ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
பலியான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு சிறிலங்காவில் கடந்த 21ஆம் நாள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட 42 வெளிநாட்டவர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 12 வெளிநாட்டவர்கள், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவமனையில் இன்னமும் அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களுக்குள் இவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனால், உயிரிழந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிக்கும் என்று கூறப்…
-
- 2 replies
- 713 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகத்ததால் வழக்கு ஜூன் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. கோத்தாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அமரசிங்க, தமது கட்சிக்காரர் அடுத்த தவணையில் மன்றில் முற்படுவார் என்று மன்றுரைத்தார். 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்…
-
- 0 replies
- 695 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 751 views
-
-
Batticaloa Campus எனும் பெயரில் மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. புனானை பகுதியில் வெலிகந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள Batticaloa Campus-இன் ஆரம்பம் 2013 ஆம் ஆண்டு முதல் பின்நோக்கி செல்கிறது. மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில், அப்போதைய தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஹிரா மன்றமும் தனியார் பங்களிப்புடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஸ்தாபிக்கும் நோக்கில் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. …
-
- 0 replies
- 989 views
-
-
"அடிப்படைவாத கொள்கைக்கு அடிபணிந்துள்ளவர்களுக்கு புனருத்தாபனம் தேவை" - கோத்தபய (இராஜதுரை ஹஷான்) பிளவுப்பட்டுள்ள தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் பிரத்தியேக புலனாய்வு சேவையினை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளை அங்கத்துவப்படுத்தி குழுவினை நியமித்தார். இக்குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பில…
-
- 2 replies
- 556 views
-
-
கிளிநொச்சி பாரிய விபத்தில் நால்வர் காயம்! கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித் விபத்து பாரிய அளவில் இடம்பெற்றுள்ளபோதிலும், தெய்வாதீனமாக உயிரிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பளையிலிருந்து முறிகண்டி திசை நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமே இவ்வாறு வேககக் கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி நகரின் நீதிமன்றத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் உள்ள மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்றபோது குறித்த ரிப்பர் வாகனத்தில் ஐவர் பயணித்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு…
-
- 0 replies
- 398 views
-
-
யாழ் பல்கலை மருத்துவபீட மாணவர் விடுதி சுற்றிவளைப்பு… May 3, 2019 யாழ்ப்பணப் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் சோதனை செய்யப்பட்டது. அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. #jaffnauniversity #stf #policeroundup #Eastersundayattacklk http://globaltamilnews.net/2019/120452/
-
- 0 replies
- 446 views
-
-
சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டதாரி உயிரிழப்பு – உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு May 2, 2019 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 29ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கே.கணேசலிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்த மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த 27 வயதான பரமேஸ்வரன…
-
- 0 replies
- 432 views
-
-
மிருசுவிலில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் பலி -இருவர் காயம் May 2, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்.மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்பாப்பிள்ளை சுப்பிரமணியம் (வயது 68) என்பவரே உயிரிழந்தவராவர். அவரது மனைவி சு. மகாலட்சுமி (வயது 63) மனைவியின் சகோதரியான கா.கோணேஸ்வரி (வயது 60) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் வீட்டு வேலியில் இராட்சத குளவி கூடு காணப்பட்டதாகவும் அவை காற்று வீசியமை…
-
- 0 replies
- 486 views
-
-
ஆலயங்களில் மிருக பலியிடல் ; மனு மீதான தீர்ப்பு 10 ஆம் திகதி இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ். கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர்மனுதாரர்களாக சட்ட மா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்தது. இந்து ஆலயங்களில் மிருக பலியிடலை …
-
- 3 replies
- 889 views
-
-
தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் தற்கொலை அங்கி கண்டெடுப்பு காத்தான்குடியில் உள்ள தற்கொலையாளி ரில்வானின் மாமியார் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் தற்கொலை குண்டு தாரியான முகமது காசிம் முகமது ரில்வானின் மாமியாரின் வீட்டிலேயே இன்று (வியாழக்கிழமை) மாலை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட முகமது காசிம் முகமது ரில்வானின் மனைவியின் தாயார் வீட்டில் வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி ரத்நாயக்க மற்றும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்…
-
- 0 replies
- 619 views
-
-
