Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புள்ளாவைச் சந்தித்த விடயமானது தமக்கு அதிர்ச்சியளித்திருந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேலும் இது கூட்டமைப்பின் தலைமைக்குத் தெரிந்துதான் நிகழ்ந்திருக்குமா என்பதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தொடர் தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து நாடாளுமன்ற உருப்பினர் எம்.ஏ சுமந்திரன் கிழக்கு மாகாண ஆளுநரை நேரில்சென்று சந்தித்திருந்தார். இது கூட்டமைப்பு சார்பானோரிடத்தில் கடும் எதிர்ப்பு நிலையினைச் சந்தித்திருந்த நிலையில், நாடாளுமன்றில் சுமந்திரன் அதுகுறித்த விளக்கத்தினைக் கொடுத்திருந்…

  2. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் சிரால் லக்திலக தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார். அத்தோடு இறுதி யுத்தக் காலத்தில் கூட இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நைஜீரியாவிலும், 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போலவே இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் …

    • 7 replies
    • 2k views
  3. பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் மற்றும் அவரது உறவினர் மற்றும் மெளலவி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 40க்கும் மேற்பட்ட வாள்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் பள்ளிவாசலிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/118753

    • 0 replies
    • 519 views
  4. நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை – பிரதமர் விசேட அறிக்கை நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சர்வதேசத்தின் உதவியுடன் சேதமடை…

    • 4 replies
    • 975 views
  5. குண்டு தாக்குதலால் சுற்றுலாத்துறை 30% வீழ்ச்சி? 26,000 கோடி நட்டம்? தொடர் குண்டு வெடிப்புகளால் நாட்டின் சுற்றுலாத்துறையில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சர்வதேச பயங்கரவாதத்தின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஏனைய நாடுகளின் அனுபவங்களை பாடமாகக் கொண்டு விரைவில் இத்துறையை மீளக் கட்டியெழுப்புவோமென நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். இதனால் இலங்கைக்கு சுமார் ஒன்றரைக் கோடி பில்லியன் டொலர்கள் (26,000 கோடி) நட்டம் ஏற்படலாமென நிதி அமைச்சு மதிப்பிட்டுள்ள போதும் அரசாங்கம் இக்காலப்பகுதிக்குள் செலுத்த வேண்டிய கடன்களை தவறாது செலுத்த முன்வருமென்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன் இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தை காரணமாக…

  6. 24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது…. April 27, 2019 நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை, மாவனெல்லை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் தலா மூன்று பேரும் மிரிஹான மற்றும் தெஹிவளையில் தலா இரண்டு பேரும் கொள்ளுப்பிட்டி, பண்டாரவளை, காத்தான்குடி, அளுத்கம, புரவசன்குளம் ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்…

  7. கிளிநொச்சியில் திடீர் சுற்றிவளைப்பு கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் படையினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த தேடுதல் நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்ற காணிகள் என்பன படையினரால் சோதனையிடப்பட்டது. இதேவேளை அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கிளிநொச்சியில்-திடீர்-சு/

  8. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை – முன்னாள் ஜனாதிபதி நாட்டின் அனைத்து பிரதேச செயலகத்திலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். பேராயர், கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவங்களானது மிகவும் கவலையளிக்கிறது. நடக்கக்கூடாத ஒன்று நடந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக நாம் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய, இனங்களுக்கிடையிலான ஐக்க…

  9. தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்: சாள்ஸ் நிர்மலநாதன் அரசியல் பலத்தின் ஊடாகவே தீவிரவாதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சாள்ஸ் நிர்மலநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மனிதர்களை அழிக்க வேண்டுமென்ற கொடூர சிந்தனையோடு மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த தாக்குதல் சம்பவம் முஸ்ஸீம் தீவிரவாத அமைப்புக்கள் கடந்த 10 ஆண்டுகளாக இதற்காக ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளன. இவர்கள் மனித வெடி குண்டுகளாக மாறி மக்கள் மத்தியில் வெடிக்கடிச் …

