Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முரளிதரன் தனது விருதுகளை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குகின்றார் March 21, 2019 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான் பெற்ற ஆட்டநாயகனுக்கான விருதுகளை குட்னஸ் எனும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது 19 வயதிலிருந்து அவர்கள் பெற்ற ஆட்ட நாயகனுக்கான விருதுகள் அனைத்தையும் இவ்வாறு அவர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனிகமவில் அமைந்துள்ள குட்னஸ் எனும் தொண்டு நிறுவனத்தின் தலைமையகத்தில் முத்தையா முரளிதரன் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/116536/

  2. படத்தின் காப்புரிமை NurPhoto Image caption சித்தரிப்புப் படம் இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது உடலில் காயங்களையும் காட்டியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். …

  3. இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதுடன் கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை பேரவையின் இன்றைய இலங்கை குறித்த விவாதத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. சர்வதேச மன்னிப்பு சபை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆசிய மனித உரிரைகளுக்கான மையம் கனடா சட்டதரனிகளுக்கான உரிமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. http://www.virakesari.lk/article/52356

    • 4 replies
    • 1k views
  4. வடக்கில் சிலைகள் உடைக்கப்படுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்: பொதுஜன பெரமுன! வடக்கில் சிலைகள் உடைக்கப்படுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என பொதுஜன பெரமுன கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ராஜூ பாஸ்கரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு அரசியல்வாதிகள் இனவாதம் பேசியே மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு விடயத்தினைப் பேசுபொருளாக்கி தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். உதாரணமாக யுத்தகாலத்தில் யுத்தம் தொடர்பான விடயங்களையும் அதன் பின்னர் அழிவுகள் தொடர்பாகவுமே பேசி வருகின்றனர்.அவர்கள் அபிவிருத்தி…

  5. வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது . PEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில்…

  6. மாரப்பனவின் கருத்து அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் முயற்சி என்கிறார் கஜேந்திரகுமார் கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இலங்கையில் இடமில்லை என்ற வெளிவிவாகர அமைச்சர் திலக் மாரப்பனவின் இன்றைய கருத்தானது, அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐ.நா. மாநாட்டையடுத்து ஜெனீவா நகரிலிருந்து ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் கலப்பு பொறிமுறையை வலியுறுத்தவில்லை. நாங்கள் முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றையே வலியுறுத்தி வருகின்றோம். கலப்பு நீதிமன்ற பொறிமுறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டாலும், அது இலங்கை…

  7. தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க அரசியல் தேவையில்லை – சுரேன் ராகவன் மனிதாபிமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசியல் தேவையில்லை என வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவின் ஓர் அங்கமாக ஜெனிவா சென்றுள்ள அவர், இன்றைய அமர்வினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கின் ஆளுநராக தான் இருக்கும்வரை, தமிழர்களது பிரச்சினைக்காக எல்லா வழிகளிலும் போராடத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மக்களுக்கு எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தான் சேவை செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற …

  8. ஐ நா மனிதவுரிமைகள் ஆணையாளரின் முக்கிய கோரிக்கைகளை நிராகரித்தது சிறிலங்கா தற்போது நடைபெற்று வரும் ஐ நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வுகளில் இலங்கை தொடர்பாக ஐ நா மனிதவுரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் முன்வைத்த இரு முக்கிய கோரிக்கைகளான இலங்கையில் ஐ நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றினை ஆரம்பித்தல் மற்றும் கால வரையறைக்கு உற்பட்ட முழுமையான விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுவது ஆகியவற்றை இலங்கை முற்றாக நிராகரித்திருக்கிறது. இதுதொடர்பாக விளக்கமளித்த ஐ நா விற்கானவிற்குச் சென்றிருக்கும் சிறிலங்காப் பிரதிநிதியும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சருமான திலக் மாறப்பன, "எமக்கும் முடிவுகள் தொடர்பான ஆர்வம் இருக்கிறது, ஆனால் பல்லாண்டு காலப் பழமை வாய்ந்த, உணர்வுபூர்வமான…

  9. போராட்டத்துக்கு வட மாகாணத்தை விட கூடுதல் தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்களே: விக்னேஸ்வரன் Mar 19, 20190 தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் வட மாகாணத்தை விடவும் பெருந் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் பங்களிப்பையும் செய்தவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான் என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன், செழிப்பும் வளமும் மிக்க கிழக்குத்தான், நாளை அமையப்போகும் வடக்கும் கிழக்கும் இணைந்த சுய நிர்ணய ஆட்சிக்கான சுபீட்சமான எதிர்காலத்துக்கான அத்திவாரமாக அமையமுடியும் என்றும் கூறியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டபின்னர் ஊடகங்…

    • 9 replies
    • 864 views
  10. கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு : March 19, 2019 காணாமல்போனோரின் உறவினர்களால் ஒழுங்குசெய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடம்பெற்றுவரும் ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இக் கடையடைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைவரதும் ஆதரவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் கடையடை…

