Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை குண்டுவெடிப்பு - அச்ச உணர்வில் வாழும் காத்தான்குடி முஸ்லிம்கள் - கள நிலவரம் எத்திராஜன் அன்பரசன் பிபிசி, காத்தான்குடி சஹ்ரான் காசிம் கடலோர நகரமான காத்தான்குடியில் வாழும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான முகமது காசிம் மதானியா நம்பிக்கையின்றி காணப்படுகிறார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது, தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களில் 350-க்கு மேலானோர் கொல்லப்பட்ட நிலையில் தற்கொலை குண்டுதாரிகள் குழுவின் தலைவராக தனது சகோதரர் சஹ்ரான் காசிம் கூறப்படுவது இவருக்கு தெரிய வந்துள்ளது. நடந்தவை பற்றி கோபமடைந்துள்ள அவர், அடுத்து என்ன நடக்கும் என்று அச்சப்படுகிறார். காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், சந்தேக நபரா…

    • 4 replies
    • 1.6k views
  2. எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்…

  3. இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/54766 மறு அறிவித்தல் வரை ஊரடங்கு ! கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோத…

    • 0 replies
    • 550 views
  4. இலங்கையில் மீண்டும் மே மாதம் 6ஆம் திகதியே பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது. நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் இரண்டாம் தவணைக்காக திறக்கப்பட இருந்த பாடசாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து மே மாதம் 6ஆம் திகதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/118736

    • 0 replies
    • 309 views
  5. குண்டு வெடிப்பில் சேதமடைந்த தேவாலயங்களை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த தேவாலயங்களை வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிதியுதவி வழங்க விருப்பமுள்ள நபர்களுக்காக விசேட வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். குறித்த வங்கிக்கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கணக்கு கொழும்பு பேராயரின் பெயரில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்க விருப்பமுள்ளவர்களுக்காக கணக்கிலக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பொரளை கொமர…

  6. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர வதிவிடங்களில் வசிப்போரை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அடையாளம் தெரியாதவர்கள் சில பகுதிகளில் தங்கியுள்ளதால் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாடளாவிய-ரீதியிலுள்ள-அனை/

  7. “புகைப்படமொன்றை வைத்துக் கொண்டு என் மீது சேறு பூசுகின்றார்கள்” - ரிஷாட் பதியுதீன் நேற்று (24) மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை …

    • 5 replies
    • 2k views
  8. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் முதலாவது எதிரி உயிரிழந்துவிட்டார் என காவல்துறையினர் நேற்றுமுன்தினம் அறிக்கை சமர்ப்பித்த நிலையில் அந்த எதிரி நேற்று மன்றில் தோன்றியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீதிவான் அந்தோனி பீற்றர் போல் ஆராய்ந்த போது, வழக்கின் இரண்டாவது எதிரி உயிரிழந்தார் என்று அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக காவல்துறையினர் முதலாவது எதிரி இறந்துவிட்டார் என்று தவறான அறிக்கையை மன்றில் முன்வைத்துள்ளமை தெரியவந்ததுஎன்பதனை நீதிவான் கண்டறிந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …

    • 1 reply
    • 726 views
  9. இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, தாங்கள் அவமானப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும், பிபிசி தமிழிடம் பேசிய சில இலங்கை முஸ்லிம்கள் தமது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். இலங்கையிலுள்ள கிறிஸ்தவ மக்களின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களால், தாம் வெட்கித் தலைகுனிந்து நிற்பதாக, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் கவலை தெரிவித்தார். "இலங்கையில் முஸ்லிம்கள் மீது கடந்த காலங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதெல்லாம், முஸ்லிம் …

  10. தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உயிரோடில்லை-சிறிசேன முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்கவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை மக்களை முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக பார்க்கவேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பின்போது சிறிசேன தெரிவித்துள்ளார் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்பு செயலாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் இன்று தனது பதவியை இராஜினாமா செய்வார் என கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல்களிற்கும் புலனாய்வுதுறையை பலவீனப்படுத்தியதற்கும் அரசாங்கமே காரணம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார் ஹோட்டல்…

  11. உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உயர்மட்ட த…

  12. பிரதி பாதுகாப்பு செயலாளர் நியமனம் தற்காலிக பிரதி பாதுகாப்பு செயலாளராக துசித்த வனிகசிங்க நிமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாம கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்ததை அடுத்து துசித்த வனிகசிங்க பிரதி பாதுகாப்பு செயலாளராக நிமிக்கப்பட்டுள்ளார். தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன. இந் நிலையில் பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இராஜினாமா செய்…

  13. எம் தாய் நாடான இலங்கை தாங்கொண்ணாத பெரும் துயரை எதிர்கொண்டுள்ள ஒரு தருணம் இது. நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களுக்கு எமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும், இன்னும் சில வெளிநாட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்த பெரும்சோகத்தை எம் நாடு எதிர்கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு ஆளாகிய அத்தனை உயிர்களையும் , இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு துன்பங்கொண்டிருக்கும் உயிர்களையும் நினைத்து, எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம். அவ்வுயிர்களுக்காகவும் அவர்களை இழந்த குடும்பத்தாருக்காகவும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்காய் இவ்வறிக்கையினை வெளியிடுகிறோம். சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். …