  10. அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக…

  11. இலங்கை குண்டுவெடிப்பு- இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டது இலங்கை அரசு Getty Images கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தம் செய்து வெளியிட்டுளள்து இலங்கை அரசு. இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது இலங்கை சுகாதார அமைச்சகம். கணக்கீட்டு பிழை என இதற்கு காரணம் கூறுகிறது இலங்கை அரசு. தற்போதய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 253 என்கிறது இலங்கை சுகாதார அமைச்சகம். முன்னதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 359 என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதல…

  12. படத்தின் காப்புரிமை NurPhoto "இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்" என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் 'பத்வா' குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை…

    • 7 replies
    • 1.5k views
  13. வெள்ளவத்தையில் சி-4 வெடிபொருட்களுடன் மூவர் கைது! கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு கிலோகிரேம் நிறையுடைய சி-4 வெடிபொருட்களை இலங்கை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர். குறித்த வெடிபொருட்களை முச்சக்கர வண்டியொன்றில் எடுத்துச் செல்லும்போதே மேற்கொண்ட சோதனையின் போது மீட்டுள்ள கடற்படையினர் முச்சக்கர வண்டியையும் தடுப்புக் காவலின் கீழ் கொண்டு வந்துள்ளளனர். அத்துடன் இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய மூவரையும் இதன்போது படையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54777

  14. இலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம் எத்திராஜன் அன்பரசன் பிபிசி, காத்தான்குடி சஹ்ரான் காசிம் கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது. நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபரா…

    • 4 replies
    • 1.6k views
  15. எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்…

  16. இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/54766 மறு அறிவித்தல் வரை ஊரடங்கு ! கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோத…

    • 0 replies
    • 551 views
  17. இலங்கையில் மீண்டும் மே மாதம் 6ஆம் திகதியே பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட இருந்த பாடசாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து மே மாதம் 6ஆம் திகதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/118736

    • 0 replies
    • 310 views
  18. குண்டு வெடிப்பில் சேதமடைந்த தேவாலயங்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதியுதவி வழங்க விருப்பமுள்ள நபர்களுக்காக விசேட வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். குறித்த வங்கிக்கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கணக்கு கொழும்பு பேராயரின் பெயரில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்க விருப்பமுள்ளவர்களுக்காக கணக்கிலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பொரளை கொமர…

  19. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அடையாளம் தெரியாதவர்கள் சில பகுதிகளில் தங்கியுள்ளதால் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடளாவிய-ரீதியிலுள்ள-அனை/

  20. “புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன் நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை …

    • 5 replies
    • 2k views
  21. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என காவல்துறையினர் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக காவல்துறையினர் முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்று தவறான அறிக்கையை மன்றில் முன்வைத்துள்ளமை தெரியவந்ததுஎன்பதனை நீதிவான் கண்டறிந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …

    • 1 reply
    • 727 views
  22. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய சில இலங்கை முஸ்லிம்கள் தமது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கவலை தெரிவித்தார். "இலங்கையில் முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம், முஸ்லிம் …

  23. தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உயிரோடில்லை-சிறிசேன முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மக்களை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக பார்க்கவேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது சிறிசேன தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்வார் என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களிற்கும் புலனாய்வுதுறையை பலவீனப்படுத்தியதற்கும் அரசாங்கமே காரணம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார் ஹோட்டல்…

  24. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உயர்மட்ட த…

  25. பிரதி பாதுகாப்பு செயலாளர் நியமனம் தற்காலிக பிரதி பாதுகாப்பு செயலாளராக துசித்த வனிகசிங்க நிமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாம கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்ததை அடுத்து துசித்த வனிகசிங்க பிரதி பாதுகாப்பு செயலாளராக நிமிக்கப்பட்டுள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன. இந் நிலையில் பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இராஜினாமா செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.