மத அனுட்டானங்களின்றி ஐ.எஸ். தீவிரவாதிகளின் உடல்கள் புதைப்பு கல்முனை சாய்ந்தமருதில் வீடொன்றுக்குள் தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 10 பேரின் ஊடல்கள் பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) புதைக்கப்பட்டன. குறித்த உடல்கள் எந்தவொரு மத அனுட்டானங்களும் இன்றி புதைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவத்தார். இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக பொலிஸாரால் இந்த சடலங்கள், எந்தவொரு தொழுகை, அனுட்டானங்களும் நடத்தப்படாமல் புதைக்கப்பட்டதாக ருவான் குணசேகர குறிப்பிட்டார். எனினும் தற்கொலை குன்டுதாரிகள் குன்டுகளை வெடிக்கவைத்த போது அதில் உயிரிழந்த 6 குழந்தைகளின் …
-
- 2 replies
- 795 views
-
-
முன்னாள் போராளிகள் சிலர் இராணுவ புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு – சுமந்திரன் முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றதொரு பதற்றத்தை நாட்டிலே பரப்புவதற்காகவே புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதி கொலைகளை செய்வதற்கும் துணிந்துவிட்டதாக சுமந்திரன் கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதைனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
-
- 4 replies
- 661 views
-
-
April 30, 2019 கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMH…
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழில். தேடுதல்கள் சுற்றிவளைப்புக்களில் பள்ளிவாசல்களை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து சந்தி மொஹைதீன் ஜீம்மா பள்ளி வாசல் நிர்வாகி சரபுல் அனாம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை எமது பிரதேசத்தை இராணுவத்தினர் , காவல்துறை விசேட அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது எமது பள்ளி வாசலில் தேடுதல் நடத்த வந்த போது , அவர்கள் பள்ளி வாசலுக்குள் சப்பாத்துக்களுடன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
May 2, 2019 இலங்கையில் உள்ள மதரஸாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரஸா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேப்போல் மதரஸா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். #…
-
- 1 reply
- 839 views
-
-
களில் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் இரண்டாம் தவணை விடுமுறை காலத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றுகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, எதிர்வரும் 6 ஆம் திகதி இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாக பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதார உயர்தர மற்றும் சாதாரணத் தரப்பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். …
-
- 0 replies
- 731 views
-
-
ஈஸ்ரர் ஞாயிறுத் தாக்குதலுடன் வடக்கு கிழக்கு யுத்த சூழலுக்குள் தள்ளப்படுகிறதா? வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றுத் தொடக்கம் குறித்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. #explosive #eastersundayattackslk #srilankanorth …
-
- 0 replies
- 701 views
-
-
May 2, 2019 தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்க செல்லவில்லை என அம்பாறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணி (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) பாராளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (2) அவரது சம்மாந்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் அம்பாறை வைத்தியசாலையில் க…
-
- 0 replies
- 485 views
-
-
சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். சாவகச்சேரி காவல நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி காவல நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே கிராம சேவையாளர்களிடம் காவல்துறையினர் குடும்ப விபரங்களை கோரினார்கள். காவல்நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர்கள் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாத குடும்பங்கள் இருப்பின் உடனடி…
-
- 0 replies
- 592 views
-
-
இலங்கை குண்டுவெடிப்பு: சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா - ’வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே, முடிந்து போன சோகம்’ யூ. எல். மப்றூக்பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஉயிரிழந்த அஸ்ரிபா பதினாறு வயதாகும் போது திருமண உறவில் இணைந்து கொண்ட அஸ்ரிபாவுக்கு இப்போது வயது…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் …
-
- 4 replies
- 958 views
-
-
இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ வி…
-
- 0 replies
- 913 views
- 1 follower
-
-
காத்தான்குடியில், 5 இந்தியர்கள், பெண் ஒருவர் உட்பட, 12 பேர் கைது.. April 30, 2019 மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலில், விசா இன்றி தங்கியிருந்த 5 இந்தியர்கள் மற்றும் பெண் ஒருவர் உட்பட 12 பேரை இன்று (30.04.19) கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ரவவைகள், பெரும் திரளான கணினிகள், இறுவெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் கடற்கரை வீதி தொடக்கம் ஒரு பகுதியை 600 பேர் கொண்ட இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (30.04.19) அதிகாலை …
-
- 16 replies
- 1.8k views
-
-
இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் - மாவை தற்போதைய நிலையில், வடக்கில் மக்களின் பாதுகாப்பு, இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்கிற, மாவை, முன்னர் அவர்கள் வடக்கிலிருந்து விலக்கப்பட வேண்டும் என கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailymirror.lk/breaking_news/Mavai-now-asks-for-Army-security-to-North/108-166322
-
- 0 replies
- 386 views
-