Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எம் தாய் நாடான இலங்கை தாங்கொண்ணாத பெரும் துயரை எதிர்கொண்டுள்ள ஒரு தருணம் இது. நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களுக்கு எமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும், இன்னும் சில வெளிநாட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்த பெரும்சோகத்தை எம் நாடு எதிர்கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு ஆளாகிய அத்தனை உயிர்களையும் , இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு துன்பங்கொண்டிருக்கும் உயிர்களையும் நினைத்து, எங்கள் கனத்த இதயத்தோடு பேசுகிறோம். அவ்வுயிர்களுக்காகவும் அவர்களை இழந்த குடும்பத்தாருக்காகவும், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்காய் இவ்வறிக்கையினை வெளியிடுகிறோம். சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். …

  2. ஒரு பயங்கரவாதியை தப்பவிட்டால் கூட பாரிய ஆபத்து - ரணில் இலங்கையில் மேலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் அதிகாரிகள் தற்போது பதுங்கியிருக்க கூடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க இவ்வாறு பதுங்கியுள்ளவர்கள் மற்றுமொரு சுற்று தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார் பொலிஸார் அனைவரையும் தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆபத்து பெருமளவிற்கு குறைவடைந்துள்ளது,ஆனால் பதுங்கியுள்ள சிலரை அடுத்த சில நாட்களில் கைதுசெய்யவேண்டும் இதனை செய்வோம் எனவும் தெரிவித்து…

    • 3 replies
    • 743 views
  3. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் றிஷார்ட் பதியுதீனின் சகோதரர் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/118719?ref=bre-news ரிஷாத்தின் சகோதரர் கைது! அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ஒருவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்கேதத்தின் பேரிலேயே இவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட ரிஷாத் பதியூதினின் சகோதரரை இராணுவத்தினர் விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அவரிடம் விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின…

  4. ISஐ முற்றாக ஒழிக்க சம்பிக்க யோசனை Editorial / 2019 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:15 Comments - 0 ISஐ முற்றாக ஒழிக்க சம்பிக்க யோசனை நாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய இராச்சியம் எனும் பெயரிலான ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள், செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான விசேட யோசனைகளை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார். அந்த வகையில், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும், நிகாப் மற்றும் ஃபர்தாவைத் தடை செய்ய வேண்டும், ஸரியா பல்கலைக்கழகம், மத்ரசா பாடசாலைகள் அனைத்தும் அரச கொள்கைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும், இஸ்லாமிய பயங்கரவாதச் சிந்தனைகளில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் …

    • 1 reply
    • 668 views
  5. பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்! (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதன்­படி உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் பலரை ஆணைக்­குழு இட­மாற்­றி­யுள்­ளது. வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு குறித்த உயர் பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்ற நேற்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. அதன்­படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை வடமேல் மற்றும் வட­மத்­திய மாகாண …

  6. சிறுப்பிட்டி இளைஞர்களை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு April 26, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பரிந்துரைத்தது. ‘வழக்கின் எதிரிகள் ஐவருக்கும் எதிராக சுருக்கமுறையற்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட சாட்சிகளில் நீதிமன்று திருப்தியடைகின்றது. அதனால் எதிரிகளுக்கு எதிரான ஆள்கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள்…

  7. இலங்கை குண்டுவெடிப்பு:புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் பயிற்சி பெற்ற 160 தற்கொலை கொலையாளிகள் …செய்தி தொகுப்பு…!!! நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஆராய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (25) சர்வக்கட்சி மாநாடு இடம்பெறவுள்ளது.இம் மாநாடு காலை 10 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவிகளை வழங்குவதாகவும், குறித்த தாக்குதல்களில் உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.அவர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியின் மூலம் உரையாடும் போது, இவ்வாறு தெரிவித்து…

  8. "இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" கொழும்பு உட்­பட நாட்­டி­லுள்ள இந்து ஆல­யங்­க­ளுக்கும் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்­புக்­க­ளை­ய­டுத்து நாட்­டி­லுள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளுக்கு பொலி­ஸாரும் படை­யி­னரும் பாது­காப்பு வழங்கி வரு­கின்­றனர். இதே­போன்று முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலையில் இந்து ஆல­யங்­களில் தொடர்ச்­சி­யான பூசை வழி­பா­டுகள் இடம்­பெ­று­வ­தனால் அங்கும் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கப்­ப­டு­கி­றது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்­ம­கர்த்­…

  9. ஒரே நாளில் அமெரிக்கா விடுத்துள்ள 2 எச்சரிக்கைகள் இலங்கையில் பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது. இவ்வாறு அமெரிக்கா ஒரேநாளில் தமது பிரஜைகளுக்கு இரு தடவைகள் பயங்கரவாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கையில் பயங்கரவாதக்குழுக்கள் தொடர் தாக்குதல்களை இலங்கையில் நடத்தக்கூடும். எவ்வித அறிவித்தலுமின்றி சுற்றுலா தலங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டு நிலையங்கள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கலை நிகழ்வுகள் இடம்பெறக்கூடிய இடங்கள், கல்வி நிலையங்கள், விமானநிலையம், வைத்தியசாலைகள், மற்றும் பொதுமக்கள் கூ…

  10. அமைச்சரிடம் விருதுபெற்றவரே தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் 359 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தவகையில் கொழும்பு, நீர்க்கொழும்பு, உட்பட இலங்கையின் பிரபல்யமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரதான தற்கொலைத் தாக்குதல்களில் இலங்கையிலுள்ள பிரபல்யமான வர்த்தகரின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளமை எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியுள்ளது. எட்டு இடங்களில் நடந்தேறிய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் தற்கொலைதாரிகளாக ஒரு பெண் உட்பட 7 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இன்ஷாப் மற்றும் இல்ஹாம் என்…

  11. அண்மைய அசம்பாவிதங்களை தொடர்ந்து, இலங்கை குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள சிறப்பு அறிவித்தல்.