  14. ஒரு பயங்கரவாதியை தப்பவிட்டால் கூட பாரிய ஆபத்து - ரணில் இலங்கையில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அதிகாரிகள் தற்போது பதுங்கியிருக்க கூடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இவ்வாறு பதுங்கியுள்ளவர்கள் மற்றுமொரு சுற்று தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார் பொலிஸார் அனைவரையும் தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆபத்து பெருமளவிற்கு குறைவடைந்துள்ளது,ஆனால் பதுங்கியுள்ள சிலரை அடுத்த சில நாட்களில் கைதுசெய்யவேண்டும் இதனை செய்வோம் எனவும் தெரிவித்து…

    • 3 replies
    • 742 views
  15. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/118719?ref=bre-news ரிஷாத்தின் சகோதரர் கைது! அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ஒருவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரிலேயே இவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட ரிஷாத் பதியூதினின் சகோதரரை இராணுவத்தினர் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அவரிடம் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின…

  16. ISஐ முற்றாக ஒழிக்க சம்பிக்க யோசனை Editorial / 2019 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:15 Comments - 0 ISஐ முற்றாக ஒழிக்க சம்பிக்க யோசனை நாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரிலான ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள், செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான விசேட யோசனைகளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார். அந்த வகையில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும், நிகாப் மற்றும் ஃபர்தாவைத் தடை செய்ய வேண்டும், ஸரியா பல்கலைக்கழகம், மத்ரசா பாடசாலைகள் அனைத்தும் அரச கொள்கைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும், இஸ்லாமிய பயங்கரவாதச் சிந்தனைகளில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் …

    • 1 reply
    • 667 views
  17. பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்! (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன்­படி உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் பலரை ஆணைக்­குழு இட­மாற்­றி­யுள்­ளது. வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு குறித்த உயர் பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்ற நேற்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. அதன்­படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை வடமேல் மற்றும் வட­மத்­திய மாகாண …

  18. சிறுப்பிட்டி இளைஞர்களை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு April 26, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பரிந்துரைத்தது. ‘வழக்கின் எதிரிகள் ஐவருக்கும் எதிராக சுருக்கமுறையற்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளில் நீதிமன்று திருப்தியடைகின்றது. அதனால் எதிரிகளுக்கு எதிரான ஆள்கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள்…

  19. இலங்கை குண்டுவெடிப்பு:புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பயிற்சி பெற்ற 160 தற்கொலை கொலையாளிகள் …செய்தி தொகுப்பு…!!! நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (25) சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.இம் மாநாடு காலை 10 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குவதாகவும், குறித்த தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.அவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடும் போது, இவ்வாறு தெரிவித்து…

  20. "இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" கொழும்பு உட்­பட நாட்­டி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்­புக்­க­ளை­ய­டுத்து நாட்­டி­லுள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளுக்கு பொலி­ஸாரும் படை­யி­னரும் பாது­காப்பு வழங்கி வரு­கின்­றனர். இதே­போன்று முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் இந்து ஆல­யங்­களில் தொடர்ச்­சி­யான பூசை வழி­பா­டுகள் இடம்­பெ­று­வ­தனால் அங்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கி­றது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்­ம­கர்த்­…

  21. ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள் இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா ஒரேநாளில் தமது பிரஜைகளுக்கு இரு தடவைகள் பயங்கரவாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கையில் பயங்கரவாதக்குழுக்கள் தொடர் தாக்குதல்களை இலங்கையில் நடத்தக்கூடும். எவ்வித அறிவித்தலுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டு நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கலை நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய இடங்கள், கல்வி நிலையங்கள், விமானநிலையம், வைத்தியசாலைகள், மற்றும் பொதுமக்கள் கூ…

  22. அமைச்சரிடம் விருதுபெற்றவரே தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் 359 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தவகையில் கொழும்பு, நீர்க்கொழும்பு, உட்பட இலங்கையின் பிரபல்யமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரதான தற்கொலைத் தாக்குதல்களில் இலங்கையிலுள்ள பிரபல்யமான வர்த்தகரின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளமை எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியுள்ளது. எட்டு இடங்களில் நடந்தேறிய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் தற்கொலைதாரிகளாக ஒரு பெண் உட்பட 7 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இன்ஷாப் மற்றும் இல்ஹாம் என்…

  23. அண்மைய அசம்பாவிதங்களை தொடர்ந்து, இலங்கை குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள சிறப்பு அறிவித்தல்.

  24. நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது. மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண…

  25. மட்டு.வில் தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தானகுடியில் கைது மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய நபரை, அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.