ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142758 topics in this forum
-
கொழும்பில் நடக்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டை தென்னாபிரிக்கா புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பொதுச்செயலாளர் க்வெட் மந்தாசெ அவர்களுக்கு கடிதம் ஒன்றை உலகத் தமிழர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் வண. ஜே. இம்மானுவல் அடிகளார் அனுப்பி வைத்துள்ளார். 2009இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள் மற்றும் பொறுப்பு கூறலிலும் மீளிணக்கத்திலும் இருந்த குறைபாடுகள் என்பவற்றை உலகின் கவனத்துக்கு கொண்டுவருவதில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரிதும் சேவையாற்றி உள்ளது. அதன் பொதுச் செயலாளர் என்ற வகையில் இந்த விடயத்தை ஜனாதிபதி உட்பட தென்னாபிரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களிடம் வலியுறுத்துமாறு அவர் கடிதத்தில் வேண்டு…
-
- 0 replies
- 327 views
-
-
அருட்தந்தை சிறில் காமினி... கைது செய்யப்படமாட்டார் – நீதிமன்றில் அறிவிப்பு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக அரச புலனாய்வுப் பணிப்பாளர் சி.ஐ.டியில் முறையிட்டிருந்தார். அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்பு…
-
- 0 replies
- 192 views
-
-
இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…
-
- 12 replies
- 1.7k views
-
-
சிக்கினார் தஸநாயக்க! சிக்குவாரா கரண்ணாகொட? கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்கவுக்கு உள்ள நெருங்கிய தொடர்பை மையப்படுத்தி அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை வலயத்துக்குள் இருந்த அவரின் கடவுச்சீட்டு நீதிமன்றினால் முடக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவுக்கு செல்ல ஆயத்தங்களை முன்னெடுத்து வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யின…
-
- 0 replies
- 430 views
-
-
நாட்டில்... மார்ச்சில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை! இலங்கையில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையிடம் தற்போது 2 பில்லியன் அந்நியச் செலாவணியே கையிருப்பில் உள்ளது. அதில் சுமார் 300 மில்லியன் தங்கமா இருக்கின்றது. மீதமுள்ள 1.7. பில்லியனை வைத்துக்கொண்டு நாட்டை நிர்வகிக்கமுடியாது. அடுத்த வருடம் 5 முதல் 6 பில்லியன்வரை கடன் செலுத்த …
-
- 0 replies
- 119 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியினரின் சார்பாக சரத்பொன்சேகா மங்கள சமரவீரவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - மக்கள் பிரிவு எனும் கட்சியின் கீழ் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற மேற்படி கட்சியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 723 views
-
-
கேப்பாபுலவு காணிகளை விடுவிக்கவில்லை கேப்பாபுலவில் காணிகள், இன்று (19) விடுவிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையிலும், காணிகள் விடுவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் இராணுவமுகாம் அமைந்திருந்த 179 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படுவதாக இருந்தது. இந்நிகழ்வுக்காக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் வருகைதந்திருந்தார். “இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் காணிகள் இதற்குள் அடங்கவில்லை என மக்கள் தெரிவித்த காரணத்தால், இந்நிகழ்வை அ…
-
- 1 reply
- 328 views
-
-
சீருடை மாறியதும் பேச்சுக்களும் மாறுகின்றன என்று மனித உமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சமரசிங்க அகதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெவித்தார். இதன்போது கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகளை முறையாக அகற்றாமல் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் தெவித்திருந்தார் என்றும் அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்றும் வினவினார். எனினு…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழக கோரிக்கையை ஏற்று காமன்வெல்த் மாநாட்டை மன்மோகன் புறக்கணிக்கவில்லையாம்: ராஜபக்சே சொல்கிறார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்று இருப்பது திருப்தி அளிப்பதாக கூறினார். தமிழக மக்களின் உணர்வுகள் மதித்து பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர் ஒருவர் கூறியபோது, குறுக்கிட்ட ராஜபக்சே, தனக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடபடவில்லை என்று கூறினார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வில்லை என்றும் அவர் கூறினார். தமிழக உணர்வுகளை மதித்து பிரதமர் மன்மோகன் சிங…
-
- 1 reply
- 835 views
-
-
