்வத்து மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் தொடர்பில் உள்ள அபாயம் தமக்கு புரிவதாக அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://www.newsfirst.lk/tamil/2019/05/23/மல்வத்து-மகாநாயக்க-தேரர்/
-
- 1 reply
- 476 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை தாம் நம்பவில்லை என காணாமால் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அதிகளவான சாட்சிகளைக் கொண்ட ஒருவர் குறித்து விசாரித்து நல்ல தீர்வைத் தந்தால் இதுகுறித்த அலுவலகத்தை தாம் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “கடந்த 16ஆம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறக்கப்பட்டுள…
-
- 0 replies
- 280 views
-
-
புங்குடுதீவு மனைவி சிவலோகநாதன் வித்தியா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுருத்த ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வித்தியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு உதவியதாக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 எதிரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன…
-
- 2 replies
- 421 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத குறை மிக நீண்டகாலமாக நிலவி வருகின்றது. அந்த வகையிலே இளைஞர்கள் தங்களுக்கான ஒரு விளையாட்டு மைதானத்தை உருவாக்கித் தருமாறு பலதடவை பலரிடம் கூறி வந்த நிலையில் அண்மையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் குறித்த இளைஞர்களது கோரிக்கைக்கு அமைவாக ஐந்து இலட்சம் ரூபா நிதி குறித்த ஒரு மைதானத்தை அமைப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய திருமுறிகண்டி பகுதியில் மைதானம் ஒன்றை துப்பரவு செய்யும் பணியில் இளைஞர்கள் பிரதேச செயலகத்தின் உடைய அனுமதி கடிதத்தோடு ஈடுபட்டிருந்தனர். குறித்த வேலைகள் இடம்பெற்று …
-
- 0 replies
- 404 views
-
-
யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ; ஜனாதிபதி இராணுவ வீரர்களின் போர்த்திறமை தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். அதனை வாசிப்பதனூடாக நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுடைய எதிர்கால தலைமுறையொன்று உருவாக்கப்படுவதுடன், 30 வருட கால யுத்தத்தின் உண்மைக் தன்மை, பின்னணி மற்றும் அதற்கான காரணங்களைப் போன்ற உண்மையான விபரங்களை உலகத்தினருக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் இன்று (22) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்ட…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் மியன்மாரில் கைது… May 24, 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், விடுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர். 39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்திற்கு சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 1 வர…
-
- 1 reply
- 639 views
-
-
யாழ்.மாவட்டத்தில் 25 ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 ஆயிரத்து 693 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களிற்குள் அதி கூடிய தேவை உடைய தொகை இதுவாகும். அதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 113 பேருக்கு வீடுகள் தேவையாக உள்ளன. இத…
-
- 1 reply
- 685 views
-
-
கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு மேல் நீதிமன்றத்தில் அடுத்த மாதம், நாளாந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. மெதமுலானவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு 33.9 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் முறையில் நடக்கும் இந்த வழக்குநேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மருத்துவ சிகிச்சைக்காக கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்கு, மே 24 தொடக்கம் ஜூன் 2 வரை அனுமதி தர வேண்டும் என்று, நீதிமன்றிடம் அவரது சட்டவாளர் கோரியிருந்தார். …
-
- 1 reply
- 620 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் தொடரில் இன்று அரச தரப்புச் சாட்சியான காவல்துறை அலுவலகர் சாட்சியம் வழங்க முற்படுத்தப்பட்ட போதும் அவரால் முன்வைக்கப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட சாட்சியின் பிரதி சிங்களமொழி மட்டுமே காணப்பட்டதால் அதன் தமிழ்மொழிப் பிரதியை சமர்ப்பிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், விசாரணையை வரும் ஜூன் 13ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டிய…
-
- 0 replies
- 712 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் என்று திகதியிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, வழக்குகளின் முதலாவது பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான, இரண்டாவது பிரதிவாதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் சட்ட மா மன்றில் முன்னிலையாகவில்லை. …
-
- 0 replies
- 385 views
-
-
யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் வீடுகள் இல்லை May 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் 25ஆயிரத்து 761 பேருக்கு காணிகள் இருந்தும் இதுவரை வீடுகள் இல்லாத நிலைமையில் வாழ்ந்து வருவதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , யாழ்.மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் வீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. அதில் மீள் குடியேறிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அமைத்து கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களுக்கு தற்போது 10 இலட்ச ரூபாய் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4ஆயிரத்து 693 பேருக்கு வீடுக…
-
- 1 reply
- 398 views
-
-
குறைந்த வருமானமுடைய விவசாய குடும்பத்தை சேர்ந்த உயர்தர மாணவர்களுக்கு 20 ஆயிரம் உதவி தொகை May 24, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் புலமை பரிசில் ஊடாக வருமானம் குறைந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட உள்ளது. முழு நேர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் , பெற்றோரில் ஒருவர் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏதாவது கமக்கார அமைப்பில் உறுப்பினராகவும், 2020ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதும் மாணவராக இருப்பவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். தகுதியுடையவர்கள் கமநல சேவைகள் திணைக்களத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று…
-
- 0 replies
- 294 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் பாகுபாடாக நடந்துகொள்வது நியாயமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் மூலமாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேசிய அச்சுறுத்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் …
-
- 1 reply
- 376 views
-
-
இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ம…
-
- 10 replies
- 1.1k views
-
-
தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ் பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார். அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்ந…
-
- 10 replies
- 886 views
-
-
ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம், வரும் ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நேற்றுக்காலை நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜூன் 6, மற்றும் 7ஆம் நாள்களில் இந்த விவாதத்தை நடத்தும்படி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்த போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இரண்…
-
- 0 replies
- 211 views
-
-
May 21, 2019 பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன்று அல்லது நாளைய தினம் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைளை, சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பிலேயே ஞானசரர் தேரர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, நீதிமன்றத்த…
-
- 22 replies
- 1.3k views
-
-
(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம்.வசீம்) நான்காயிரம் சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறும் தவ்ஹித் ஜமா-அத்தை சேர்ந்த அந்த முஸ்லிம் வைத்தியர் யார்? இந்த செய்தி உண்மையா? உண்மையென்றால் உடனடியாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றினை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய உடனடியாக உண்மைகளை கண்டறிந்து சபையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். முதன்மை சிங்கள நாளிதழ் ஒன்றில் இன்றைய தினம் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று குறித்து…
-
- 2 replies
- 437 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சியினர் பகலில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றனர். இரவில் எதிர்க்கட்சி தலைவர் அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து தமது பக்கம் வாறீர்களா என்றும், வந்தால் உங்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் எனவும் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும சபையில் தெரிவித்தார். அத்துடன் உண்மையில் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவது உண்மையென்றால் ஏன் அதில் எதிர்க்கட்சி தலைவர் கையொப்பமிடவில்லை. எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 567 views
-