  12. நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறித்த நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது. மொஹமட் இயுஹைம் சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே பொலிஸ் தலைமையகம் இவ்வாறு வெளியிட்டுள்ளது. இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண…

  13. மட்டு.வில் தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தானகுடியில் கைது மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய நபரை, அவரின் தாயார் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக றில்வானின் உறவினர்களால் இவர் றில்வான் தான் என அடையாளம் க…

  14. ஜும்மா தொழுகையில் ஈடுபடும் போது, அவதானமாக செயற்படுக!- அவசர கோரிக்கை ஜும்மா தொழுகையில் நாளை (வியாழக்கிழமை) ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரே இடத்தில் பலர் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு முஸ்லிம் மத விவகார அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி இதனை அறிவித்துள்ளதாக முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், விசேடமாக நகர்ப்புறங்களில் பாதுகாப்புக் கருதி ஜூம்மா தொழுகையினைத் தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் பள்ளிவாசல்களைத் தாக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதால், இந்த தீர…

  15. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை இலங்கைப் படைத்தரப்புக்குள் முரண்பாடுகள்- ரணில் அரசாங்கம் ஒத்துழைக்கவில்லையெனக் குற்றச்சாட்டு இஸ்லாமிய இயக்கங்களிடம் பயிற்சி பெற்ற 160 தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையில் ஜஎஸ் பயங்கரவாதிகளிடம் அல்லது பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடம் நன்கு பயிற்சி பெற்ற மேலும் 160 தற்கொலைதாரிகள் இலங்கையில் தங்கியிருப்பதாக இலங்கைப் படைத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் எழுபத்தி ஐந்து ஏக்கர் தென்னந்தோப்பில் தௌபீக் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத முகாம் ஒன்றை இலங்கைப் படைய…

  16. உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்களை உலுக்கிய ஈஸ்டர் கொலைவெறி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை அறிக்கையில், பயணிகள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், இலங்கைக்கு மிக மிக கடுமையான அச்சுறுத்தல் தற்போதும் அமுலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி இலங்கையில் தற்போதுவரை தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போதைய சூழல் கட்டுக்குள் வரும்வரை எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறித்தியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேல் அரசின் பாதுகாப…

  17. ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார். இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்…

  18. April 24, 2019 பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறைமா மா அதிபர் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து விலகுமாறு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயாலளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவற்துறைமா மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின…

  19. 83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன், இன்று ஜனாதிபதியால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையற்றுகையில் கூறினார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 1977லே, 1983லே நடைபெற்ற இனக்கலவரங்களின் போது, தமிழ் மக்களுக்கு முறையிடுவதற்கு ஒரு இடம் இருக்கவில்லை. புகார் சொல்வதற்கு ஒரு அரசாங்கம் இருக்கவில்லை. அரசாங்கங்களே முன்னின்று அக்கொடுமைகளை நடத்தின. அதையிட்டு நான் இன்றும் கவலையடைகின்றேன். வேதனையடைகின்றேன்…

    • 11 replies
    • 853 views
  20. மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த தற்கொலையாளி கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வருவதற்காக கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு செல்வும் தனியார் பஸ் வண்டியில் கடந்த 20 ம் திகதி இரவு 9. 00 மணியளவில் ஏற்றுவதற்காக கார் ஒன்றில் போதியுடன் கொண்டு வந்து இறக்கி விடப்பட்டுள்ளார…

  21. மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான். தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர். தற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வ…

  22. பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார். இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கு அமைவாக எமது அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை எமது மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/54687

  23. – யாழ்ப்பாண செய்தியாளர் – யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கிள் மற்றும், அவ்வாலயத்திற்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பொதி ஒன்று தொடர்பிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு இராணுவத்தின் குண்டு செயலிழப்பு செய்யும் பிரிவினரை அழைத்து குறித்த பகுதியில் சோதனை நடத்தினர். இதன் போது கோவிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்…

    • 0 replies
    • 607 views
  24. (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அறிக்கைவிடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்க…

  25. தேசிய ஜவ்கீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜஹ்ரான் ஹாசிமின் நடவடிக்கைகளால் நான் அச்சமடைந்துள்ளேன் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என தெரியாதநிலையில் உள்ளேன் என அவரின் சகோதரி முகமட் ஹாசிம் மதானியா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். எனக்கு ஊடகங்கள் மூலமாகவே இந்த விடயங்கள் குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள அவர் எனது சகோதரர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர் செய்துள்ள விடயங்களை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்,எனது சகோதரர் என்றால் கூட என்னால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது நான் இனிமேல் அவர் குறித்து அக்கறை கொள்ளப்போவதில்லை எனவும் மதனியா தெரிவித்துள்ளார். அயல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.