கொவிட்-19 இன் மிகவும் ஆபத்தான ஒமிக்ரோனின் முதல் தொற்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவர் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பூஸ்டர் டோஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதானல், அது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர நேற்யை தினம் தெரிவித்துள்ளார். அதேநேர் இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும், பொது சுகாதார வழிகாட்…
-
- 0 replies
- 250 views
-
-
மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை ஒருவருக்கு 100 வருட சிறைத்தண்டனையும் 90 ஆயிரம் ரூபா அபராதமும் கம்பஹா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கமராலலாகே சந்திரசிறி என்ற நபருக்கே மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அவ்வாறு இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது 10 வயது மகளின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து வைத்திருந்ததுடன் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தியுள்ளார். பாதுகாவலனாக இருக்க வேண்டிய தந்தை செய்துள்ள காரியங்களுக்கு சிங்கள அகராதியில் ஒரு சொல் கிடையாத…
-
- 1 reply
- 625 views
-
-
பொலிஸாரை தாக்கியோரை புலிகள் என்று கூற முடியாது இப்படிச் சொல்கிறார் இராணுவத் தளபதி “யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு நான் விரும்புவதில்லை. கடும் போக்குவாத குழு அல்லது இளைஞர் குழு தங்களது சமூகத் தேவைக்காக சில பிழைகளைச் செய்வதற்கு உந்தப்படலாம். அதன் அர்த்தம் விடுதலைப் புலிகள் எனப்படாது” இவ்வாறு இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். பௌத்த மதத் தலைவர்களான மல்வத்துப் பீடம் மற்றும் அஸ்கிரிப்பீட மகாநாயகர்களை சந்திப்பதற்காக இரா…
-
- 1 reply
- 368 views
-
-
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா! December 23, 2021 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
சரணடைந்ஜெயராஜ் எழுதியுள்ள விரிவான தகவல்கள் .த புலிகளின் தலைவர்களுக்கு நடந்தது என்ன? டி.பி.எஸ். .இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வு…
-
- 15 replies
- 2.6k views
-
-
வவுனியாவில் கனமழை வவுனியாவில் இன்று மாலை 4மணியிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வானம் இருண்டு காணப்படுவதோடு இடி மின்லுடன் கூடிய பெரு மழை காரணமாக வீதிகளில் மழை வெள்ளம் வழிந்தோடுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் குளங்கள், கிணறுகளில் தண்ணீர் இன்றி இருந்த மக்கள் இன்று பெய்துவரும் கடும் மழையினால் மகிழ்ச்சியில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. http://newuthayan.com/story/18129.html
-
- 1 reply
- 303 views
-
-
சிறையிலுள்ள இந்தியக் கடற்றொழிலர்களை சந்தித்த டக்ளஸ் இழுவைமடித் வலைத் தொழிலில் ஈடுபடுவதனால் கடல் வளங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும், இலங்கை கடற்றொழிலாளர் எதிர்கொள்ளுகின்ற வாழ்வாதார அச்சுறுத்தல்களையும் தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை புத்தாண்டு தினமான இன்று சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலங்கையின் கடல் வளத்தினையும் எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்கின்ற …
-
- 1 reply
- 334 views
-
-
சிங்கள அரசின் போர் குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்களின் ஆவண நூல் வெளியீட்டு நிகழ்வு ஈகஒளி முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாளான 29-01-2010 இல் இனப்படுகொலை மற்றும் ஊடகப் படுகொலைக்கு எதிராக நடைபெறவுள்ள தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாட்டில் " சிங்கள அரசின் போர்குற்றங்கள் " - இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூர குற்றங்களின் ஆவண நூலில் * ஐ.நா மனித உரிமை அமைப்பில் விசாரணை ... * இந்தியாவின் துரோகம்... * 2009 சனவரி முதல் மே 18 வரை தமிழீழப் பகுதிகளில் சிங்கள அரசால் நடத்தப்பட்ட இன அழிப்புப் படுகொலைகளின் ஆவணங்களின் தொகுப்பு... -போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய ஆவண…
-
- 0 replies
- 565 views
-
-
சுமந்திரன்:- சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவத் தயார் – சுமந்திரன் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் இலங்கை அரசாங்கத்தின் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் முனைப்புக்களில் பங்களிப்பு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் மெய்யாகவே முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, தென் ஆபிரிக்க போன்ற நாடுகள் இந்த பிரச்சினையில் உதவி வழங்கத் தயாராக இ…
-
- 0 replies
- 503 views
-
-