  11. நீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை கு…

  12. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவரால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுடன் ஒரே சாப்பாடு மேசையில் கோட்டா அமர்ந்திருந்தாலும், மஹிந்தவின் ஆட்சியின் போது, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிறந்த எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபயவே என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கோட்டா-எமக்கு-ச…

  13. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் கனடாவின் சார்பில் ஹரி ஆனந்த சங்கரி உரையாற்றினார். ஹரி ஆனந்த சங்கரி அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மீதான விவாதத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிடுகையில்; ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கை சில முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. காணிகள் விடுவிக்கப்பட்டமை, இழப்பீட்டு அலுவலகம் நியமிக்கப்பட்டமை, என்பவற்றைக் குறிப்பிடலாம். எனினும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் முன்னேற்றம…

  14. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம் உள்ளதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். …

  15. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற போர் மற்றும் அதற்குப் பிந்தைய இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட்டின் உரை இடம்பெற்று வருகின்றது. அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனின் உரை இடம்பெறவுள்ளது. இதன்போது, அவர் ஐ.நாவின் உரையை முழுமையாக ஏற்க முடியாது என்றும், இலங்கையில் தற்போது நிலமைகள் மாற்றமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் காணாமல் போனோர்…

  16. 1 Min Read March 20, 2019 சிவனொளிபாதமலையின் அடிவாரத்தில் .மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் இன்று (20.03.2019 ) தார் ஊற்றி சேதம் விளைவித்தமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டதனையடுத்து மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்று நிலi8மயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பெயர் …

  17. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட திருக்கேதீஸ்வரம் நாவற்குளம் பகுதியில்,இராணுவத்தின் வசமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் தற்போது அப்பகுதியில் உள்ள இராணுவத்தினால் அவர்களது பல்வேறு கழிவுப்பொருட்களை கொட்டப்பட்டு தீ இட்டு எரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் முகாமிட்டு இருந்த நிலையில், குறித்த தனியாரின் காணிகயில் இருந்து இராணுவத்தினர் சில வருடங்களுக்கு முன் முற்றாக வெளியேறியுள்ளனர்.…

  18. விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம் சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது, சிறிலங்கா அதிபர் மைத்தி…

  19. நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால் கிளிநொச்சி முகமாலை பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், இந்த பகுதிகளில் வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன. இதனைவிட இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர். இதேவேளை கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துக்களுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் …

  20. இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை கோரும் பௌத்த பிக்கு வவுனியா, மூனாமடுவில் இராணுவத்தால் வழிபடப்பட்ட புத்தர் சிலை உள்ள காணியை வழங்குமாறு பௌத்த பிக்கு ஒருவர் வவுனியா மாவட்ட செயலகத்தை கோரியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மூனாமடுவில் உள்ள நாகபூஷணி அம்மன் ஆலயம் நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் மற்றும் விசாயிகளின் வழிபாட்டுத்தெய்வமாக இருந்து வந்துள்ளது. ஓரு றூட் காணியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வவுனியா மூனாமடு மற்றும் பேயாடிக்கூழாங்குளம் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்கள் காலாகாலமாக விவசாயத்தை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் வயல் அறுவடைக் காலங்களில் அந்நிலங்களிற்கு அண்மையில் இயற்கை விவசாயத்தினை பாதுகாக்கும் இவ் நாகபூஷணி…

  21. (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். http://www.virakesa…

  22. தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகை சேதமாக்கப்பட்டுள்ளது March 20, 2019 அண்மையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகையின் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்கள் நேற்றிரவு சில விசமிகளால் தார் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவனொளிபாதமலை என தமிழில் பெயரிடப்பட்டிருந்த குறித்த பெயர் பலகை அண்மையில் சிங்கள மொழியில் பெயர் மாற்றப்பட்டதனையடுத்து அங்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் தமிழில் பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு புதிதாக தமிழில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் எழுதியிருந்த…

  23. கிழக்கில் முழு அடைப்பு – நீதி கோரித் திரண்ட மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில், மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து, முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், வணிக நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை. போக்குவர…

    • 0 replies
    • 387 views
  24. மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணியின் சர்ச்சை – பொது அமைப்புக்களின் கருத்துக்கள் பெற்று கொள்ளப்பட்டுள்ளது March 20, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணி தொடர்பான பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்படி காணிப்பிணக்கு தொடர்பாக பொது மக்கள், பொதுச்சங்கங்களின் வேண்டு கோளுக்கமைவாக கலந்துரையாடல் மன்னார் நகர சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், சங்கங்கள்,புத்தி ஜீவிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும், ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தனர். குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட விடயங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்ட நிலையில்,மன்னார் நகர சபையின்…

  25. கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியிலுள்ள கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரு பிள்ளைகளின் தாயான கௌரி (வயது -32) என்பவரின் சடலமே இன்று (புதன்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த சனிக்கிழமை வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் குறித்த பெண், அவரது இரு பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டுக்குச்சென்ற அயலவர்கள் குறித்த பெண்ணைக் காணாது தேடியபோது, வீட்டின் ஒர் அறையில் இரத்தம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.