மரக்கறி விலை சற்று வீழ்ச்சி - அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையம் Published by T. Saranya on 2022-01-10 14:10:50 நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர், பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும், மற்றும் சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு மொத்த விற்பனை விலையும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 1 கிலோ முட்டைகோஸ் 165 ரூபாவாகவும், 1 கில…
-
- 1 reply
- 239 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க அரசுக்கு ஒருபுறம் மக்கள் செல்வாக்குப் பற்றிய பிரச்சினை. அந்தநேரம் பார்த்து அரசுத் தலைமைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றிய கோரிக்கை நெருக்கடியும் அழுத்தத் தொடங்கிவிட்டது. இலங்கையில் தமிழ் இளைஞர்கள் என்று கூறப்படும் ஒரு தொகுதியினர் நிர்வாண நிலையில், கைகள் பின்புறமும், கண்ணும் கட்டப்பட்ட நிலையில் சீருடை தரித்த படையினரால் தாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்படும் வீடியோக் காட்சியை பிரிட்டனின் “சனல்4″ தொலைக்காட்சி ஒளிபரப்பியமையை அடுத்து எழுந்த சர்ச்சை இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழர் தாயகம் மீது தொடுக்கப்பட்ட கொடூர, குரூர, கோர யுத்தத்தின்போது அப்பாவித் தமி…
-
- 6 replies
- 879 views
-
-
ஊழல் - மோசடிமிக்க இவ்வரசின் சர்வாதிகார போக்கு ஆட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் மக்களுமே பொறுப்பு கூற வேண்டும் . தற்போது உலகில் மோசடி மிக்க ஆட்சிக்கெதிராக புரட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் அவ்வாறான நிலைமை ஏற்படாமை வேதனைக்குரியது என ஐக்கிய தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் திப்பிலியாவே பாலித தேரர் தெரிவித்தார் . மோசடிமிக்க ஆட்சிக்கு எதிராக போராட துணிந்த இலங்கையர்கள் சர்வாதிகாரம் மிக்க குடும்ப ஆட்சிக்கெதிராக பொறுமையாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் . ஆகையால் இவ்வாட்சிக்கெதிராக இலங்கையர்கள் போராட முன்வர வேண்டுமெனவும் அவர் கோரினார் . ஸ்ரீகொத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார் . இது தொடர்ப…
-
- 0 replies
- 454 views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்புக்கும் ஆதரவில்லை அமெரிக்கா தெரிவிப்பு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எந்த வொரு தரப்பினருக்கும் ஆரவளிக்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரையில் அமெரிக்காவின் நிலைப்பாடு நடு நிலையானது என அந்நாட்டு தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா ஒரு பக்க சார்பாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் அங்கு நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. ஒருதரப்புக்கு ஆதரவு வழங்குபவர்கள் …
-
- 0 replies
- 342 views
-
-
அரசதலைவர் நடமாடும்சேவை சனியன்று துணுக்காயில் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசதலைவர் நடமாடும்சேவை நிகழ்ச்சித்திட்டமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அரசதலைவர் நடமாடும் சேவையானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் நாளை மறுதினம் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. எனவே அன்றைய தினம் சேவைபெறுநர் அனைவரையும் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு துணுக்காய் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். http://newuthayan.com/story/22527.html
-
- 0 replies
- 161 views
-
-
Published by T. Saranya on 2022-01-29 18:48:27 (எம்.நியூட்டன்) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து சிலர் அரசியல் செய்கின்றார்கள் நாங்கள் அரசியல் செய்வதற்காக வரவில்லை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே வந்துள்ளோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை நேற்று யாழ்.மத்திய கல்லூரில் நடைபெற்று பின்னர் ஊடகவியலாளர்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்கள் மேற்கொண்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் திட்டம் வடக்கிற்கு மட்ட…
-
- 1 reply
- 355 views
-
-
இலங்கைத் தேர்தலில் நடக்கப்போவது என்ன? ராஜபக்ச அல்லது சரத் இருவரும் ஓரணியில் நின்று தமிழரை உயிரோடு கொழுத்த எரித்தவர்கள் தான். ஒருவர் சொன்னார்.: இது சிங்கள பௌத்தநாடு. இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை. அடிமைகள் தான். பொர் நடந்த வேளை சொன்னது. மற்றவர் சொன்னார். புலிகள் கதை முடிந்ததது. தமிழர் பிரச்சனையைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இனிஆமல் இல்லை என்று மோதகம் கொழுக்கட்டை ஆனால் என்ன? கொழுக்கட்டை மோதகம் ஆனால் என்ன? இரண்டின் சுவையும் ஒன்றுதான். தமிழர்களுக்கு வடிவம் தாக் மாறுகின்றது. சுவை ஒன்றுதான் ஆனால் தமிழர்களின் வாக்கு முக்கியம். தமிழர்கள் தங்கள் வாக்குகளை ஒருவருக்கு ஒட்டு மொhத்தமாக அளிப்பதன் மூலம் பல செய்திகளை உலகுக்கு உணர்த்தலாம். தமிழர் வாக்குகள் தான…
-
- 9 replies
- 1.6k views
-